விபத்தில் இறந்து உடல்சிதைந்துபோனதால் உடனே தகனம் பண்ணிவிட்டார்கள் முனியசாமியின் மனைவியை.
இரண்டுமணி நேரமாக எரிகின்ற சிதையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் முனியசாமி.
முதலில் அவன் காதுக்கு இந்தச் செய்தியை சொன்னவன் பெட்டிக்கடை வைத்திருக்கும் பால்பாண்டி.
பக்கத்து ஊர் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இன்றுதான் ஊர் திரும்பினான் முனியசாமி.
முனியசாமி வீட்டிற்கு போய் பலமாதங்கள் ஆகிவிட்டது.மனைவி கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு போய்விட்டாள். இருமகன்கள்,அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதுகூட
இவனுக்கு தெரியாது.
வாயில் எப்பொழுதும் புகைந்துகொண்டிருக்கும் கருநிற சுருட்டு.
ஊருக்குள் முனியசாமிக்கு “அரைப்பைத்தியம்” என்று பெயர்.
எரிகின்ற சிதைமுன் நின்று மெளனமாய் அழுகின்ற முனியசாமியை வியப்புடன் பார்த்தது காகம் ஒன்று.
முனியசாமி இடுகாட்டில் பிணம் எரிப்பவன்.
-நிலாரசிகன்.
பின்குறிப்பு : (இக்கதையை கீழிருந்து மேலாகவும் படிக்கலாம்….)Wednesday, October 10, 2007
தொடர்புடைய சிறுகதைகள்
மும்பை,அந்தேரி ரயில்நிலையம்.
கடந்து செல்லும் மின்சார ரயிலின் வேகமும்,கால்மீது நடந்து செல்லும் மனிதர்களின் வேகமும் அவசர வாழ்க்கையை எடுத்துரைத்தது.
வினோத் அமைதியாக சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தான்.
எரிமலையாக வெடித்துக்கொண்டிருந்தாள், வித்யா.
"மொதல்ல என் பிரண்ட் சொன்னப்போ நான் நம்பலை, என் வினோத்தை பத்தி எனக்குத் தெரியும் நீ ...
மேலும் கதையை படிக்க...
பழைய சோற்றை தின்றுகொண்டிருந்த மணி பெரும் சத்தம் கேட்ட திசையை நோக்கி குரைக்க ஆரம்பித்த போது அடுப்பங்கரையில் சமைத்துக்கொண்டிருந்த அம்மாவும், பழைய செய்தித்தாள்களை எடைக்கு போடுவதற்குகட்டிக்கொண்டிருந்த அப்பாவும் வேகமாக பின்வாசலுக்கு ஓடினர். பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்த என் காதுகளை கிழித்துவிடுவதாய் இருந்தது அந்த ...
மேலும் கதையை படிக்க...
ஜெயரஞ்சனி யின் அப்பா ஓரிரவு அவள் விரும்பிய கரடி பொம்மையை வாங்கி வந்திருந்தார். அவள் அவரைக் கட்டிக்கொண்டு முத்தம் பொழிந்தாள். அடுக்களையிலிருந்து வெளிவந்த அம்மாவுக்கு ஜெயாவின் சந்தோஷம் மனதை பிசைந்தது. கரடி பொம்மையின் புசுபுசுவென்ற அடர் கருமைநிற முடியை ஜெயா வாஞ்சையுடன் ...
மேலும் கதையை படிக்க...
அன்புள்ள திவ்யா....
என்னுயிரின் ஒவ்வொரு துளியிலும் நிறைந்திருப்பவளே..ஏனடி என்னைப் பிரிந்தாய்?
உனக்கென்று காத்திருக்கும் நிமிடங்களிலெல்லாம் மேகக்கூட்டமெல்லாம்
மல்லிகைபூக்களாக மாறும் அழகினை ரசித்திருக்கிறேன்.
அந்த காத்திருப்பின் ரம்மிய நிமிடங்களை இனி என்று பெறுவேன் கண்ணே!
காதல் மொழியை ஒரே பார்வையில் மொத்தமாய் சத்தமின்றி எனக்கு கற்றுத்தந்ததே உன் கண்கள்.... அந்தக் ...
மேலும் கதையை படிக்க...
இனியும் பொறுக்க முடியாது. என்னை மன்னித்துவிடு சந்தியா.
இனியும் உன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க முடியாது.
என் சூழ்நிலை தெரிந்தும் ஏன் உன்னால் எனக்காக இறங்கி வர முடியவில்லை?
இத்தனை நாட்கள் உனக்காக விட்டு வைத்த உயிர் இன்று பிரிய போகிறது.
நீ அழுவாய் என்று தெரியும். நீ ...
மேலும் கதையை படிக்க...