கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2016

50 கதைகள் கிடைத்துள்ளன.

மூக்குத்தி!

 

 சுகந்தபுரி என்ற ஊரில் வட்டிக்கடை வைத்து நடத்தினான் வேணு. அவரது மனைவி வச்சலா சிறந்த குணவதி. வேணு பேராசை பிடித்தவன். அநியாய வட்டி வாங்கினான். தர்மவானான தந்தை முன்பு செய்து வந்த அன்னதானத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தான். “பூ, கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, இதெல்லாம் தண்டச்செலவு என்று கூறி தெய்வ வழிபாட்டை நிறுத்தினான். கணவனை எதிர்க்க முடியாத வச்சலா மவுனமாக கண்ணீர் உகுப்பாள். ஒருநாள் “”வட்டிக்கடைக்காரர் வேணு வீடு எது?” என்று விசாரித்தப்படியே வந்தார், ஒரு பெரியவர். அவரிடம்


பொன்னாடை

 

 அன்று ஞாயிற்றுக் கிழமை. வழக்கம் போல் செய்தித்தாளை எடுத்து ‘இன்றைய நிகழ்ச்சிகள்” பகுதியைத் தேடினேன். என் வயதையொத்த வாலிபர்களெல்லாம் ‘இன்றைய சினிமா” பகுதிக்குள் நுழைந்து, ‘என்ன படத்திற்குப் போகலாம்?…எந்தத் தியேட்டருக்குப் போகலாம்?‘ என்று யோசித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நான் மட்டும் ‘இன்றைய நிகழ்ச்சிகள்” பகுதியைத் தேடுவதற்கு முதல் காரணம் என் இலக்கிய ஆர்வம். இது சம்பந்தமான ஒரு உண்மையை இப்போதே சொல்லி விடுகிறேன். நான் ஒரு படைப்பாளியோ…சிந்தனாவாதியோ…எழுத்தாளனோ…கவிஞனோ..அல்ல!…ஒரு ரசிகன்…வெறும்..சாதாரண ரசிகன்….அவ்வளவுதான். அதனால்தான் ஞாயிற்றுக் கிழமைகளில் நகரில்


கதையல்ல

 

 களம்: கல்லூரி காலம்: 1972 சீக்கிரமாக எழுந்து அவசர அவசரமாக கல்லூரிக்குக் கிளம்பினேன். அம்மா என் அவசரத்தைப் பார்த்து அதிசயமாகப் பார்த்தாள். நான் எப்பொழுதும் பின் தூங்கி பின் எழுபவன். இவ்வளவு சீக்கிரமாக நான் கிளம்பியதில்லை. அம்மாவின் தலைக்கு மேல் தெரிந்த ஆச்சரியக் குறியை அழித்து, ‘கல்லூரியில் தேர்தல், நண்பனுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்று கூறிக் கிளம்பினேன். கல்லூரி வந்தடைந்ததும் எப்போதும் இருந்ததைவிட கூடுதல் அமைதியாக இருந்தது. விசாரிக்க விடுதி மாணவர் ஒருவர் இறந்து விட்டதாகவும்


கண்ணீர் வெள்ளத்தில் கரையும் ஒரு கறை நிழல்

 

 மாலதியின் கணவன் பாஸ்கரன் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்திற்கு வேலை மாற்றம் கிடைத்து வந்து சேர்ந்த புதிது அவளுக்குச் சீதனமாக அப்பாவால் பெரும் சிரமத்திற்க்கு மத்தியில் கட்டிக் கொடுத்த வீட்டிலிருந்து அரைமைல் தூரத்தில் தான் அவன் வேலை செய்யும் நீதிமன்றம் இருந்தது தினமும் சைக்கிளில் தான் போய் வருவான் சிங்களம் படித்திருந்ததால் தான் அவனுக்கு இந்த நீதித்துறை வேலை அதிலே நீதி தெரிந்த ஒரு கெளரபுருஷனாக எடுபட்டு வேலை செய்தாலும் இல்லற குடும்ப உறவுகளில் எடுபடாமல் திரிந்து போன


நாடு இனி முன்னேறிவிடும்!

 

 போலிஸ் டீஜி ,இன்ஸ்பெக்டர் பாலகுமாரை தொலைபேசியில் அழைத்திருந்தார். “என்ன பாலகுமார் , இப்படிச் செய்திருக்கீங்க? நம்ம டிப்பார்ட்மென்ட் பெயரையே கெடுத்துட்டீங்களே.” “சேர் என்னை நம்புங்க …அது நான் இல்லை” “என்ன பாலகுமார் நீங்க இன்னும் அந்த வீடியோவைப் பார்க்கலையா,சின்னக்குழந்தைகூட அது நீங்கதான் என்று சொல்லிவிடுமே.ஐ எம் வெரி சொரி பலகுமார் ,உங்களை அரெஸ்ட் பண்ணுறதைவிட வேற வழியில்ல..” “இல்ல சேர் என்ன நம்புங்க …எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க” “பாரு பாலகுமார் நீ டான்ஸ் ஆடின அந்தப்பெண்களும்

Sirukathaigal

FREE
VIEW