Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2015

50 கதைகள் கிடைத்துள்ளன.

பெயர் சூட்டும் சம்பிரதாயம்

 

 “ரோஜா என நாம் அழைக்கும் ஒரு பெயரில் என்ன இருக்கிறது? வேறு பெயரில் கூட அது நறுமணமாகத்தான் இருக்கும்…” என ரோமியோ ஜூலியட் என்ற காதல் காவியத்தில் ஷேக்ஸ்பியர் தன் தத்துவத்தை வெளிப்படுத்தினார். ஒரு வேளை அது காதலர்களுக்கு பொருத்தமாக இருக்கலாம். ஏனெனில் காதலுக்கு கண்ணில்லை என்பார்களே, அதுபோல் காதும் இல்லை. இருந்திருந்தால், காதலர் மற்றவருடைய அறிவுரையைக்கேட்டு சுதாரித்துக்கொண்டிருப்பர் அல்லவா? எப்படியோ காதலிக்கும் ஒருவனுக்கு பெயர் என்ன, அவள் தெரு நாய் கூட மனதை கவர்ந்து தான்


நங்கூரி

 

 ‘ என்னைக் கட்டிப்போட்டிட்டு என் கண் முன்னாலேயே…’ இயலாமையின் விசும்பும் ஓசை மட்டும் மெதுவாய்க் கேட்டது. அது கொழும்பு துறைமுகம்… ஒவ்வொருவராக வரிசையில் நின்று உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம். எங்களுக்காக துறைமுகத்தில் நின்றிருந்த அந்தக் கப்பலின் படிகளில் ஏறும்போது நங்கூரி என்ற பெயர் பெரிதாக அந்தக் கப்பலில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருந்ததை அவதானித்தேன். 1983ம் ஆண்டு யூலை மாதம் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவில் இருந்து நல்லெண்ண விஜயத்தில்


அந்த இரு கண்கள்

 

 வேலைக்குப் போவதற்கு,விடியற்காலை ஏழரை மணிக்கு வீட்டுக்கதவைத் திறந்தபோது, தூரத்தில் தபாற்காரன் வருவது தெரிந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த தபாற்காரன்,இலட்சுமியைக் கண்டதும் புன்முறுவலுடன் இலட்சுமிக்குக் கைகாட்டினான். எப்போதோதும் ஒரே குறித்த நேரத்தில் தபாற்காரன் வந்தாலும் சிலவேளைகளில் இலட்சுமி கொஞ்சம் முந்திப் பிந்தி வேலைக்குப்போகும்போது,எப்போதோ இருந்து விட்டுத்தான் அந்தத் தபாற்காரனை இலட்சுமி சந்திப்பாள். ‘குட்மோர்ணிங் மடம்’ தபாற்காரன் அவளிடம் கடிதங்களை நீட்டினான். அவள் அவனுக்குக் குட்மோர்ணிங் சொன்னாள். அவன் முகத்தில் மகிழ்ச்சி.அவளைப் போலவே அந்தத் தபாற்காரனும் ஒருகாலத்தில் தனது ஊரைவிட்டு லண்டனுக்குப்


கோபம்!

 

 இரவு 8-50 டவுனுக்கு வந்த சேகர், பைக்கில் இரவு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தான். சுங்கம் சிக்னலில் சிவப்பு விளக்கு விழுந்து விட்டதால் பைக்கை நிறுத்தினான். பின்னால் வேகமாக வந்த ஒரு கார் பைக் மேல் இடித்து விட்டு நின்றது. சேகர் இறங்கி, “ ஏய்!…உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?……” என்று கோபமாகக் கத்தினான். காரில் இருந்தவன் இறங்கி, “ஏதோ ஞாபகத்தில் பிரேக் போட கொஞ்சம் தாமதமாகி விட்டது தம்பி!..வெரி சாரி!..” என்றான். “காரில் வந்தால் கொம்பன் என்ற


அன்பெனும் மாமழை

 

 விடிய கருக்கல்ல எந்திரிச்சு சாப்பிடாம கொள்ளாம சந்தைக்கு வெள்ளாடு விற்க வந்த சோனைமுத்தையாவிற்கு, காலையில் இருந்து பச்சத்தண்ணி கூட வாயில் படாத வறட்சியால் எச்சில் முழுங்குவது கூட சிரமமாகி நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டி மயக்கத்தை உண்டு பண்ணியது. உக்கிரமாய்ப் பெய்த வெய்யிலால் வியர்த்து உப்பு காய்ந்த உடம்பில் அரிப்பின் ரணத்தை உண்டாக்கியது . அகோரமாய்ப் பசித்து கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. உடலெங்கும் சூடு கண்டு எரிந்தது. மயக்கம் வரும்போலிந்தது. ஆனால், இன்னும் ஓட்டியாந்த ஆடு போனியாகவில்லை.


மலைக்காட்டு மர்மம்

 

 இயற்கை வளம் சூழ்ந்த மலைப்பாங்கான இடம். உயர்ந்த மலைகளைப் பற்றிப் படர்ந்த பசுமையான காடு, காட்டை நிறைத்திருந்தன பல நூறு வருடங்களைத் தாண்டிய பல பெரிய பெரிய இராட்சத மரங்கள். இருகைகளால் இணைத்துப் பிடிக்க முடியாத அகன்ற தண்டுகளுடன், அதன் கிளைகளோ பாசிபடிந்து ஒட்டுன்னிக‌ளின் உறைவிடமாய் பூமியை தொட்டுக் கொன்டிருந்தன. அந்த மலைக்காட்டில் அமைந்திருந்தது இயற்கையின் எழில் நடனமாய் காணும் போதே குளிர்ச்சியூட்டும் ஓர் அழகான நீர்வீழ்ச்சி..! உயர்ந்த மலையிலிருந்து பொங்கிப் பெருகி நுரைகள் பளீரிட பாலைப்போல


ஆட்டோகிராப்

 

 நடிகை மோனாலிசா அந்தப் பிரபல நகைக் கடையின் நங்கநல்லூர் கிளையை மாலை திறந்து வைக்கப் போவதாக, அன்றைய தினசரியில் ஒரு பக்க விளம்பரம் வந்திருந்தது. விளம்பரத்தைப் படித்த குணசேகர் , எப்படியாவது அன்று மோனாலிசாவிடம் ஆட்டோகிராப் வாங்கிவிட வேண்டுமென்று முடிவெடுத்தான். குணசேகரிடம் ஒரு பழக்கம் என்னவென்றால், பிரபலங்களிடமிருந்து அவர்களின் ஆட்டோகிராப் வாங்கி, பத்திரப் படுத்திவைத்து அதை தன் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் காண்பித்து பெருமைப் பட்டுக் கொள்வான். அதில் அவனுக்கு ஒரு அலாதியான இன்பம். அரசியல் தலைவர்கள், விளையாட்டு


மருமகளின் பாசம்

 

 அம்மா இறந்து போன செய்தி கேட்டதும் மீனா துடித்து தான் போய்விட்டாள் இருக்காத பின்ன அன்றாடம் என் அம்மாவோட மணிகணக்கா பேசுவதும் ஊருக்கு போனால் அம்மாவுக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும் என்று பார்த்து பார்த்து வாங்கிகொண்டு போவதுமாய் இருந்தவளுக்கு திடிர்னு அம்மா இறந்த செய்தி இடி விழுந்தது போலத்தான் இருந்தது நான் செய்தி சொன்னதும் அவள் ஊருக்கு போக துடித்த துடிப்பு இருக்கே அப்பப்பா சொந்த பொண்ணுக்கு கூட இருக்காது மெட்ராசிலிருந்து ஊருக்கு போவதற்குள் என்னை


போதிமரம்

 

 பொங்கி வந்த அழுகையை மிகுந்த சிரமப்பட்டு அடக்கியவாறே , ஆட்டோவில் பயணித்து கொண்டிருந்தாள் ஷைலஜா ..சரியாக இருபது நிமிட பயணத்துக்கு பின் வீடு வந்து சேர்ந்தவள் ..ஹாலிலிருந்த சோபாவில் ‘ ‘ தொப்பென்று ‘ அமர்ந்தாள் : ஆயாசத்துடன் சாய்ந்து கொண்டவளின் மனக்கண் முன்னே , சற்று முன்பு நடந்த அந்த சம்பவம் , நிழல் படம் போல தோன்றி மறைந்து கொண்டிருந்தது ….. கணவன் ராமை ஆபீசுக்கு அனுப்பிய கையுடன் நகரின் ஒதுக்குப்புறமாய் இருந்த அந்த


காஞ்சனாவின் தவிப்பு

 

 இன்று எப்படியும் சேகரிடம் பேசிவிட வேண்டும் என்று நினைப்பாள் காஞ்சனா, இது போல் தினமும் நினைத்து நினைத்து பாழும் வெட்கம் வந்து அவளை தடுத்து விடுகிறது, அவளும்தான் என்ன செய்வாள்? மனதில் சலனங்கள் இல்லாதவரை பெண்ணும் ஆணும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் காஞ்சனாவுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நமக்கு வரும் மாப்பிள்ளை எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பது இயல்புதானே ! இது பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒரே மாதிரிதான், அப்படி