மேலை நாட்டிலே எழுத்தாளன் ஒருவன்—அவன் நூல்கள் மிக வேகமாகப் பரவின. எல்லோரும் படிக்க விரும்பினர். அவனுக்குப் புகழ் மேலும் மேலும் ஓங்கியது.
இத்தனைக்கும் அவன் ஒரு படிப்பாளியும் அல்லன்: பட்டதாரியும் அல்லன்; எழுத்தாளனுமல்லன்; பேச்சாளலுமல்லன்; ஒரு குதிரை வண்டி ஒட்டுபவன்.
பத்திரிகை நிருபர்கள் அவனிடம் நெருங்கி— ‘உனக்குத்தான் படிக்கத்தெரியாதே? நீ படித்ததில்லையே? எப்படி நூலாசிரியன் ஆனாய்? இவ்வளவு பெருமை, புகழ்ச்சி எங்கும் பரவி வருகிறது. பெரிய பட்டதாரிகளும் எழுத்தாளர்களும் உன்னைக் காணப் பொறாமைப் படுகிறார்களே! நீ எழுதிய முதல் நூல் எது?—என்று கேட்டார்கள்.
அதற்கு அவன்—
நான் எழுதிய முதல் நூலின் பெயர்— ‘கண்டதும் கேட்டதும்’—என்று சொன்னான்.
பத்திரிகை நிருபர்கள் திரும்பிப் போய்விட்டார்கள்.
இதிலிருந்து தெரிவது என்ன?
அவன் வெற்றி யடைந்த வழி :
அவன் ஒரு வண்டியோட்டி. பலரும் வண்டியில் பயணம் செய்வார்கள். எல்லோரும் பேசிய (அவரவர் குடும்ப) சங்கதிகளை எல்லாம் கேட்டு, அதையே ஒரு நூலாக எழுதியிருக்கிறான்.
வண்டியில் பயணம் செய்யும் போது—பெரும்பான்மையோர் வண்டியோட்டி—அவன் ஒரு மனிதன் வண்டிக்குள் இருப்பதாகவே நினைப்பதில்லை. தாங்கள் மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டு, எந்த நிகழ்ச்சிகளையும்—இரகசியங்களையும் பேசி விடுகிறார்கள். ஏழை முதல் பணக்காரர் வரையுள்ள பலரது வாழ்க்கை—நடைமுறை—சிக்கல்—அல்லது— துயரம் எல்லாம் எப்படி எப்படி வாழ்கிறார்களோ—அவையெல்லாம் கேட்டுள்ளதனால்—அப்படியே நூலாக எழுதவே—எல்லோருடைய உள்ளத்திலும் நன்கு தைத்தது.
“தங்கள் வாழ்க்கையோடு அது மிகவும் ஒட்டியிருக்கிறது. தெரியாத செய்திகள் பல தெரிய வைக்கப்படுகின்றன. புரியாத செய்திகள் புரிய வைக்கப்படுகின்றன.”
ஆகவே, அவன் எழுதிய முதல் நூல் பல லட்சக்கணக் கான (படிகள் பிரதிகள்) விற்பனை யாயின.
அவன் பெரிய எழுத்தாளன் ஆனான்.
அடுத்த பதிப்புகள் பல லட்சக்கணக்கில் விற்பனை யாகாமல் என்ன செய்யும்?
நல்ல எழுத்தாளனாக, நூலாசிரியனாக விளங்க ஒருவன் படிப்பாளியாக பட்டதாரியாக வேண்டுமென்பதில்லை; அனுபவம் ஒன்றே போதும் எனத் தெரிகிறது.
- அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு பேராசை கொண்ட மன்னன் தன் நாட்டைவிட பிற நாடுகளையும் பிடித்து ஆளவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான். அவன் நாள்தோறும் மாறுவேடம் கொண்டு காலை 4 மணிமுதல் 8 மணிவரை தன் நகரைச் சுற்றிப்பார்க்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தான்.
ஒருநாள் அதிகாலையில் சருகு அரித்துக் ...
மேலும் கதையை படிக்க...
ஐம்பது ஆண்டுகட்கு முன், தமிழகத்திலே சிறந்து விளங்கிய இசையறிஞர்
காஞ்சிபுரம் நாயனா பிள்ளை,
பிடில் கோவிந்தசாமி பிள்ளை,
மிருதங்கம் அழகு நம்பியா பிள்ளை,
கஞ்சிரா தக்ஷனா மூர்த்தி பிள்ளை,
கொன்னக்கோல் மன்னர்குடி பக்கிரிசாமி பிள்ளை,
இப்படிப்பட்ட இசைமாமேதைகள் சேர்ந்த இசையமைப்பு ஒருசமயம் நடந்தது - அதுபோன்ற அமைப்பு அவர்கள் காலத்துக்கு ...
மேலும் கதையை படிக்க...
ஒர் ஊரிலே பெரிய மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே வந்து வழிபாடு நடத்தினர். வேண்டுதலை நிறைவேற்ற மொட்டையடித்துக் கொண்டனர்.
அவர்களில் ஒருவன், தன் குடும்பத்துடன் மொட்டை அடித்துக்கொண்டு, திருவிழாவையும் கண்டுகளித்துவிட்டு ஊர் திரும்பினான். வழியிலே ...
மேலும் கதையை படிக்க...
தமிழ் எழுத்துக்களில் ‘ழ’ - என்னும் எழுத்து தமிழுக்குச் சிறப்பு தருவது.
தமிழ் மொழியைத் தவிர, பிற எந்த மொழியிலும் ‘ழ’ என்று உச்சரிக்கக்கூடிய எழுத்து கிடையாது. அதனால் புலவர் பெருமக்கள் ல, ள என்ற எழுத்துக்களோடு இதனைச் ‘சிறப்பு ழகரம்’ என்றே ...
மேலும் கதையை படிக்க...
அண்மையில் வந்த திரைப்படத்தில் ஒரு காட்சி, வில்லன் ஒருவன் பதக்கத்தைப் பறித்துக்கொண்டு ஒடுகிறான். பறிகொடுத்த நாயகன் எப்படி மீட்பது என்று யோசித்தான அன்று இரவு வில்லன் வீட்டில் சன்னல் வழியே கம்பியைவிட்டுத் தொங்கிய சட்டையை இழுத்தான். அதில் பதக்கம் இருந்தது; மகிழ்ச்சியாக ...
மேலும் கதையை படிக்க...
சிற்றூரிலே வாழும் குடியானவர் நகரத்திற்கு வருவார். என்னிடம் எல்லாச் சாமான்களும் விலையேறி விட்டதே என்று வருத்தப்படுவார். அவரிடம் நான் சொன்னேன் -
ஆம்,ஆம், , யானை விலை குதிரை
குதிரை விலை மாடு
மாட்டின் விலை ஆடு
ஆடு விலை கோழி
கோழி விலை குஞ்சு
குஞ்சு விலை முட்டை
முட்டை ...
மேலும் கதையை படிக்க...
தன்னிடம் வேலைக்கு வரும் வேலைக்காரர்கள் அனைவனரயும் முட்டாள்கள் என்றே கருதி, எதையும் விபரமாக எடுத்துச் சொல்லி அனுப்புவார் முதலாளி.
ஒரு சமயம், அவர் தன் வேலையாள் ஒருவனை அழைத்து, ‘நான் சொல்வதை மட்டும் நீ செய்தால் போதும். மற்றதைச் செய்யாதே’ என்று கண்டிப்பாய்ச் ...
மேலும் கதையை படிக்க...
வன விலங்குகளிலே புலி சிறுத்தை முதலியன வாழும் குகைகள் மிகவும் நாற்றமடிக்கும். அழுகல் இறைச்சியும் தோலும் முடியும் சிதறிக் கிடக்கும்.
ஆனால், சிங்கம் வாழும் குகையோ தூய்மையாக இருக்கும். அதற்குக் காரணம், நாளைக்கு வேண்டுமென்று இன்றைக்கே உயிர்களைக் கொன்று குகையில் கொண்டு வந்து ...
மேலும் கதையை படிக்க...
காட்டில் அலைந்து திரிகிறது நரி, ஒரு சமயம் நகரத்துக்கு வந்து, ஒரு பூனையைக் கண்டு அதனுடன் நட்புக் கொண்டது.
நட்பு முற்றவே ஒருநாள் நரி பூனையைக் காட்டுக்கு அழைத்து, முயல்கறி படைத்து விருந்து வைத்தது.
சுவையாக விருந்துண்ட மகிழ்ச்சியில் பூனை நரியைப் புகழ்ந்து ஆடிக் ...
மேலும் கதையை படிக்க...
காய்கறி, சாம்பர், ரசம் என்று எல்லா உணவுப் பொருள்களையும் சமைக்கும்போது அவையெல்லாம் கமகமவென்று மணப்பதற்கு, மலைக் கறிவேப்பிலையாகப் பார்த்து வாங்கிவந்து, நன்றாக அதனைத் தாளித்துச் சமையல் செய்வர், விருந்து வைப்பவர்.
தன் வாசனையையெல்லாம் சமைக்கும்போது கலந்து மற்ற காய்கறிகளுக்குத் தந்து விட்டு மகிழ்ந்திருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
மொட்டைத் தலைக்கு சுங்கம் உண்டா?
கறிவேப்பிலையும் தாழ்த்தப்பட்டோரும்