கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 16, 2012

2 கதைகள் கிடைத்துள்ளன.

தேடல்

 

 இன்று குளிர் அதிகம். இறைமகனின் விரல்கள் நடுங்கியது. தலைக்கு வைத்திருந்த மூட்டையை அவிழ்த்து கனமான சட்டையை எடுத்து அணிந்து கொண்டான். ஒரு சுருட்டை எடுத்து உதட்டில் பிடித்து நடுங்கும் விரல்களினாலே தீப்பெட்டியை உரசி பற்ற வத்துக் கொண்டான். சூடான புகையை உள்ளுக்குள் இழுத்தான். குளிர் இப்போது தேவலாம் போல் இருந்தது. இறைமகன் தன் நரைத்த தாடியை வாஞ்சையாய் தடவினான். அவன் படுத்திருந்த சிமெண்ட் குழாய் சில்லிடுகிறது. ஆனாலும் கிழவன் வேறு ஜாகைக்கு செல்வதில்லை. ஆற்றின் கரையில் பதிக்கப்பட்டிருந்த


சுவாமிஜீ

 

 சுந்தர் உள்ளே வந்தவுடன் என் கையைப் பற்றி தரதரவென்று மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றான். ஏதோ ஒரு ரகசியம் அவன்கிட்ட மாட்டியிருக்குன்னு அர்த்தம். “என்னடா?.”——என்னை குறுகுறுவென்று பார்த்தான்.. அதி ஜாக்கிரதையாய் தன் ஜேபியிலிருந்து சின்ன பொட்டலத்தை எடுத்துப் பிரித்தான். “என்னது இவ்வளவு ரகசியமாய்?.ப்ரவுன் ஷுகரா?.” “த்தூ! நல்லாப் பாரு.”—–கையில் வாங்கினேன். என்னது இது. பித்தளை பட்டன் மாதிரி இருக்கு, ஓரத்தில் கருகியமாதிரி கருப்பா இருக்கு. என்னதுடா இது?.” அவன் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு அடித் தொண்டையில், பீறிடும்