கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2013

76 கதைகள் கிடைத்துள்ளன.

உயிரின் விலை

 

 மணி என்ன? கேசவனிடம் ‘ரிஸ்ட் வாட்ச்’ கிடையாது. சுரீரென்று அடித்த வெயிலும், வயிற்றைக் கிள்ளிய பசியுந்தான் மணி இரண்டிருக்கும் என்று உணர்த்தியது. கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்தான். சாம்பார் சாதத்தை மடமடவென்று சாப்பிட்டு முடித்தான். காலை 9 மணி முதல் ‘ஸைன்போர்டு’ எழுதி, வாடி வதங்கியிருந்த அவனுக்கு வயிறு நிறைந்ததும் கண்கள் தாமாகச் சொக்கின. வழக்கம்போல் எதிர்காலம் பற்றிய பிரகாசமான கனவுகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. ‘ஸைன்போர்டு’ எழுதிப் பெற்ற அனுபவம், ஓவியக் கல்லூரியில் இடம் கிடைத்தல்,


ஜமீன்தாரின் காதலி…..

 

 ஜமீன்தார் கோபால் குமார் அந்த ஆளுயர போட்டோவுக்குள் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார். வழக்கம் போல் இறந்து போனவரின் மனைவி, பெயர் ரங்கநாயகி அம்மா, வயது எண்பது இருக்கும், பணிவோடும், பய பக்தியுடனும் போட்டோவுக்கு எதிரே நின்று, ஏதோ தன் கணவரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். இது அந்த ‘ஜமீன்தார் கோபால் குமார் நினைவு அனாதை இல்லத்தில்’ உள்ள மற்ற நபர்களுக்கு ஒரு வித்தியாசமான நிகழ்வாய் தோன்றவில்லை. ஏனென்றால் இது, தினமும் நடக்கும் ஒன்று தான். வார்டன் தனம் அதைப் பார்த்து


ஐயனார் கோயில் குதிரை வீரன்

 

 நெடுஞ்சாலைத் துறை அலுவலகம். சாலை விரிவு படுத்துவதற்கான காண்டிராக்ட் யாருக்கு என்ற முடிவு அறிவிக்கப்படுவதாக இருந்தது. காண்டிராக்டர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். மருதமுத்தும் அதில் ஒருவர். முகத்தை அடிக்கடி தோளில் இருந்த துண்டை எடுத்து துடைத்து கொண்டார். ஒவ்வொரு காண்டிராக்டரும் தன்னால் எவ்வளவு தொகையில் அந்த வேலையை செய்து முடிக்க முடியும் என்று டெண்டர் கூப்பிட்டிருந்த தொகை ஒவ்வொன்றாகப் படிக்கப் பட்டது. கையிலிருந்த ஒரு காகிதத்தில் மற்றவர்களின் தொகைகளை குறித்துக் கொண்டிருந்தார் மருதமுத்து. இப்படி அவர் முந்தைய டெண்டர்களில்


அடி உதவுறது மாதிரி

 

 உழைத்து உழைத்து உரத்துப்போன கை. அந்தக் கையின் மூலமாக விழுந்த அடி ஒவ்வொன்றும் இடியைப் போல மதியின் முதுகில் விழுந்து கொண்டிருந்தது. அப்போதுதான் சாப்பிட உட்கார்ந்திருந்தான் முத்து. மாதம் ஒரு முறையோ, இருமுறையோ அம்மாவைப் பார்க்க கிராமத்திற்கு வரும் முத்துவுக்கு அப்போதுதான் அவனது அம்மா, சோற்றை வடித்து, கறிக்கொழம்பை ஊத்தினார். பக்கத்தில் வறுத்த கோழி வேறு இருந்தது. ஆசையாக சாப்பிடப்போகும் நேரந்தான் இந்தச்சத்தம் கேட்டது. அண்ணே, அடிக்காத, அடிக்காத, படிச்சிறேன், நான் படிச்சிறேன் என்னும் சத்தமும் அழுகையும்,


சொன்னா நம்பமாட்டீங்க !

 

 வீட்டுக்கு போயி 15 நாள் ஆச்சு , மனசு ரொம்ப பாரமா இருந்தது ,ரோட்டுல எல்லாரும் வேகவேகமாய் வீட்டுக்கு போறாங்க, மேகம் பூரா பக்கத்து வீட்டு குட்டி பாப்பா சுவத்துல கரிய வச்சி கிறுக்குனதுபோல அங்கொன்றும் இங்கொன்றுமாய் கரு மேகமா ஆங்காங்கே இருட்டினதுபோல் இருந்தது ,மழை வர்ற மாதிரியும் வராத மாதிரியும் ,காத்து பலமா அடிச்சது கண்டிப்பா எதிர் வீட்டு தம்பிதத்தா மழைக்காக காத்திருப்பார்,நீண்ட நாள் கோடை வெயிலுக்கு நடுவுல இதுபோல் மழை வந்தா நல்லா இருக்கும்ன்னு