கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 22, 2013

7 கதைகள் கிடைத்துள்ளன.

தூண்டில் புழுக்கள்

 

 அன்று காலை சீக்கிரமே விழிப்பு வந்து விட்டது அவளுக்கு. நேற்று ஞாயிற்றுக்கிழமையானதால் அலுவலகமில்லாதது நிம்மதியாக இருந்தது. இன்று திங்கட் கிழமை போயாகவேண்டும். ஒன்பதரை மணிக்கெல்லாம் ரிஜிஸ்டரில் கையெழுத்து போட்டாக வேண்டம். அதன் பின் உள்ளே நுழைந்து மேனேஜிங் டைரக்டர் எம்.சிவக்குமார் எனப் பெயர் பலகையிட்ட அறைக்குள் நுழைய வேணடும். அதை நினைத்த÷ பாதே அடிவயிறு சுருண்டது. உள்ளே அமிலம் சுரக்க ஆரம்பித்தது. அவளைக் கண்ட உடனே அவனது முகம் இறுகும். கண்களில் கோபம் எட்டி பப்க்கும். பேச்சு


அந்த இரண்டு லெட்டர்

 

 அதிர்வு நிலையில் இருந்த அலைபேசி உயிர்பெற்று உறக்கம் கலைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி முதலில் மணி பார்த்தார். அதிகாலை ஐந்து. பிறகு அழைப்பது உயரதிகாரிகள் இல்லையென உணர்ந்து நிம்மதியாகி பட்டனை அழுத்தினார். மறுமுனையில் சிறு அமைதி. பிறகு “ஐயா இன்ஸ்பெக்டருங்களா…?’ உயிர்ப்பின்றி, தயக்கமாய் ஆண் குரல். “ஆமாம்… நீங்க…?’ “என் பேரு மாடசாமிங்க… கோயம்பேடு ஒளவை திருநகர் மூணாவது குறுக்குத் தெருவுல இருக்கேங்க…’ “சொல்லுங்க மாடசாமி.. என்ன விஷயம்…?’ “ஐயா… உங்க போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள்ள குடியிருக்கற கூலிக்காரன்


மது + மாது = காதல்

 

 மது, மாது ஆகியவற்றில் சிக்கக் கூடாது என்பார்கள். நான் காதலில் சொக்கிய மாதுவின் பெயரே மது. மதுமதி. தெளிந்த நீரோடைபோல் ஓடிக் கொண்டிருந்த என்னை இப்படிச் சுழற்றியடித்து, பஸ் ஸ்டாண்ட், அடையாறு எனத் திருப்பிவிட்டு அலையவிட்டது என் அம்மாதான். எல்லா நாட்களைப் போல்தான் அன்றும் விடிந்தது. ஆனால் முடியவில்லை. ஜாகிங்கிற்காக இத்தியாதிகளோடு எப்பொழுதும்போல் கிளம்பி கடற்கரையை அடைந்து மூச்சிரைக்காமல் நடந்து பின் வேகமெடுத்து, உடம்பை வேர்க்க வைத்தேன். தினமும் வரும் பேரிளம் ஆன்ட்டிகள் ரீபோக், அடிடாஸ்களுக்குள் கடினப்பட்டு


மனித தர்மங்கள்

 

 வாழ்க்கையே ஒரு சுமைதான். சுமை என்றால் நாமே விரும்பினாலும் இறக்கி வைக்க முடியாத சுமை. அது தானாகத்தான் ஏறும்; தானாகவேதான் இறங்கும். இடையில் எத்தனையோ சுமைகளை நாமே ஏற்றியும் வைத்துக்கொள்ளலாம். இறக்கியும் போட்டுவிடலாம். அதற்குத் துன்பச் சுமை, துயரச் சுமை, குடும்பச் சுமை, குட்டிச் சுமை என்று எப்படி வேண்டுமானாலும் பெயரும் வைத்துக் கொள்ளலாம். அலுவலக விவகாரங்களினால் ஏற்பட்ட தலை வேதனையோடு வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்த எனக்கு இந்த வார்த்தைகள்தான் சற்றே ஆறுதலாயிருந்தன. இந்தக் கருத்துக் கருவூலம்


பிருந்தாவனில் வந்த கடவுள்

 

 ஏற்கனவே அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்ததற்கு மரியாதை செய்யும் பொருட்டு சரியாக முப்பது நிமிடங்கள் மட்டுமே தாமதமாக வந்து சேர்ந்தது பிருந்தாவன் எக்ஸ்ப்ரஸ். தூரத்தில் வரும்போதே உட்கார்ந்திருந்த பலர் தங்கள் பிருஷ்டங்களை அள்ளிக்கொண்டு எழுந்தார்கள். ரயிலை நோக்கி முன்னேறினார்கள். அமீர் உட்கார்ந்திருக்கவில்லை. நின்றுகொண்டுதானிருந்தான். உட்காருவதில் அவனுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும் அவனால் உட்காரமுடியாமல் போனது என்பதுதான் உண்மை. ஆங்காங்கு ‘சிமெண்ட் பென்ச்’கள் இருந்தன என்றாலும் அவன் நின்றுகொண்டிருந்த இடத்தில் அப்படி ஏதும் இல்லை. ஆனால் மேல் கூரையிலிருந்து