கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2012

44 கதைகள் கிடைத்துள்ளன.

காதல் பாப்பா!

 

 ‘காலேஜ்லயே டாப் ஸ்கோரர்… கவுன்சிலிங்ல சென்னை காலேஜா செலெக்ட் பண்ணு… அங்கதான் ஸ்கோப் அதிகம்… நல்ல எக்ஸ்போஸர் கிடைக்கும்’னு எக்கச்சக்கமா நல்ல உள்ளங்களோட அட்வைஸ்! அதே போல, சென்னை காலேஜை செலெக்ட் பண்ணி, பயபக்தியா குலசாமியைக் கும்பிட்டு, முதல் நாள் காலேஜுக்குப் போனேன். கிளாஸ்ல என்டரானதுமே சிரிச்ச முகமா ஒரு பொண்ணு ”ஹலோ”ன்னுச்சு. ”ஹாய்”னு நான் சொன்னதும், ”ம்… ப்ரீத்தி சொல்லு”ன்னா. நானும் எல்.கே.ஜி-யில ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குனதுல இருந்து, இப்ப எலெக்ட்ரிக் டிரெய்ன்ல வந்தது வரை


தாத்தாப் பூ..

 

 சேகர் வரப்பில் உட்கார்ந்து இருந்தான். வாய்க்காலில் தண்ணீர் பளிங்கு மாதிரி பளபள என்று ஒளி அடித்தபடி ஓடிக்கொண்டு இருந்தது. இவன் கால்களைத் தண்ணிக்குள்விட்டு ‘சளக் புளக்’ என்று உழப்பிக்கொண்டு ஒரு முக்கியமான வேலை யில் இருந்தான். நாலு வயசுப் பையனுக்கு அப்படி என்ன முக்கியமான வேலை என்று நீங்கள் கேட்கலாம். பெரியவர்கள் என்று சொல்லப்படுகிற முற்றிய மனிதர்களுக்கு இதைப்பற்றி எல்லாம் என்ன தெரியும்? உங்களுக்கு நிறைய விஷயங்கள் மறந்து போய்விட்டன. குறிப்பாக, சந்தோஷம் தருகிற விஷயங்கள் எல்லாவற்றையும்


விருப்பமுள்ள திருப்பங்கள்!

 

 ”கெட்டிமேளம்… கெட்டிமேளம்..!” நாகஸ்வரமும் மேளமும் இணைந்து குதூகலிக்க, அட்சதை மழை பொழிய… ஆர்த்தியின் கழுத்தில் தாலி கட்டினான் மணமகன். திருமண மண்டபம் முழுக்கச் சுற்றமும் நட்பும் கூடிக் குலாவிக்கொண்டு இருந்தது. ”கடமையை முடிச்சிட்டோம்ல… மல்லிகா” தன் பக்கத்தில் பூரிப்புடன் நின்றுகொண்டு இருந்த தன் மனைவியிடம் கேட்டார் பரமசிவம். அவரின் கையை அழுத்தினாள் மல்லிகா. அந்த அழுத்தத்தில் இருந்தது ஓராயிரம் வார்த்தைகளின் திருவிழா! கண்களின் கடைக்கோடியில் திரண்ட கண்ணீர்த் துளிகளைத் துடைத்தபடியே பரமசிவம் மணமேடையில் இருந்து இறங்கி, மண்டபத்தின்


பபூனன் அம்மா பார்த்த சர்க்கஸ்

 

 புதிய ஊர், புதிய மனிதர்கள் என்று சுற்றித்திரிவதில் என்னவோ ஒரு பிரியம். காலில் சக்கரம் போல் எங்கும் நிற்காமல் 18 வருடங்கள் ஓடிவிட்டதை நினைக்கவே சிவசண்முகத்துக்கு ஆச்சர்யமாக இருந்தது. எப்பவாவது ஊர் நினைப்பு வரும். நடேசமூர்த்தி சைக்கிளை ஓசி வாங்கி, அதில் பல்டி முதல் கைவிட்டு ஓட்டுவது வரை அநேக வித்தைகள் பழகியது… நடேசமூர்த்தியே பயந்துவிட்டான். சைக்கிள் உயரம்கூட இல்லாமல், ஆளே சராசரிக்குக் கொஞ்சம் கட்டைகுட்டை யாக உருண்ட தேகம், எப்படி சைக்கிளில் வித்தைகள் பழகினான் தைரியமாக!


ஆயிரத்தில் இருவர்!

 

 தப்பு என் மீதா… இல்லை அவர்கள் மீதா என்று தெரியவில்லை. சேரில் அந்த இளைஞனின் மடிமீது உட்கார்ந்திருந்த அந்தக் கடை யுவதி, உள்ளே நுழைந்த என்னைப் பார்த்ததும் திடுக்கிட்டு எழுந்துகொண்டாள். எதிர்பாராத அதிர்ச்சியில் நிலைகுலைந்த அந்த இளைஞன் சேரிலேயே உட்கார்ந்திருப்பதா அல்லது எழுந்து நிற்பதா என ஒரு கணம் யோசித்து, பின் எழுந்து நின்றான். அவனுக்கு ஏற்பட்ட அதே அதிர்ச்சிதான் எனக்கும். திறந்த கதவை மூடிவிட்டு வெளியே போவதா அல்லது கடைக்குள் நுழைவதா எனத் துணுக்குற்று, பின்


புரியாத பாடங்கள்!

 

 சில சமயங்களில் சினிமாவைவிட வாழ்க்கை வெகு சுவாரஸ்யமாகவே இருக்கிறது! மகளிர் கல்லூரி ஒன்றில் அப்போதுதான் சேர்ந்து இருந்தேன். ஜெயஸ்ரீ எனக்கு கல்லூரியில் இரண்டு வருடங்கள் சீனியர். நான் படித்த பள்ளியில் ஜெயஸ்ரீ படித்தபோது ‘அவள் ஸ்டேட் லெவல் அத்லெட்’ என்பதைத் தவிர, வேறு எதுவும் அவளைப்பற்றி எனக்குத் தெரியாது. கோ-எஜுகேஷன் பள்ளியில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த எனக்கு, இந்த மகளிர் கல்லூரி அடிமனசில் பயப் பூச்சிகளைப் படபடக்கவைத்தன. விளையாட்டுச் சிறுவனின் கைகளில் சிக்கி, வண்ணங்களைத் தொலைத்துக்கொண்டு இருக்கும்


ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு நாடகம்!

 

 பெட்டிக்குள் ஏதோ ஒரு பிணம் இருப்பதாக சரவணனுக்கு இரண்டாவது முறையாகக் கனவு வந்தது. கண்ணம்மா ஆயாவுக்கு கல்யாணத்தின்போது சீதனமாகத் தந்த பெரிய மரப் பெட்டி அது. அதில் ஏராளமான துணி மூட்டைகள் இருந்தன. யார் வளர்ந்துவிட்டாலும் அவர்களுக்கு ‘சின்னதாகிவிட்ட’ ஆடைகள் எல்லாம் அதில் எதற்காகவாவது பயன்படும் என்று எடுத்துவைத்துவிடுவார்கள். கொஞ்சம் முக்கியமாக வைக்க வேண்டிய பொருள்களும் அதில் இருக்கும். ஊறுகாய் ஜாடி, விநாயகர் அகவல், கார்த்திகை தீபத்துக்கான அகல் விளக்குகள் இப்படி. ஆனால், அதனுள் ஒரு பிணம்


முடியாத கதை!

 

 ‘தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்!’ இது எதில் வருகிறது? சண்முகத்துக்கு அப்போது நினைவுக்கு வரவில்லை. அவன் கண்ணெதிரே அவன் எழுதிய 700 பக்க நாவல் அக்னிக்கு உணவாவதை அவன் பார்த்துக்கொண்டு நின்றான். அவனே எரிந்துகொண்டு இருப்பதுபோல் அவனுக்குத் தோன்றியது. இந்த அனுபவம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அதோ, அங்கே எரியும் ஒவ்வோர் எழுத்தும் அவன் உதிரத்தில் பிறந்தது. அவனுக்கே சொந்தமானது. அவனுக்கே மட்டும் புரியக்கூடிய புனிதமான அந்தரங்கம். இலக்கிய உலகம் அவன் எழுத்தைப் புரிந்துகொள்ள


சாக்கடை நீரில் கார வீட்டு நிழல்

 

 சரவணன் மாமா எனக்குத் தெரிந்து இரண்டு முட்டாள்தனங்களைச் செய்திருந்தார். ஒன்று, அவர் சுப்பக்காவைக் கல்யாணம் கட்டியது. இரண்டாவது… நேற்று ராத்திரி அவர் செய்த காரியம்! எங்க ஊரிலேயே பெரிய வீடு சரவணன் மாமாவுடையது. காரவீட்டு சரவணன்னுதான் எல்லாரும் அவரைச் சொல்வாங்க. அவரோட சின்ன வயசுலயே அவங்கப்பா தவறிப் போயிட்டாரு. ஆனாலும், கம்பீரமா நிமிர்ந்து நின்ன மோட்டு ஓடு போட்ட வீட்டில் இருந்துக்கிட்டு கஞ்சியும் களியுமா ஊத்தி, காரவீட்டு ஆச்சி சரவணன் மாமாவை வளர்த்துச்சு. நான் ஆறாங் கிளாஸ்


சூது நகரம்

 

 நகரம் முழுதும் தீப்பிடித்து எரிவதைப் போன்று வெக்கை. நாள் முழுதும் சங்கர் நகர்ந்துகொண்டே இருந்தான். நிலையாக நிற்க முடியவில்லை. நடந்தோ, பஸ்ஸில் ஏறியோ, தன் நகர்வை நிறுத்தாமல் தொடர்ந் தான். யாரையேனும் தன் மீது கவனம் செலுத்த வைப்பதுதான் அவனது இன்றைய நோக்கமாக இருந்தது. வாழ்வின் மிகப் பெரும் சூது தன் மேல் செலுத்தப்பட்டதாக உணர்ந்தவன் அதன் ஆட்டத்துக் குள் மிக மெதுவாக நுழைந்தான்… வேலை பார்த்த எந்த இடத்திலும் அவனை யாரும் மரியாதையாக நடத்தியது இல்லை.