கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2013

100 கதைகள் கிடைத்துள்ளன.

சொந்த மண்ணின் அந்நியர்

 

 அதிகாலை ஐந்து மணி நாற்பத்தைந்து நிமிடங்கள். அன்றைய காலைப்பொழுது இன்னமும் முற்றாகப் புலர்ந்திருக்கவில்லை. அன்றிரவு பெய்த மழையின் ஈரம் இப்போதும் பாதையில் சேற்றுப்பசையாய் பிசு பிசுத்துக் கொண்டிருந்தது. கொழும்பில் இருந்து மலை நாட்டை நோக்கிச் செல்லும் பிரதான ரயில் வண்டியான உடரட்டமெனிக்கேயைப் பிடித்து விட வேண்டும் என்று நான் விரைந்து கொண்டிருந்தேன். ரயிலுக்கு இன்னமும் பத்து விநாடிகளே இருந்தன. நான் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் இலக்கம் இரண்டை அடைவதற்கு முன்னமே ரயில் வண்டி வந்து


சூடேறும் பாறைகள்

 

 பொதுவா தனிம என்னை வாட்டுறப்பெல்லாம் அந்தப் பெரிய பாறாங் கல்லுக்கு மேலதான் நா ஏறி இருப்பேன். அங்கிருந்து பாத்தா சுத்து வட்டாரத்தில உள்ள பத்துத் தோட்டங்களும் தெரியும். எங்க தோட்டத்திலேயே ரொம்ப ஒசரமான ஒரு எடத்துல அது கம்பீரமா ஒரு பாறைக்குன்று போல நிமிர்ந்து நிற்கும். பாறைக்கு நடுவுல இருந்த நீம்பல்ல காட்டு மரம் ஒன்னு ரொம்ப அடர்த்தியா கிளை பரப்பி நெழல் தர்றதால உச்சி வெயில்ல கூட அந்தப் பாற சூடேறாது. அந்தக் காட்டு மரத்தோட


நேர்கோடுகள் வளைவதில்லை

 

 “நாளைக்கு எப்படியாவது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாக வேண்டும். நான் சொன்னால் மற்றவர்கள் கேட்பார்கள். எடுத்த எடுப்பில் வேலையை நிறுத்திப்புட்டார் என்ன செய்வது…. அதையுந்தான் பார்க்கலாம்” சீனிவாசகத்தின் நெஞ்சில் ஓடிய உரத்த எண்ணங்கள் போலவே அவனுடைய மண் வெட்டியும் பலமாக நிலத்தைக் கொத்திக் கொண்டிருந்தது. எண்ணத்தில் எழுந்த சீற்றம் அவனறியாமலேயே அவன் செய்து கொண்டிருந்த செயலிலும் வெளிப்பட்டதால் மண்வெட்டி மிக வேகமாக மண்ணில் புதைந்திருந்த கருங்கல் ஒன்றில் தாக்கி பளீர் என்று தீப்பொறி எழுந்ததைக்கூட அவன் உணரவில்லை.


நெஞ்சினலைகள்

 

 “அத்தை இறந்து விட்டார் உடனே புறப்பட்டு வா” என்று வந்திருந்த அந்தச் செய்தியை நான் நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். சந்திரா அத்தை இறந்து விட்டார் என்ற செய்தி என்னில் பெரும் சோகத்தை தோற்றுவிக்கவில்லை. ஆனால் ஒரு காலத்தில் சந்திரா அத்தை எங்கள் வீட்டுக்கு வர மாட்டார்களா என்று தவம் கிடந்திருக்கிறேன். அதற்குக் காரணம் சந்திரா அத்தை மேலுள்ள பாசம் அல்ல. சந்திரா அத்தை எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் அவர் மகள் புவனாவையும் கூட்டி


இன்னும் எத்தனை நாள்…?

 

 பெருமழையாக இல்லாவிட்டாலும் ஒரு மனிதனை தொப்பையாக நனைத்து விடும் அளவுக்கு மழை பெருந்தூறலாகத் தூறிக் கொண்டிருந்தது. அதனுடன் சேர்ந்து மெல்லிய ஈரக்காற்றும் வீசியதால் தேகத்தில் நடுக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு குளிர் காணப்பட்டது. அந்திச் சூரியனைக் கண்டு சில நாட்கள் ஆகியிருந்தன. தொடர்ச்சியான மழை காரணமாக வீதியெங்கும் சேறும் சகதியும் சொத சொதவென்று காணப்பட்டது. மாலைப்பொழுது மறைந்து மலைப்பிரதேசத்தை இருள் மெதுமெதுவாக விழுங்கிக் கொண்டிருந்தது. இவை எதனையும் பொருட்படுத்தாமல் வீரசேவுகப் பெருமாள் தன் வசிப்பிடமான பசுமலைத் தோட்டத்தின் பணிய


கருஞ் ஜூலையின் கொடும் நினைவுகள்

 

 1983, ஜூலை 29ஆம் திகதி. அந்த நாளை மறந்து விட வேண்டுமென்று எத்தனை தினங்கள் நான் நித்திரையின்றி உழன்றிருக்கின்றேன். என்னை, என் குடும்பத்தை சின்னாபின்னமாக சிதைத்த நாள். என் நெஞ்சைக் கீறி, என் கனவுகளைக் கலைத்து, என் கற்பனைகளை மண்ணோடு மண்ணாக்கி இப்போதும் என் கனவுகளில் சிவப்பு இரத்தம் கொப்பளிக்க என்னை மீண்டும் மீண்டும் சித்திரவதை செய்து சிறுகச் சிறுகக் கொன்று கொண்டிருக்கும் கரிய நாள். அந்த நாளை நினைத்துப் பார்க்க நான் ஒருபோதும் விரும்பியதில்லை. அவை


தேவதையின் பார்வை

 

 ஒருநாள் மாலைப்பொழுது… மயக்கும் மாலைப்பொழுது இல்லை. இலேசான வெயிலின் சூட்டுடன் பயணம். ஜன்னல் ஓர இருக்கையும் கிடைக்கவில்லை. அதனாலும் பயணம் பிடிக்கவில்லை. ஆனாலும் போயாக வேண்டிய கட்டாயம். போகிறேன். மனதில் இலேசான வருத்தம். சொல்ல முடியாத சோகம்… எதனால் சோகம் என யோசித்தேன். காரணம் பிடிபடவில்லை! இனம் புரியாத ஒரு சோகம்! எண்ணற்ற எண்ணங்கள் என்னுள் அமிழ்ந்திருக்கின்றன. ஆனால், எந்த நினைவையும் இப்போது தட்டி எழுப்ப வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். நினைவுகள் எப்போதும் ஏக்கத்தையே சென்றடையும்.


தேர்வறைத் தியானம்

 

 மூன்று மணி நேரம் தேர்வறையில் மௌனமாக இருக்கும்போது மனதில் பல்வேறு சிந்தனைகள் தோன்றும். பிரிந்த அன்பு, உடைந்த நட்பு, தோழியின் பரிவு, நண்பனின் நெருக்கம், தேர்வு சரியாக எழுதவில்லை என்றால்… எனும் பயம் இப்படி. இது பொதுவானவர்களுக்கு. இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்குக் கடவுள் பற்றிய ஆராய்ச்சி, பொதுவுடைமைச் சிந்தனை, கதை, கவிதை எழுதும் எழுச்சி, நாட்டில் சீர்திருத்தம் கொண்டு வருவது எப்படி என்றெல்லாம் இங்கே வந்துதான் ஞானோதயங்கள் (!) பிறக்கும். இப்படிப் பல்வேறு திசைகளுக்குக் அவரவர்களது


பத்து அருவா

 

 முதுகில் சாணைச் சக்கரம் சுமந்து போய்க் கொண்டிருந்தான் முருகேசன். வெயில் வாட்டி எடுத்தது. வியர்வை ஆறாகப் பெருக பாரம் பெரும் சுமையாக முதுகில் அழுத்தியது. சிறுகதை “ஆச்சு! இன்னும் கொஞ்சம் தூரம் தான். அடுத்த ஊரு வந்துரும்.” என்று நொந்த மனசையும் வலித்த காலையும் ஏமாற்றி மேலும் நடந்து கொண்டிருந்தான் அவன். பாவம் அவனும் என்ன தான் செய்வான்? பஸ்ஸில் போகலாம் தான். ஆனால் அந்தக் காசைத்தானே காலையில் பிள்ளைகள் பசியாற பன் வாங்கக் கொடுத்து விட்டான்.


குப்பனின் கனவு

 

 அன்றைக்கு நாள் முழுவதும் மழை சிணுசிணுத்துக் கொண்டிருந்தது. ஒரேயடியாக இரண்டு மணி நேரமோ, மூன்று மணிநேரமோ அடித்து வெறித்தாலும் கவலையற்று வேலை பார்க்கலாம். இப்படி நாள் முழுவதும் அழுதுகொண்டிருந்தால்…? குப்பன் ஒரு ரிக்ஷாக்காரன். வண்டியை மேற்கும் கிழக்குமாக இழுத்துச் சென்றதுதான் மிச்சம். ஒரு சத்தமாவது கிடைக்கவில்லை. மேலெல்லாம் நனைந்துவிட்டது. தலையில் போட்டிருந்த ஓட்டைத் தொப்பி – அது எந்த வெள்ளைக்காரன் போட்டதோ – அதுவும் தொப்பலாக நனைந்துவிட்டது. தொப்பியிலும் உள்பக்கம் ஈரம் சுவரியது என்றால், வேஷ்டியைக் கூட