பிடித்த வேலை – ஒரு பக்க கதை

 

கார் ரிப்பேராக இருப்பதால் டாக்சிக்கு போன் செய்துவிட்டு அப்பார்ட்மென்ட் வாசலில் காத்திருந்தேன்.

சே! இந்த நகர வாழ்க்கை வர வர எரிச்சலூட்டுகிறது.காலை எழுந்ததில் இருந்து ஒரே பரபரப்பு! மனைவி கவிதாவுக்கும் டென்சன். பாப்பாவை ஸ்கூலுக்குத் தயார் செய்ய வேண்டும்.

எனக்கு மதிய சாப்பாடு ,காலை டிபன் தயாரிக்க வேண்டும்.அரை மணி நேரத்தில் போக வேண்டிய ஆபிஸுக்கு இந்த டிராபிக்கால் ஒரு மணிநேரம் ஆகும்.அங்கே போனால் அந்த மேனேஜர் “உங்க கிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன்”என்று மேலும் டென்சனை ஏற்றி விடுவார்.

எம்.சி.ஏ முடித்து ஐ.டி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து எட்டு வருடமாகி விட்டது.அப்பா வேலையை விட்டுட்டு ஊருக்கு வரச் சொல்கிறார்.பதினைந்து ஏக்கர் நிலம் தென்னந்தோப்பு இருக்கிறது.அதைப் பார்த்தாலே போதும் என்கிறார்.எனக்கும் விவசாயம் பார்க்கத்தான் ஆசை.ஆனால் நம் ஊரில் இந்த ஊரில் உள்ளது போல் நல்ல ஸ்கூல் இருக்காது,இங்கே மாதிரி அங்கே ஷாப்பிங் பன்ன முடியாது, படித்தவர்கள் மத்தியில் இது போன்ற அபார்ட்மெண்ட் வாழ்க்கை அங்கே கிராமத்தில் கிடைக்காது.அது மட்டுமல்ல “என்னப்பா இந்தப் படிப்பு படிச்சுட்டு விவசாயம் பார்க்க வந்துட்ட” என்று உறவினர்கள் கிண்டல் செய்வார்களோ என்று தட்டிக் கழித்து வருகிறேன்.

டாக்சி வந்துவிட்டது.நான் அடிக்கடி அழைக்கும் டிரைவர் பாபுதான் வந்திருந்தார்.ஜாலியான நபர்.

எப்போதும் உற்சாகமாக இருப்பவர்.

“பாபு எப்படி இருக்கீங்க?”

“சார்! வணக்கம் சார்.அருமையா இருக்கேன் சார்.நீங்க எப்படி இருக்கீங்க?”

அதுதான் பாபு.இதே கேள்வியை வேறு யார்கிட்ட கேட்டாலும் என்ன சொல்வார்கள்? நல்லா இருக்கேன் சார்,ஏதோ இருக்கேன்.இப்படித் தானே சொல்வார்கள்.பாபுவின் உள்ளத்தில் இருந்து எப்படி வார்த்தை வருகிறது பாருங்கள்! “எப்படி பாபு எப்போதும் உற்சாகமாக இருக்கீங்க? எனக்கு எப்பவும் ஏதாவது டென்ஷனாய் இருக்கிறது பாபு”

பாபு சிரித்துக் கொண்டே”மனசுல எந்தக் கவலையும் வச்சுக்கிறதுல சார். அப்புறம்,தகுதிக்கு மீறி ஆசைப் படுகிறதில்லை.எனக்குப் பிடித்த வேலையைச் செய்கிறேன்.இளையராஜா பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.அடிக்கடி அதை போட்டு கேட்டுக் கொண்டிருப்பேன். அடுத்தவங்களோட என்னை கம்பேர் பண்ண மாட்டேன்.மொத்தத்தில் என் வாழ்க்கைக்கு நானே ராஜா! நானே மந்திரி! சார்.”

“மற்றவர்கள் சொல்றதை காதுல வாங்காம,உங்களுக்கு பிடிச்ச நல்ல விஷயத்தை சேய்தீங்கன்னா நீங்களும் ரொம்ப ஹேப்பியா இருப்பீங்க சார்.”

பாபு எனக்கு ஏதோ ஒன்றை உணர்த்தியது போல் இருந்தது.

விரைவிலேயே ஊருக்குச் சென்று விவசாயம் பார்க்க முடிவு எடுத்துவிட்டேன்.தேங்ஸ் பாபு. 

தொடர்புடைய சிறுகதைகள்
சதாசிவம் தன் பேத்தியின் எதிர்காலத்தைப் பற்றி பேச மகளிடம் எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார். இருபதை நெருங்கிக் கொண்டிருக்கும் பேத்தி தீபிகா தன்னோடு மியூசிக் கிளாஸ் படிக்கும் பரத்தைக் காதலிக்கிறாள்.அது சதாசிவத்தின் மகள் காயத்ரிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.அதனால் மியூசிக் கிளாஸீக்கும் தீபிகாவை ...
மேலும் கதையை படிக்க...
ராகுல்,அவன் மனைவி தீபா,குட்டிப் பாப்போவோடு அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்கள்.எங்கள் கம்பெனியிலிருந்து அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்ல முடியாது அங்கேயே செட்டில் ஆவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அவனுக்கு வாழ்த்துக்கள் சொல்வதற்காக அவன் வீட்டிற்கு சென்றோம். " ஸாரி சார்! நாங்க யு.எஸ். போக வேண்டாம்னு ...
மேலும் கதையை படிக்க...
ராகவன் சார் ரிட்டயர்டு ஆகி அடுத்த நாளே இரண்டு கம்யூட்டர்,ஒரு ஜெராக்ஸ் மிஷினுடன் மெயின் ரோட்டில் அந்தக் கடையை ஆரம்பிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அவருடைய பக்கத்து ஆபிஸில் வேலை செய்யும் நானும் எதிர்பார்க்கவில்லை! அவர் அரசாங்க வேலையில் இருக்கும் போதே மிகவும் சின்சியரானவர் ...
மேலும் கதையை படிக்க...
சென்னையிலிருந்து என்னை தர்மபுரிக்கு டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள். இன்னும் மனைவி சுமதி குழந்தைகளை அழைத்து வரவில்லை. ஒரு நல்ல வீடு பார்த்து அழைத்து வர வேண்டும். சில வீடுகள் பார்த்ததில் இரண்டு வீடு எனக்கு பிடித்திருக்கிறது.ஒரே மாதிரியான வசதிகள் கொண்ட அதில் ஒன்றை தேர்வு செய்ய ...
மேலும் கதையை படிக்க...
அக்கா போன் சேய்தாள்! " நந்தினி! எங்க வீடு வரைக்கும் வந்துட்டு போகிறாயா? மனசு சரி இல்லை! நீ வந்து பேசிட்டு போனா கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும்!" அக்கா இப்படித்தான் சின்ன விஷயத்துக்கெல்லாம் பயப்படுவாள். தன் ஒரே பையன் வினோத்தை கல்லூரி ஹாஸ்டலில் சேர்த்த இந்த ...
மேலும் கதையை படிக்க...
காலம் மாறவில்லை! – ஒரு பக்க கதை
வெளிநாட்டு வாழ்கை – ஒரு பக்க கதை
அந்த ரகசியம் – ஒரு பக்க கதை
வாடகை வீடு! – ஒரு பக்க கதை
நல்ல விஷயங்கள் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)