கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2012

288 கதைகள் கிடைத்துள்ளன.

மகன்

 

 நான் போய் இறங்கியபோது, பண்ணைப்புரத்தில் வித்தியாசமான சூழல் நிலவியது. ஊரின் தெற்கை எல்லை கட்டியிருந்தது வாகான புளியமரம். புளியமரத் தூரைச் சுற்றி மழையை நேரே வேருக்குள் இறக்கிவிடுவது போல் பள்ளம் நோண்டி சுற்றி வட்ட மேடை கட்டியிருந்தார்கள். செழிக்க தண்ணீர் குடித்த புளிய மரம் குளு குளுவென்று நிழல் பரப்பி முன்வெயில், பின்வெயில் படாமல் வட்ட மேடையில் அமர்ந்தவர்களைக் காத்தது. இறந்து கிடக்கும் அன்னகாமு அத்தையின் மகன் நிலப்பிரபு மாதிரி இருந்தான். பண்ணைப் புரத்துக்காரர்கள் புளிய மரத்து


புறக்கணிப்பு

 

 வா சார் ப்ரெஸ்ஸா..? இன்னா மார்னிங் நியுசா ஈவினிங் நியுசா….? இந்தியா அஸ்த்ரெலியான ஒட்ன என்ன க்ரவுடு பார். சும்மா ஜெ ஜென்னு கீது. ஜனத்த போட்டோ புடிக்கோ சொல்லோ அப்டியே என்னையும் ஒரு போட்டோ புடி சார், நானும் கிரிகெட் பிளேயர்தான். மெய்யாலுமேதான் சார். மெரீனா கிரவுண்டு கீதுல்ல, அதுக்கு அண்ணாண்ட கீற கூவத்துல தாந் எந் வூடு. தின்திக்கும் அந்த கிரவுண்டே கெதியாக் கெடந்தேன். நல்லா பேட் பண்ணுவேன், பாஸ்ட் போலர் சார். எவ்வளோ


சிதைவு

 

 என் எட்டு வயதிலிருந்து பதினெட்டு வயது வரை தொடர்ந்து நடந்த இந்தத் தாக்குதல்களையெல்லாம் திரட்டி ஒரு புள்ளியில் நிறுத்த முடியவில்லை. என் பதினெட்டாவது வயதில் கல்லூரியில் சேர்ந்து ஓரிரு மாதங்களே கடந்திருந்த ஒரு சாயங்காலத்தில் வழக்கம் போல என்னை அடிப்பதற்கு அப்பா கை தூக்கியபோது, தடுத்து நிறுத்தி அவர் கையைப் பிடித்து முறுக்கி, அவர் அலறலில் தெருவே கூடி நின்று வேடிக்கை பார்த்ததும், பலபேர் என் திமிறலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியதும், அத்தனை ஆண்டுகளாய் அவரிடமிருந்து கேட்டு,


வழித்துணை

 

 நகரத்தின் மிகவும் நெரிசல் மிகுந்த தெரு, எப்பொழுதும் கூச்சலும் குழப்பமும் குடிகொண்டு இருக்கும். தெருவின் இரு பக்கமும் அதற்குக் காரணமாக இருக்கும் குடிசைகள். அதில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் சமத்தாக அங்கே இருக்கும் சாக்கடையில் விளையாடி கொண்டு இருந்தனர். அந்த சின்னச் சின்ன குடிசைகளுக்கு நடுவே மிகப்பெரிய துரு பிடித்து போன இரும்பு கேட். அந்த கேட்டை நோக்கி ஒரு பைக் வேகமாக வந்தது. சற்று திறந்து இருந்த கேட்டை பைக்கின் முன் சக்கரத்தால் திறந்துக்கொண்டு சென்றனர்


முனைப்பு

 

 அழைப்பிதழைப் புரட்டி நிகழ்ச்சி நிரலைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மாநாட்டுக்குச் செல்வதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தான். காரியத்தில் ஒன்றுமில்லாமல் சடங்கு போல வெறும் மாநாடாக நடத்திக் கொண்டிருப்பதிலோ, வேண்டுதல் மாதிரி சும்மா அதற்குப் போய் வந்து கொண்டிருப்பதிலோ என் பயன் என்பது இவனுக்குக் கேள்வியாயிருந்தது. என்றாலும் நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க போய் வருவது என்று முடிவு செய்து கொண்டான். சுற்றிலும் மரங்கள் அடர்ந்த மைதானத்தின் நடுவில் திருமணக் கூடம் போல் அமைந்திருந்த அரங்கில் மாநாடு ஏற்பாடு செய்திருந்தார்கள். முகப்பிலேயே