யானையும் சுண்டெலியும்…

 

காட்டில் ஒரு குளத்தின் உள்ளே இறங்கி யானை ஒன்று குளித்துக் கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த சுண்டெலி ஒன்று, யானையைப் பார்த்து, “நீங்க குளித்தது போதும்! மேலே வாருங்கள். எனக்கு சாமி தரிசனம் செய்ய நேரமாகிவிட்டது’ என்று அதட்டலாகச் சத்தம் போட்டது.

யானையும் சுண்டெலியும்யானைக்குக் கோபம் வந்தது. “டேய், பொடியா, நீயா என்ன விரட்டுகிறாய்? என் முன்னே வா… உன்னை மிதித்துப் போட்டு விடுகிறேன்…’ என்று கூறியது.

“என்னை மிதிப்பது இருக்கட்டும்…. என் கடவுள் வழிபாட்டுக்குக் குறுக்கே நிற்காதீர். வழிவிடும். நான் அவசரமாகக் குளித்துச் செல்ல வேண்டும்’ என்றது சுண்டெலி.

“ஏய்… பொடியா… இவ்வளவு பெரிய குளத்தில் உனக்குக் குளிக்கவா இடமில்லை? குளத்தின் கரை

யோரத் தண்ணீரே உனக்கு அதிகம். அதில் குளித்துச் செல். நான் குளிக்கும் இடம் மிகவும் ஆழம். இங்க வந்தால் குளத்தில் மூழ்கிச் செத்துப் போய்விடுவாய். ஒழுங்காகக் குளித்துவிட்டுப் போ…’ என்றது யானை.

“நான் குளத்துக்குள் இறங்கினால் நீர் எழுந்து வரும்போது என்னை மிதித்துப் போட்டுவிடுவீர். அதனால் சீக்கிரமாகக் குளத்திலிருந்து வெளியே வாரும். அப்போதுதான் நான் குளத்தில் இறங்கிக் குளிக்க முடியும்!’

சுண்டெலி பயந்தது போல அடம் பிடித்தது.

பொடியனாக இருக்கிறான். கடவுள் பற்றி வேறு சொல்கிறான். கண்ணில் பயம் வேறு தெரிகிறது. நாம்தான் விட்டுக் கொடுப்போமே என்று எண்ணிய யானை, கஷ்டப்பட்டு எழுந்து குளத்தை விட்டு வெளியே வந்தது. “எலிப் பொடியா, நான் கரையேறிவிட்டனே. நீ போய் சீக்கிரம் குளித்துவிட்டு வா… நான் இன்னும் குளித்து முடியவில்லை…’ என்று பெரிய மனது வைத்துச் சொன்னது.

யானையைக் கூர்ந்து நோக்கிய சுண்டெலி, “எனக்கு இப்போது குளிக்கும் எண்ணமே போய்விட்டது. நான் குளிக்கவில்லை. நீர் வேண்டுமானால் குளிக்கச் செல்லலாம்’ என்று திமிராகப் பதில் கூறியது.

இதைக் கேட்டதும் யானைக்குக் கடுங்கோபம் வந்தது!

“பொடிப் பயலே, கிண்டலா பண்ணுறே… ஒரே மிதியில் உன்னைக் கொன்று விடுகிறேன் பார்…’ என்று பிளிறிக் கொண்டே சுண்டெலியை நோக்கி வந்தது.

பயம் இருந்தாலும் சுண்டெலிக்குத் திமிர் மட்டும் அடங்கவில்லை. “என்னுடைய செருப்பை நேற்று குளிக்கும்போது தவறவிட்டு விட்டேன். அதை நீர்தான் அணிந்திருப்பீரோ என்று எனக்குச் சந்தேகம் வந்தது. அதனால்தான் உம்மைக் குளத்தைவிட்டு வெளியே வரும்படி சொன்னேன்… நீரும் வெளியே வந்தீர். எனது சந்தேகமும் தீர்ந்தது. நான் வருகிறேன்!’ என்றபடியே யானை அருகில் வருவதற்குள் வேகமாக ஓடி மறைந்தது.

“இந்தச் சிறிய சுண்டெலி, நம்மை இந்தப் பாடு படுத்திவிட்டதே! இது எனக்கு ஒரு பாடம்தான்! பெரியோரை மதிக்கத் தெரியாத சிறியோருக்கு இடம் கொடுப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை இந்தச் சிறிய சுண்டெலி எனக்கு உணர்த்திவிட்டதே!’ என்று எண்ணிக் கொண்டே குளிக்கும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டுக் காட்டுக்குள் திரும்பியது யானை.

- க.பரமசிவன், மதுரை.(டிசம்பர் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
தொலைதூரத்து வெளிச்சம்
""பாத மலை தெரியுது சிவா....எழுந்திரு'' - மனசுக்குள்ளிருந்து எழுப்பினாள் மாலினி பசுந்தேயிலைகள் நிரம்பிய மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் துயில்பவனைப் போல் கண்களை மூடியபடி அமர்ந்திருந்தவன் சட்டென எழுந்து நின்று பேருந்தை நிறுத்தும்படி குரல் கொடுத்தான். பேருந்து நிறுத்தமோ, சாலை பிரியுமிடமோ, மனித நடமாட்டமோ இல்லாத ...
மேலும் கதையை படிக்க...
ஒருநாள், அக்பருக்கு விசித்திரமான எண்ணம் தோன்றியது. பீர்பாலை அழைத்து, என்னைச் சிரிக்கும்படி செய்துவிட்டால், நீர் கேட்கும் பரிசை அளிப்பேன் என்று கூறினார். என்னனென்னவோ சொல்லி, முயன்று பார்த்தார் பீர்பால். அக்பர் சிறிதும் அசையாமல், சிரிக்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தார். கடைசியாக, ஒரு தந்திரத்தைக் கையாளத் தொடங்கினார் பீர்பால். அக்பருடைய ...
மேலும் கதையை படிக்க...
வழக்கத்திற்கு மாறாக அன்று செசன்ஸ் கோர்ட்டில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. புரிசை கிராம மக்கள் வீர நரசிங்க அவதாரம் வேஷம் போடும் வீரபத்ரனின் கொலை வழக்கு நடக்கப்போவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். "சைலேன்ஸ்' என்று டவாலி கூற, நீதிமன்றமே அமைதியானது. நீதிபதி டயஸின் ...
மேலும் கதையை படிக்க...
சிம்பு முயலைப் பார்த்திருக்கிறீர்களா? அழகான குட்டி முயல்! பட்டு போன்ற வெண்ணிற ரோமம். பாலில் மிதக்கும் காபூல் திராட்சை போன்ற அழகான கண்கள். கோவைப் பழம் போல சிவந்த வாய். இரண்டு காதுகளையும் உயர்த்தி சிம்பு குதித்துக் குதித்து வரும்போது பார்க்கிற எல்லோரும் மெய்மறந்து விடுவார்கள். அது நடந்துபோவது, ஒரு ...
மேலும் கதையை படிக்க...
ஊற்று வற்றாத மண்
பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் கோவை ரயிலில் தன் பெற்றோருடன் ஏறி இருக்கையில் அமர்ந்த ராஜேஷ், தனது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்தான். மெஜஸ்டிக் ரயில் நிலையத்திலேயே ஏறி அமர்ந்திருப்பார் போலும். தழையத் தழைய வேட்டி கட்டிய, ஏறக்குறைய முப்பது வயதுக்கு ...
மேலும் கதையை படிக்க...
தொலைதூரத்து வெளிச்சம்
சிரிக்க வைத்தால் பரிசு
தியாகம்
சிறிய வீடும் சிம்பு முயலும்!
ஊற்று வற்றாத மண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)