கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2013

116 கதைகள் கிடைத்துள்ளன.

நெடுஞ்சாலையில் ஒரு சாவு

 

 அன்று இவர் ஊரில் இல்லை-தூங்கி எழுந்த எண்ணெய் தேய்த்து ஸ்னானம் செய்தேன். இவர் இல்லாததால் வீட்டில் வேலை ஒன்றுமே இல்லை. என்ன செய்து பொழுதைப் போக்கலாம் என்று தவித்தவள், இவருடைய பட்டன் இல்லாத ஷர்டுகளைப் பொறுக்கி எடுத்துப் பட்டன்களைத் தைத்துக் கொண்டிருந்தேன். சமையற்கார அம்மாள் எட்டிப் பார்த்தாள் – “சாப்பிட வரலையா? கார்த்தாலேந்து வெறும் வயத்தோடு இருக்கியே!” “ம்?…வரேன். இருங்கோ…இன்னும் ரெண்டு ஷர்ட் தான் பாக்கி…” இவர் இருந்தால் எட்டரை மணிக்கு டிபன்; ஒரு மணிக்கு சாப்பாடு.


நான் மட்டும்?

 

 காலை நீட்டி, உடம்பை லேசாய் முறுக்கிப் படுத்த விசாலத்துக்கு அப்பாடி என்றிருந்தது. எத்தனை பெரிய காரியம் நல்லபடியாய் நடந்து முடித்திருக்கிறது. ஒண்டிப் பொம்பளையாய் இருந்தாலும் நாலு ஜனம் பாராட்டுகிற மாதிரி காலாகாலத்தில் பெண்ணை ஒருத்தனிடம் ஒப்படைத்துவிட்டது எத்தனை பெரிய காரியம்! ஸ்ரீ வெங்கடாசலபதியின் அனுக்கிரகமும், அந்த வக்கீல் வீட்டு மாமியின் உபகாரமும் இல்லையென்றால் இந்தக் கல்யாணத்தை மனசால்கூட நான் நினைத்துப் பார்த்திருக்க முடியுமா? முடியாது. காரும் பங்களாவுமாய் மணக்கிற இடம் இல்லை என்றாலும், சம்பந்தி வீட்டுக்காரர்கள் நல்ல


ஒரு ராஜ விசுவாசியின் கதை

 

 காலம் கிபி.1300, சரியாக சொல்ல வேண்டும் என்றால் மூன்றாம் இராஜேந்திர சோழனுக்கு பிந்தைய காலம். வாசுகாறை என்னும் நாட்டை சுமவன் என்னும் அரசன் அறம் தவறாது ஆட்சி செய்து வந்தான்.சுமவன் மிக பெரும் சிவபக்தன், அதனால் நாட்டின் தென்பகுதியில் மிகப்பெரும் சிவாலயத்தை அமைக்கும் பணியில் ஈடு பட்டிருந்தான். நாட்டில் காலம் தவறாது மழை பொழிந்ததால் விவசாயமும் அதை சார்ந்த தொழில்களும் சிறப்பாக நடந்து வந்தன. நாட்டின் ஒரு பக்கம் கடல் நீர் பரப்பி இருந்ததால், வாசுகாறைக்கு இரண்டு


வாக்

 

 சியாமா-எங்கள் நாய்-இரண்டு நாட்களாய் சரியாய்ச் சாப்பிடுவதில்லை; மந்தமாய் இருக்கிறாள். டாக்டரிடம் கொண்டு காட்டினோம். ‘நத்திங் டூ ஓர்ரி.. டிவர்ம் பண்ணுகிறேன்… சரியாயிடும்’ என்றவர், “எக்ஸசைஸ் கொஞ்சம் கொடுத்துப் பாருங்களேன்; உடம்பு சுறுசுறுப்பாகும்” என்று சொன்னார். என்ன தேகப் பயிற்சி கொடுப்பது! பந்து விட்டெறிந்த பார்த்தேன்-இரண்டு முறை எடுத்து வந்தாள். மூன்றாவது தடவை ‘நீயே எடுத்துக் கொண்டுவா’ என்பது போன்ற பார்வையுடன், அமர்ந்துவிட்டாள். வாக் அழைத்துப் போனால் என்ன?. நெடுஞ்சாலை இரண்டு கைகளையும் நீட்டி என் மேல் நட


தாய்

 

 “அம்மா…” “என்ன இந்துக் குட்டீ?” “என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க?” “ஒரு க்ளயண்டோட முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கு-அதுக்காக பாயிண்ட்ஸ் தயாரிச்சிகிட்டு இருக்கேன்..என்ன வேணும்மா?” “இல்லேம்மா.. வந்து…” “சொல்லு டார்லிங், அம்மாக்கு நாழியாவுது பாரு…” “நாளன்னிக்கு எங்க ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே மம்மி… நீங்களும், டாடியும் வரணும் மம்மீ..” “நாளன்னிக்கா? ஏழாம் தேதியா? சாயங்காலமா? ஸாரிடா – அன்னிக்கு போர்ட் மீட்டிங் இருக்கு. முடிய ஏழு, எட்டு ஆயிடுமேடா, ஏன் முன்னாலியே சொல்லலை? ம்…? அப்பாவும் லண்டன் லேந்து