கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 1, 2015

10 கதைகள் கிடைத்துள்ளன.

ராம சுப்புவுக்கு பாராட்டுவிழாவாம்

 

 ராம சுப்புவுக்கு இன்னும் ஒரு வாரத்தில் பாராட்டு விழா நடக்கப்போகிறதாம். உங்களுக்கு ஏதேனும் அழைப்பு வந்திருக்கிறதா? வரவில்லை என்றால் எதற்கு பாராட்டு விழா என்று தெரிந்திருக்காது, அவன் மிகப்பொ¢ய குழந்தை கடத்தல் கூட்டத்தை பிடித்துக்கொடுத்திருக்கிறான், அதற்காகத்தான் இந்த பாராட்டுவிழா, என்ன நம்ப மாட்டீர்களா? நம்புங்கள் சார்.. ஏனென்றால் அவனுமே இதுவரை இதை நம்பவில்லை, ந்மக்குத்தான் பாராட்டுவிழாவா அல்லது சினிமாவில் வருவது மாதிரி யாராவது நம்மைப்போல இரட்டை வேடம் போட்டு அவனுக்கு பாராட்டு விழா என குதித்து வந்துவிடுவானா?


பரம்பரை பரம்பரையாக

 

 கணவனின் குரல் கேட்டு கண்விழித்தாள் வேணி. மெலிந்திருந்த உடலுக்குள் ஏதோ ஒன்று பரவியது — வரண்ட நிலத்தில் குளிர்ந்த நீர் படர்ந்தாற்போல். அவள் படுத்திருந்த கட்டிலுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த முக்காலிமேல் சுடுநீர் போத்தல், கோப்பை, `டிஷ்யூ’ பேப்பர். கீழே குப்பைக்கூடை. அந்தச் சிறிய அறை மலிவானதொரு ஆஸ்பத்திரியை நினைவுபடுத்தியது. அவளது கட்டிலின் மேல் அமர்ந்துகொண்ட முகுந்தன் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான். “பிள்ளை போனாப் போகட்டும்! ஒனக்கு ஏதாவது ஆகியிருந்தா! ஐயோ!” தன்மேல்தான் கணவருக்கு எவ்வளவு அன்பு! வேணிக்குப்


இயற்பெயரைத் தொலைத்தவன்

 

 பன்னிரெண்டு பேர் கொண்ட அந்த அறையில் எல்லோரும் வேலைக்குச் சென்றிருக்க சுந்தர் மட்டும் தனியாக இருந்தான். குடும்பம் விட்டுப் பிரிந்திருத்தலின் துயரம் இப்படியான சமயங்களில் தான் தழும்பி நிற்கும். உடல்நலக் குறைபாடுகள் வரும் போதும், நெடிய விடுப்புக்களின் போதும், விசேச தினங்களின் போதும் உருவாகும் தனித்து விடப்பட்டது போன்ற மனநிலை அவனுக்குப் புதிது இல்லை என்றாலும் இன்று கால் விரலில் இருக்கும் வலி அதைச் சற்று அதிகமாக்கி இருந்தது. குறுக்கும் நெடுக்குமாய் விரவப்பட்ட கம்பிப் படுக்கைகளால் சூழப்பட்டிருந்த


யூஓன்

 

 ‘இன்னும் 10 மணித்தியாலங்களில் என் பூவை சந்திப்பேன்’ யுஓன், 12 மணித்தியாலங்களுக்கு முன்னர் மெசேஞ்சரில் அனுப்பிய செய்தியை இப்போதுதான் பார்த்தேன்… யுஓனுக்காக ஆயிரம் மைல்கள் தாண்டி பூத்த மலர் நான்… ஹுஆ என் பெயர்.. பேஸ்புக்கில் நாங்கள் சந்தித்து இன்றுடன் 3 வருடங்கள். நேருக்கு நேர் சந்தித்ததில்லை. இன்று சந்திப்பதாய் திட்டம். யுஓன், நாஞ்சிங் நகரின் ஒரு முள்… ஹுஆ ஆகிய என்னை பாதுகாக்கவே படைக்கப்பட்டவன். அவனின் பாதுகாப்பிலேயே வளர ஆசைப்பட்ட பூ நான்… யுஓன் ஒரு


9 வது கொண்டை ஊசி வளைவு

 

 யாரோ ஒருவரின் முகத்தைப் பார்ப்பது போல இருந்தது…. இருந்தாலும்.. பார்த்துக் கொண்டேயிருந்தான் முகில் … தெளிவாக இருந்த முகத்தில்… நிஜம் அணிந்து கொண்ட முகமூடியை ரசிப்பது போல இருந்த மனநிலையை சற்று தள்ளி நிற்க சொல்வது போல ஒரு பாவனையை வலிய வர வைத்துக் கொண்டு தலையை சீவினான்… “எதுவும் நடக்கப் போவதில்லை… எல்லாம் சரியாவே நடக்கப்போகிறது… இனி ஒரு வழி செய்வோம்… என்பதை நிரூபிக்கும் நாள் இது… இது எனக்கான நாள்…. இங்கு நானே கடவுள்….


அப்பா

 

 சமீப காலமாக கிருஷ்ணனின் நடவடிக்கைகளில் பொ¢ய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக சுந்தருக்கு தோன்றியது. தன்னோடு கோவிலுக்கு வருவதில்லை. நெற்றியில் வீபூதி கிடையாது. எப்போதும் நகைச்சுவையும், கலகலப்புமாக இருந்தவன் பேச்சில் தற்போது அசுவாரசியமும், விட்டேதியான போக்கும் … சாஸ்திரங்கள், சடங்குகள் என எதிலும் நம்பிக்கையின்மை… என்று நிறைய மாற்றங்கள். சுந்தரும், கிருஷ்ணனும் பெங்களூரில் ஒரே ஐ.டி மல்டினேஷனல் கம்பெனெயில் கடந்த இருபது வருடங்ளுக்கும் மேலாக வேலை பார்த்து, ரிடையர்ட் ஆனவர்கள். பெங்களூரிலேயே பங்களா டைப்பில் அருகருகே வீடு கட்டிக்கொண்டு ஹாப்பியாக


இன்னும் சில அரங்கேற்றங்கள்

 

 அம்மாவுக்கும் அப்பாவுக்கும்,அவர்களின் குழந்தைகளாகிய எங்கள் மூவரிலும் கோபம். பெரியண்ணா இப்போதெல்லாம எங்கள் வீட்டுக்கு வருவதே குறைவு.அவன் வேலை செய்யுமிடம் எங்கள் வீட்டுக்கு அதிக தூரமில்லை என்றாலும்,தன்னுடைய சில சினேகிதர்களுடன் சேர்ந்து ஒரு வீடு தனியாக வீடெடுத்துக்கொண்டு போய்விட்டான். எனக்கு இரவெல்லாம் சரியாகத் தூக்கமில்லை.ஆனாலும், வேலைக்குப் போகும் அந்த ட்ரெயினில் காலடி எடுத்து வைத்ததும் வழக்கம்போல் ஒரு புத்தகத்தை எடுக்கிறேன். அது ஏதோ ஒரு சாதாரண புத்தகமில்லை, அண்மைக்காலமாகப் ப்றாயிடின் எழுத்துகளில் எனக்கு ஆர்வம் கூடியதால்,ப்றாய்டின் சைக்கோலயி பற்றிய


காற்று, கடல், கண்மணி

 

 மகாலட்சுமி கோயில் மும்பை .மெயின் ரோடு வரைதான் கார் போனது.சற்றே குறுகலான இரு பக்கம் கடைகளும் கூட்டமும் மிகுந்த அந்த வழியில் சென்றோம். அர்ச்சனை தட்டுடன் கடைகளில் வரவேற்றார்கள்.கூட்டம் நெரிசலால் “ஆன்டி! எனக்கு ஒரு தட்டு வாங்குங்கள் ” சற்றே திரும்பினேன். நல்ல லக்ஷணமான தமிழ் பெண்! பார்த்தாலே பேசத் தோணும் முக பாவம் ! நான் வாங்கிய தட்டை அவளிடம் நீட்டினேன்.அவள் கொடுத்த ரூபாய்க்கு சில்லறை வாங்கித் திரும்பினால் அவள் இல்லை ! கோவிலுக்குள் போய்


அக்கரையில் ஒரு கிராமம்

 

 ஜீவிதத்தில் ஒரு தடவையேனும் நான் போயேயிருக்காத என் அப்பாவின் கிராமத்திற்குப் போவதில் முதன்முதல் சந்திரத்தரையில் கால் பதிக்கப்புறப்பட்ட நீல் ஆம்ஸ்றோங் குழுவினருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பரபரப்பு , ஆர்வம், புளகாங்கிதம்,சிலிர்ப்பு எல்லாமே எனக்கும் உண்டானது. திருச்சி விமானநிலையத்திலிருந்து பஸ் ஸ்ராண்டிற்கு டாக்ஸி ஒன்றைப்பிடித்து வந்து இரண்டு மணிநேரம் காவல் இருந்து புதுக்கோட்டை போகும் பஸ்ஸைப் பிடித்தேன். பஸ் பயணமும் மேலும் ஒரு மணிநேரம் இருந்தது. பஸ் ஸ்ராண்ட்டில் மக்களுடன் மாடுகளும் கலந்து நின்றன . இனி வடகாட்டிற்குப் போகவேண்டும்.


மிஸ்டு கால்

 

 காதல் என்றால் மிஸ்டுகால் இல்லாமல் இருக்காது. அதே போல் ராங்நம்பர் போட்டு நட்பாக (?!) தொடங்கி காதலில் முடிந்தது என்று பேப்பரில் செய்திகளைப் படித்திருக்கிறோம். இரண்டு முறை ராங்நம்பர் போட்ட ஆசாமியை நம்பி நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு ஒரு பெண் ஓடி வந்திருக்கிறாள். இந்த சம்பவத்தில் ஆச்சர்யம் என்னவென்றால் போனில் பேசிய அந்த நபரும் திருமணமாகாதவனாக இருந்திருக்கிறான். அதைவிட இன்னொரு வியப்பு, அந்த பையன் குடும்பத்தினரும் இந்த திடீர் காதலுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். இது மாதிரி சம்பவங்களின்