அந்தவரம் வேண்டாம் ஜெகதீஸ்வரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 22, 2021
பார்வையிட்டோர்: 2,053 
 

கேசவனுக்கு உடம்பை வசைச்சு வேலை செய்வதென்றால் ஆகாத காரியம். அறவே இஷ்டமில்லை. ஒரு துரும்பைத்தான் தூக்கிப்போடுகிலும் வலு அலுப்புப்படுவான். ஆனால் ஆசை மட்டும் பத்துப்பேருக்கு இருக்கவேண்டியது அவனுக்குத்தனியே என்பது சக-அறையோர் அபிப்பிராயம்.

இவன் தனக்கான நாள்களும் கோள்களும் ஒன்று கூடிப் பிரமாதமான ஒரு அதிஷ்ட ஓரையொன்றைச் சமைத்து எவருக்கும் எட்டாதவொரு உயரத்தில் தன்னைக் கொண்டுபோய் வைத்து இந்த பூமிப் பந்தின் ஒரு பகுதிக்கு ஒருநாள் சக்கரவர்த்தி ஆக்கிவிடுமென்று நம்புகின்றான். அதனால் சமீபகாலமாக இந்தியாவிலிருந்து பல சோதிட நூல்களை வருவித்தும் பல ஆய்வுகள் செய்து கொண்டுமிருக்கின்றான்.

தவிரவும் அதிர்ஸ்ட தேவதையைத் தனியாக ஆவாகனஞ்செய்வதால் லொட்டோ போன்ற சில்லறை அதிஷடங்கள் கிட்டக்கூடுமாதலால் ஜீவனத்துக்கு அரசு தரும் பணத்திலும் பெரும்பகுதியை லொட்டோ- வெட்டவே பயன் செய்கின்றான். அதிஷ்டத்தின் திசையில் நடக்காமல் இருந்துவிட்டு அதிஷ்டமே இல்லையென்றால் எப்படி?

சக்கரவர்த்திகளுக்கும் பக்கிரிகளுக்கும் இருப்பது ஒரு நாளில் இருபத்தி நான்கு மணித்தியாலங்கள்தானே? அவனும் தன்னரும் ஆய்வுநேரங்கள் தவிர்த்துக் கிடைக்கும் மீதி நேரத்தை அறையின் ஜன்னல் கதவுகளை அகலமாகத் திறந்து வைத்துக் கொண்டு எதிர்வில்லாவையும் அதனைச் சூழவுள்ள பசுமையான புல்தரையையும் பூமரங்களையும் அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் விதவிதமான வாகனங்களையும் பார்த்துக் கொண்டிருந்து பொழுது போக்குவதுண்டு.

காரணம் அவ்வில்லாவில்தான் அவனுள் ஆதங்கத்தையும் பொருமலையும் பெருமூச்சுகளையும் உற்பத்தி பண்ணுவிக்கும் அவனது இலட்சிய மனிதன் ஆதர்ஷ புருஷன் பெஞ்ஜமின் வாழ்கிறான். கேசவனும் மற்றும் ஈழ அகதிகளும் வதிவதான அவ்வில்லம் (Heim) அவனது அந்த வில்லாவின் முன்பதாக அமைந்து விட்டதும் ஒரு விந்தைதான்!

அத்திசை நோக்கி அந்த வில்லாவைப் அப்படிப் பார்த்துக் கொண்டிருக்குங்கால்…கேசவனது கற்பனைகளும் கனவுகளும் பிரபஞ்சவெளி முழுவதையும் எல்லையின்றி விரிந்து வியாபிக்கும்.

மழையை எதிர்பார்த்த ஒரு மாலையில் விண்ணில் மிதந்து வரும் முகில்களை அளைந்து அளைந்து விளையாடும் அளவுக்கு நெடிது உயர்ந்த மரங்களடர்த செறிந்தவொரூ – காட்டினுாடு நீண்டு வளைந்து வளைந்து செல்லும் அழுத்தமானவொரு சாலையில் மகிழுந்தின் பின் சீட்டிலமர்ந்து நல்ல ரக வைன்பிறான்ட் விஸ்க்கியால் தொண்டையை நனைத்துக் கொண்டு நீர் நிலைகளும் அருவிகளும் பசுமையும் செறிந்ததான இயற்கையை வேடிக்கை பார்த்தபடி இலக்கின்றிப் பயணம் செய்வது போன்ற ஒரு … சுகத்தில் திளைப்பான்.

பெம்மான் அசல் கனவுலக வாதி மாத்திரந்தான் என்பதற்கு அவ்வப்போது எள்ளளவும் யதார்த்தமற்று அவன் அவித்துப்போடும் அவியல்களே சாட்சி.

“மச்சான்…புதுக்குடியிருப்பில ஒரு நாய் நிக்குது பார்…இதிலயிருந்து (எதிர் வில்லாவின் வாசலைக் காட்டி) அந்தக் கேற்றளவு நீளமிருக்கும்…!”

“ஆமோ…சாமான் எப்பிடி நீட்டுக்குத் தக்க குலைக்டியனோ…!”

அவன் காட்டியது குறைந்தது ஐம்பது மீட்டர் நீளமாவதிருக்கும். இவனின் சவடாலடிகளுக்கெல்லாம். கொஞ்சமும் ஆட்டங் காணவிடாது அவ்வப்போது செவ்வையான தகடுகள் தகுந்த தகுந்த மாதிரிக் கோணத்தில் கொடுக்கும் கணேசமூர்த்தி கேட்டான்:

“அப்பிடியென்டால் வயிறு தொய்ந்து நிலத்தில் உரசாமலிருக்க இடையில இன்னும் இருபது சோடி கால்களாவது இருக்க வேணுமே…இருக்கோவுங்காணும்…?”

அறையிலேயே கதை குறைவான சத்தியனே சொன்னான்: “கதிர் காமரைப் பிடித்தேன்டாலும் ஒரு ஸ்பெஷல் பெமிஷன் எடுத்து நீர் வரும்போது அந்த நாயையும் – கொண்டு வந்து சேர்த்திருந்தீரானால்…இவங்களுக்குக் காட்டியே நல்ல காசு சேர்திருக் கலாமோய்…!

எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க, கேசவன் சமாளித்துக்கொண்டு ஜன்னலுாடே மீண்டும் பெஞ்ஜமினின் உலகுக்கு வந்தான். பெஞ்ஜமின் தோற்றத்தாலேயே இவனைவிட ஒன்றரை மடங்கிருக்கும் ஆஜானுபாவன். இவன் ஐந்நூறு மீட்டர் ஏணிவைத்தாலும் எட்டாத உயரத்திலிருக்கும் மல்டி மல்டி மில்லியனர்!

அவனுக்கு எங்கெங்கு எத்தனை பிஸினஸ் இருக்கென்றே இவர்கள் யாருக்கும் சரியாகத் தெரியாது.

இவர்கள் அறியவே சாலோற்றன் பேர்க்கிலும், சேலென்டோஃபிலும் பாரிய கட்டிடங்களை நிர்மாணிக்கும் Benjamin Constructions GmbH. Benjamin Architects & Co.GmbH என்ற இரண்டு கொம்பனிகளி உண்டு.

இதை விட நிலங்கள், வீடுகள், பண்ணைகளை வாங்கி விற்கும் றியல் எஸ்டேட் கொம்பனிகள் நாடு பூராவும்! அந்த வில்லாவில் அவனைத் தவிர அவனது குடும்பமோ அல்லது வேறு யாரும் உறவினர்களோ கூட வதிவதற்கான எந்தத் தடயமுமில்லை. அவனைத் தேடி எப்போதாவது யாராவது உறவுகள் சுற்றமென்று அங்கு வந்து போவதாகவும் தெரியவில்லை .

தினமும் காலையில் தடிமனான உடலுடன் வரும் ஒரு நடுவயது ஜெர்மன் மாது மட்டும் வில் லாவைச் சுத்தம் செய்துவிட்டு மாலையில் வெளியேறுவாள்.

பெஞ்ஜமினுக்கு வயது நாற்பது நாற்பதுகளின் மறுபக்கமாக இருக்கலாம் …ஆள் மகா உல்லாசி ! வேர்க் சைட் பார்க்கப்போக ஒரு MITSUBISHIIPMERO. ஒபீஸ் போக MERCEDES BENZ 500SE (300 HP), வெளியூர்ப் பயணங்களுக்கு செஞ்சிவப்பில் ஒரு PORSCHE. பார்ட்டிகள் விருந்துகளுக்கெனில் JAGUAR DAIMLER SOVEREIGN(12 cylinder). தவிரவும் இடையிடையே BMW 752i ,VOLVO classic. ALFA ROMEO’, MASARATTI, FERRARI குஞ்சுகள் எனச் சில….இவை யெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கார்த் தொழுவத்தில் நிற்கையில் பார்க்கக் கொலுவாக இருக்கும்.

இன்னும் எங்குதான் பிடிக்கிறானோ எல்லாம் செப்பில் வார்த்தெடுத்தது மாதிரிக் கட்டுடம்போடு இளசு இளசா ஐந்தாறு செக்கரட்டரிகள் இருக்க வேண்டாமா பின்னே..? இவர்களைத் விடவும் கான்ன மலர் மாறனின் ராசியோ, முகராசியோ, பணராசியோ தினம் ஒரு குமரியைத் தள்ளிக்கொண்டுதான் வீட்டுக்கு வருவான்.

வாழ்க்கையையே ஒரு பிக்னிக் போலாக்கி பெஞ்ஜமின் பண்ணும் கேளிக்கைகளைக் கண்ணுறும் கேசவனுக்கு உணரப் பண்ணுவதையும் அவன் பிரதியுணர்வுகளையும் சரியானபடிக்கு வார்தைகளில் ஏற்றுவது கஷ்டம். அன்றும் அப்படித்தான் அவனது கூரை திறக்க க்கூடிய CABRIOLET (UKgrir epw MERCEDES BENZ – 300 SEL “மகிழுந்து” “புஸு…புஸு” என்று இரகசியம் பேசியபடி வெண்ணைக்கட்டியாய் வழுக்கி வந்து வில்லா வாசலில் நிற்கிறது. எங்கு அள்ளினானோ முன்னிருக்கையில் அவனுடன் சொக்கோ பிறவுண் நிறத்தில் (மெக்ஸிக்கோ – சிலி-பொலீவியாகொலம்பியா – பேரு – பிரேஸில் காரியாயிருக்கலாம்) அலர் அகவைக் குமரியொருத்தி. அவன் காருள் இருந்தபடியே றிமோட்டைத் வருடவும் கேற்றுகள் விசுவாசமாய்த் திறந்து கொள்ள கார் உள்ளே புஸு….புஸுத்தூர்ந்து வந்து ரெறாசவில் நிற்கவும் ஏதோ ஸ்னோவில் செய்த பதுமையைக் கையாள்வதுபோல் மிகமிகப்பக்குவமாய் அவளை அணைத்துக் கொண்டவன் உள்ளே மறையும்…

பார்த்துக் கொண்டு நின்ற கேசவன் தலையுள் ஓசையில் லாதொரு அணுக் குண்டு வெடித்து ஓய்கிறது. பொருமியபடியே அத்தோடு 10000000198 வது தடவையாகச் சொன்னான். “…ம்ம்ம்….பார்றா கிழவன்ரை இன்றைய குரு சந்திர யோகத்தை!”

பெஞ்ஜமினைப் பார்க்கும்போதெல்லாம் கேசவன் புழுங்கி அப்-செட்-டாவது அறையோர்க்கு ஒன்றும் புதிதல்லவென்றாலும் கணேசமூர்த்தி சொன்னான்:

“பெஞ்ஜமின் கிழவனென்றால் ….Bill Gate, Bill Clinton, Schuhmacher எல்லாரும் கிழவன்களாய்த்தான் இருக்க வேண்டும்….உன்ரை செலவில ஆளுக்கொரு பொல்லு பாசல்லை அனுப்பிவிடன்…!”

வெள்ளை பாண்டும், எப்போட் ஸ ஷவும், ரீ சேட்டும், கூலிங்கிளாஸுமாய் மிடுக்க, கட்டிளங்குமரனாய் அவன் கோல்ஃப்(க) விலையாடத் துள்ளிக்கொண்டு போகும் போது பார்த்தால் இந்த உலகத்தின் உல்லாசங்கள் அனைத்தும் அனுபவிக்கப் பிறந்த தேவகுமாரன் அவன் தான் என்று தோன்றும்.

ஆனாலும் கேசவன் பார்வை வேறு மாதிரி. இதுக்குள்ள இவனுக்குத் தேகம் நிறைஞ்ச பக்தி வேறை, தேவியை உபாசிக்கிறான்.

பெஞ்ஜமினுக்கும் எனக்கும் ரசனைகளையும் ஆசைகளையும் ஒன்றாகத் தந்தாயே தேவி அவன் ஆண்டு அனுபவிக்கும் ஐஸ்வர்யங்களில் ஒரு பத்தில் ஒன்றைத்தானும் எனக்கும் ஈந்திருக்கப் படாதா…?

வஞ்சனைதானே செய்து விட்டாய்…! ஐஸ்வர்யங்கள் எதுவுமற்ற இந்தப் பராரி அந்த ரசனைகளை மட்டும் வைத்தென்ன சம்மட்டியால் அடிப்பதா…?

ஏன்தான் இப்படிச்செய்தீர்…? ஏன் இப்படிச் செய்தாய்…? ஏனடி இப்படிச் செய்தாய்….?’ தினமும் தன் இஸ்ட தெய்வமாம் ஜெகத்ஜனனியுடன் குஸ்த்திக்கு நிற்பான்.

ஆற்றாமையில் ஒரு நாள் கணேசமூர்த்தியிடம் சொன்னான்: “இவன் வச்சிருக்கிற ஒவ்வொரு காரும்….எனக்கும் ஃபேவறிட் கார்தான் மச்சான்…!”

“பேவறிட் காரல்ல…… வேணுமென்றால் ட்றீம் காரென்று சொல்லு!’

கேசவன் மறுத்துப் பேசாமலிருக்க….”ஒருவகையில் காரும் பெண்ணும் ஒரே மாதிரித்தான்” என்றான் கணேசமூர்த்தி,

“எப்படி?”

“ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சிறப்பம்சம் துாக்கலாய்த்தானிருக்கும்….அதுக்காக எலலாத்திலும் ஆசைப்பட்டா முடியுமோ…?”

“பெஞ்சமின் ஆளுறானே எல்லாத்தையும்…?”

“அது ஆயிரத்தில் ஒருவர்…நான் நினைக்கிறன் உலகத்தில் வாய்ப்புக்கள் எல்லாருக்கும் சமனாய்தான் இருக்கு….மேற்கொண்டு உச்சிக்கு ஏற்றதும்…அடியில் நிற்கிறதும் அவரவர் முயற்சியில சாமத்தியத்தில் தானிருக்கு….! பெஞ்சமின்ரை ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் பின்னாலேயும் எவ்வளவு முயற்சியும் உழைப்புமிருக்கென்று எண்ணிப் பார்த்தியா?”

“உன்னுடைய ஒவ்வொரு கருத்தோடையும் நான் முரண்படுகிறன்!”

“ஏன் ஐயனே?”

“உலகத்தில எல்லாருக்கும் சமமான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கு தென்றால் நாம் இங்கேயே வந்திருக்க வேண்டியதில்லை… சரி இங்க வந்த பின்னாலதான் எங்களை வேலை செய்ய அனுமதித்தான்?”

“ஆரம்பத்தில அனுமதிக்கேல்ல தான் சரி…பிறகுதான் காட்டுந்தந்து விட்டிட்டானே என்னத்தையென்றாலும் செய்யடா என்று…இப்ப ஆறு வருஷமாய்க் காட்டை வேண்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு நீ சும்மா வெள்ளியும் – சூலமும், பூரானுந்தானே பார்த்துக் கொண்டிருக்கிறாய்?”

“ரெஸ்ரோறண்டில கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் பூனைக்குட்டி மாதிரித் திரும்பி வந்து காலுக்கை நிக்கிறாய். கிளீனிங் கொம்பனியில கூட்டிக் கொணடு போயச சேர்த்தால்…வயதான பெண்களே என்ன மாதிரிச் செய்யுதுகள்….நீ என்னடாவென்றால் நாரிக்கை பிடிக்குது, கையுக்கை குத்துதெண்டு கழட்டிப் போட்டு வாறாய்….”

“இது….துவேஷமும். பாகுபாடும , நிறைஞ சுரண்டல் சமூகம்….இதை ஆரம்பமுதலே புரிஞ்சு கொண்டதாலதான் என்னால இந்த முதலாளித்துவ சமூகத்திற்கு என்னை உரைத்துக் கொடுக்க இயலாமல் இருக்கு…”

“ஐயன் எளிய வார்ததைகளில சொன்னால் நானும் தங்கள் பிரச்சனையை தத்துவத்தை சற்றுப் புரிந்து கொள்ள முயல்வேன்.” என்று அவன் முன்னால் கைகளைச் சேர்த்து மார்பில் கட்டிக் கொண்டு குனிந்து போலியான பவ்யத்துடன் நின்றான் கணேசமூர்த்தி.

“இந்த ஐரோப்பாவில்…..இல்லை வேண்டாம்…..ஜெர்மனியை மாத்திரம் எடுப்பம்..இந்த நாட்டுமக்களில அநேகமான ஆட்கள் தங்கள் மாதாந்த வருமானத்தில் பெரும் பகுதியை எதுக்குச் செலவிடுகினம்…”

“வாடகைக்கு…”

“கறெக்ட்…! பெர்லினைப் பொறுத்த மட்டில மொத்த சனத் தொகையில அறுபத்தாறு சத வீதம் உழைப்பாளர்கள் வாடகை வீட்டில்தான் குடியிருக்கினம்…அவர்களால ஏன் சொந்த வீட்டில வாழ இயலாமலிருக்கு…? சுரண்ட லாலே…. சுரண்டல் சமுதாயத்தில் வாழ நேர்ந்ததாலே சொந்த வீட்டில வாழ இயலாமலிருக்கு. இரண்டாயிரத்தைனுாறு உழைக்கிறவன் ஆயிரத்து முன்னூறை வாடகைக்கே அழகிறான்…அதாவது மாதத்தில பாதி நாள்… வாழ்க்கையில் பாதிநாள் அந்தவீட்டின் சொந்தக்காரனுக்காகவோ அல்லது அப்படிப் பல நூறு வீடுகளுக்கு சொந்தமாயிருக்கிற முதலாளித்துவ நிறுவனம் ஒன்றுக்காகவோதான் தன் உழைப்பை விரயம் செய்கிறான்.”

“எட…இஞ்சைபாற்றா…இந்தக்குத்தியன் எப்படி புள்ளி விபரங்களை விரல் நுனியில வைச்சிருந்து வீகறானெண்டு…இப்பிடி ஒரு கால் மாக்ஸோடதான் இவ்வளவு நாளும் நாங்களும் சீவிக்கிறமெண்டது தெரியாமல் போச்சே ….ம்ம்ம்…மேல சொல்லுங்கோ!”

“சராசரி பாமரச்சனம் மாதிரித்தான் உங்களுக்கும் எதில சீரியஸாயிருக்க….எதில் வேண்டியதில்லை யெண்டது தெரியேல்ல…..என்றாலும் சொல்லுறன்….ஒவ்வொரு தேசத்திலும் உழைப்பாளர்கள் பாட்டாளிகள் நினைத்தால்…உழைப்பாளர்களையே பிரதிநிதிப் படுத்தக் கூடிய அவர்கள் பிரச்சனைகளையே முதன்மைப் படுத்தித் தீர்வுகார் கானவல்ல அரசுகளை 2 , பூவாக்கலாம். ஆனால் உலகம் முழுவதும் பாட்டாகளிகளே பாட்டாளிகளுக்கு எதிரிகளாக இருக்கினம்…உழைப் பவனுக்கே காணி சொந்தம் என்கிறது மாதிரி…இருப்பவனுக்கே வீடு சொந்தம் என்று ஆக்குவது ஜெர்மனி மாதிரி ஒரு முதலாளித்துவப் பொருளாதார நாட்டின் பிரஜைகளுக்கு எப்பிடியொரு வரப்பிரசாத மாயிருக்கும்…..செய்வினமோ …? எந்த அரசுதான் இதைச் செய்யும்…? கொம்யூனிசம் பேசிறவன் கலகக்காரன் என்கிற எண்ணம் உலகம் பூராவே ஒரே மாதிரித்தானிருக்கு…அப்படியென்றா லென்ன…என்ன அதனால் ஏற்படவல்ல நன்மைகள் எனன என்கிறதைப் பற்றியே யோசிக்கிறானில்லையே…

இவங்க ளே Black Whole என்டுறாங்க ள்…’Stur war என்டுறாங்கள்….ஆனால் முதலாளித்துவம் எப்படியெப்படியெல்லாம் தம்மை நசுக்குது…எப்படி உறிஞ்சு தென்டதைச் சதமும் உணர்றானில்லையே?”

“அதாவது பொதுவுடமைத் தத்துவத்தின் தாற்பரியமென்ன என்கிறதைப் புரியாமல்தான் இவங்கள் காலத்தைக் கடத்துகிறாங்கள் என்கிறாய்…..தோழர் இனி நாஷனாலிட்டியும் எடுக்கலாந் தானே..எடுத்துப் போட்டு எந்தப் பொயின்ரை வைச்சு அடுத்த எலெக்ஷனில நிக்கிறது…?”

“இதுவும் எதிலும் ஆழம், தீவிரமுமற்ற பாமரச் சிந்தனையின் இன்னொரு பரிமாணம்..”

“சரி…சரி…இப்ப பெஞ் ஜமினையே உதாரணத் துக்கு எடுப்பமன்…இத்தனை நிறுவனங்களும், அத்தனை சொத்துக்களும் . இவனது தனிமுயற்சியாலும், உழைப்பாலுந்தான் குவிஞ்சதென்றியோ ? எத்தனை ஆயிரம் பேருடைய கூட்டு உழைப்பு அது…?”

“அதுதான்..ஆனால் அதன் பலன்கள் அனைத்தையும் அனுபவிப்பது தனியொரு பெஞ்ஜமின், நான் எதிர்க்கிறது இதைத்தான் !” “உலகம்

முழுவதுக்கும் தர்மத்தைப் பரப்ப முயன்ற புத்தரே தோற்றுத்தான் போனார்……. அதேமாதிரிச் சமத்துவத்தையும் கொண்டு வரேலாதோய்…. சும்மா ஒரு பேச்சுக்குப் பொதுவுடமைச் சமூகம் சாத்தியமாயிட்டுது……. ஒரு இலட்சிய உலகத்தைப் படைத்திட்டோமென்றுதான் வையன். …… பிறகும் புதியவொரு பிரச்சனையாக ஒரு அஷ்டமத்தான் பிரிச்சுக் கொண்டுதான் எழும்பத்தான் செய்யும்….. உலகத்தின்ரை, வாழ்க்கையின்ரை நியதி அது….! ஜெகோவாக்காரனைக் கேட்டன் ஏன் உலகத்திலை இத்தனை அக்கிரமம் நடக்குதெண்டு…….. அவன் சொல்லுறான் அது அதன் சமநிலையில் தானாமிருக்கு…….. எங்களுக்கு அக்கிரமம் மாதிரித் தெரியிறதெல்லாம் ஜெகோவா அறிவாராம் ஏனெண்டு ….. விஞ்ஞானிகளும் பிரபஞ்சமும் அதன் இயக்கங்களும் அதனதன் ஒழுங்கிலதான் இயங்கிக் கொண்டிருக்கெண்டினம் ….. நாங்கள்தான் இயற்கையின்ரை ஒழுங்கைப் பிழையாய் விளங்கிக்கொண்டு நாங்கள் ஒழுங்கென்று நினைச்சுக் கொண்டிருக்கிற ஒன்றோடை ஒத்துப் போற மாதிரித் தோன்றாததால இங்கே ஒன்றுமே சரியில்லை ……… ஒழுங்கில்லையென்று சிண்டைப் பிய்க்கிற மோவுந் தெரியாது……! ஒரு பேச்சுக்குச் சொல்லுவம் பெஞ்சமின் நாளைக்குத் தன் எல்லா பிஸினஸ்களையும் மூடிவிட்டு வந்து ஒரு கட்டில்லை காலை நீட்டிக் கொண்டு படுத்தானேயெண்டால்……… எத்தனை . குடும்பங்கள் நடுத தெருவுக்குவரும் ? இவ்வமைப்பில் பலமும் பல வீனங்களும் இருக்கு தென்கிறது யாருக்கும் தெரியாமலில்லை …….. இதுக்கு மாற்றாக இதன் குறைகளையெல்லாம் நிவர்த்தி பண்ணக்கூடிய ஒரு புதிய பொருளாதார உலகைக் கட்டியமைப்பது பற்றிய இவ்வுலகத்துக்கான உனது புதிய நவீன சிந்தனைகளைத் தொடர்ந்து கொண்டே உந்தி காயாமலிருக்க நீ வேலையும் செய்யலாம்…. உந்தப் பேப்பர் போடிற மூன்று மணி வேலைதான் தொடர்ந்தும் பார்ப்பேன் என்றால் சீவியத்தில் உன்னால ஒரு Bug Iial கூட வாங்க முடியாது கொய்றேட்!”

நாலைந்து நாட்கள் கழிந்தன. SIEMENS ல் வேலை பார்க்கும் கணேசமூர்த்தி அங்கு யாரிடமோ பேசி வாஷிங்மெசின்கள் செய்யும் பகுதியில் ஒரு வேலைக்கு ஒழுங்கு பண்ணிவிட்டுக் கேசவனைத் தள்ளிக் கொண்டு போய் ஒருவாறு சேர்த்து விட்டான்.

ஒரு வாரம் போயிருக்கும் . அன்று கணேசமூர்த்திக்கு இரவு ஷிப்ட். பகல் அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறான்… அறையைத் திறந்து கொண்டு வந்த கேசவன் ‘பைல் ஒன்றை மேசையில் போட்டுவிட்டுத் தடாலென்று கட்டிலில் விழுகிறான், கண் விழித்த கணேசமூர்த்திக்கும் ஏனையோர்க்கும் ஆச்சர்யம்!

“என்னடா இப்ப வாறாய் இடை நேரத்தில்….. என்னாலுங் கோல்மால் பண்ணிப்போட்டியோ?”

“அங்கை என்னால வேலை செய்யேலா….”

“ஏனெண்டுதான் சொல்லித் தொலையன்.”

“ஓ…. அவர் Meister மச்சான் தான் மேல நிண்டு கொண்டு வாஷ் மெசினுக்கு அது அசையாமல் பூட்டிற பிளேட்டுகளை என்னைத் துாக்கி வரட்டாம்…. அதொவ் வொண்டும் இருபத்தைஞ்சு கிலோத் தேறும்….. நானுதுக்கு வேறை யாரையும் பாரெண்டு போட்டு வந்திட்டன்.”

அவன் முகத்தில் ஒரு சாதனை நிகழ்த்திய பெருமிதம்!

“அவன ‘ Meiser (கண்காணிப்பாளன்)….நீ Arbeilcr (தொழிலாளி) அவன் தன்னுடைய வேலையைச் செய்விக்கத் தானே உன்னை வைத்திருக்கிறான்.”

“ஏன் அவர் தானும் பிடிக்கிறது ஒரு பக்கத்தில..?”

“இப்ப அவன்தான் உன்னுடைய சீப்… நீயும் ஒரு நாள் Meister ராய் வரலாந்தானே…இப்போதைக்குச் செய்யன் துரை”

“உப்பிடி முறிஞ்ச வேலையள் நமக்குச் சரிப்பட்டு வராது.”

“இல்லாட்டியும் உன்ரை சம்பளம் நேராய் என்ரை எக்கவுண்டைத் தானே நிரப்பப்போகுது….இல்லை ….SIEMENS B. Deputy Dorcctor Post ஒன்றிருக்காம்..Nuhl Diploma in Astrology, மற்ற Dictorate in Neumorokegy சேட்டி ‘, பிக் கேட்டுக்களை வைத் தொருக்கால் அப்ளை பண்ணிப் பார்க்கிறது….சான்ஸ் அடிச்சாலும் அடிக்கும்”

யார் யாரையெல்லாமோ பார்த்து வேலையில் சேர்த்துவிட்ட கணேச மூர்த்திக்கு ஓங்கி அவனை உதைக்க வேணும் போலிருந்தது. நெடுமூச்சுடன் சொன்னான்: – “குதிரைக்குத் தண்ணியைத் தான் காட்டலாம்…… குடிப்பதும் வீடுவதும் அதன் இஷ்டம்!”

நீர்வேலி இராசவிதியில் பத்தாயிரங் கன்று வாழை, பதினையாயிரங்கன்று புகையிலை என்று செய்யும் பெரிய தோட்டக்காரர் காராளசிங்கத்தாருக்குத் தலைச்சன் பிள்ளை வயித்தில ஒரு பேரனும் பிறந்தாற்போல தற்செயலாய் ஜனிச்சுப் பிறந்தவன்தான் கேசவன். இவன் பத்தாவது கிறிஎப் கும்பத்திலேயே ஹெயாட்டாயலே பலமுறை வழுக்கி வழுக்கி வழுக்கி விழுந்தெழும்பிவிட்டுச் சைக்கிளில் உயர் உழத்தித் திரிய அவர் ஆளை அமுக்கிப் பிடிச்சு AER()FIOT ல் ஏற்றி பெர்லின் கண்டாயத்தினுாடாக இங்கே தள்ளிவிட்டுவிட்டார்,

ஆத்தா செல்லத்தில் வளர்ந்த இந்தச் கொழுந்து உழைச்சுத்தான் அவர்களுக்கு ஏதாவது ஆகவேணுமென்ற நிலமை என்றைக்கும் அங்கில்லை.

கேசவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் பெரலினில் வாய்த்தது தொந்தரவுகளில்லாத இந்த Heim . சூழவும் பச்னைப்பசேலென்ற சூழல். பின்னாலே எப்போதுமே நிறைந்து வழிந்து கொண்டிருக்கும் Spree கால்வாய், பவளவேரைப்போலச் சிக்கலாக பேர்லின் மாநகரின் முழுப் பரப்பிலும் கிளைபரப் பியிருக்கும் இக்கால்வாய் Wannisec, Tegelersc¢ என்று பலவிடங்க ளில் நீர் ஏரிகளாக அகன்றும் பின் ஒடுங்கியும் மாயங்காட்டிக் கொண்டு முன்னூறு கிலோமீட்டருக்கும் மேல் ம்பேர்க் வரையும் செல்வதால் நிலக்கரி மற்றும் பார உலோகங்களின் இடப் பெயர்வுகளுக்கு இதனை ஊடகமாகப் பயன்படுத்துகிறார்கள். மலையேதும் இல்லாத , மணற்பாங்கான சமதரையால் உருகும் பனியும் , பெய்யும் மழையும் உள்வாங்கப்பட்டுப் பின் அதன் கசிவூற்றால் ஜனித்து வியாபிக்கும் இக்கால்வாய் சரித்திரத்தில் வற்றியது இல்லையாதலால் இந்நகருக்கு தண்ணீர்ப் பஞ்சம் என்றால் என்னவென்று தெரியாது!

கேசவன் அறையில் மொத்தம் நாலுபேர். வேலை செய்பவர்களிடம் கட்டிலுக்கு 300 டி. மார்க்குகள் மாத்திரமே வசூலிக்கிறார்கள். கணப்புக்கள், வெந்நீர், மின்சாரம் அனைத்தும் அதனுள் அடக்கம். திருமணம் செய்து குடும்பத்தை விஸ்தரித்தவர்களைத் தவிர மற்றவர்கள் ஏன் Heiml விட்டுப்போகிறார்கள்? கேசவன் அறையில் அவனைத் தவிர மற்ற மூவரும் வேலை செய்பவர்கள். இவன் பேருக்கு நுாற்றைம்பது பேப்பர் மட்டிலுமே போடுகிறான். காலையில் அதை ‘ஒரு இரண்டு மணி நேரத்தில் விசுக்கிவிட்டு ஏதோ இரண்டு லொறிக்குத் தனியாக சீமெந்து மூடையடிச்சவனின் அலுப்போடு வந்து மீண்டும் மதியம் திரும்பும் வரை படுத்திருப்பான்.

“நல்லா முடுக்குமல்லே … எழும்பி மூச்சாவைப் பெய்திட்டுப்படன் ராசா.” என்று அறைதோழர்கள் யாரும் அவனை எரிச்சலுாட்டுவார்கள். எனினும் அவ்வகை அராத்தல்களால் அவனுணர்வுகள் இலகுவில் அருட்டு நிலையை அடைந்துவிடா.

அவனுக்கும் விசேஷ வருகைதரும் புறஃபெஷர்கள், டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகளைப் போலத் தினமும் இரண்டு மூன்று மணிநேரமே வேலை செய்யப் பிடிக்கும். ஆனால் சம்பளம் மட்டும் குறைந்த பட்சய் ஏழாயிரம் மார்க்குகளாவது இருக்கவேணும்.

தினமும் இரவில் அவனது இஷ்ட தெய்வமாம் அகிலாண்டதேவி கோடி ப்ரமாண்ட நாயகி முன் நின்று “பெஞ்ஜமினைப் போல் வற்றாத நிதியத்தை ஏன் நீ எனக்குத் தரவில்லை ?… மற்றவர்களைப்போல் என்னால் பாய்ந்து பாய்ந்து உழைக்க இயலாமலிருக்கே. எப்பிறிங் போலத் தெறிக்கவல்ல உடலை அன் நீ எனக்குத்தரவில்லை … ஜெகன் யாதா பேணுபென்றே இவனைத் தீனாவாகப் படைத்து வஞ்சனை புரிந்தாயா….?” என்றெல்லாம் சண்டை வலிப்பான்.

“நல்லவர் தாழவும் தீயவர் வாழவும் செய்வதேனோ ….இது தர்மந் தானோ..அம்பா நீயே கதி ஈஎஸ்வரி…!” என்று உருகுவான்.

“அம்பா…நீ இரங்காயெனில் புகல ஏது…….”

என்று கெஞ்சுவான். – மனம் மிகவருந்திப் வேண்டு தல்கள் பல செய்து , பாராயணங்கள் பாடி மணியெல்லாம் கிலுக்கிப் பக்தி செய்துவிட்டு மணிகிலுக்கிய அலுப்பு நீங்க முட்டைக் கோப்பி அருந்தி விட்டே படுக்கைக்குச் செல்வது வழக்கம். ஆனால் உழைப்பின் திசையில் ஒரு அடி கூட எடுத்து வைப்பதில்லை .

சில வேளைகளில் தனக்குத்தானே பேசிக்கொள்வான்.

“Audi…A6 1 விட BMW’ Turbo Diesel தான் நல்லது.”

“லண்டன் பார்கிளேஸ் பாங்கை விட ஹொங்ஹொங் பாங்கிலதான் வட்டி கூட….” இவன் எங்கேதான் மிதக்கிறானென்று புரிவதில் யாருக்கும் கட்டமில்லை .

உழைப் பில்லாத தேகந்தானே?…….. தனக்கு நித்திரை வராமல் உழருகிற நேரங்களில் மற்றவர்களையும் துாங்கவிடாமல் பாடாய் அரிவான். மற்றவர்களை நொன்னை பண்ணுவதிலும் சமர்த்த ன்.

“போன ஞாயிற்றுக்கிழமை வந்தார் கணேசு…. சுந்தரலிங்க மென்று ……..”

*எந்தச் சுந்தரலிங்கம்?…….. இங்கே பெயரில் லிங்கம் பொருத்திக்கொண்டவர்கள் நிறைய…….? ”

“அவர் தான் நீ சமைக் கையில நாரிக்குக் கைகொடுத்துக் கொண்டு நின்று தான் டொயோட்டா கார்க் கொம்பனியில மெக்கானிக் வேலை பார்க்கிறனென்று அவிச்சார்….”

“….. அவருக்கிப்ப என்ன ….?”

“எனக்குத் தெரியும்.அவரங்க ஊரில நுளம்பெண்ணைதான் அடிச்சுக் கொண்டு திரிஞ்சவர்… காரில ஹோர்ண் அடிக்கிற இடமே ஆளுக்குத் தெரியா… டொயோட்டோவில் கார் கழுவிக்கொண்டு நமக்கு மெக்கானிக் கொண்டு அவிக்கிறார்.”

அரை நிமிட மௌனம்.

“என்ன சம்பளமெடுப்பர்……..?”

“அதென்ன வேலையெல்லாம் இவ்வளவு கறெக்டாய் சொல்லுறாய்…….. சம்பளம் என்ன இருக்குமென்று மட்டும் தெரியாதாக்கும்.”

மீண்டும் சிறிய மௌன இடைவெளி தோன்ற… கணேசமூர்த்தி மெல்லக் கண்ணயர்ந்துகொண்டு போனான்.

மகேந்திரத்தோட போட்ட சீட்டு நீ எடுத்திட்டியோ…”

“இல்லை…அது தங்கச்சியின்ரை கலயாணத’ தோடைதான’ எடுக்கிறதாயிருக்கிறன்.”

“நல்லாய்க் கடைசியில விட்டு எடு. அப்பதான் கழிவிராது..”

“…….ம்ம்ம்ம்”

“இன்னும் எத்தினை சீட்டிருக்கு?”

“இன்னும் அஞ்சாறு இருக்கெண்டு நினைக்கிறன்.”

கொட்டாவி விட்டான் கணேசமூர்த்தி,

“இந்த நாட்களில் மகேந்திரம் பெண்சாதியின்ரை ஹேர் ஸ்டைலைக் கவனிச்சியே …….?”

“சாய்…….”

“முந்தி வரேக்க….. நைலோன் சாறி, பாட்டா செருப்போட தேங்காய்ப் பொச்சு மாதிரி….. முடிச்சு முடிச்சாயொரு குடும்பியோட வந்திறங் கினவ… இப்ப காசு பிடிபட்டாப்போல பியூட்டி பார்லர்ல போய் தலையெல்லாம் சுருட்டிவிட்டு….கன்ன மயிரெல்லாம் ட்றிம் பண்ணிச் சும்மா ரம்யா கிருஷ்ணன் நானென்டல்லே நிக்கிறா…! அவவோட பிணைச்சுவிட்ட மாதிரி ஓட்டிக் கொண்டு திரிஞ்சாவே இன்ளன4னொருத்தி….பரந்தாமர் பெண்சாதியோ ஆரோ…”

“எனக்குத் தெரியேல்லை…”

“அவவுக்கு இடுப்பும் நாரியும் நாலு புசல் பச்சைக்கோடன் நெல்லுச்சாக்கு மாதிரி……..பின் பக்கம் விளையவிட்ட பூசணி மாதிரி…… அதுக்குள்ள பொறிச்சுக் கொண்டு ஒரு ஸ்டைல் நடை வேறை…… இதோட விட்டாவே தானொரு வாலை யெண்டு காதுக்கு நாலு தோடும் போட்டுக்கொண்டு….. புருவத்தையுமல்லே வழிச்சுப்பூசியிருக்கிறா…… அண்டைக்கு யாழ்ப்பாணம் ஸ்டோரில் வேர்வையில – கண்மை- கரைஞ்சொழுக நிண்டாவே பார்த்த ன்……!”

அறையில் எல்லோரும் சிரித்தனர். அவன் அக்கறைகளை நினைத்து.

தான் ஏதோ சாதனை செய்து விட்ட மாதிரி மனதுள் முறுகிக் கொண்டான் கேசவன்.

விழிப்பாயிருக்கும் நேரங்களில் கனவு காணும் நேரங்கள். ஊர்த் தொள வாரங்கள் ஆராயும் நேரங்கள் போக மீதிநேரங்களில் சோதிடக்கலையில் ஆழ்ந்த ஆய்வுகளில் இறங்கிவிடுவான்.

அனேகம் தன்னுடைய ஜாதகத்தையும் பஞ்சாங்கத்தையும் எடுத்து வைத்தே பார்த்துக் கொண்டிருப்பான். ஒவ்வொரு வருஷமும் அடுத்த ஆவணி முடியத் தனக்கு வெள்ளி திசை துாக்கியடிக்கப் போகுதென்பான்.

பற்பொடி வாங்கத் தான் கடைக்குப்போகிலும் அமரபட்ஷம் , கரிநாள். அஷ்டமி, நவமி, பஞ்சமி, ராகுகாலம், எமகண்டம், படுபட்ஷி, ஓரை பார்த்துத்தான் கீழே இறங்குவான். அதைவிடவும் தபாற்கந்தோருக்குப் போகிற மாதிரி கொஞ்சம் முக்கியத்துவமான விஷயமென்றால்….. அது ஒரு திங்கட் கிழமையாயிருந்தால் அதுவும். பூர்வபட்ஷம் , பிரதமை, துதிகை. சித்தம். அமிர்தயோகம், திக்கு, சூலம் எல்லாம் பொருந்தி உத்தமமாயிருந்தாலே புறப்படுவான்.

அவன் ஜாதகக் கணிப்பின்படி வாரத்தின் மீதிநாட்க ளில்……. ஞாயிறு இழுபட்ட நாள்…… செவ்வாய் வெறுவாய்… புதன் மந்தம்… வியாழன்! கள்ளன் கழுத்தறுப்பான்…… சனி காரியக் கெடுப்பன். போதாக்குறைக்கு நியூமொரலொஜியிலும் டாக்டரேட் செய்யப் புறப்பட்டிட்டதாலே இப்போ வெள்ளியும் ஆகாதென்கிறான், எனில் Friday = K+2+1+4+1+1-17 வந்து பின் 1+7 என்று கூட்ட ஸ்ரீ 8 வருகுதாம். அதனால அதுவும் சனியின் நம்பர் காரியக்கெடுப்பன்தானாம்.

அறைக்கு யாராகிலும் வெளியாட்கள் விசிட்டேர் எம் வந்துவிட்டால் “உங்கள் அங்கவமைப்புக்களையும் நீங்கள் பேசுகிற தோரணையையும் பார்க்க ஆறாம் நம்பர்க்காரர் மாதிரியிருக்கு…….. எப்பிடி என் ஜோதிடம் சரியோ?” என்பான்.

தப்பித்தவறிச் அவரும் ஆறாந் தேதியே பிறந்திருக்க வேணும் அவர் அன்று தொலைந்தார்.

“உமக்கு, இருபத்துநாலு நடக்கையில இரண்டு பேரில் காதலிருந்திருக்கவேணுமே…”

“காதல்…சரி, ஆனால் இரண்டு பேரல்ல… ஓராள்தான்….”‘

“அதென்னென்றால் பாரும்…ஒன்றை நீர் விரும்பியிருக்கிறீர்…மற்றது இன்னொரு ஆள் உம்மை விரும்பியிருக்கிறா நீரறியாமல்…”

இந்த வகையில் அரிவு ஆரம்பமாகும்.

“இல்லைப்பாரும்….என்னுடைய நம்பர் மூன்று” என்பாரானால்……..

“ஆறின்ர பாதிதானே அது…….. அதனால அதின் குணாதிசயங்களிலும் பாதியென்றாலும் இருக்கத் தானே செய்யும்….” என்று சாமர்த்தியமாய் மெழுகிவிடுவான்.

கணேசமூர்த்தி கேட்டான்: “சாரிட்ட இருப்பில ஒரு நூற்றி ஒன்பது மார்க் கிருந்தால் சொல்லுங்கோ… இப்பவே உம்ம நியூமொரலொஜி எல்லாம் தப்பான கணிப்பென்று நிரூபிச்சுக் காட்டிறன்.”

“இது எத்தனையோ பேருடைய வாழ்க்கைகளையும், பிறந்த தேதிகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து முடிவு செய்யப் பட்டிருக்கிற அருங்கலை…இதையாவது இவராவது மறுத்து நிறுவு வதாவது…” என்று தனக்குள் எண்ணிக்கொண்டு,

“சரி..காட்டு” என்று தன் கொயோடைத் திறந்து நூற்றி ஒன்பது மார்க் எடுத்துக் கொண்டு வந்தான்.

“சரி..சார் இப்ப எனக்கிதைக் கடனாகத்தாறியள் சரியோ?”

“சரி…தாறன்.”

அவன் அதை வாங்கிப் பொக்கட்டில் வைத்துவிட்டு பதிலுக்கு அவனுக்கு ஒரு மார்க்கைத் திருப்பிக் கொடுத்துவிட்டு,

“இப்ப நான் உமது கடனைத் திருப்பியடைச்சிட்டன் என்ன?”

“அது…அதெப்படி ஐசே….நூற்றியொன்பதும் ஒன்றுஞ் சமனாகும்…?”

“உங்க நியூ மொரலொஜியில சமனாகுதே…? ஒன்றோடை சைபரைக் கூட்டி பின் அதோட ஒன்பதைக் கூட்டும் பத்து வரும், வாற பத்திலும் ஒன்றோடை சைபரைக் கூட்டி கடைசியில் ஒன்று என்றுதானே கணக்கை முடிக்கிறியள்..?

அதாவது ஆயிரமாம் தானத்தில இருக்கிற எண்ணோட நுாறாந்தானத்தில இருக்கிற எண்ணைக்கூட்டிறியள்… பின் அதோட பத்தாந்தானத்தில இருக்கிற எண்ணைக்கூட்டிறியள்…….. பின் அதோட ஒன்றாந்தானத்தில இருக்கிற எண்ணையும் கூட்டிறியள். அப்பிடித்தான் நானும் கூட்டிப்பார்த்துக் கணக்கை நேராக்கின்னான். “அது நடைமுறையில் சரிவராது.”

“அப்ப நியூ மொரொலொஜியில சரிவருமாக்கும்……..நூறாம் இலக்கதி தானத் தையும் ஒன்றாம் இலக்கத தானத்தையும் பெறுமதியில் சமனாகக் கருதி அவற்றை ஒன்றுடன் ஒன்றைக் கூட்டிக்கொள்கிற கணிதம் உலகத்தில எங்க man இருக்கு?”

“சாத்திரமெல்லாம் கடவுள் மாதிரியாக்கும்..”

“அது எப்பிடியோ..?”

“நம்பினவனோடதான் அதைப்பற்றி மேல கதைக்கலாம்…… இல்லை யெண்டவரை விட்டிட வேண்டியது தான்…..!

“நம்பிறதென்டால் மூளையைக் கழற்றி வைச்சிட்டெல்லே நம்ப வேண்டிக் கிடக்கு man நீயே நம்பிறாயில்லை…ஒரு மார்க்கைத் தர வேண்டா மென்றாய்…இதுகளைத் தூக்கியெறிஞ்சுபோட்டுப் பிழைக்கிற வழியைப்பாற்றா பரதேசி..எப்பத்தான் நாட்டைவிட்டுத் துரத்திறானோ தெரியாது!” |

ஒரு முறை இப்படித் தான் ஒரு ஜெகோவா பிரசாரப்பார்ட்டி வந்து “2000ம் ஆண்டு உலகம் அழிவு சர்வ நிச்சயம்….. அது ஜெகோவாவின் ஆக்ஞை ” என்று நின்றார்கள். கணேசமூர்த்தி சொன்னான்;

“தங்கள் சத்திய வாக்கை முற்றிலும் நம்புகின்றோம்…….. அப்படியே தங்கள் திருச்சபையிலும் சேர்ந்து கொள்ளச் சித்தம்…தாங்களும் தங்கள் திருச் சபையும் ஒன்றேயொன்றை மட்டிலும் இச்சிறியேன் பொருட்டுச் செய்தாக விண்ண ப்பம்.”

“எதுவாகிலும் செய்கிறோம் சொல்லும்……ஜெகோவாவின் சித்தம் எம் பாக்கியம்.” “2001ம் ஆண்டு தை மாதம் முதலாந்தேதி அதிகாலை ஒரு மணி முதல் ஸ்ரீலங்கா வடலியடைப்பைச் சேர்ந்த ஆ. கா. கணேசமூர்த்தியாகிய எனக்கு எம்மிருவரினதும் எமது திருச்சபையின் உடமையானதுகளுமான அனைத்து அசையும் அசையாச் சொத்துக்களும் சொந்தமாகிறது என்று நாமிருவரும் எமது திருச்சபையின் சொத்துக்களைக் கையாளும் சட்டபூர்வ அதிகாரங் கொண்ட மேற் கண்டவர்களும் வேறெவரது நிர்ப்பந்தமு மின்றி சுவாதீனத்துடன் இவ்வுறுதிப் பத்திரத்தில் கையெழுத்திடுகிறோம்….. என்றெழுதிச் சின்னக் கையெழுத்துக்களும் போட்டுத்தர வேணும்.”

எந்தா…….மாயம்? பார்ட்டி நொடியில் காணாமற்போனது!

கேசவனுடைய சாத்திர அணுகுமுறைகளால் இவனுக்கு அறையில் கூடவே – பஞ்சாங்கம் – என்றொரு உபநாமதேயமுமுண்டு.

கூடவே இவனைச் சக அறைவாசிகள் குறிப்பிடுவது “றீல்கட்டை” என்று. எல்லாம் காரண இடுகுறிப் பெயர் தான் . எக்குத்தப்பாய் அ.’ தவன் காதில விழுந்து தொலைச்சுதோ …. ஸ்போடிவாக எடுத்துக்கொள்ளவே மாட்டான், நீர்த்த புண்ணில அமிலம் பட்டமாதிரிச் சிலிர்ப்பான். பின் தெரிந்தவர். தெரியாதவர், அறிந்தவர், செறிந்தவரென்று ஒன்றும் பார்க்கமாட்டான். சொன்னவரைச் சரமாரியாய் கெட்ட வார்த்தைகளாலேயே அர்ச்சித்து விடுவான்.

அனேகமான இரவுகளில் சாப்பாட்டுக்குப் பிறகு படுக்கையில் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு உலக விசாரத்தில் இறங்கினானேயென்றால் உடனகப்பட்டவர் தலை அனேகமாகத் தொங்கிப்போகும். அவனிடமிருந்து தப்பிக்க மற்றவர் போலியாகவேனும் கொறட்டை விடவேணும்.

“பாஸ்கர் நீ லேசில் கொறட்டை விடமாட்டியே இன்றைக் கென அவசரக் கொறட்டை…” என்று இறங்கிவந்து போர்வையைச் சில வேளைகளில் விலக்கிப்பார்ப்பான்.

“உனக்கு இந்தக் கிறிஸ்மஸ்ஸோட சம்பளம் கூட்டித் தருவாங்களெண்டல்லே முந்திப் பறைஞ்சனி…இப்ப எப்படிப் பரவாயில்லாமல் தாறாங்களோ?”

“பரவாயில் லை கொஞ்சம் கூட்டி யிருக்கிறாங்கள்….. அதை நம்பித் தான் நானும் கட்டுக் காசுக்கு ஒரு ஆயணனய அவிழ்க்கலாமென்று பார்க்கிறான்… … என்ரை பாங்கும் கறண்டீ பண்ணிறம் எண்டு சொல்லியிருக்கு….”

“அட என்ர ஹாம் மேட்டே சொல்லாமல் கொள்ளாமல் புதுக்கார் வேண்டப்போறான்.” கேசவனின் றேடியேட்டர் திடுமென -பொயில் பண்ணியது.

“ம்…ம்..கண்ணுள்வை பார்த்து வேண்டுவினம்… காதுள்ளவை கேட்டு வாங்குவினம்…..” என்றுவிட்டு அவன் நிறுத்தவும் கேசவனின் வெளிப் படையான பொருமல் கணேசமூர்த்திக்குள் ஜுவாலையை மூட்டியது.

“ஏன் நீ பிறப்பால கண், காது, நாசு அற்றுப் பிறந்த முண்டமே….நல்ல சினைப்பண்டி மாதிரித்தேகமிருக்கு… அதைக் கொண்டு உழைச்சு வாங்கிறதுதானே… ஆருன்னை இழுத்துப் பிடிக்கினம்……? உனக்கு ஆசை பெரிசு…கோமணம் சிறிசு!”

கட்டிலால் குதித்தான் கேசவன். “யார் சொன்ன சிறிசெண்டு….. இப்ப நல்லாப்பாத்துச் சொல்லு பார்ப்பம்….” எ’றபடி அவனுக்குத் தன் சாரத்தைத் தூக்கிக் காட்டினான். (நல்ல காலம் Pants அணிந்தேயிருந்தான்.)

“ஓமோம்…இஞ்சை நல்லாய் விளைஞ்சு மூன்று நேரத்துக்குக் கட்டின சோத்துப்பாசல் மாதிரிக் கிடக்கு……. தப்புத்….தப்புத்…….தப்பு….. கருத்து உடன் வாபஸ்! கொஞ்சம் பினாத்தாமல் மனுஷரைப் படுக்க விட்றா ……..டேய்! விடிய ஐஞ்சு மணிக்கு நான் வேலைக்கு நிற்க வேணும்….!”

அன்று திங்கட்கிழமை…காலை பதினொரு மணி கடந்து பத்து நிமிடங்களாகியிருந்தன.

“குய் குய் குய்க்….
குயிங்…
குய் குய் குய்க்…..
குயிங்….
குய் குய் குய்க்…. யிங்”

குருவிகள் பல கீசுவதைப் பைபோல உறுத்தாதவாறு இனிமையாக பெஞ்ஜமின் வில்லா

ரெலிபோன் கீசுகிறது.

வில்லா துப்பரவுப் பணி செய்யும் மாது மட்டும் : வீட்டில் , அவள் வேலை செய்யும் போது சனிக்கிழமையும் டெலிபோன பல தடவைகள் கீசியதுதான. பெஞ்சமின் இல்லாத வேளைகளில் டெலிபோன் கீசினால் அவள் எடுப்பதோ, பதில் சொல்வதோ வழக்கமில்லை. இன்றோ திரும்பத் திரும்ப வேலைசெய்ய விடாதபடி அடித்துக் கொண்டேயிருக்க…… என்ன அவசரமோ பிரச்சனையோ அவன்தான் ஏதும் முக்கிய செய்தி சொல்ல எடுக்கிறானோ என்றவொரு உணர்வில்…எடுத்து “ஹலோ” என்றாள்.

பெஞ்சமினின் முதல் செக்கிரட்டரி றெஜினா பேசினாள்.

“இங்கே பெஞ்ஜயின் ஆர்க்கிடெக் எபிருந்து றெஜினா பேசிறன்…..மிடர் பெஞ்ஜமினுக்கு இங்க பதினொரு மணிக்கு முக்கியமான சந்திப்பு இணக்கம் ஒன்றிருக்கு…… ஜப்பான் பார்ட்டி வந்து அரைமணிக்கு மேலாய்க் காத்துக் கொண்டிருக்கிறார்கள்…… தயவுசெய்து அவரைக் கொஞ்சம் எழுப்பிவிடமுடியுமா….”

“இல்லையே….அவரிங்கு இல்லையே…”

“படுக்கை அறையில் பாருங்கள்…இன்னும் தூங்கிக் கொண்டிருப்பார்.”

“இல்லை அவரிங்கில்லை.”

“நிஜமாகவா….?”

வெள்ளிக்கிழமை வேர்க் சைடுக்குப் போனவர் தான்…பிறகு ஒபிஸுக்கே வரேல்ல…கைத்தொலை பேசியிலும் ஆாைப் பிடிக்க இயலாமலிருக்கு ஏதும் சுகவீனயோ என்னவோ…?” என்றவள் நிறுத்திக்கொண்டாள்.

“நானும் ஆளை வெள்ளிக் கிழமைக்குப் பிறகு காணவேயில்லை….கார்கள் எல்லாமே நிற்கிறதால..எங்கேனும் வெளி நாட்டுக்குப் போயிருப் பாரோ….சனி, ஞாயிறு ஆஷ்டிறேகூடப் பாவியாமல் அப்படியே சுத்தமாயிருக்கே….? செக்கி “மொமென்ட்” என்றுவிட்டு கழுத்தைச் சாய்த்து ரிபீவரைப் பிடித்துக்கொண்டு கணினியைக் குடைந்து பார்க்கிறாள்.

அங்கு வெளிநாட்டுச் சந்திப்பு இணக்கங்கள் ஒன்றுமே இருக்கவில்லை.

“ப்ச்” என்றவள் குறும்பு தொனிக்கும் குரலில் கேட்டாள்.

“புது ப்ரெண்ட் எவளாவது கிடைத்து….. எங்காவது ஹனிமூன் புறப்பட்ட மாதிரி…”

“புதுசா யாரையும் அவர் கூட்டி வரேல்லை..கார்கள் எல்லாமே நிற்கிறதால அப்பிடியெங்கும்…போயிருப்பாரென்றுந் தோன்றேல்லை எனக்கு”

“நான் அவசியமானால்….மீண்டும் தொடர்பு கொள்கிறேன்….நன்றி” என்று தொடர்பைக் துண்டித்துவிட்டு வழமையில் பெஞ்ஜமின் போகக்கூடிய ஹோட்டல்கள், கிளப்கள், பார்கள், மிக நெருங்கிய நண்பர்களின் வீடுகள் என்று எல்லாவிடங்களுக்கும் தொடர்புகொண்டு பார்க்கிறாள். எவருமே அவன் வந்ததாகவோ கண்டதாவோ சொல்லக்காணோம்.

இன்னும் பாக்கி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வீடுதானிருந்தது. அங்கே விசாரிக்கப் பயமாயிருந்தது. மனுஷன் பொலீஸை விரட்டித் தேடச்சொல்லி ஒரு காட்சியை அரங்கேற்றிவிடுவார். அது பெஞ்ஜமினுக்கு அறவே பிடிக்காது.

செவ்வாயும் டெலிபோன் கீசிக்கொண்டே இருக்கிறது.

முதல் செக்கரட்டரி திரும்பத் திரும்பச் சொல்லி ஆச்சரியப்பட்டாள்.

“பக்கத்திலே ஹம்பேர்க்குக்குப் போகிற தென்றால்கூட சொல்லிக் கொள்ளாமல் போகமாட்டாரே….” பதினாறு திக்குகளிலிருந்தும் யார் யாரோவெல்லாம் அவனை விசாரித்தார்கள். வீட்டில் பணிப் பெண்ணும். ஒபிஸில் செக்கிரட்டரிகளும் அன்றும் பதில் சொல்லி ஓய்ந்துவிட்டார்கள்.

மனுஷன் பணிகளின் அழுத்தத் தினால் எங்கேயோ மோனம் வேண்டிச் சில நாட்கள் அஞ் ஞாத வாசம் போய் விட்டதாக எடுத்துக்கொண்டு அவனின்றியே அவன் தலைமை தாங்கும் நிர்வாக இயந்திரம் – பழக்கத்தின்படி இயங்கிக்கொண்டிருந்தது.

புதன் கிழமை பிற்பகல் ஒரு மணி கடந்து விட்டிழந்தது. ஐந்து நாளாக தொழுவத்தில் நிறுத்தாமல் ரெஹாசவில் நிறுத்தியிருந்த மிளகாய்ப்ப ழச் சிவப்புநிற NISSAN PATROI TRUCK வண்டியருகில் எதற்கோ துப்பரவுப் பணிப் பெண் போகவும் அதனுள்ளிருந்து மிக மெலிதாக கைத்தொலைபேசி ஒன்று

“குளுங் குளுங் குளுங்………”

என்பதுபோல் கேட்டது. காலியான முன் இருக்கைகளை எட்டிப்பார்த் தான. சத்தம் வண்டியின் பின்பக்கமிருந்தே வருவதாகப் பட்டது. பின்னுக்கு பூரா கறுத்த Tinted glass பொருத்தப்பட்டிருந்ததால் ஊடாக எதுவும் தெரியவில்லை … உள் ஏதோ ஒரு உந்தலுண்டாக பட்டெனப் பின் கதவைத் திருகிக் திறந்தாள். குப்பெனத் துர்மணங் கொண்ட காற்று வந்து அவள் முகத்தில் அடிக்க அங்கே… அங்கே …. மல்லாக்கப் படுத்து மீளாத் துயிலில் மூழ்கிக் கிடக்கிறான் பெஞ்ஜமின்!

பெஞ்ஜமின் வெள்ளிக் கிழமையன்று தன் கட்டுமானப் பணிகள் செய்யும் கொம்பனி ஒன்று நிர்மாணித்துக் கொண்டிருந்த தொடர்மாடிக்கட்டிடம் ஒன்றில் தானுயர்த்திகள் பொருத்தப் படுவதைப் பார்வையிடப் போய் 12 மாடி வரை படிவழியாக ஏறியிருக்கிறான். மேலே போனதும்….லேசாகத் தலையைச் சுற்றுவது போலிருந்திருக்கிறது.

“எனக்குக் களைப்பாயிருக்கு” என்று விட்டு உடனே திரும்பிவிட்டான்.

‘இது நேற்று அடித்த கொக் டெயிலின் கிருத்தியமாய்த் தானிருக்க வேண்டும்’ என்கிற நினைப்பில் அவனுக்கு டாக்டரிடம் போகவேணும் என்று கூடத் தோன்றவில்லை. வீட்டுக்கே வண்டியைச் செலுத்தினான். வர வர உடல் வியர்த்து இலேசாக நெஞ்சை வேறு வலித்தது.

ஒருவாறு வீட்டையடைந்து வெண்டியை நிறுத்தவும் வலி தாங்க முடியாதபடி அதிகரித்தது. மேலும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. கண்கள் இருண்டு கொண்டு வந்து முன்னாலே பனித் திவலைகள் பறப்பதைப் போலிருக்க… யாரையாவது உதவிக்கு அழைக்க வேணும் போலிருந்தது….முயற்சித்தான்…வார்த்தைகள் பறி போயின…

முன்னிருக்கையின் பின் சாய்வைச் சாய்த்துப் பின்னாலுள்ள தட்டில் பின் புறமாகச் சாய்ந்து கொள்ளவும் இதயத்தின் சுவருக்குக் குருதி வழங்கும் சுற்றொன்றில் முழு அடைப்பு ஏற்பட்டு அது மேற்கொண்டு இயங்க முடியாமல் தன் அடிப்பு வேகத்தைக் குறைத்துக்கொண்டு திணறியது. இறுதியில் இதயம் இறுதித் தடவையாக உச்ச வலியைத் தந்துவிட்டு ஓய்ந்து கொண்டது!

அன்று கேசவன் அறையில் ஒருவரும் இல்லை. எல்லோருமே வேலைக்குப் போயிருந்தார்கள். கேசவன் கணையாய்க் குழம்புடன் ஒரு அடி அடித்து விட்டு காலாட்டியபடி பாட்டெழுப்பிக் கொண்டு படுத்திருக்கிறான்.

முன்பொரு முறை இப்படித் தான் எல்லோரும் அறையை விட்டுப் போய் விட்டார்கள் என்ற துணிவில் கர்நாடக இசையுடன் கூடிய பழைய பாட்டுக்களாக எடுத்துவிட்டுக் கொண்டிருக்கிறான்.

எந்தன் இடது கண்ணும் தோளும் துடிப்பதென்ன…

இன்பம் வருகுதென்று சொல்…சொல்…சொல்…கிளியே தன்னை மறந்தென்னுள்ளம் துள்ளி விளையாடுதே…

என்ன சொல்வேன் லாகிரி கொண்டேன் போலும்..

அடுத்து

மனமே கணமும் மறவாதே….ஜெகதீஸன் மலர்ப்பதமே…மோகம் மூழ்கி பாழாகாதே மாய வாழ்வு சதமா..? நாதன் நாமம் நீ பதியென்றால் நாளையென்றால் யாரைக் கண்டார் ஆதலால் பவரோக மொழிந்திடவே…ஜெகதீஸன் மலர்ப்பதமே

அடுத்ததாக…

மருதமலை மாமணியே முருகையாலய மதுரை சோமுவைப் போலவே தம்பிடித்து எடுத்து விட்டுக்கொண்டிருக்க அடுக்குக் கம்பிக்கட்டிலின் மேலே காலிலிருந்து தலைவரை போர்த்துத் துாங்கிக் கொண்டிருந்த விமலன் பாட்டின் உக்கிரமம் தாங்கமாட்டாமல் “அடீக்” “அடீக்” “அடிக்….. யார்றா கதவைத் திறந்து விட்டது என்னவோ ஒண்டு உள்ளட்டுட்டுது.” என்று கத்தவும் கேசவன் திடுக்கிட்டுப் போனான்.

“பீடி சுத்தி விட்டு வந்த கேஸுகளுக்கெல்லாம் லதாங்கியும், சாருகேசியும், கரகரப்பிரியாவும், எங்கே புரியப்போகுது…”

அதன் பிறகு அறையில் ஒருவரும் இல்லையென்பது உறுதியாகிவிட்டால் தான் அவனுக்குப் பாட்டுவரும். ஆட்களிருந்தால் குரலெடுத்துப் பாட முடியாதுதானே?

பெஞ்ஜமின் மாதிரித்தானும் ஒரு கையில் லாப் டொப் கணினியும் மறுகையில் குட்டியையும் அனைத்துக் கொண்டு ஐகுவார் காரில் வந்து இறங்கும் கோலங்கள் கண்முன் விரிகின்றன.

ஜெகன் மாதா இத் தீனனை எப்படியும் கைவிடவே மாட்டாள். கேசவன் பாவத்தைப் பிழிந்து பாடுகிறான்.

அம்பா…மனங்கனிந்துனது கடைக்கண்பார்….

அம்பா …. மனங்கனிந்துனது கடைக்கண்பார்…

வெம்பவ நோயற அன்பர் தமக்கருள்…

கதம்ப வனக்குயிலே……. சங்கரி ஜெகதாம்பா ….

திடீரென்று “ஊய் … ஊய்ங்……. ஊ ய்ங் … …… …… கூ……” என்று இரைந்துகொண்டும் அம்புலன்ஸும், பொலீஸுமாய் நாராசமாய்க் கூவிக்கொண்டும் வர பாட்டுத் தடைப்பட்டது, ஒலி கடந்து போகட்டும் என்று காத்திருந்தான். அது போவதாயில்லை. அவன் காதினுள் நின்று கூவின. எழுந்து ஜன்னலுக்கு வந்தான்.

என்ன ஆச்சர்யம்! பெஞ்ஜமின் வில்லாவளவு ரெறாச முழுவதும் அம்புலன்ஸும் பொலீஸும் டிவி, பத்திரிகையூடக ஆட்களும் நிறைந்திருந்தார்கள்.

சடுதியில் காற்சட்டையுள் புகுந்து கொண்டு கீழே இறங்கி ஓடினான்.

அங்கே கமெராக்கள் பளிச் சிட்டுக் கொண்டிருக்க இவன் காதலோடு பார்க்கும் NISSAN PATROL TRUCK வண்டியிலிருந்து ஊதாவாய் மாறிவிட்டிருந்த பெஞ்ஜமினை இறக்கி ஸ்றெச்சரில் வைத்துத் துணியால் மூடிக்கொண்டிருந்தார்கள்.

நடப்பதெல்லா மென்ன கனவா.. நனவா…பிரமையா…? அதிர்ச் சியிலிருந்து விடுபட முடியாமல் விக்கித்துப் போய் நின்றான் கேசவன்.

அறைக்கு மெல்ல வந்து குளியல் தொட்டியை நிரப்பிவிட்டு ஆசௌஷம் நீங்க முங்கிக் குளித்தான்.

“உன் ஆரோக்கியமான உடம்புதான் நீ வரிக்கும் முதலாவது செல்வம்… மற்றதெல்லாம் நீயாகப் போட்டுக்கொள்வதுதான்….. உடம்பு ஒத்துழைக்கிற அளவிலதான் உன் லௌகீக எல்லைகளையும் நீ விஸ்த் தரிக்கலாம்…….. பணக்காரனாகிவிட வேணுமென்ற ஆசை எதனால வருகுது…..? போகங்கள் மீதான காதலாலே வருகுது…… அதிக அளவிலான போகங்களின் வாய்ப்பு எவ்வளவுக்கு உலோகாயத வஸ்துக் களை ஆள்கிறோமோ அதோட நேர்விகித சமத்தில சாத்தியமாகுது……. இந்த இரண்டுமே கருங் குழியின் ஆகர்ஷிப்பு போல முடிவிலியாக அகன்று சூனியவெளி முழுவதும் வியாபிக்கும் அளவிடவே முடியாத ஈர்ப்புக்கள், வேடிக்கை என்னவென்றால்…… எவ்வளவு தான் நீ லௌகீக ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டு போனாலும் ஒரு எல்லையில் உன் உடம்பு தளர்ந்து போகையில் போகங்கள் மீதான காதலும் தளரும்…. என்பதுதான். அதைத் தொடர்ந்து லௌகீக வஸ்துக்கள் மீதான ஆகர்ஷிப்பும் சடுதியில் ஒடுங்கும். ஒரு நிலையில் மனது இவைகள் எல்லாவற்றிலிருந்தும் விடுதலைபெறவே விரும்பும். அந் நிலையில் மஹா அலெக்ஸாண்டரும் , பக்கிரிசாமியும் ஒன்றுதான் …. அதனால மற்றவை யின்ரை மடியைப் பார்த்து ஏங்காத கேசவன்……..ம்மாம் பெரிய சமுத்திரம்… ஒரு கிடைச்சிக்கட்டையைத் தன்னுள் அமுக்கிவிடுமா………?”

பேச்சுவாக்கில் கணேசமூர்த்தி ஒரு நாள் சொன்னது…..இப்போது அர்த்த ‘புஷ்டியான விஷயமாய் மனதில் உறைத்தது. இருக்கிறதை விட்டுவிட்டு இல்லாததுக்குப் பறக்கிறேனோ ….? பெஞ்ஜமினுக்கு இதயம் வலித்து – உயிர்ப்பறவை முக்குளித்தபோது எதுதான் உதவிக்கு வந்தது?

அவன் திளைத்த எல்லா ஐஸ்வர்யங்கள் மீதுந்தான் எனக்கும் ஆசை வந்தது. ஆனால் ஒரு சிறு கொசுவைப்போல சத்தமில்லாமல் வந்து அந்த ஆஜானுபாவனையே சாய்த்துவிட்டு வந்த அம்மார்பு வலி… அதுவும் அவன் வரித்ததல்லவோ …?

மாலையானது….பின் மெல்ல இருள் பரவ ஆரம்பித்தது.

ஜன்னல் வளியே மீண்டும் வில்லாவைப் பார்த்தான். எல்லோருமே போய்விட்டார்கள்…

பெஞ்ஜமின் என்ற சீமான்…கட்டழகன்…உல்லாசியும் போய் விட்டான்!

அவன் பிறப்புக்கும் இருப்புக்கும் களிப்புக்கும் மறைப்புக்கும் சாட்சியான அந்த வில்லாவும் மௌன நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டது!

இவன் மன வெளியெங்கும் சூன்யமும், அநித்யத்தின் பயமும் வியாபித்தன…

பட்டையாக நீறணிந்து கொண்ட பின் மனம் நைந்து நெக்குருக பாடினான்.

அந்த வரம் வேண்டாம் ஜெகதீஸ்வரி – எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி…

அம்பா!

– மல்லிகை 2001.04

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *