கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 11, 2012

9 கதைகள் கிடைத்துள்ளன.

டயரி ரகசியம்!

 

 மாணிக்க முதலியார், ரத்னசாமிப் பிள்ளை இரண்டு பேரும் டயரி போட் டார்கள். இரண்டு பேர் போட்ட டயரி களும் லக்ஷக்கணக்கில் செலவழிந்தன. ஆனால், ஒவ்வொரு வருஷமும் முதலியா ருக்கு மட்டும் அதிக லாபம் கிடைத்தது. அதன் ரகசியம் பிள்ளைக்கு விளங்க வில்லை. ஒரு நாள், முதலியாரைக் கண்டு பேசினார்… ”நீங்களும் டயரி போடுகிறீர் களல்லவா?” ”ஆமாம்!” ”உயர்ந்த அட்டையுடன்தானே?” ”ஆமாம், முதல் தரம்!” ”டயரியில் பென்ஸில் வைத்துக் கொடுப்பதுண்டா?” ”உண்டு. பென்ஸில் ஒன்றே அரையணா விலையாகிறது!” ”அப்படியிருந்தும்


நாதங்கள் மோதினால்…

 

 நாட்டைக் குறிஞ்சியில் வர்ணத்தை முடித்து விட்டு, அடுத்ததாக கணபதியையும் வாசித்த பின் அமிர்தவர்ஷிணியில் சுதாமயியை வாசிக்க ஆரம் பித்தாள் மீரா. பார்வை, எதிரே எள் விழ இடமின்றி சபா முழுவதும் நிறைந்திருந்த ரசிகர்கள் மீது திரும்பிய போதெல்லாம், முதல் வரிசையில் அவளுக்கு நேராக அவளின் தந்தைக்கு அடுத்து போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலி காலியாயிருப்பது அவள் நெஞ்சை உறுத்தியது. அந்த ஒரு நாற்காலியினால் சபா முழு வதுமே காலியாக இருப்பது போன்ற உணர்வு! கடைசியில் பாலமுருகன் வரவே இல்லை.


வேறு கிளை… வேறு சுவை!

 

 நான் நான்காம் வகுப்பு படித்தபோது பார்த்த அந்த முகம்தான் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை மஞ்சு அக்காவுக்கான முகம். ஏனென்றால், அதன் பிறகு அவளை நான்பார்க்க வில்லை. தொடர்வண்டி எத்தனை நிறுத்தங்களைக் கடக்கும்போதும் மாற்றமில்லாமல் தோன்றும் ரயில் நிலையம் போல, எந்த வயதுக்குமான முகமாக இருக்கிறது மஞ்சு அக்காவின் முகம். அந்த முகத்துக்கு மட்டும் முதிர்ச்சியே இல்லை. பளிச்சென்ற துறுதுறு முகம். அந்தக் கண்களும் உதடுகளும் இன்றும் பிரகாசமாகவே இருக்கின்றன. தேவைப்பட்டபோதெல்லாம் மனதின் ஆழத்தில்


சாமீ

 

 ”சிலுவர் கௌ£சுல ஒரு டீ போடுங்க ஐயப்பா!” – குருசாமி தாடியைத் தடவியபடி வந்தார். குடத்தில் இருந்த தண்ணீரை மொண்டு முகம் கழுவி வாய் கொப்பளித்தார்.               ”மாசம் பொறந்துருச்சா சாமி..?” – கார்த்திகை பிறக்க இன்னும் ஒரு நாளோ ரெண்டு நாளோ இருக்கு. அவருக்கென்று செல்ஃபில் இருந்து ஒரு சில்வர் டம்ளரை எடுத்து டீ ஊத்தித் தந்தான். மாசம் பொறந்துவிட்டால் நிறைய தம்ளர்கள் வேண்டியிருக்கும். ”நமக்கென்ன சாமீ

bangaloremailil

பங்களூர் மெயிலில்

 

 பங்களூர் மெயிலில் அன்று கூட்டமேயில்லை. மெயில் புறப்பட வேண்டிய நேரத்துக்கு ஐந்து நிமிஷ நேரம் தாமதித்துப் புறப்பட்டும்கூட, ஜனங்கள் வந்த பாட்டைக் காணோம். எனவே அந்த வண்டி, ‘இனி மேல் வந்தால் ஏறமுடியாது’ என்று எச்சரிப்பதைப் போல், நீண்ட ஊதலுடன் கிளம்பிற்று. என்ஜினிலிருந்து இரண்டாவது பெட்டியில் மூன்றே பேர் உட்கார்ந்திருந்தோம் – சிதம்பரம் பிள்ளை, ஓர் இளைஞர், நான்! வண்டி பேஸின் பிரிட்ஜ் ஜங்ஷனைத் தாண்டியதும், என்ன நினைத்துக் கொண்டதோ, பிரமாத வேகத்துடன் ஓட ஆரம்பித்து விட்டது.

Sirukathaigal

FREE
VIEW