கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 9, 2015

10 கதைகள் கிடைத்துள்ளன.

அண்ணனின் கணவர்…

 

 நிரம்பி வழிந்துகொண்டிருந்த வாட்சப் மெசேஜ்’களுக்கு ஒருவழியாக பதில்களை தட்டிவிட்டு, சோம்பல் முறித்து படுக்கையைவிட்டு எழுவதற்கு எட்டு மணி ஆகிவிட்டது… இன்று கல்லூரிக்கு அணியவேண்டிய ஆடையை தேர்வுசெய்வது அடுத்தகட்ட சிக்கல்… பலநேரங்களில் அந்த சிக்கலை அம்மாதான், “பொம்பள பிள்ளைக்கு ட்ரஸ்கூட செலெக்ட் பண்ணத்தெரியலைன்னா கேட்குறவங்க சிரிப்பாங்கடி!” என்று தலையில் செல்லமாக கொட்டுவைத்துவிட்டு தீர்த்துவைப்பாள்… ஆனால், கடந்த ஒருமாதமாக வீடே ஒருவித நிசப்த நிலைக்குள் ஆட்பட்டுவிட்டதால் இப்போதல்லாம் அதற்கும் வாய்ப்பில்லை… பேசவிரும்புவதை வெளிப்படையாக பேசிடாமல், சொல்ல விரும்பியதை நேரடியாக சொல்லமுடியாமல்,


பறக்க கொஞ்சம் சிறகுகள்…

 

 லட்சுமிக்கு காலையில் இருந்தே குழப்பங்கள். என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம், என்கிற கேள்வி மனசைக் குடைந்து கொண்டேயிருந்தது. இன்றைக்கு அவளுக்கு ஜெராக்ஸ் கடையில் நிறைய வேலை. கடையைப் பூட்டிக் கொண்டு கிளம்பும்போதோ மணி எட்டுக்குப் பக்கம் ஆகிவிட்டது. நன்றாக இருட்டிவிட்டிருந்தது. காலையில் பஸ் ஸ்டாண்டில் ரேவதியைப் பார்த்ததில் இருந்தே மனசு ரொம்பவும் குழம்பிப் போயிருந்தது. அப்புறம் ஒனர் பையனின் வருகை. வரிசையாக சில நிகழ்வுகள்… காலையில் ரேவதியை காந்தி சிலை அருகே பார்த்தாள். வேலைக்கு நேரமாகிவிட்டது


ஹாக்சாபிளேடு

 

 ”தம்பி! உங்க அண்ணன் இருக்கானா?” “படிச்சுட்டு இருக்கான், என்ன விஷயம்?” “கொஞ்சம் வரச் சொல்லேன், ப்ளீஸ்…” –கீழே என் தம்பி யாருடனோ பேசிக்கொண்டிருந்தான், இந்தத் தெருல யாருக்காவது ஏதாவது பிரச்சனைனா எங்க ’கேங்’ல இருந்து யாராவது ஒருத்தனைத்தான் உதவிக்குக் கூப்பிடுவாங்க. அநியாயத்துக்கு இன்னிக்கு எல்லாரும் எஸ்கேப் ஆயிட்டானுங்க, நான் மட்டும் எதோ எம்.எஸ்.சி. வரைக்கும் வந்துட்டோமே இப்பவாவது பரிட்சைக்குக் கொஞ்சம் படிக்கலாமேனு வீட்ல இருந்தேன், இப்ப அதுக்கும் ஆபத்து வந்தாச்ச… அது யார் என்று குரலை வைத்து


சாந்தி அக்காவின் ஆவி

 

 தனசேகருக்கு அன்று வழக்கம் போல விடியவில்லை. “”எலேய் தன்ஸý, எளுந்திர்றா” என்று காதில் விழுந்த அதட்டல் குரல் டீக்கடைக்காரருடையதா? இல்லை விறகுக்கடைக்காரருடையதா? என்று தூக்கக் கலக்கத்தில் புரியவில்லை. “”ராத்திரி எல்லாம் பேயோட டூயட்டு பாடியிருக்கான் டோய்” என்று விறகுக் கடையில் விறகு பிளக்கும் கணேசுவின் கேலிக்குரல் கேட்டு சடக்கென்று எழுந்து கொண்டவனின் கண்ணெதிரே ஒரு பொம்பளையின் பாதங்கள் தொய்ந்துபோய்த் தொங்கிக் கொண்டிருந்தன. மின்சாரம் பாய்ந்தவன் போல் சட்டென்று ஆலமரத்தடி மேடையிலிருந்து குதித்து இறங்கி அந்தக் கால்களுக்குரியவளைப் பார்த்தான்.


சரியான இளிச்சவாயன்…

 

 ‘திருவல்லிகேணியிலிருந்து எண்ணூருக்கு போவது சிரமம் தான் அதைவிட வெயில் வேளையில் புழதி மழையோடு மோட்டார் சைக்கிளில் செல்வது மிகவும் கோரம், வேறென்ன செய்வது போய்தானாகாணும், ஏ. சி மெக்கனிக்னா சில்லுனே இருக்குமா, உழைச்சு வியர்வை நாத்தம் வந்தா தான் சாம்பார் வாசனைய நுகர முடியும்’. “ஹலோ …ஹலோ சார்.. கூப்டே இருக்கன்.. எங்கயோ யோசனையா இருக்கீங்க, சரி… எவளோ லிட்டர் ” ” ஏதோ ஞாபகத்தில இருந்துட்டேன்… ஒரு லிட்டர் போடு பா”. “ஆறு மனமே ஆறு