கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 1, 2015

10 கதைகள் கிடைத்துள்ளன.

கூடு கலைதல்

 

 அலுவலகம்விட்டு அறைக்குத் திரும்பும் வழியில் எனது பொழுதுபோக்கு வேலைகளுக்கு வேண்டிய சில எலெக்ரோனிக் உதிரிப்பாகங்கள் வாங்க வேண்டியிருந்தது. வெள்ளவத்தை டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை பஸ்தரிப்பில் இறங்கி வாடிக்கையான அந்தக் கடையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேன். எதிர்த்திசையில் வந்து, என்னை உரசுவதுபோல் கடந்து சென்றிருந்தவரைக் கண்டதும் ஆச்சர்யம் என் முகத்தில் ஓங்கி அறைந்தது. திரும்ப§ப் பார்த்தேன். பெண்கள் வைப்பதைப்போல சின்னச் சின்னதாக, ஆனால் அவசர அடிகள் வைத்துச் சென்றுகொண்டிருந்தார். அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த அவ்வதிசயக் கணத்தில்


நுவல்

 

 அழகிய ஒரு சின்னக்கூண்டை கையில் தூக்கிகொண்டு ,உள்ளே நுழையும் கணவரை வியந்துபோய் பார்த்தாள் ரேணு. அது ஒரு பறவைக்கூண்டு. அந்தக்கூண்டுக்குள் ஒரு பறவை இருந்தது. திடீரென்று எங்கிருந்து வந்தது இவருக்கு இந்த பட்சி ஸ்நேகம்?? ரேணுவை அதற்குமேலும் திகைக்க வைக்காமல், மாதவன் விளக்கினார். அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது,சிக்னலுக்காக வண்டியை நிறுத்திய நேரத்தில், அவருடைய காருக்குள் பறந்து வந்து ஸ்டீரியங்கின் மேலேயே அமர்ந்து விட்டதாம். கார்க் கண்ணாடியை ஒரு விநாடி திறந்ததில் அந்தப் பட்சிக்கு நேர்ந்த


நேற்றைக்கு ராதா

 

 ஆசுவாசமாய் நிறம்பி கொண்டிருக்கும் மேகங்களைப் பார்க்கும்போது அதன் அழகை ரசிக்கும் மனோபக்குவம் பலருக்கு வருவதில்லைதான். அது அழைத்துவர இருக்கிற மழையைச் சமாளிக்க, முடிந்தவரை முடக்கிவிட, அது முடியாமல் போக வரும் கோபத்தை யார் மேலாவது அல்லது எதன் மேலாவது காட்டுவது, சொல்லப்போனால் எல்லாருடைய வழக்கம்தானே. அதில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ விவரங்கெட்டுக் கிழிந்த மழையாடைகளும் உடைந்த குடைகளும்தான். அதிகப்பட்ச மக்களின் கவனம் சங்கமிக்கும் இடங்களையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் யாருடைய மனமும் லயிக்காதச் சமாதிகளையே எப்போதும் விரும்பித் தொலைவது


முகம்

 

 பத்து அடிக்கும் மேலான உயரமுள்ள தகரச் சுவரில் இருக்கும் துளையின் வழியே கண்களை வைத்துப் பார்த்தேன். மிகுந்த பிரயத்தனப்பட்டுப் பார்த்ததில் அப்புறத்தில் மெல்ல நடந்து செல்லும் மனிதர்கள் தெரிந்தார்கள். எனக்கெனத் தனியாகத் திரையிடப்படும் ஒரு திரைப்படம் போன்றகாட்சி அது. நான் எதிர்பாராத ஒரு தருணத்தில் அப்புறத்தில் இருந்து ஒருவர் மிக அருகில் வந்து, நான் பார்த்துக் கொண்டிருந்த துளையின் வழியே தன் கண்ணை வைத்துப் பார்த்தார். நெருங்கி வந்த நிழல் மெல்ல மூடி முழு இருட்டு ஆகிவிடுவது


வடு

 

 ‘அந்த எண்ணம் எனை விட்டகல நீ தான் அருள்புரிய வேண்டும் பரா பரமே ‘ நொய்மைப் பிண்டம்: மெல்ல, மெல்ல மேலே எழுந்து சில நிமிடங்கள் இயங்க மறந்து, பின் தொப்பென்று கட்டிலில் விழுந்தது. அசைந்து பார்க்க அச்சம் வந்தது. பெருவிரல்கள் ஒன்று சேர்த்து, பிணம் போல் உருவெடுத்து அசையாது கிடந்தாள் மல்லிகா. கை விரல்கள் குளிர்ந்து சொடுக்கிக் கொண்டன. தலைமுடியின் ரப்பர் கழன்று தரையில் கிடந்தது. வியர்த்திருக்க வேண்டும், ஆனால் இல்லை! சீதளமும், உஷ்ணமும் இல்லாத


எரிந்த பனைகள்..!

 

 அண்ணே உங்களுக்கு போன்! நம்ம வேலா அண்ணன்…’ ‘என்னது வேலா அண்ணனா? அவன் செத்து எவ்வளவு காலம்… ஏன்டா, உனக்கேதும் கிறுக்குப் பிடிச்சிருக்…?’ என்று நான் கேள்வியை முடிக்கவில்லை. அதற்குள் என்னை முந்திக்கொண்டு, ‘இல்லண்ண… வேலாண்ணன்ட மனுஷி பேசுறான்டுதான் நான் சொல்ல வந்தேன்’ என்று உடனடியாக பதில் கூறிவிட்டான் அந்த மடையன். எனக்கு அவன் மீது பற்றிக்கொண்டு வந்தது கோபம். ஆனாலும் எதுவும் கூறவில்லை. ‘இந்தாங்க பிடிங்கண்ணே!’ என்று செல்போனை என்னிடம் தந்துவிட்டு நான் மறைந்திருக்கும் பாதுகாப்பான


கள்ளநோட்டு!

 

 அவனுடைய செம்மஞ்சள்,பச்சை நிறமுடைய டாக்சி தென்மேற்கு நகரத்தில் உள்ள வீதிகளில் ஓடிக்கொண்டிருந்தது.அவனுடையது! சிரிப்பு வந்தது.அவன் பல கார்களை வைத்து வியாபாரம் செய்கிற கராஜ் ஒன்றிலிருந்து அதை வாடகைக்கு எடுத்திருக்கிறான்.மேலே உள்ள கூரை லைட் எரிந்து காலியாக இருக்கிறதைக் காட்டிக் கொண்டிருந்தது.டாக்சி நிறுத்தல் நிலையங்களில் எல்லாம் 4-5 கார்கள் ரேடியோ ஓடருக்காக காத்து நின்றதால்,அவனும் போய் வீணே பின்னுக்கு நிற்க விரும்பாததால்..செலுத்திக் கொண்டிருக்கிறான்.காலும்,கையும் உளைந்தன.அதை விட மனம் உளையிறது தான் அதிகம்.இந்த அலுப்புப் பிடித்த டாக்சிக்கு என்ன தமிழ்ப்


கதைவேண்டும்

 

 வணக்கம் சார்! குனிந்து எழுதிக்கொண்டிருநதவன் நிமிர்ந்து பார்தேன்.இளைஞன் ஒருவன் பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தான். நல்ல களையான முகம் என்ன வேணும்? புருவத்தை உயர்த்தி வினா தொடுத்தேன். உங்க படத்துல நல்ல கதை கதைவசனகர்த்தா தேடிக்கிட்டு இருக்கறதா கேள்விப்பட்டேன், உங்க நண்பர் பாரிதான் என்னை அனுப்பி வைச்சார் என்றவன் தன் சட்டைப்பையில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினான். அதை அலட்சியமாக வாங்கிப்பார்த்தேன். பாரிதான் எழுதியிருந்தான் இவனைப்பற்றி ஆஹா ஓஹோ ! என எழுதியிருந்தான். நான் அந்த கடிதத்தை


திசை அணங்கு

 

 இதோ புதை மணலுக்குள்ளிருந்து எடுக்கப் பட்ட அந்த சிலை நாயக்கர் மகாலின் நடுக் கூடத்திற்கு அலங்காரமாய் இன்றி வீற்றிருக்கிறது. .கண்டெடுக்கப் பட்ட சிலை கனவுகள் எல்லாம் தொலைத்து வெற்று சிற்பமாய் இன்று சிரிப்பை மட்டும் ஏந்தியபடி, சுற்றிக் காண்பிக்கும் கைடுகளுக்கு சொல்லப் பட வேண்டிய சுவையான தகவலாய் தரப் பட்டிருந்தது. அதோடவே நின்று போகிறது மனது. இடிபாடுகளுக்கிடை இருந்த அந்த மகால் இன்று புதுப்பொலிவு அடைந்திருப்பது கேள்விப்பட்டு நண்பர்களோடு அதை மீண்டும் கண்டு வரத் திட்டமிட்டிருந்தேன். இதுவரை


ஓடும் குதிரைக்கு பத்து கால்கள்

 

 இப்போது கனமான பித்தளை கடிகாரம் `நங், நங்` எனச் சத்தமிட்டது. அதன் தொண்டையிலிருந்து வந்த சத்தத்தில் பூமி அதிர்ந்தது. மணிக்கொரு முறை சரியாக அதன் உள்ளிருக்கும் வாத்தியக்காரர்கள் இசைப்பர். அந்த சத்தங்கள் அடங்கிய பின் அறைக்குள் மரண அமைதி திரும்பும்.அறுபது நிமிடங்களுக்குப்பின் இந்த சளனமற்ற அறையில் வேறுவிதமான உணர்வுகளை மீட்ட வேண்டுமென்ற உறுதியுடன் கடிகாரம் உறங்கச் செல்லும். கடிகாரம் அடங்கிய பின் எழுதுவதைத் துவங்கினேன். `மனிதனுக்கு எத்தனை கர்வம்? தொள்ளாயிரம் கோடி மக்கள் தன்னைச் சுற்றி இருக்கும்போது,