கலைச்செல்வி

 

பெயர் : கலைச்செல்வி

கணவர் பெயர் : சு.கோவிந்தராஜு

வீட்டு முகவரி : கே.கே.நகர், திருச்சி 620 021

இமெயில் முகவரி : shanmathi1995@live.com

இதுவரை வெளிவந்த படைப்புகள் :

  • “சக்கை“ என்ற இவரின் நாவல் NCBH வெளியீடாக 2015 ஜனவரியில் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியானது. இந்நாவல் நேரு மெமோரியல் கல்லுாரி, புத்தனாம்பட்டியில் தமிழ் இலக்கியத்திற்கான பாடமாக ஆக்கப்பட்டுள்ளது.
  • காந்திகிராம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இவரது சக்கை நாவலை M.Phil. பாடத்திற்கான ஆய்வாராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டுள்ளனர்.
  • “வலி“ என்ற இவரது சிறுகதை தொகுப்பை காவ்யா பதிப்பகம் 2015 சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டது. இத்தொகுப்பு சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான கவிதைஉறவு பரிசைப் பெற்றது
  • மேலும் இவரது சிறுகதை கணையாழி இலக்கிய இதழ் மூலம் (ஜுன் 2015) சிறந்த சிறுகதைக்கான பரிசை வென்றது.
  • தினமணி-நெய்வேலி புத்தகக்கண்காட்சி 2012ல் இவரது கதை இரண்டாம் பரிசையும் 2013ஆம் ஆண்டு இவரது கதை முதல் பரிசையும் பெற்றது.
  • “போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி“யில் முதல் பரிசும் பல்சுவைக்காவியம் சிறுகதைப் போட்டியில் பரிசும் வென்றது.
    கணையாழி, உயிரெழுத்து, குமுதம் தீராநதி, தாமரை, செம்மலர், காக்கைச் சிறகினிலே, அமுதசுரபி, கனவு, கிழக்குவாசல் உதயம், பேசும் புதிய சக்தி, தினமணி, குங்குமம், பல்சுவைக் காவியம், மங்கையர்மலர், ராணி போன்ற பத்திரிக்கைகளில் ஐம்பதுக்கும் அதிகமான சிறுகதைகள் வெளியாகியுள்ளன.
  • 2014 ஆம் ஆண்டு திருச்சியில் நடைப்பெற்ற சாகித்யஅகாடமி கூட்டத்தில் இவரது சிறுகதை வாசிக்கப்பட்டது. மேலும் இவரது ஏழு ரூபாய், கனகுவின் கனவு என்ற இரண்டு சிறுகதைகள் தொலைக்காட்சியில் திரு.சுப.வீரப்பாண்டியன் அவர்களால் எடுத்தாளப்பட்டது. திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் ஏழு சிறுகதைகள் இலக்கியச்சோலை பகுதியில் வெளியாகியுள்ளது.
  • சமுதாய படிநிலை மாற்றங்கள், பழந்தமிழர் கட்டுமானங்கள், மின் குப்பைகள், இன்றையக் கல்வி நிலை, பெண்ணியம், சாதியம், வனவாழ்வு போன்ற தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் குமுதம் தீராநதி, மும்பையிலிருந்து வெளியாகும் தமிழ் லெமூரியா, புதிய கோடங்கி, தாமரை போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளது.
  • ”புயலுக்குப் பின்னே..“ என்றொரு கதை பெண்மணி இதழில் முழு நாவலாக வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *