கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 21, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

தொடு உணர்ச்சி!

 

 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளானதால், மணி, 7:00 ஆகியும் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை, செல்வனும், கவிதாவும்! தாலுகா அலுவலகத்தில், கிளார்க்காக பணிபுரிகிறான் செல்வன். அவன் மனைவி கவிதா, கிறிஸ்துவ மேனிலைப் பள்ளியில், பிளஸ் 2 ஆசிரியையாக பணிபுரிகிறாள். இருவருக்கும் இடையே படுத்திருந்த அவர்களின், ஐந்து வயது மகள் ஸ்பூர்த்தி, ”அம்மா… ஒன் பாத் ரூம் வருது,” என்றாள். ”அம்மாப்பா துக்கத்தை கெடுக்காதே; நீயே, பாத்ரூமுக்கு போய்ட்டு வந்திரு,” என்றாள் கவிதா. தலையாட்டியபடி, படுக்கையிலிருந்து உருண்டு எழுந்து, உள்ளாடையை கழற்றி,


பூங்கொடியாபுரம்

 

 இன்றைய ராஜபாளையத்திற்கு அருகே முன்னொரு காலத்தில் பூங்கொடியாபுரம் என்ற ஒரு கிராமம் இருந்தது. பச்சை நிறத்தில் பந்தல் போர்த்தியது போல ஊரெங்கும் வளமையாக இருந்தது. ஆனாலும், சமுதாயத்தில் பொருளாதார ரீதியாகவும், சாதி அடிப்படையிலும் பல ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டன. அங்கு வாழும் மக்களுக்கு குலத்தொழில் நெசவு. இருப்பினும் வேளாண்மையும் பிரதானமாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் பசி வந்தால் பஞ்சை சாப்பிட முடியாதல்லவா? சாத்தப்பன்-முத்தம்மாள் என்ற தம்பதிகள் இதே ஊரில் பிறந்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். முத்தம்மாளுக்கு தற்போது 9வது


சேற்றில் மலர்ந்த செந்தாமரை

 

 அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 டாக்டர் கொடுத்த மாத்திரைகளை ராஜ் தவறாம சாப்பிட்டு வந்தாலும் அவர் உடம்பு தேறவே இல்லை.ரெண்டு வாரத் துக்கு அவர் உடம்பு சுமாராய் இருந்து வந்தாலும்,அடுத்த ரெண்டு வாரத் துக்கு ஜுரம் வந்து படுத்த படுக்கையாய் ஆகி வந்தார். சரஸ்வதிக்கு உடம்பு அதிகம் ஆகி விடவே சரவணன் அவள பக்கத்தில் இருந்த ‘நர்ஸிங்க்’ ஹோமில் சேர்த்தார். நான்கு நாள் வைத்தியத்திற்கு பிறகு சரஸ்வதிக்கு உடம்பு சா¢யாகமல் அவள் இறந்துப் போனாள்.சரவணன் அவள்


நதியொழுக்கு

 

 முப்பது முப்பத்தொரு ஆண்டுகளுக்குப் பிறகான சந்திப்பு அது. ஆள் வெகுவாக மாறிவிடவில்லை. அந்த வயதில் விழுந்திருக்க வேண்டிய தொப்பை இல்லை. டக் இன் செய்யப்பட்டும் சிறிதும் விம்மாத கட்டுடம்பு. தலைமுடியில் ஓரிழைகூட உதிராமல் அடர்ந்து , வகிடெடுத்து வாரப்பட்ட நேர்த்தி. நரைகூடிக் கிழப்பருவம் எய்திவிடவில்லை! ஆங்கிலம் கசடறக் கைகூடிவிட்டதற்கான மொழியாடல். முகத்தில் தேஜஸ். உடற்கட்டில் ஒரு ஆண்மை மையமிட்டிருந்தது. அவன் ஓட்டிவந்த கார் அவன் ஒட்டுமொத்த தகுதியின் அடிநாதம். அவன்தான் என அடையாளம் கண்ட மறுகணமே, அத்து


டைரக்டர்

 

 உருகி உருகி காதலித்துக்கொண்டிருந்தான் தினேஷ். கயல்விழி அவனது காதல் மொழிகளை முகம் சிவக்க இரசித்துக்கொண்டிருந்தாள்.”கட்” டைரக்டர் சொன்னதும், இதுவரை இவர்கள் இருவரின் காதல் பேச்சுக்களை உற்று கவனித்து கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் மூச்சு விட்டு “அப்பாடி” என்றனர். அதுவரை அமைதியாய் இருந்த இடம் கலகலப்பாயிற்று”. தினேசுக்கும், கயல் விழிக்கும் மறுபடி தங்கள் இயல்புக்கு வர நினைத்தனர். உதவி டைரகடர் வேண்டாம் அடுத்த சீன் டைரக்டர் கண்டினியூ பண்ணுவாரு அப்படீனு நினைக்கிறேன், சொன்னவர்களை பரிதாபமாய் பார்த்தனர் இருவரும். காலையில் வெறும்