கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2018

67 கதைகள் கிடைத்துள்ளன.

நண்பன்

 

 குமார் என் பால்ய சினேகிதன். மறக்க முடியாத எனது பள்ளிக்கூட நண்பர்களில் ஒருவன். நான் சிவகுமார். தனியார் நிறுவனத்தில் தனியாய் கணக்கெழுதுகிற வேலை, எல்லாம்… எந்தச் சங்கிலியும் இல்லாமலேயே நாள் முழுதும் நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிற அந்தப் பாழாய்ப் போன கணினியில் தான். இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது கடைசியாக நான் குமாரைப் பார்த்து. அடிக்கடி அவனை நினைத்துக் கொள்வேன். நமது சூழல்கள் எவ்வளவு தான் மாறினாலும் இப்படித்தான் சிலர் நமது நினைவுகளிலிருந்து நீங்காது இம்சையாக இருப்பார்கள் சிலர். எங்கிருக்கிறான்


வியாபாரி

 

 ” அலோ…..யாருய்யா….” என்று தடித்த குரலில் மளிகைக்கடையில் நின்ற அனைவரும் தன்னை திருப்பிப்பார்க்கும் விதமாய் சத்தமாய் கேட்டார் லிங்க நாடார். மறுமுனையில் தன் சொந்த ஊரு திசையன்விளையிலிருந்து என்று அறிந்தவுடன் முகம் மலர்ந்து ஆவலாகவும், மகிழ்ச்சியுடனும் தொடர்ந்தார்.சத்தம் மட்டும் அப்படியே….” என்ன மாப்பிள…சொல்லுங்க…விசேசமால்லா இருக்கு…திடுதிப்புன்னு போன போட்றுக்கீறு ” என்று மகிழ்ச்சி பொங்க ஆரம்பித்தார், லிங்க நாடார். மறுமுனை பேச ஆரம்பித்த சில நிமிடங்களில் லிங்க நாடார் தன் வலது பக்க நெற்றியின் மேல் முடியின் அடிபாகத்தை


பசித்த மரம்

 

 அழைப்பு மணி மீண்டும் ஒலித்ததும் என்னிடமிருந்து எரிச்சல் குரல் தானாகவே எழுந்தது. இதற்குள் இது நான்காவது தடவையாகும். இந் நிலையில் அமைதியாக வேலை செய்வது எப்படி? கார்த்திக் கடைக்குப் போவதாகக் கூறி வசதியாக நழுவி விட்டான். நான் எழுதுவதை நிறுத்த நேர்ந்தது. எழுந்து போய்க் கதவைத் திறந்தேன். அங்கே காந்தி பாபுவை நான் எதிர்பார்க்கவேயில்லை. “என்ன ஆச்சர்யம் வாங்க, வாங்க!” என்றேன். “என்னைத் தெரிகிறதா?” “முதலில் சந்தேகமாகத் தான் இருந்தது.” அவரை நான் உள்ளே அழைத்து வந்தேன்.


இனி எந்தக்காடு…?

 

 forestகரும்பச்சைச் சுனாமி அலைகள் வானைமுட்ட எழுந்ததான அடர்ந்த செழிப்பான காடு. வானளவா உயர்ந்த காட்டின் உச்சியில் குளிர்ந்து போகும் வெண்ணிற முகில்களின் தூக்கம். அது அந்தக் காட்டிற்கு வெண்ணிற ஆடை போர்த்தியதான கோலம். பரந்த காட்டின் கரைகளில் சில வரண்ட பகுதிகள். அவை அந்தக் காட்டை அரண் செய்வது போல வறட்சித் தாவரங்களை வாளாக்கிய இயற்கை. எழுந்த சுனாமி அலைகளின் ஏற்றம் மத்தியில் பெரும் மலைகளாகப் பொங்கி எழுந்த கோலம். அந்த மலைகளைத் தடவும் இறகுகளாக மேலும்


கானல் வரி

 

 எம் மேல கோபமா? அலைகளின் மேல் தாழப்பறந்து விழுந்து பரவும் அலைகளின் இரைச்சலில் விலகி பின்னும் பறந்து காகமொன்று ஏதோ ஒரு சிவப்பு நிறப் பொருளை அலகுகளில் கவ்வி வந்தது. ஈரமணலில் அமர்ந்து பரவும் அலைகளுக்கு விலகி அலகுகளால் குத்தியது. சுற்றுமுற்றும் ஒர பார்வையை வீசி புரட்டிப் பார்த்தது. சில வினாடிகள தயங்கி க்ரா க்ரா என பறந்தது. பழைய எல்லைகளைத் தாண்டி வந்த அலையொன்று அநதப் பொருளையும் நனைத்து உறிஞ்சியபடி உள்நகர்ந்தது. நான் கேட்டதுக்கு பதிலே