அடக்கி வாசி…

 

ஓருநாள், தீவிர யோசனைக்குப் பிறகு நாக்கு, பற்களிடம், “நண்பர்களே, நீங்கள் உங்கள் தோழர்களுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்கிறீர்கள். உணவுப் பொருள்களை நன்றாக அரைத்து எனக்குச் சுவையாக இருக்கும்படி தருகிறீர்கள். நானோ தன்னந்தனி ஆளாக இருக்கிறேன். நீங்களோ முப்பத்து இரண்டு பேர். இருப்பினும் உங்களால் எனக்கு எந்தவிதத் தொல்லையும் இல்லை. உங்களுக்கு நடுவில் நான் இருந்தாலும் என்னைக் கடிப்பதோ, நசுக்குவதோ இல்லை! எனக்கு நீங்கள் செய்யும் உபகாரம் இது! இவ்வாறு நீங்கள் உபகாரம் செய்வதற்கு நன்றிக் கடனாக உங்களுக்கு ஏதாவது நல்லது செய்ய விரும்புகிறேன். உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். என்னால் முடிந்ததைச் செய்கிறேன்’ என்று கூறியது.

அடக்கி வாசிஅதற்கு, பற்கள், “நீ எங்களுக்கு ஒரே ஒரு உதவி செய்தால் போதும்! நீ ஏதாவது ஏடாகூடமாகப் பேசிவிட்டால், உன்னை யாரும் ஒன்றும் சொல்வதில்லை. கோபத்தில் உடனே “பல்லை உடைப்பேன்’ என்று எங்களைத்தான் திட்டுகிறார்கள், மிரட்டுகிறார்கள்! சமயங்களில் அப்படியே செய்தும் விடுகிறார்கள். அதனால் உனக்கு எங்கள் மீது உண்மையிலேயே நல்லெண்ணம் இருந்தால், எங்களுக்கு எந்தவிதத் துன்பமும் வராமல் அடக்கமாகவும் பணிவாகவும் நல்லதையே பேசினால் அதுவே எங்களுக்கு நீ செய்யும் மிகப் பெரிய உதவியாகவும் உபகாரமாகவும் இருக்கும்!’ என்றன.

- செவல்குளம் ஆச்சா (பெப்ரவரி 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
பரப்பரப்பான நகரத்தின் சாலை அது. வாகனங்கள் அங்கும் இங்குமாக அலைமோதிக் கொண்டிருந்தன. ‘பீங்! பீங்!’ என வாகனங்கள் எழுப்பிய சத்தங்கள் காதைத் துளைத்தன. சாலையோரங்களில் நின்று கொண்டிருந்தவர்கள் சாலையைக் கடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர். “சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என வேகமாக அந்த வாகன நெரிசலை ...
மேலும் கதையை படிக்க...
ஏங்க...இந்தக் கதையைக் கேட்டீங்களா...நம்ம பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம்தான் ஆகுது. புதுப்பொண்டாட்டியை அழைச்சுக்கிட்டு ஊட்டி, கொடைக்கானல்னு போகாம, தன் அம்மா அப்பாவையும் அழைச்சுக்கிட்டு மதுரை, திருச்செந்தூர்னு கோயில் கோயிலா அலையப் போறாராம் மாப்பிள்ளை. இந்தக் கொடுமையை எங்க போய் சொல்றது?''என்று ...
மேலும் கதையை படிக்க...
சொல்லாத சொல்லுக்கு
சங்கர் அதை எதிர்பார்க்கவில்லை. முகம் குப்பென்று வியர்த்தது. பாக்கெட்டிலிருந்து கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னிடம், ""என்னதிது குமார்?'' என்றான். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. ""என்ன பண்ண அவரை?'' என்றேன். அந்த நபர், நாங்கள் உட்கார்ந்திருந்த இருக்கையில் இருந்து இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
சிங்கக்குட்டியின் புது தீபாவளி!
ஒரு நாள் சிங்க ராஜா குடும்பத்துடன் காட்டைச் சுற்றி வலம் வந்தது. அப்போது இளவரசர் சிங்கக்குட்டி காணாமல் போய்விட்டது. இளவரசர் சிங்கக்குட்டி வழிதவறி நாட்டுக்குள் நுழைந்தது. இது தெரியாமல் காட்டில் விலங்குகள் இளவரசரைத் தேடிக் கொண்டிருந்தன. அன்றைக்குத் தீபாவளி. எங்கு பார்த்தாலும் மனிதர்கள் ...
மேலும் கதையை படிக்க...
மோர்…மோரே…
""பஸ்ஸூ ஒரு பத்து நிமிசம் நிக்கும்...'' ""டீ, காபி சாப்புடறவங்க சாப்டுட்டு வரலாம்'' நடத்துநரின் உரத்த குரலில் சில வார்த்தைகள் மட்டுமே உறக்கத்திலிருந்த என் செவிகளுக்குள் நுழைந்து கிசுகிசுத்தன. பயணத்தின் களைப்பில் லேசாய் நினைவு வர விழித்தேன். மூக்கின் நுனிவரையில் வந்து, கீழே விழுந்து தற்கொலைக்கு ...
மேலும் கதையை படிக்க...
ஓரம் போ
நேசம்
சொல்லாத சொல்லுக்கு
சிங்கக்குட்டியின் புது தீபாவளி!
மோர்…மோரே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)