அவன் போட்ட முடிச்சு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2020
பார்வையிட்டோர்: 3,204 
 

‘ப்ளஸ் டூவில்’ நல்ல மார்க்குகள் வாங்கி இருந்த சண்முகத்துக்கு அண்ணா பல்கலைக் கழகத்தி ல்  B.E. கம்ப்யூட்டர் சயன்ஸ் படிப்பு படிக்க ‘சீட்’ கிடைத்தது.விழுப்புரம் ஸ்டேஷனில் அவனை சென் னைக்கு வழி அனுப்ப அவன் அப்பா ஆறுமுகம் அம்மா ரேவதி,மாமா முருகன்,மாமி வள்ளி, மாமன் மகள் சுசீலா,தாத்தா பழனியப்பன் எல்லோரும் வந்து இருந்தார்கள்.எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு சென்னைக்குப் போகும் ரயில் வந்ததும் ஏறில் கொண்டான் சண்முகம்.

வண்டி கிளம்பியவுடன் எல்லோரும் கையை ஆட்டி வண்டி மறையும் வரை ‘ப்ளாட்பாரத்தில்’ நின்றுக் கொண்டு இருந்து விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.எல்லோர் மனதிலும் பல கனவுகளை கண்டு வந்தார்கள்.முக்குலத்தைச் சேர்ந்த குடும்பம் இவர்களுடையது.

பழங்கால வழக்கத்தை கடைப்  பிடித்து வந்த அந்த குடும்ப நபர்கள் தாத்தா பழனியப்பன் சொன்னதை எந்த வித  மறுப்பு சொல்லாமல் இது நாள் வரை செய்து வந்துக் கொண்டு இருந்தார்கள்.

பழனியப்பன் பையன் முருகனுக்கு மகள் சுசீலா பிறந்ததும்,அவர் தங்கள் குடும்ப பிணைப்பு அறுந்து போகாமல் இருக்க, சுசீலாவின் முதல் வருஷ பிறந்த நாளன்று ‘சுசீலாவை அத்தை மகன் சண்முகத்திற்கு நிச்சியம் பண்ணி,அவர்கள் கல்யாணத்தை அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும்  பண்ண வேண்டும்’ என்று இரு குடும்பத்தாரிடமும் சத்தியம் வாங்கிக் கொண்டார்.

இரு குடும்பத்தாரும் இந்த முடிவை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு,”அப்பா நீங்க சொன்னபடியே  நாங்க சுசீலாவை சண்முகத்திற்கு கல்யாணம் செஞ்சு வக்கறோம்”வாக்குக் கொடுத்தார்கள். ‘தன் குடும்பத்தார் தான் சொன்னதை செய்யறோம்’ என்று சொன்னதைக் கேட்ட தாத்தா பழனியப் பன் மிகவும் சந்தோஷப் பட்டார்.

நான்கு வருட படிப்பு முடித்து விட்டு,சண்முகம் நல்ல மார்க் வாங்கி B.E. பாஸ் பண்ணினான்.

நல்ல I.T. கம்பனி ஒன்றில் சண்முகத்திற்கு நல்ல வேலையும் கிடைத்து விட்டது.

சண்முகம் விழுப்புரத்திற்கு வந்து தன்னுடைய அப்பா, அம்மா,மாமா,மாமி,தாத்தா எல்லோரி டமும் தன் படிப்பு,தான் வாங்கிய மார்க்கு,தனக்குக் கிடைத்து இருக்கும் வேலை,சம்பளம், கம்பனி பேர் எல்லாம் விவரமாகச் சொன்னான்.எல்லோருக்கும் மிகவும் சந்தோஷம்.எல்லோரும் சண்முகத்தை மிகவும் புகழ்ந்தார்கள்.

முன்று நாள் விழுப்புரத்தில் இருந்து விட்டு,சண்முகம் வேலையில் சேர சென்னைக்கு புறப்பட் டான்.இந்த தடவையும் எல்லா குடும்ப நபர்களும் விழுப்புரம் ஸ்டேஷனுக்குப் போய் சண்முகத்தை வழி அனுப்பி விட்டு வந்தார்கள்.வீட்டுக்கு வந்ததும் “நம்ப சண்முகத்தோடபடிப்பு நல்ல விதமா முடிஞ்சு,அவனுக்கு ஒரு நல்ல வேலையும்,கடவுளின் அருளால்  கிடைச்சிடுச்சு இருக்கு.எனக்கு வயசு ஆயிக் கிட்டே போவுது. என் உயிர் போறதுக்கு முன்னாடி ரெண்டு குடும்பமும் சீக்கிரமா பேசி சண்முகம் சுசீலா கல்யாணத்தே சீக்கிரமா செஞ்சு முடிக்கற வழியைப் பாருங்க” என்று மிகவும் முடியா மல் சொன்னார் பழனியப்பன்.

உடனே “நாங்க சீக்கிரமா செய்றோம்.நீங்க கவலை படாம இருங்க” என்று சொன்னார்கள் இரு குடும்பத்தாரும்.

சண்முகம் வேலையில் சேர்ந்து விட்டு வாரம் தவறாமல் தன் பெற்றோர்களிடமும் உறவுக்காரர்களிடமும் ‘செல் போனி’ல் பேசி வந்தான்.வேலை அதிகமாக இருந்ததால் சண்முகம் அவர்கள் உறவுக் கார்ரகளிடம் பேசி வருவதை வாரத்தில் இருந்து மாசத்துக்கு ஒரு முறையாக குறைத்துக் கொண்டான்.

ரெண்டு வருடம் ஓடி விட்டது.

’டெந்த்’ பரிக்ஷ முடிந்து விட்டு இருந்ததால் லீவுக்கு  சுசீலா தன் அத்தை வீட்டிற்கு ஒரு வாரம் வந்து  இருந்தாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.காலை மணி பத்து இருக்கும்.ஒரு காரில் சண்முகம் ஒரு வயசுப் பொண்ணோடு காரில் இருந்து கீழே இறங்கினான்.வீட்டில் நுழைந்ததும் அந்த பெண்ணைப் பாத்து  “ரம்யா,இவங்க தான் என் அப்பா அம்மா.இவங்க கால்லே நீ விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்க” என்று சொன்னான்.அந்த பெண்ணும் சண்முகம் சொன்னது போல் ஆறுமுகம்,ரேவதியின் கால்களில் விழப் போனாள்.

”யாருடா இந்தப் பொண்ணு.இவ ஏண்டா எங்க கால்லே விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும். என்னடா இது கூத்து.இதோ நிக்கறாளே சுசீலா.இவ உன் மாமாவோட பொண்ணுடா.இவ உனக்காகக் இத்தனை வருஷமா உன்னே கல்யாணம் பண்ணிக்க,காத்துக்கிட்டு இருக்கான்னு ,உனக்குத் தெரியா தா” என்று கோரஸாகக் கத்தினர்கள் ஆறுமுகமும் ரேவதியும்.

“என்னப்பா சொல்றீங்க நீங்க.எனக்கு அந்த எண்ணம் துளிக்குட இல்லையே.நான் என்னுடன் வேலை செஞ்சு வர ரம்யாவை ஆறு மாசமா காதலிச்சு,போன வெள்ளிக் கிழமை தான் ‘ரிஜிஸ்த்தர்’ கல்யாணம் பண்ணிக் கிட்டேன்.முத முதல்லே உங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக் கிட்டு தான் நாங்க ‘குடித்தனம்’ பண்ணலாம்ன்னு இங்கே  வந்தா…..” என்று சண்முகம் சொன்னான்.

நமஸ்காரம் பண்ணச் சொன்னதும்,சண்முகத்தின் அப்பாவும், அம்மாவும் சொன்ன பதிலை சண்முகத்துடன் கூட வந்த ரம்யா கேட்டதும் “இதோ பாருங்க,‘இவர்’ தன்னுடைய மாமா பொண்ணு தனக்காகக் கல்யாணத்துக்குக் காத்துக் கிட்டு இருக்கா,என்கிற சமாசாரத்தை எங்கிட்டே முன்னமே சொல்லி இருந்தா,நான் இவரை காதலிச்சும் இருக்க மாட்டேன்.கல்யாணமும் பண்ணி கிட்டு இருக்க மாட்டேங்க.எனக்கு அந்த உண்மைத் தெரியாம இந்த தவறு நடந்து விட்டதுங்க.என்னை மன்னிச்சி டுங்க.இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை பறிச்சுக்கிட்டு நான் வாழ விரும்பலே.நல்ல வேளை.  எங்களுக்கு வெறும் ‘ரிஜிஸ்த்தர்’ கல்யாணம் மட்டும் தான் ஆகி இருக்கு.இவர் தன்னுடைய அப்பா, அம்மா ஆசீர்வாதம் வாங்கிக் கிட்டு வந்து,அப்புறமா நாம் சேர்ந்து ‘வாழ்க்கை’ நடத்தலாம்ன்னு சொன் னதால் தான் நான் இவரோடு இங்கே வந்தேன்.என்னை மன்னிச்சுடுங்க.நான் வறேன்” என்று சொல் லி விட்டு ரம்யா தான் கொண்டு வந்த ‘பாக்கை’ எடுத்துக் கொண்டு வேகமாக வெளியே போய் காத்து க் கொண்டு இருந்த காரில் திரும்பிப் பார்க்காமல் ஏறிக் கொண்டாள்.

“ரம்யா,இரு போகாதே ரம்யா” என்று கத்திக் கொண்டே சண்முகம் ரம்யா பின்னாலே ஓடினான்.  அவன் காரிடம் போய் ரம்யாவிடம் பேச நினைத்த போது,ரம்யா ஏறீன கார் கிளம்பி,அந்த கார் கிளப் பின கரும் புகையும்,புழுதியும் சண்முகத்தின் முகத்தில் படிந்தது.

தலையை தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் சண்முகம். அவனுக்கு உலக மே இருண்டு விட்டது போல் தோன்றியது.அவனுக்கு என்ன பண்ணுவது என்றே தெரியலே. இதைப் பார்த்ததும் சுசீலா தன் ரூமுக்கு ஓடிப் போய் கதவை சாத்திக் கொண்டாள்.

தொப்பென்று சோபாவில் உட்கார்ந்தான் சண்முகம்.கொஞ்ச நேரம் ஆனதும் எழுந்துப் போய் தன் ரூமுக்குள் போய் தாள் போட்டுக் கொண்டான்.வீடே மௌனமாக இருந்தது ஒரு பத்து நிமிஷ த்திற்கு.ஆறுமுகம் ரேவதிக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை.உடனே அவர்கள் எல்லா உறவுக்காரர்களுக்கும் ‘போன்’ பண்ணி அவர்களை உடனே அவங்க வீட்டுக்கு வரச் சொன்னார்கள்

‘போன்’ வந்ததும் அவன் மாமா,மாமி தாத்தா,எல்லோரும் ஆறுமுகத்தின் வீட்டிற்கு ஓடி வந் தார்கள்.ஆறுமுகம் கண்களில் கண்ணீர் மல்க அவர்களிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்.

தாத்தா “ஏம்மா ரேவதி,நீ உன் பையன் கிட்ட அவனுக்கும் சுசீலாவுக்கும் ‘நாங்க சின்ன வயசி லேயே நிச்சியம் பண்ணி,கல்யாணம் பண்ணுவதா முடிவு பண்ணி இருக்கோம்’ என்கிற விவரத்தை இந்த நாள் வரைக்கும் சொல்லவே இல்லையாம்மா” என்று கவலையோடு கேட்டார்.

“அங்கே தான் நாங்க தப்பு பண்ணிட்டோம்ப்பா.சண்முகம் படிப்பு முடியட்டும் நாம் இதை அவன் கிட்ட அப்புறமா சொல்லிக் கொள்ளலாம்ன்னு நானக் ரெண்டு பேரும் இருந்திட்டோம். அவன் படிக்கறது ரொம்ப பெரிய படிப்பு.அந்த படிப்பு முடியற முன்னா,கல்யாணம் சமாச்சாரம் பத்தி எல்லாம் அவன் கிட்ட சொல்ல வேணாம்ன்னு நாங்க ரெண்டு பேரும் சும்மா இருந்துட்டோம்” என்று அழுதுக் கொண்டே சொன்னாள் ரேவதி.

“ரெண்டு பேரும் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க.சண்முகத்துக்கு நீங்க முன்னமே சொல்லி இருந்தா அவன் இப்படி வேறு ஒரு பொண்ணைக் கல்யாணம் கட்டி இருக்க மாட்டானே” என்று சொல்லி வருத்தப் பட்டார்.

பிறகு எழுந்துப் போய் மெல்ல மூடிய கதவைத் தட்டி “தம்பி சண்முகம்,நான் தாத்தா வந்து இருக்கேன்.கொஞ்சம் கதவைத் திறப்பா.நாம நிதானமா பேசலாம்ப்பா” என்று சொன்னார்.தாத்தா குரல் கேக்கவே  சுசீலா கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தாள்.அவள் கண்கள் அழுது அழுது கோவைப் பழம் போல் சிவந்து இருந்தது.
ஒரு பத்து நிமிஷம் கழித்து கதவைத் திறந்தான் சண்முகம்.அவன் கண்களும் சிவந்து இருந் தது.அவனும் அழுதுக் கொண்டு இருந்தான்.

“தம்பி சண்முகம்,உங்க அப்பா,அம்மாவும்,உன் மாமா, மாமியும்  நம்ப குடும்ப வழக்கப்படி உறவு அறுந்துப் போவாம இருக்க,நிச்சியமா உனக்கும் சுசீலாவுக்கும் கல்யாணம் பண்ணுவதா என க்கு சத்தியம் பண்ணிக் குடுத்து இருக்காங்கப்பா.இந்த விஷயத்தை உன் அம்மாவும்,அப்பாவும்  உன் கிட்டே இது வரைக்கும் சொல்லாம இருந்தது பெரிய தப்பு தான்ப்பா.தயவு செஞ்சு நீ அந்த சென்னை பொண்ணை மறந்துட்டு,உன் மாமா பொண்ணு சுசீலாவை கல்யாணம் கட்டிக் கிட்டு நம்ப குடும்ப உறவு அறுந்துப் போவாம பாத்துக்கோப்பா. உன் மனசை கொஞ்சம் மாத்திக்கோப்பா சண்முகம்” என்று சண்முகத்தின் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சிக் கேட்டு கொண்டார் தாத்தா.

“தாத்தா,எனக்கு இந்த சமாச்சாரம் தெரியாதே தாத்தா.நான் சுசீலாவை காதலிக்கவே இல்லை. நான் ரம்யாவை ஆறு மாசமா காதலிச்சு அவளைப் பிடிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டேனே. இப்போ நான் அவளை எப்படி தாத்தா மறக்கறது.என்னால் அது முடியாத காரியம்” என்று தீர்மானாமாகச் சொல்லி விட்டான் சண்முகம்.

எல்லோருக்கும் என்ன பண்ணுவது என்று தெரியாமல் விழித்தார்கள்.யாரும் ஒன்னும் பேசாமல் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.

சற்று நேரம் கழித்து சண்முகம் தன் பெட்டியை எடுத்துக் கொண்டு “நான் போய் வறேன்”என்று சொல்லி விட்டு கிளம்பிப் போய் விட்டான் சண்முகம்.எல்லோரும் பேந்த பேந்த முழித்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தார்கள்.அவர்களுக்கும் என்ன பண்ணுவது என்றே புரியவில்லை.

முருகனுக்கும் வள்ளிக்கும் ‘சண்முகம் நம்ம பொண்ணு சுசிலாவை கல்யாணம் பண்ணிக் கொள்ளாம இப்படி ஏமாத்தி போயிட்டானே’ என்று ரொம்ப மிகவும் கோவம் வந்தது. உடனே அவர்கள் இருவரும் தங்கள் பெண் சுசீலாவை அழைத்துக் கொண்டு ஒன்னும் பேசாமல் அவர்கள் வீட்டுக்கு கிளம்பத்  தயார் ஆனார்கள்.பழனியப்பன் எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்க வில்லை.

அக்கா ரேவதி தன் தம்பியைப் பார்த்து “போவாதே தம்பி,சண்முகம் சென்னைக்குப் போனதும் நான் மெதுவா அவன் கிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை முடிக்கப் பாக்கறேன்” என்று கெஞ்சினாள் ஒன்றுக்கும் பிடி கொடுக்காமல் முருகணும் வள்ளியும் சுசீலாவை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்கு போய் விட்டார்கள்.

இரண்டு நாள் தான் ஆகி இருக்கும்.

சுசீலா தன் அப்பா அம்மாவிடம் ”எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கலே. இந்த உறவுக்காரங் களே வேணாம்ப்பா.நானும் சென்னைக்குப் போய் இந்த ‘கம்ப்யூட்டர் படிப்பு’ படிச்சு விட்டு ஒரு நல்ல கம்பனியில் சேர ஆசைப் படறேன்”என்று சொல்லி அடம் பிடித்தாள்.முருகன் தம்பதிகளுக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை.கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணினார்கள் இருவரும்.

’நம்ம பொண்ணு சந்தோஷம் தான் இப்போ முக்கியம்’என்று நினைத்து, தன் நில புலன்களை யும்,கிணற்றையும்,வீட்டையும் விற்று விட்டு மகளையும், மணைவியையும் அழைத்துக் கொண்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு வந்து விட்டார்கள் முருகன் தம்பதிகள்.

சென்னைக்கு வந்த முருகன் தன்னிடம் இருந்த பணத்தில் ஒரு சின்ன மளிகை கடையைத் திறந்து அதை நடத்தி வந்தார்.சுசீலாவை மேலே படிக்க ஒரு பள்ளி கூடத்தில் சேர்த்து படிக்க வைத் தார் முருகன்.

சென்னை வந்த சண்முகம்  ரம்யாவிடம் ‘போனி’ல் பேசி அவளை அன்று மாலை ‘காபி டே’க்கு வரச் சொன்னான்.ரம்யாவும் ‘காபி டே’க்கு அன்று மாலை வந்தாள்.

சர்வரிடம் இரண்டு ப்ளேட் சமோசா ஆர்டர் பண்ணிவிட்டு “ரம்யா,நான் உன்னே கூப்பிட்டுக் கிட்டு இருக்கும் போது, ஏன் நீ நிக்காம காரில் கிளம்பி போயிட்டே. நான் உன்னுடன் நிதானமா பேசி ஒரு முடிவுக்கு வரலாம்ன்னு இருந்தேன் தெரியுமா” என்று பேச்சை ஆரம்பித்தான் சண்முகம்.

சமோசாவை லேசாகக் கிள்ளி தன் வாயில் போட்டுக் கொண்டு ”சண்முகம்,நான் சொல்றேன்னு நீ என்னேத் தப்பா எடுத்துக்காதே.உன் முறை பெண் உனக்காக காத்துக்கிட்டு இருக்கான்னு உங்க பெற்றோகள் சொன்னதை நான் கேட்டபோது திடுக்கிட் டேன்.இன்னொரு கன்னிப் பெண்ணின் வாழ்க்கையில் நான் குறுக்கிட்டு,அவளுக்கு ஏமாத்தத்தைத் தர எனக்கு விருப்ப மில்லே.அதனால் தான் நான் கிளம்பி வந்துட்டேன்.சண்முகம் நான் சொல்றதே கொஞ்சம் நல்லா கேளு.ஒரு பெண் ணோட மனசு இன்னொரு பெண்ணுக்குத் தான் நல்லாத் தெரியும்.நீ என்னை மறந்துட்டு, சுசீலாவை கல்யாணம் பண்ணிக்கோ. உன் மாமன் பெண்ணுக்கு நீ ஒரு நல்ல வாழக்கையைக் குடு சண்முகம்” என்றாள் ரம்யா.

ரம்யா சொன்னததைக் கேட்ட சண்முகத்திற்கு அவள் போ¢ல் கோவம் தான் வந்தது.“என்ன ரம்யா,நாம இருவரும் ஆறு மாசமா காதலிச்சு,ஒருவரை நல்லா புரிஞ்சி கிட்டு தானே கல்யாணம் பண்ணிக் கிட்டோம்.இப்ப என்னடான்னா நீ என்னை கிராமத்தில் இருக்கிற அந்த பட்டிக்காட்டு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கன்னு ‘அட்வைஸ்’ பண்றே. உனக்கே இது நியாயமாய் படுதா ரம்யா.நான் எப்படி ரம்யா ஒரு பட்டிக்காட்டு பொண்ணே கல்யாணம் பண்ணீக்கறது” என்று கோவமாகக் கேட்டான் சண்முகம்.

“கிராமத்து பொண்ணு, பட்டிக் காட்டு பொண்ணுன்னுல்லாம் சொல்றயே சண்முகம்,நீயும் அங்கு இருந்து வந்தவன் தானே.அவளும் ஒரு பெண் தானே.அவளுக்கும் என்னை போல ஆசை, காதல்,எல்லாம் இருக்காதா.தவிர அவள் உன்னைக் கல்யாணம் கட்டிக்க எவ்வளவு ஆசையா இருந்தி ருப்பா.அவளை நீ ஏமாத்துவது சா¢யே இல்லே சண்முகம்.நான் அவ வாழ்க்கையில் குறுக்கே நிக்க மாட்டேன்.அவளை கல்யாணம் கட்டிகிட்டு,அவளுக்கு நீ ஒரு நல்ல வாழ்க்கைக் குடு.அது தான் சா¢யான முடிவு.என்னை நீ மறந்துடு.நாம இனிமே ‘பெரெண்ட்ஸா’ இருந்து வரலாம்.’பை’ சண்மு கம்” என்று சொல்லி விட்டு எழுந்து வெளியே கிளம்பி போய் விட்டாள் ரம்யா.

அவள் போவதையே பார்த்துக் கொண்டு இருந்தான் சண்முகம்.அவனுக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை.நெடு நேரம் ‘காபி டே’யில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தான் சண்முகம். பிறகு நேரம் ஆகி விடவே. மெல்ல எழுந்து வெளியெ வந்து தன் ‘ப்ளாட்டுக்கு’ வந்தான் சண்முகம்.

ஒரு வாரம் ஆனது.ரம்யா ‘விவாக ரத்து’ காகிதத்தை சண்முகத்துக்கு அனுப்பினாள்.அதைப் படித்ததும் சண்முகத்திற்கு உலகமே இருண்டு விட்டது போல இருந்தது.அழுதுக் கொண்டே அந்த ‘விவாக ரத்து’ காகிதத்தில் தன் கை எழுத்தைப் போட்டு ரம்யாவுக்கு அனுப்பினான்.சென்னையில் இருக்க பிடிக்காமல் பெங்களுருக்கு மாற்றல் கேட்டு பெங்களுருக்கு வந்து விட்டான் சண்முகம்.

ரெண்டு வாரம் ஆனதும் சண்முகம் அவன் அம்மாவைக் கூப்பிட்டு ‘போனி’ல் பேசினான்.

“போனி’ல் அவன் அம்மா “சண்முகம்,நாங்க தான் இந்த பெரிய தப்பைப் பண்ணிட்டேம்ப்பா. நாங்க உன்னிடம் ‘நீ சின்னவனா இருந்தப்ப,நம் குடும்ப வழக்கப் படி நாங்க உங்க மாமா,மாமி கிட்டே அவங்க  பொண்ணே எங்களுக்கு மருமகளாக ஆக்கிக்கறோம்’ன்னு சத்தியம் பண்ணி குடுத்ததை சொல்லாதது எங்க தப்பு தாம்ப்பா.உன் படிப்பு முடிஞ்சதும் இந்த சமாசாரத்தை சொல்லாம்ன்னு நானும் அப்பாவும் இருந்திட்டோம்பா.எங்களை மன்னிச்சுடுப்பா” என்று  அழுது கொண்டே சொன்னாள்.

சண்முகத்துக்கு என்ன சொலவது என்றே புரியவில்லை.”சரிம்மா நடந்தது நடந்துப் போச்சு. இப்ப அதை எல்லாம் எனக்கு சொல்லி என்ன பிரயோஜனம்மா.அந்த பெண் ரம்யா என்னை விவாக ரத்து பண்ணி விட்டாம்மா” என்று சொல்லி வருத்தப் பட்டான் சண்முகம்.“அப்படியாப்பா சண்முகம்.நீ ஊருக்குக் கிளம்பிப் போனவுடன் உன் மாமா கிணறு,வீடு, எல்லாத்தையும்  வித்துட்டு மாமியையும், பொண்ணு சுசீலாவையும் அழைச்சுகிட்டு சென்னைக்கு போய் விட்டாருப்பா.அவங்க  ஊரை விட்டுப்  போகும் போது கூட என் கிட்டேயோ, அப்பா கிட்டேயோ,தாத்தா கிட்டேயோ சொல்லிக்காம இந்த ஊரே விட்டுப் போயிட்டாங்கப்பா” என்று வருத்த பட்டுக் கொண்டே சொன்னாள் ரேவதி.

”சண்முகம்,நீ எனக்கு கொஞ்சம் டயம் குடு.நான் விசாரிச்சு,நல்ல நம்ப ஜாதிப் பொண்ணா உனக்கு பார்த்து சொல்றேன்.நீ அந்த பொண்ணைக் கல்யாணம் கட்டிக் கிட்டு சந் தோஷமா இருந்து வாப்பா” என்று சொன்னார் சண்முகத்தின் அப்பா.”அப்பா எனக்கு மனசே சா¢ல்லே.நான் சொல்ற வரைக்கும் நீங்க எனக்கு பொண்ணு பாக்க வேணாம்ப்பா” என்று சொல்லி விட்டு ‘போனை’ ‘கட்’ பண்ணி விட்டான் சண்முகம்.

சுசீலா ப்ளஸ் டூ’ ரிஸல்ட் வந்தது.அவள் ‘பாஸ்’ பண்ணி நல்ல மார்க் வாங்கி இருந்தாள்.சுசீலா மிகவும் ஆசைப் பட்டதால்,முருகன் அவளை ‘BE கம்ப்யூட்டர் சயன்ஸ் கோர்ஸில்’ சேர்த்து விட்டார் முருகன்.

நான்கு வருஷங்கள் ஓடி விட்டது.சுசீலா ‘BE கம்ப்யூட்டர் சயன்ஸ்’ படிப்பில் ‘பஸ்ட் க்லாஸில் பாஸ்’ பண்ணினாள்.ஒரு பெரிய I.T. கம்பனியில் இருந்து அவளுக்கு ‘இண்டர்வியூ’ வந்தது.கடவு ளை வேண்டிக் கொண்டு அந்த ‘இண்டர்வியூக்கு’ கிளம்பினாள் சுசீலா.அந்த கம்பனிக்குப் போய் ‘இண்டர்வியூ’ ஹாலில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தாள் சுசீலா.அவள் பேரைக் கூப்பிட்டதும் தன் அப்பா அம்மாவை மனதில் வேண்டிக் கொண்டு உள்ளே போனாள் சுசீலா.

தலையை குனிந்துக் கொண்டு முன்னால் ‘இண்டர்வியூ’ கொடுத்த நபருக்கு மார்க்குகளை போட்டு விட்டு,தலையை நிமிர்ந்து “டேக் யுவர் சீட்” என்று சொல்லிக் கொண்டே தலையை நிமிர்ந்தார்  அதிகாரி ரம்யா.

ஆச்சா¢யம் தாங்கவில்லை ரம்யாவுக்கு.“நீங்களா மேடம்.நான் உங்களே எதிர் பார்க்கவே இல்லே. ’வாட் எ ப்லெஸண்ட் சர்ப்ரைஸ்’ ”என்று சொல்லி சுசீலாவைப் பார்த்து சொன்னாள் ரம்யா.சுசீலாவுக்கு ம் அவரைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது.மிகவும் பவ்யமாக “ஆமாம் மேடம் நான் தான்”என்று சொன்னாள் சுசீலா.ரம்யா கேட்ட எல்லா கேள்விகளுக்கும் எல்லாம் சா¢யாக பதில் சொல்லி,அவர் கொடுத்த ‘கம்ப்யூடர்’ வேலைகளையும் சா¢வர செய்து காட்டினாள் சுசீலா.

சுசீலாவை மிகவும் பாராட்டி சுசீலாவுக்கு அந்த கம்பனியில் வேலை தருவதாகவும்,தன் ‘செக்ஷனிலியே’ அவளுக்கு ‘போஸ்டிங்க்’ கொடுப்பதாயும் உறுதி அளித்தாள் ரம்யா.சுசீலாவுக்கு அள வு கடந்த சந்தோஷம்.ரம்யாவுக்கு தன் நன்றியைத் தெரிவித்தாள் சுசீலா.பிறகு நிதானமாக “நீங்க விழுப்புரத்தில் தானே இருந்தீங்க.எப்போ நீங்க சென்னைக்கு வந்தீங்க” என்று கேட்டாள் ரம்யா.

உடனே சுசீலா அவள் விழுப்புரம் ஊரை விட்டு விட்டு வந்ததில் இருந்து இன்று வரை நடந் ததை எல்லாம் விவரமாகச் சொன்னாள்.எல்லாவற்ரையும் கேட்ட ரம்யா மிகவும் சந்தோஷப் பட்டாள். கொஞ்ச நேரம் ஆனதும் “சுசீலா,நான் சென்னைக்கு வந்ததும் சண்முகத்தை விவாக ரத்து பண்ணி விட்டு,வேறு ஒருவரை திருமணம் செஞ்சு கிட்டேன்” என்றாள் ரம்யா.ரம்யா சொன்னதைக் கேட்டு மிகவும் வருத்தப் பட்டாள் சுசீலா.

‘இண்டர்வியூ’ முடிந்தவுடன் சுசீலா தன் வேலை ஆர்டரை வாங்கிக் கொண்டு தன் வீட்டுக்கு வந்தாள்.தன் பெற்றோர்களிடம் தனக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தை சொன்னாள் சுசீலா.

சுசீலாவின் திறமையை மிகவும் பாராட்டி ரம்யா ஒரு புது ‘ப்ராடக்ட் டிஸனை’ பண்ணச் சொல்லி சுசீலாவிடம் கொ¡டுத்தாள்.சுசீலாவும் அந்த சவாலை ஏற்று அந்த ‘ப்ராடக்ட் டிஸைனில்’ மும்முறமாய்  செய்து வந்தாள்.அவள் முயற்சி வீண் போகவில்லை.வேறு எந்த கம்பனியும் செய்யாத அளவுக்கு மிக வும் திறம்பட அந்த ’ப்ராடக்ட் டிஸைனை’யை செய்து ரம்யா மேடத்திடம் காட்டினாள் சுசீலா.

ரம்யா மேடத்துக்கு ஆச்சா¢யம் தாங்கவில்லை.“சுசீலா  இது வரை இந்த  ‘ப்ராடக்ட் டிஸைனை’ எந்த கம்பனியும் இவ்வளவு கண கச்சிதமா பண்ணதே இல்லே.நம்ம கம்பனி தான் இதை முதல்லே செஞ்சு இருக்கு.நான் இந்த ‘ப்ராடக்ட் டிசைனை’ எல்லா  கம்பனிக்காரர்களையும் கூப்பிட்டு ஒரு ‘செமினார்’ ‘அரேஞ்ச்’ பண்ணி,இதைக் காட்டப் போறேன்.உனக்கு தான் நான் முதலில் ‘கண்கிராஜு லேஷன்ஸ்’ சொல்லணும்”என்று சொல்லி சுசீலாவின் கைகளைப் பிடித்து குலுக்கினாள் ரம்யா.சுசீலா வுக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.தன் வீட்டுக்கு ஓடி வந்து தன் அப்பா, அம்மாவிடம் எல்லா சமாச்சாரத்தையும் சொல்லி அவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினாள் சுசீலா.

ரம்யா சுசீலா கண்டுப் பிடித்த புது ‘ப்ராடக்ட் டிசனை’ மார்கெட் பண்ண பெங்களுரில் இருக்கும் எல்லா I.T.’ஜாம்பவான்களை’ வரவழைத்து காட்ட பண்ண முடிவு பண்ணினாள்.அன்று இரவே ரம்யா பெங்களூர்  கிளம்பிச் சென்றாள்.பெங்களூரில் ஒரு ‘கான்பரன்ஸ் ஹாலை’ ‘புக்’ பண்ணி விட்டு மற்ற எல்லா ஏற்பாடுகளை எல்லாம் கவனிக்கத் தொடங்கினாள்.திடீரென்று சண்முகம் ஞாபகம் வரவே ரம்யா அவன் ‘ஆபீஸ்’க்குப் போய் அவனை சந்தித்தாள்.

திடீரென்று ரம்யாவைப் பார்த்ததும் சண்முகத்திற்கு ஆச்சரியமாய் இருந்தது.இருவரும் பக்கத் தில் இருக்கும் ‘காபி டே’க்குப் போய் உட்கார்ந்துக் கொண்டார்கள்.ரம்யா தான் பேச்சைத் தொடங்கி னாள்.”என்ன சண்முகம் எப்படி இருக்கீங்க..உங்க உடம்பு ரொம்ப இளைச்சுப் போய் இருக்கீங்க. பெங் களூர் வந்த பிறகு ‘லைப்’ எப்படி இருக்கு.உங்க முறைப் பெண்ணை கல்யாணம் கட்டிக் கிட்டீங்களா இல்லையா” என்று கேட்டு கிண்டல் பண்ணினாள்.

“என்ன சொல்றீங்க ரம்யா.என் படிப்பு எங்கே,என் ‘லைப் ஸ்டைல்’ எங்கே,என் வேலை எங்கே. நான் எப்படி வெறும் ‘டெந்த்’ படிச்சு கிராமத்லே இருக்கிற அந்த பெண்ணை கல்யாணம் கட்டிக்கிறது.  அவ எனக்கு எந்த விதத்லேயும் சா¢யான ‘மேட்ச்’ இல்லையே” என்று சொல்லி வருத்தப் பட்டான் சண்முகம்.

மனதுக்குள் சிரித்துக் கொண்டே “யூ ஆர் கரெக்ட் மிஸ்டர் சண்முகம்.இப்போ உங்க ‘டேஸ்ட்’ எனக்குப் புரிஞ்சிடுச்சி.’பை தி பை’  ‘ஆகஸ்ட்’ ‘டெந்த்’ அன்னைக்கு ‘விஸ்வேஸ்ரய்யா கான்பரன்ஸ் ஹால்லே’ எங்க புது ‘ப்ராடக்ட் டிஸைன்’ ஒன்னை நான் அறிமுகப் படுத்தப் போறேன்.நீங்க அவசியம் அந்த ‘கான்பரன்ஸ¤க்கு’ வரணும்.இது உங்களுக்கு நான் தரும் ‘பர்ஸனல் இன்விடேஷன்’.‘ப்லீஸ் அட்டென்ட் வித்தவுட் பெயில்’” என்று சொல்லி சண்முகத்தை ‘இன்வைட்’ பண்ணினாள் ரம்யா.

“’சூர்’ நான் நிச்சியமா ‘அட்டெண்ட்’ பண்றேன் ரம்யா” என்று சொன்னான் சண்முகம்.

குறிப்பிட்ட தினத்தில் பெங்களுரில் அந்த ‘கான்பரஸ் ஹாலில்’ பல வெளி நாட்டு  I.T. நிபு ணர்களும்,இந்தியாவின் I.T.நிபுணர்களும் குழுமி இருந்தார்கள்.ரம்யா  எல்லோரையும் வரவேற்று சுசீலாவின் புது ‘ ப்ராடக்ட் டிஸனை’ காட்டி,அந்த ‘டிசைனினில்’ இருந்த பல்வேறு உபயோகங்களை யும்,முன்னேற்றங்களையும் விளக்கிச் சொல்லி விட்டு,தற்போது ‘மார்கெட்டிலே’ உள்ள ‘டிசைனை’ விட மிக குறைந்த விலையில் விற்கப் போவதாயும்  சொன்னாள்.

வெளி நாட்டு நிபுணர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னாள் ரம்யா. எல்லோ ரும் அசந்து விட்டார்கள்.சண்முகமும் பல கஷ்டமான கேள்விகளைக் கேட்டான்.எல்லாவற்றுக்கும் பதில் சொன்னாள் ரம்யா.

கேள்விகள் முடிந்தவுடன் சுசீலாவை ‘ஸ்டேஜ்க்கு’ வரச் சொன்னாள் ரம்யா.ரம்யா சுசீலா கையைத்  தூக்கிப் பிடித்துக் கொண்டு “‘திஸ்  வுமன் ஹாஸ்  டண் திஸ் எக்ஸண்ட் வர்க். ஹர் நேம் இஸ் மிஸ் சுசீலா’ ”என்று சொல்லி அவளை அறிமுகப் படுத்தினாள் ரம்யா.எல்லா நிபுணர்களும் ‘ஸ்டேஜுக்கு’ வந்து சுசீலாவின் கையைப் பிடித்து குலுக்கினார்கள்.சண்முகம் மட்டும் ‘ஸ்டேஜுக்கு’ வரவில்லை.

சுசீலாவையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டு இருந்தான்.அவனுக்கு சுசீலாவைப் பார்க்க ஆச்சா¢யமாக இருந்தது.‘பாப்’ தலை, ’ஜீன்ஸ் பாண்ட்’ ‘டாப்புடன் ’அவள் பார்க்க ஒரு தேவதை போல் காணப் பட்டாள்.‘சுசீலாவா இந்த ‘ப்ராடக்ட் டிஸைனை’ப் பண்ணினவ.நாம என்னவோ இவ வெறுமே ‘டெந்த்’ படிச்ச கிராமத்து பொண்ணுன்னு இல்லே,இத்தனை நாளா நினைச்சுக் கிட்டு இருந்தோம்’ என்று மனதில் எண்ணி வியந்தான்.அவனால் நம்பவே முடியவில்லை.

சுசீலாவுக்கு சண்முகத்தைப் பார்க்கவே கஷ்டமாய் இருந்தது.தாடி,மீசையுடன் மிகவும் மெலி ந்து காணப் பட்டான் அவன்.வருத்தம் அவன் முகத்தில் நன்றாகத் தெரிந்தது.

அடுத்த நாள் தன் அம்மாவுக்கு ‘போன்’ பண்ணி தான் சுசீலாவை பெங்களூர் ‘செமினார்’ ஒன்றில் சந்திதித்தாகவும்,அவள் எவ்வளவு பெரிய சாதனை படைச்சு இருக்கா என்பத்தையும் விவர மாகச் சொல்லி தான் சுசீலாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள மிகவும் ஆசைப் படுவதாயும்,மாமா விடம் ‘போனி’ல் பேசி இந்த கல்யாணத்தை முடிச்சு குடுக்கும் படி கெஞ்சினான் சன்முகம்.

அம்மா ரேவதிக்கு ஒன்னும் புரியவில்லை.“எப்படிடா நான் இதைப் பண்ணமுடியும்.உன் மாமா இப்ப எங்க  இருக்கார்ன்னே எங்களுக்கு தெரியாதேடா” என்றாள் அழ மாட்டாத குரலில்.

இதற்கிடையில் திடீர்ன்னு தாத்தா பழனியப்பனுக்கு’ நிமோனியா’ ஜுரம் வந்து .அவர் உடல் நிலை மிகவும் மோசம் ஆகி விட்டது.அவரை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார் மருமகன் ஆறுமுக மும் மகள் ரேவதியும். மற்ற உறவினர்கள் பழனியப்பன் நிலைமையை முருகனுக்கு ‘போனி’ல் விவர மாகச் சொன்னார்கள்.உடனே மணைவி வள்ளியையும்,மகள் சுசீலாவையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு ஓடி வந்தார் முருகன்.

சண்முகத்திற்கு போன் பண்ணி “ஷண்முகம் ,தாத்தா மிகவும் மோசமான நிலைலே இருக்கார். முடிஞ்சா நீ ஒரு முறை ஊருக்கு வந்து அவரைப் பார்த்துட்டு போப்பா” என்று சொன்னாள் ரேவதி.

ஷண்முகமும் உடனே ரெண்டு நாள் லீவுப் போட்டு விட்டு ஊருக்கு வந்தான்.தாத்தா பழனிய ப்பன் படுக்கையை சுற்றி எல்லோரும் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.கண்களை முழித்து  பார்த்த போது மெல்ல தன் கைகளை தூக்கி சண்முகத்தையும்,சுசீலாவையும் தன்னிடம் வருமாறு சைகை செய்தார் அவர்.உடனே சண்முகமும் சுசீலாவும் அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்துக் கொண்டார்கள்.

தாத்தா சண்முகத்தின் கையை ஒரு கையிலேயும் சுசீலாவின் கையை மற்றொரு கையிலேயும் பிடித்துக் கொண்டு மெலிந்த குரலில் “தம்பி சண்முகம்,அம்மா சுசீலா,இந்த பாவித் தான் இருபத்தி ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாலே என் குழந்தைகளான உன் அம்மாவையும்,உன் மாமாவையும் நம் குலத்தின் குடும்ப வழக்கப் படி ‘உறவு அறுந்து’ப் போவக் கூடாதுன்னு சொல்லி உங்க ரெண்டு பேருக்கும் ஒரு நிச்சியம் பண்ணி,நீங்க பெரியவங்க ஆனதும் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வக்கும் படி,சத்தியம் பண்ணச் சொல்லி ‘கண்டிஷன்’ போட்டேம்ப்பா.அவங்களும் உடனே எனக்கு சத்தியம் பண்ணி குடுத்தாங்க.என் உயிர் இன்னும் சில மணி நேரத்தில் போவப் போவுது. என் ஆத்மா சாந்தி அடைய நீங்க ரெண்டு பேரும் கல்யா…..”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது அவர் கை சண்முகத்தின் கையையும், சுசீலாவின் இறுக்கிப் பிடித்துக் கொண்டு தன் தலையை சாய்த்து விட்டார்.

உடனே தன் தம்பியின் கைக¨ளைப் பிடித்துக் கொண்டு “தம்பி, இந்த கைகளை உன் கால்க ளாக நினைச்சு நான் கெஞ்சறேம்ப்பா.சுசீலாவை சண்முகம் வேணான்னு சொன்னது ரொம்ப தப்பு. உன் பெண்ணை என் மகன் சண்முகத்துக்கு கல்யாணம் கட்டிக் குடுப்பா” என்று அழுதுக் கொண்டே கேட்டாள் ரேவதி.அவள் அழுவதைக் காண சகிக்காமல் முருகன் “சா¢ம்மா ரேவதி. நீ அழாதே.நான் என் பெண் சுசீலாவைக் கேக்கறேன்” என்று சொல்லி சுசீலாவைப் பாத்து “ஏம்மா சுசீலா.நீ  சண்முக த்தை கட்டிக்கிறாயாம்மா” என்று சொல்லி சுசீலாவைப் பாத்துக் கேட்டார் முருகன்.

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு “நீங்க பெரியவங்க எது பண்ணாலும் எனக்கு சரிப்பா” என்று வெக்கத்துடன் சொன்னாள் சுசீலா.உடனே ரேவதி ஓடிப் போய் தன் அண்ணன் மகள் சுசீலாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவள் கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்தாள்.

‘வேணாம் இந்த சுசீலா’ என்று சொல்லி ஊரை விட்டுப் போன சண்முகத்தை,பத்து வருஷம்  கழித்து மறுபடியும் அதே ஊருக்கு வரவழைத்து,‘அதே சுசீலாவை கல்யாணம் கட்ட வைத்தது,அன்று  “அவன் போட்ட முடிச்சு’’ஆச்சே.

அந்த ‘முடிச்சை’ யாரால் மாத்த முடியும் சொல்லுங்க.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *