Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2012

38 கதைகள் கிடைத்துள்ளன.

வயிறுள்ளவன் நாய்களுக்கஞ்சேல்

 

 மழை நீரோடு கலந்து சாக்கடையில் இருந்து வெளியேறிய கருந்திரவம் ரோட்டுப் பள்ளத்தில் தேங்கி, கிழக்கிருந்து மேற்கு கருவாடு ஏற்றிச் செல்லும் லாரியினால் உயிர்ப்பிக்கப்பட்டு, சாரலாய் அவன் மேல் அடித்தது. குண்டும் குழியுமான ஆரோக்கிய தேசிய நெடுஞ்சாலையில் நீள்போக்கில் பயணப்படும் சாதாரண பாதசாரிகளுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் சாதாரன அதோ கதிதான் அவனுக்கு ஏற்பட்டது. இது இரவு நேரம். நல்ல நேரங்களிலேயே காணாமல் போகும் அரசு மின்சாரம் ராகுகால எமகண்டங்களில் இயற்கை அல்லது செயற்கை மரணங்களுக்கு தப்பிவிட முடியாது. அப்படி


வனதேவதை

 

 கையில் எடுக்துக் கொடுக்கச் சொல்லி மகள் அடம் பிடிக்கும் போதெல்லாம் மனைவி பயப்பட்டு கூவினாள், என் மகள் கையில் பிடித்துக்கொடு என்று கேட்டது ஒரு எலிக்குஞ்சை. காண்டாமிருகத்தையல்ல, மிஞ்சியிருந்தால் அந்த எலி ஒரு அங்குலம் இருக்கும், கரப்பான் பூச்சியைக் கண்டால்கூட காட்டுப் புலியை பார்த்ததுபோல் பயப்பட அவளால்தான் முடியும், “தொடாத,,, தொடாத,,, கடிக்கும, சனியனை கீழே விடு,,,” என்று கத்தினாள், என் மனைவியே. அது உயிர், உன்னைப் போல் என்னைப் போல் அதுவும் ஒரு உயிர், அது


நீரடிசொர்க்கம்

 

 ஒரு நிமிச நேரம் எனக்காக ஒதுக்கமாட்டிங்களா? நான் என்ன சொல்லறேன்னு கேட்டுட்டுதான் போங்களேன். அப்படி என்ன உங்களுக்கு நஷ்டம். நான் சொல்றத கேக்க போறதில. ஒரே நிமிசம். ஏங்க நமக்கு ஆண்டவன் ஒரே வாயும் ரெண்டு காதும் ஏன் படைச்சான்னு உங்களுக்குத்தான் நல்லா தெரியுமே… தெரியாதா? சொல்லறேன். அடுத்தவங்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு. மனசு கனத்துப்போய் மனுசங்க பித்துபிடிச்சி அலையறாங்க. பிரச்சனை பாரம் தாங்க முடியாம இருக்காங்க. அந்த பாரத்தை மனசுக்குள்ள வச்சி புழுங்கப் புழுங்க இன்னும்தான்


சலங்கை அதிரும் ஒன்பதாம் திசை

 

 காலையில் எழுந்தவுடன் எவர்முகத்திலும் விழிக்கும் முன் கடிகாரத்தை பார்ப்பது என் வழக்கம். சிலர் கைய சுடச்சுட தேய்த்து ரேகை பார்ப்பார்கள். சிலர் எழுந்ததும் கேடு கெட்ட முகத்தில் விழித்தால் அன்றைக்கு பூராவும் நல்லதே நடக்காது என்று நம்பிக்கொண்டிருப்பார்கள். அது மூட நம்பிக்கை என்பது எனக்கும் தெரியும். ஆனால் நான் கடிகாரத்தை பார்ப்பது இன்னும் எத்தனை நேரம் நாம் தூங்கலாம் என்பதை பார்த்துவிட்டு ஒரு அரை மணி நேரம் நிம்மதியாக தூங்கலாமே அதற்காகத்தான். காலையில் எழுந்ததும் கடிகாரத்தை பார்ப்பேன்.


பரதேசி ராஜாவின் இளவரசிகளும் கறிக்குழம்பும்

 

 “இன்னைக்கும் களியும் கீரகொழம்பும் தானா…?” சிணுங்கியவளுக்கு உடனடியாக தலைமேல் பலன் கிடைத்தது, அம்மா இத்தனை வலுவாக தலையில் அடிப்பாள் என்று அந்த குழந்தை எதிர்பார்க்கவில்லை பாவம், வீட்டின் மூத்த பிள்ளை தலையில் அடி வாங்கியதும் மற்ற பிள்ளைகள் பேசாமல் பிசுபிசுப்பாய் தட்டில் கருத்து உருண்டிருந்த களியை. உப்பும் காரமும் குறைச்சலான புளியங்காய் புளிப்புடன் ஒரு மார்கமாக கீரைக் குழம்பு என்று பெயர் எடுத்த பச்சை திரவத்தில் தொட்டு விழுங்கிக் கொண்டிருந்தன, “நான் நாலு மகாராணிங்கள பெத்து போட்டிருக்கேன்,