கிளியும் ஓநாயும்

 

ஒரு காட்டிலுள்ள ஆலமரத்தின்மேல் அமர்ந்திருந்த கிளியும், கீழே நின்றிருந்த ஒநாயும் இவ்வாறு பேசிக் கொண்டன :

கிளி : ஒநாய் அண்ணே! ஏன் விசனமா இருக்கீங்க?

ஒநாய் : உனக்குச் சங்கதி தெரியாதா கிளித்தங்கச்சி. நான் வேறே காட்டுக்கல்லவா போகப்போறேன்.

கிளி : ஏன் வேறு காட்டுக்குப் போறீங்க?

ஒநாய் : இந்தக் காட்டிலிருக்கிற புலியும் சிறுத்தையும் என்னைக் கண்டால் கடிக்க வருதுங்க. மானும் முயலும் என்னைக் கண்டால் ஒடிப் போகுதுங்க. நான் இங்கே இருந்து என்ன பயன்?

கிளி : நீங்க போகிற காட்டிலே இப்படியெல்லாம் உங்க கிட்ட நடந்துக்க மாட்டாங்களா, என்ன?

ஒநாய் : அந்தக் காட்டிலே இருக்கிற புலி சிறுத்தை யெல்லாம் என்னைக் கண்டதும் தடவிக் கொடுக்குது; மானும் முயலும் என்னோடு ஓடி விளையாடுது.

கிளி : அப்படியா? அப்படியானால் நான் ஒரு யோசனை சொல்கிறேன், கேள் அண்ணே! “உன் விஷப்பற்களையும், கூர்மையான நகங்களையும் இங்கேயே, இந்தக்
காட்டிலேயே கழட்டி வைத்துவிட்டுப் போ!”

ஒநாய் : அதையெல்லாம் இங்கே கழட்டிப்போட்டு விட்டு போனால், அந்தக் காட்டிற்குப்போய் நான் என்ன பண்ணுவேன்?

கிளி : அப்படி நீ செய்யவில்லையானால், வெகுசீக்கிரத்தில் அந்தக் காடும் இந்தக் காடு மாதிரியே ஆகிவிடும் என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது கிளி.

இதிலிருந்து காட்டின்மேல் எந்தத் தப்பும் இல்லை; ஒநாய் நடந்துகொள்ளும் முறையில்தான் தப்பு இருக்கிறது என்று அந்தக் கிளி செல்லாமல் சொல்லிவிட்டது. நமக்கும் இது ஒரு படிப்பினை அல்லவா?

- அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை 

தொடர்புடைய சிறுகதைகள்
பக்கத்து ஊரிலே ஒர் இழவு. இரண்டு பெண்கள் அந்தச் சாவுக்குப் போனார்கள். அங்கே ஒரு பந்தலின்கீழ் மேடையில் பிணத்தைச் சாத்தி வைத்து, பலருடைய பார்வையிலும் படும்படி வைத்திருந்தார்கள். இழவுக்குப்போன இரண்டு பெண்களும் மாறி மாறி எதிர் எதிராக அமர்ந்த பல பெண்களோடு சேர்ந்து ...
மேலும் கதையை படிக்க...
சென்னை மாநகரில் மாளிகையிடத்தில் திரு. சச்சிதானந்தம் பிள்ளை, திரு.வி.க., மறைமலையடிகள் இவர்களுடன், விருந்துக்கு அமர்ந்து உண்டுகொண்டிருந்தார். அப்போது, சச்சிதானந்தம் பிள்ளை ரசத்தைப் பருகிக் கொண்டிருக்கும்போது சிறிது இருமினார். அருகில் இருந்த திரு.வி.க. கேட்டார் - 'அது என்ன? ரசம். அதிகாரமோ!” இருமும்போது - ...
மேலும் கதையை படிக்க...
மாதர் சங்கத்தில் பல பெண்கள் ஒன்றுகூடி சமையல் குறிப்புப் பற்றி அளவளாவினர். அப்போது, ஒவ்வொரு பெண்ணும் தத்தம் வீட்டில் புதுப் புதுப் பலகாரங்கள் செய்தது பற்றிக் கலந்துரையாடினர். அதிலே ஒரு பெண், “இன்றுதான் நான் சுத்தமான நெய்யிலே முருக்குச் சுட்டேன். மிகமிக அருமையாக இருந்தது” ...
மேலும் கதையை படிக்க...
“அம்மா தாயே! பிச்சை போடுங்க” என்று ஒரு பிச்சைக்காரன் ஒரு வீட்டின்முன் நின்று கத்தினான். அந்த வீட்டில் இருந்து ஒரு பிள்ளை வந்து, வீட்டில் ஒன்றும் மிச்சமில்லை; போ’ என்று சொல்லி அனுப்பினாள். அவனும் முணுமுணுத்துக்கொண்டே புறப்பட்டான். உடனே அவ்வீட்டின் உள்ளேயிருந்த அப்பெண்ணின் ...
மேலும் கதையை படிக்க...
தன்னிடம் வேலைக்கு வரும் வேலைக்காரர்கள் அனைவனரயும் முட்டாள்கள் என்றே கருதி, எதையும் விபரமாக எடுத்துச் சொல்லி அனுப்புவார் முதலாளி. ஒரு சமயம், அவர் தன் வேலையாள் ஒருவனை அழைத்து, ‘நான் சொல்வதை மட்டும் நீ செய்தால் போதும். மற்றதைச் செய்யாதே’ என்று கண்டிப்பாய்ச் ...
மேலும் கதையை படிக்க...
இங்கிலாந்தை ஆண்ட மகாராணி விக்டோரியா வுக்கு ஒரு நாள் ஒர் ஆசை - தன் பேரனைத் (ஐந்தாம் ஜார்ஜு) தூக்கி மகிழவேண்டும் என்பது. அதைப் பிறர் யாரேனும் பார்க்கப்படாதே என்ற அச்சம் வேறு இருந்தது. என் செய்வார்? சிறு குழந்தையைத் தூக்க ஆசை. மகாராணியாயிற்றே! ...
மேலும் கதையை படிக்க...
திண்டுக்கல்லில் பெரிய இடத்துத் திருமணம்; பூப் பல்லக்கு அலங்காரம்; ஊர்வலம் வருகிறது. மதுரைப் பொன்னுசாமிப்பிள்ளை நாயனம். பைரவி ராகம் ஆலாபரணம் பண்ணிக்கொண்டிருக்கிறார். பெருங் கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் அந்த இசையின்பத்திலே தோய்ந்துதிளைக்கின்றனர். அந் நேரம் அந்தக் கும்பலை விலக்கி கையிலே பூமாலையை எடுத்துக்கொண்டு ஒருவர் ...
மேலும் கதையை படிக்க...
தன்னை விந்து பார்க்கும்படி அந்த ஊர் பஞ்சாயத்து தலைவனுக்குக் கட்டளையிட்டிருந்தார் மாவட்ட ஆட்சியாளர். அவர் போய்ப் பார்க்கவில்லை. கடுமையான கோபத்துடன் அப் பஞ்சாயத்து போர்டு தலைவரை அழைத்துவரச் செய்து, ‘ஏன் வரவில்லை’ எனக் காரணம் கேட்டார் மாவட்ட ஆட்சியாளர். அதற்கு அவர் சொன்னார். ...
மேலும் கதையை படிக்க...
ஒரு தந்தைக்கு நான்கு பிள்ளைகள். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். அது கண்ட தந்தைக்கு வருத்தம் தாங்கவில்லை. எவ்வளவோ நீதி சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை. மறுபடியும் ஒருவருக்கொருவர் சண்டையிடத் தொடங்கினர். மனம் வெதும்பிய தந்தை ஒரு நாள், ‘கரும்புக்கட்டு’ ஒன்றை வாங்கிவரச் ...
மேலும் கதையை படிக்க...
இட்லி, சட்னி, வேட்டி சட்டை 1982இல் தமிழக மந்திரி சபையில் இராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்தபோது, இந்தி கட்டாய பாடம் ஆக்கப்பட்டது. அதற்குத் தமிழ்நாடு முழுதும் கொதித்து எழுந்து பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் பெரியார் பல்லாரிச் சிறையில் இருந்தார். ...
மேலும் கதையை படிக்க...
பந்தலிலே பாகற்காய்
திரு.வி.க. – மறைமலையடிகள்
முறுக்கு சுட்டவள்
இல்லை போ!
வேலை வாங்கும் முதலாளி
சவாரிக் குதிரை
ஊர்வலம்
உள்ளுர் நிலைமை
நாம் திருந்துவோமா?
இந்தி புகுத்தும் கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)