அமைச்சர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 15,843 
 

குத்தூஸுக்கு லாட்டரி சீட்டில் 10கோடி ரூபாய் பணப்பரிசு அதிர்ஷ்ட்டம் அடித்தது.

ஓவர் நைட்டில் கோடிஷ்வரனாகிவிட்ட, அவன் காரும்,மாடி வீடுமாக செல்வ மழையில் நனையத் தொடங்கினான்.

தனது பாதுக்காப்புக்குவேண்டி நம்பிக்கைக்குறிய தன் ஏழை நண்பர்கள் இருவரையும் செக்யூரிட்டி பணிக்காக தன்னோடு இனைத்துக் கொண்டான். நினைத்தையெல்லாம் தன் பணத்தைக் கொண்டு சாதித்து வந்தான் குத்தூஸ்…

குத்தூஸ்டைய வாழ்க்கை கூத்தும் கும்மாளாமாகவும் செழிப்புடன் கடந்துகொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் எல்லாம் அழுத்துப்போக ‘மக்களுக்கு ஏதாவது பண்ணனுமே!’ என நினைத்து, அரசியலில் குதிப்பதற்க்காக திட்டம் தீட்டினான் குத்தூஸ்.

தேர்தல் காலம் வந்ததும் அவனும் ஒரு கட்சியை தொடங்கி நோமிநேஷன் தாக்கள் பண்ணிவிட்டு, ஜெயிப்பதற்காக பணத்தையெல்லாம் வாரி இறைத்து செலவு செய்து வந்தான். இதன் காரணமாக குத்தூஸுடைய செல்வாக்கு ஊர் மக்கள் மத்தியில் மேலும் அதிகாமானது.

தேர்தலும் நடந்து முடிந்தது. அதிக வாக்கு வித்தியாசத்தில் குத்தூஸும் வெற்றியீட்டினான். தான் செய்து வந்த கடந்தகால தொழில் சம்பந்தபட்ட! விவசாயம், கால் நடைகள் பராமரிப்பு அமைச்சுப் பதவியும் அதிர்ஷ்டவசமாக சொல்லி வைத்தாற்போல் அவனுக்கு கிடைத்தது.

தன் தொகுதியில் மாத்திரமன்றி் முழு நாட்டிலும் சிறந்த அரசியல்வாதி என பெயர் எடுத்தான் குத்தூஸ்.

மக்கள் நலனுக்காக பம்பரமாக சுழன்று வேலை பார்ப்பது குத்தூஸுக்கு மிகவும் பிடித்துபோனது.

‘மக்கள் தங்களது குறைகளை உடன் பிறந்த சகோதரர்கள்போல் தன்னிடம் வந்து நேரடியாக தெரிவிக்கலாம்!’ என்பதற்காக வேண்டி அவனது காரியாலயத்தை மாட்டுத் தொலுவம் அமைந்த பகுதி ஒன்றில் அமைத்துக்கொண்டான் ‘அமைச்சர்’ குத்தூஸ்.

குத்தூஸின் செயல்பாடுகளை கவனித்த, மக்கள் “துளிகூட பெருமை அற்ற வெகுளி மனிதர் அமைச்சர் குத்தூஸ்” என புகழ்ந்து பாராட்டிவந்தார்கள்.

அதனால் அமைச்சர் குத்தூஸை தம்பி,மச்சான், மருமகன், அடேய் என அழைத்து பேசும் அளவுக்கு கூடப் பிறந்த உறவாட்டம் உரிமையோடு மக்களோடு நெருக்கமானான் குத்தூஸ்.

ஒரு நாள் அருகில் இருந்த மாட்டுத் தொலுவத்தினுடைய முதலாளி: “பயிரை மாடு மேய்து என்ன ஏதுனு பார்க்காமல் என்னடா தூக்கம் வேண்டி கிடக்கு? அடேய் மூதேவி!” என திட்டிக்கொண்டே ரெண்டு உதை விட்டார்.

ஆழ்ந்த தூக்கத்திலிருந்த அமைச்சர் குத்தூஸ் தனது செக்யூரிட்டி நண்பர்கள் இருவரையும் கூப்பிட்டு தன்னை , உதைத்த மாட்டுத் தொலுவத்தின் முதளாலியை தாக்குமாறு தூக்கத்தில் உளரியபடி கட்டலையிட்டான்.

ஓடி வந்த செக்யூரிட்டி நண்பர்கள் இருவரும் துப்பாக்கியை நீட்டியபடி எதுவும் பண்ணாமல் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

“கமோன் போய்ஸ் அடேக்…!” என கண்களை மூடிக்கொண்டே சத்தமாக கத்தினான் அமைச்சர் குத்தூஸ்.

மறுபடியும் உதை பலமாக விழுந்தது. வலி தாங்கமுடியாமல்
திடுக்கிட்டு எழுந்த குத்தூஸ், குடிசையில் சொருகி இருந்த குச்சியை எடுத்துக்கொண்டு பயிரை மேய்ந்த மாடுகளை விரட்டி துரத்திச் சென்றான்…

“ஹேய்…ஹேய்… ந்தா… ந்தா…ப்ர்ர்ரு…”

“அடுத்தவன் பயிரை மாடு மேஞ்சதுகூட தெரியாமல் மாடுகளை சரியா பார்க்காமல் மகராசனுக்கு பகல்லே தூக்கம்!…? ம்… போதாக்குறைக்கு கனவு வேறு! ” என்று குத்தூஸை முறைத்து பார்த்துக்கொண்டே திட்டினார் முதலாளி.

குத்தூஸ் திரும்பி பார்த்தான். செக்யூரிட்டி யூனிபார்மில் இருந்த நண்பர்கள் இருவரும் லுங்கியோடு, திறந்த மேனியுடன் கையில் துப்பாக்கி பதிலாக மாடு மேய்க்கும் தடிகளை வைத்துக்கொண்டு குத்தூஸை பார்த்து சிரித்தனர்.

கண்களை கசக்கிவிட்டு “அட கருமமே நான் கோடிஸ்வரனானது அமைச்சரானதெல்லாம் கனவா!!!???” என சுயநினைவுக்கு வந்த குத்தூஸ் மாடுகளை மேய்த்துக்கொண்டே சென்றான்.

ஹேய்… ஹேய்… ந்தா… ந்தா… ப்ர்ர்ரு… ச்சூ… ப்ர்ர்ர்… ந்தா… !.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *