Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 22, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

தகிடின் சரித்திரம்

 

 ‘‘ தகிடு செத்துட்டான்…” இதுதான் விறகு விற்கும் சந்தையில் விளம்பரமாய் இருந்தது.சிறுவியாபாரிகள் ஒன்று கூடி தகிடுவின் அடையாளமான ஈர்க்குச்சியின் உடம்பைப் பார்த்தார்கள்.வெயிலுக்கும் மழைக்கும் குளிருக்கும் ஒதுங்கிக் கொள்ளும் கட்டிடத்துக்குள் தகிடுவின் உடலைக்கொண்டு செல்வதென முடிவெடுத்தார்கள். இரண்டுபேர் தூக்கிக் கொண்டு கட்டிடத்தின் தரையில் கிடத்தினார்கள். மீண்டும் ஆலோசனை நடந்தது.மாலை, தேங்காய், ஊதுபத்தி கூடவே செண்டு பாட்டிலும் கோடித்துணியும் வாங்கிவர சில்லரைக் காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் அருகே இருந்த முப்பதுவயதான வியாபாரியிடம் கொடுத்தார்கள். வியாபாரி1: ‘‘ நேத்து நல்லாத்தானே இருந்தான்.இராவுல


ராமநாதனின் கடைசிப்பக்கங்கள்

 

 புதிதாக தார் மீட்டிய சாலை அது… வழியெங்கும் மரங்கள், அந்த மரங்களின் வாயிலாக ஆங்காகே எட்டிப் பார்க்கும் குறும்புக்கார வெயில். அந்த சாலையின் நான்கு வழி முனையின் இடது பக்கம் திரும்பினால், ‘பாரதி’ தெரு… அந்த தெருவில் வலதுபுறத்தில் நான்காவதாக இருக்கும் நீல நிற வீடு தான் ராமநாதனின் வீடு… மன்னிக்கவும் … ராமநாதன் வசிக்கும் வீடு… கதவைத் திறந்து உள்ளே மாடிப்படிகள் பத்தைக் கடந்து வலது பக்கம் திரும்பினால் ஒரு சிறிய அறை வரும்… அதில்


கை காட்டி மரம்

 

 “என்ரை பந்தைத் தாடா விது” “இந்தப் பந்து எனக்கு வேணும். நான் தர மாட்டன்” என்று சொல்லிக் கொண்டு ஒரு பந்தைத் தன் மார்போடு அணைத்து இறுகப் பிடித்தபடி கேற்றை நோக்கி ஓடினான் விதுஷன். அவனை துரத்திச் சென்ற மதுஷன் கேற்றின் அருகே விதுஷனைக் கீழே விழுத்திப் பந்தை அவனிடமிருந்து, பிடுங்கி எடுக்க அவன் கோபத்துடன் மதுஷனின் கையைத் தன் பற்களால் கடித்து[ப் பந்தைப் பறிக்க முயல, மதுஷன் விதுஷனின் தொடையில் தன் நகங்களால் ஊன்றிக் கிள்ளினான்.


சுட்டதொரு சொல்

 

 மிகவும் குரூரமாக வாழ்வினின்றும் தூக்கி எறியப்பட்டுக் கரை ஒதுங்கி இருட்டில் முகம் மறைந்து வாழும், மீரா என்ற அந்த அபலைப் பெண் குறித்த வாழ்க்கை வழக்கு நீதி கேட்டுச் சபை ஏறி வென்று விடக்கூடிய ஒரு சாதாரண வழக்கல்ல நித்திய சோகமாகிவிட்ட , அவளின் கண்ணீருக்கும் அதுவே முடிவாகிப் போன இந்த வாழ்க்கை வழக்கிற்கும் உண்மை அறிந்த ஒரு நேரடி சாட்சியாக வந்து பேசக்கூடியவர் கடவுள் ஒருவர் மட்டும் தான். அப்படித் தான் அவர் நேரில் வந்து


மாடு

 

 மாடு கத்தும் சத்தம் அவருக்குக் கேட்டது. அது சாதாரண கத்தல்ல. அவலக்குரல். அது மாட்டின் கதறலா அல்லது பிரமையா என அஸீஸ் டொக்டருக்குக் குழப்பமாயிருந்தது. மோட்டார் சைக்கிளை அந்த இடத்தை நோக்கி இன்னும் விரைவுபடுத்தினார். முஸ்தபா சொன்ன தகவல்கள் அவரை உந்தித தள்ளியது. ‘நல்லதொரு பசுமாடு. இறைச்சிக்கு வித்திட்டாங்க!” தனது அன்றாடக் கடமைகள் முடிந்து வீடு திரும்புவதற்கு அஸீஸ் டொக்டருக்குப் பொழுது பட்டுவிடும். ஊர் மக்களால் டொக்டர் என அழைக்கப்பட்டாலும் மருத்துவத்துறையை கற்றுத் தேர்ந்த பட்டம் பெற்ற