எங்கே என் தலைமுறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2017
பார்வையிட்டோர்: 8,864 
 

இரண்டாயிரத்து நூற்று பதினாறாம் வருடம் ஜனவரி முதல் தேதி புது வருட கொண்டாட்டத்தில் இருந்த சுசில், தன் நண்பன் பிஜோவிடம் கேட்டான்.

“ஹாய் பிஜோ!! உங்க அப்பா அம்மாவ போய் பார்த்தியா?”

“நோ… சுசில். இன்னைக்கு பார்ட்டி இருக்கில்ல. அதான் போகல. அடுத்த விசேசத்துக்கு பார்க்கலாம்”

“ம்ம்ம்… நம்ம மந்திரி ஆன்லைன்ல அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் பார்த்தியா?”

“இல்ல.. நான் பார்க்கல”

“ஒவ்வொரு பத்து கிலோமீட்டர் இடைவெளியில் இருக்கிற முதியோர் இல்லம். இனி ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டர் இடைவெளியில் அமைக்கப்படும்ன்னு அறிவிச்சிருக்காரு”

“ஓஹோ குட்.. அப்போ நானும் என்ன அப்பாவை இங்கயே சேர்த்துடுவேன். அப்போதான் ஆறு மாசத்திற்கு ஒருமுறை போய் பார்க்க முடியும், உனக்கு ஒன்னு தெரியுமா? என் ஃபிரெண்டோட அப்பாவை சேர்க்க, கவர்மென்ட் முதியோர் இல்லத்திற்கு போயிருக்கான். அங்க அவங்க அப்பாவிற்கு, ஐம்பது வயசுக்கு இன்னும் ஆறு மாதம் இருக்குன்னு திருப்பி அனுப்பிச்சிடாங்க”

“அதுக்குதான் நான் பிரைவேட்ல சேர்த்துட்டேன். எங்க அப்பாவை நாற்பத்தைந்து வயசுலையே சேர்த்துட்டேன். என்ன குழந்தை கொஞ்சம் பெருசாயிட்டா, எங்க அம்மாவையும் சேர்த்துடுவேன். என்னதான் இருந்தாலும் நம்மள பெத்தவங்க, அவங்களை நல்ல முதியோர் இல்லத்தில தான் சேர்க்கனும். அது நம்ம கடமை”

“எனக்கு அவ்வளவு வசதி இல்ல. அதான் நான் கவர்மேன்ட்ல சேர்த்துட்டேன்”

“இப்போ நீ எங்க போற?”

“லைபிரெரி போறேன். பாய்…. சுசில்”

நூலகத்தில் புதிய தொழிநுட்பத்தில் படிக்கும் வசதி இருந்தது. அந்த திரையில் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தான் பிஜோ. அப்போது நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு புத்தகம் வந்தது. அதை படித்தான். அதில்….

“நகரத்தில் வாழும் சில மக்கள் தன் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள். இது போன்று தொடர்ந்தால், ஒரு காலத்தில் கிராமத்திலும் இந்த கலாச்சாரம் பரவிவிடும். இது தொடர்ந்தால், வருங்காலத்தில் குறிப்பிட்ட வயதில் பெற்றோரை முதியோரில்லத்தில் சேர்க்க வேண்டும் என்ற நிலைமை வந்து விடும்” என்பதையும், நம் கலாச்சாரம், கூட்டு குடும்பம் போன்ற பண்பாட்டு முறைகள் பற்றியும், அதில் நிறைய எழுத பட்டு இருந்தது. அதை படித்த பிஜோ, அவனின் பெற்றோரை வீட்டிற்கு அழைத்து வர, வேகமாக புறப்பிட்டான்.

அதை பார்த்து அரங்கம் முழுவதும் கைதட்டும் ஓசை அவ்வரங்கை அதிர செய்தது.

“மூன்றாமாண்டு படிக்கும் கல்லூரி மாணவர்கள், நடத்திய நாடகம் அருமையாக இருந்தது. இது நம் எல்லோருக்கும் ஒரு பாடம். நன்மை படிக்க வைத்து, நல்ல நிலைமைக்கு கொண்டுவர, நம் பெற்றோர்கள் எப்பாடு பட்டிருப்பார்கள் என்பதை, மனதில் வைத்து அவர்களை, நம் குழந்தையை போல் பார்க்க வேண்டும். இந்த நாடகத்தை போன்ற எதிர்காலம் உருவாக கூடாது என்ற உறுதி வேண்டும். வரும் காலம் முதியோர் இல்லமே இல்லாத காலமாக உருவாக, கூட்டு குடும்பமாக ஒன்று பட்டு வாழ வேண்டும்” என்று நாடகத்தில் நடித்த அனைவருக்கும் இந்த பரிசை அளிக்கிறேன்” என்றார் கல்லூரின் முதல்வர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *