கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 7, 2017

10 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவை காணவில்லை

 

 அப்பா காலையில் வாக்கிங் சென்றவர் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்பது இவனுக்கு அலுவலகம் கிளம்பும்போதுதான் தெரிந்தது.அதுவும் அவன் மனைவி அதை ஒரு குறையாக சொன்னாள் ” கரண்ட் பில் கட்டறதுக்கு உங்கப்பாவை அனுப்பலாமுன்னா காலையில வெளிய போன மனுசன் இன்னும் காணல” என்றவளிடம் அப்பா இன்னும் வரலயா? ஆச்சர்யமுடன் கேட்டவன் இந் நேரத்துக்கு வந்திருப்பாரே, குரலில் கவலையை காட்டினான். நீங்க கிளம்புங்க, அவர் வந்துட்டாருன்னா உங்களுக்கு போன்ல சொல்றேன், அவன் மனம் ஊசலாட ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது


ஞாபகம்

 

 கண் விழித்தவுடன் அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஒரு அலையோடி மறையும். வேலை நாள், ஓய்வு நாள் எதுவாக இருந்தாலும் முரளியின் நாட்கள்தொடங்குவது இப்படியே. பல் விளக்கி தேநீர் குடித்து முடிப்பதற்குள் செய்ய வேண்டியவை குறித்த ஒரு கால அட்டவணை மனதுக்குள் தயாராகி இருக்கும். இன்றைய முதல் வேலை, டாக்டர் செக்-அப். காலை எட்டரை மணிக்கு அப்பாயின்மென்ட். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, ரத்த அழுத்தம் பார்த்து, மாத்திரைகள் வாங்கி வர வேண்டும். வருடத்திற்கு ஒரு


மோசக்காரி

 

 எழுதியவர்: சுபோத் கோஷ் சநாதன், அவனுடைய பெண் சுதா. அப்பனுக்கு ஏற்ற பெண், பெண்ணுக்குத் தகுந்த அப்பன்! அவர்களுடைய குடும்பத்தில் துக்க நிகழ்ச்சிகள் நேரும். அப்போதெல்லாம் சநாதன் இடிந்துபோய் விம்மி விம்மி அழுவான். துன்பச் சுமையால் தலை நிமிர முடியாது பெண் ணுக்கு. அவள் முந்தானையால் கண்களை மூடிக்கொண்டு பொருமிப் பொருமி அழுவாள். அருகிலிருந்து பார்ப்பவர்கள் உணர்ச்சிவசப் படுவார்கள், கண்ணீர் விடுவார்கள், பெருமூச்சு விடுவார்கள். சநாதனுக்கு உலகத்தில் சுதாவைத்தவிர வேறு நாதியில்லை. அவளுக்குக் கல்யாணமானதும் அவளைப் புக்ககத்துக்கு


பனங்காடு

 

 யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி செல்லும் நெடுஞ்சாலையில் முப்பது கல் தொலைவில் இருக்கிறது இயக்கச்சி. முறைப்படி சொல்ல வேண்டுமானால், கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் 169 கல் தொலைவில் இருக்கிறது ஊர். கிலோ மீற்றரில் சொல்வதென்றால், 270ஆவது கல்லில் இருக்கிறது அது. இப்போது இரண்டு கற்களும் அங்கே உண்டு. எந்தக் கல்லை வைத்தும் அடையாளம் கண்டுவிடமுடியும். யாழ்ப்பாண ராஜ்ஜியத்திலிருந்து கண்டி ராஜ்ஜியத்துக்குப் போகும் வழியே இந்த நெடுஞ்சாலை என்று சொல்வார் மாமா. ஐரோப்பியர்கள் முதலில் இலங்கையில் நெடுஞ்சாலைகளை அப்படித்தான் அமைத்திருக்கிறார்கள்


செல்லரம்மான்

 

 நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த போது அவரை ‘செல்லரம்மான்’ என்று தான் கூப்பிடுவோம். அவருடைய இயற்பெயர் செல்லத்தம்பி. அப்போதெல்லாம் ‘சாண்டோ செல்லர்’ என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்; அவ்வளவு பிரபலமாக இருந்தார். அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். வந்ததும் நாங்கள் அவரைப் போய் மொய்த்துக் கொள்வோம். என்ன அவசரமாயிருந்தாலும் எங்களுக்கெல்லாம் கதைகள் சொல்லாமல் போகவே மாட்டார். அவருக்கு ‘கோடா’ காய்ச்சுவதுதான் தொழில். காய்ச்சி அதைப் பல சுருட்டுக் கொட்டில்களுக்கும் வினியோகம் செய்வார். அந்தத் தொழிலில் அவருக்கு வெறுப்பு. ஆனால்