சத்தியம் அஹிம்ஸை!

 

வானொலி நிலையத்தில் பாப்பா மலருக்காக சிறுவர்கள், சிறுமியர்கள் கூடியிருக்க, ரேடியோ அண்ணா ஒரு சிறுமி யைப் பார்த்துக் கேட்கிறார்…

”உன் பேர் என்னம்மா?”

”ஆமப்பியா!” என்கிறது குழந்தை.

”ஆமப்பியாவா… ஓ, ராமப்ரி யாவா? உம், சொல்லும்மா. என்ன கதை சொல்லப்போறே?”

”வந்து… ஒயு ஊய்லே… இல்லே…வந்து… ஒயே ஒயு ஊய்லே…”

”ம்… கதை ரொம்ப சுவாரஸ் யமா இருக்கே! ம்… சொல்லு!”

”ஒயே ஒயு ஊய்லே… ஒயு காக்கா. ம்ம்ம்… வந்து… அந்த காக்கா ஒயு வதைய வாயிலே வெச்சுந்து இய்ந்துது…”

”பலே! பலே!” – ரேடியோ அண்ணாவிற்கு உற்சாகம் தாங்க வில்லை. கதை இவ்வளவு சுவா ரஸ்யமாகப் போகும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. ”ம்… மேலே சொல்லு. காக்கா வாயிலே வடை இருந்தது. அப்பு றம்…”

”ம்ஹ¨ம்… காக்கா வாயிலே வதை இல்லை… வதையைதான் காக்கா வாயிலே வெச்சுந்து இய்ந்தது.”

”சரி, காக்கா வாயிலே வடையை வெச்சுண்டு இருந்தது.” ரேடியோ அண்ணா தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்கிறார்.

”அந்த காக்கா வந்து, மயத்து மேலே இய்ந்துது. அப்போ அங்கே ஒயு நயி வந்தது!”

”ஓ! நரி வந்துதா?!”

”நயி வந்து… காக்கா பாத்து… ‘காக்கா, காக்கா… நீ நன்னா பாத் துப் பாதுவியே… ஒயு பாத்துப் பாது’ன்னு சொல்லித்து!”

”பலே! அப்புறம்?”

”வந்து… காக்கா… கா… கான்னு நன்னா உய்க்க நம்ம யேடியோ விலே பாதய மாதியே பாத ஆயம்பிச்சுது…”

”சரி… சரி… அப்புறம்?”

”காக்கா வதைய வாயிலே வெச்சுந்து இய்ந்ததா… அது பாத ஆயம்பிச்ச உதனே… வாயைத் தியந்து பாடித்து… வாயைத் தியந்த உடனே… வாய் தியந்தது. வந்து… வந்து…”

”ம்… வாயைத திறந்த உடனே வடை கீழே விழுந்துடுத்தா?” _ ரேடியோ அண்ணாவால் சஸ் பென்ஸைத் தாங்கமுடிய வில்லை!

”வாயைத் தியந்த உதனே வதை கீயே உயலை… வதை கீயே உயத்துக்குள்ள நயி அதை கப்புனு பிதிச்சுதுத்து…”

”ஐயய்யோ! அடப் பாவமே!” – எதிர்பாராத இந்த அதிர்ச்சி தரும் முடிவைத் தாங்கும் சக்தி இல்லாமல் திணறுகிறார் ரேடியோ அண்ணா.

”வதையை நயி வாயிலே பிதிச்சு, துடுதுடுன்னு ஓதிப் போச்சு!”

”காக்கா என்ன பண்ணித்து?”

”காக்கா… வந்து… வந்து…”

”ஓஹோ! ‘நாம முட்டாள்தனமா பாடினதாலேதானே வடையைப் பறி கொடுத்தோம். நம்ம சக்தியை பெரிசா நினைச்சுண்டா ஏமாந்து தான் போவோம். தன்னடக்கமா இருந்தாதான் நன்னா வாழ லாம்’னு காக்கா புரிஞ்சுண்டு தாக்கும்..?”

”உம்… கதை முதிஞ்சு போச்சு” என்கிறது குழந்தை ராமப்ரியா.

எல்லாக் குழந்தைகளும் கை தட்டி மகிழ்கின்றன. ”இந்தக் கதை யிலேருந்து நீங்கள்ளாம் என்ன தெரிஞ்சுக்கணும்? மகாத்மா காந்தி சொன்ன மாதிரி நாமெல் லாம் நடந்துக்கணும். காந்திஜி காட்டின வழி அஹிம்சை, சத்தி யம். அது ரெண்டையும் நாமெல் லாம் மறக்கவே கூடாதுன்றதை ராமப்ரியா எவ்வளவு அழகா சொல்லிட்டா!” என்று முடிக்கி றார் ரேடியோ அண்ணா. 

தொடர்புடைய சிறுகதைகள்
மலையுச்சியில் இருந்த அந்த பங்களாவில் 'மினுக்' 'மினுக்'கென்று ஓர் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. விளக்கு 'மினுக்' என்று சத்தம் போடவில்லை. அப்படி எரிந்தது! இரவு மணி 12. பதினொன்றாகி அதற்குப் பிறகு ஒரு மணி நேரம்! "தொடேல்...!" பயங்கர சப்தம். நிசப்தம்... நிசப் ...
மேலும் கதையை படிக்க...
1. படம்: ஒரு தெரு. நல்ல இருட்டு. அந்த இருட்டில் ஓர் இளம் பெண் நடந்து செல்கிறாள் என்பது 'பளிச்' என்று தெரியவேன்டும். அந்தப் பெண்ணின் மேலாடை விலகியிருந்தால் நல்லது. வார்த்தை: அந்த இருட்டில் ராணி தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தாள்! 2. படம்: படத்திற்கான ...
மேலும் கதையை படிக்க...
ஓர் ஏழை; ஏழையென்றால் ஏழை அப்படிப்பட்ட ஏழை. சட்டைதான் டெரிலின் சட்டை யாகவே அணிவானே ஒழிய, ஒரு வேளை கஞ்சிக்குக்கூடக் கஷ்டப் படும் ஏழை. அவனிடம் ஒரு விசேஷம்... சேர்ந்தாற்போல் எவ் வளவு நாள் பட்டினி கிடந்தாலும் சரி, எத்தனை முரடர்களையும் ...
மேலும் கதையை படிக்க...
அவள் தன் புருசனைப் பார்த்து, ''தா... சும்மா கிட!'' என் றாள். புருசன், ''சீ... கம்னு கிட!'' என்றான். அவர்கள் ஏழு வயதுப் பையன், ''இது இன்னடா பேஜாரு!'' என்றான். ''இந்தாம்மே... இப்ப இன் னான்றே?'' ''இன்னாய்யா முறைக்கிறே..! இஸ்டமில்லாட்டி உட்டுட்டுப் போயேன்... இன்னாமோ ...
மேலும் கதையை படிக்க...
சோழ நாட்டுக்கும், பாண் டிய நாட்டுக்கும், சேர நாட்டுக்கும் நடுவே இருந்த ஒரு தீவு அது. சுற்றிலும் கடல் இல்லாமலிருந்தும் தீவு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் திறனும் தீரமும், வரனும் வீரமும், அரணும் அறிவும், நரனும் நெறியும் படைத்த நற்றமிழ்த் ...
மேலும் கதையை படிக்க...
மலைப் பங்களா !
ராக்கெட் ராணி
தாயே தெய்வம்!
என்னைப் போல் ஒருவன்!
மச்ச வீர மாமன்னன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)