”கிராமத்து பசங்களை உங்க ஜவுளிக்கடையில வேலைக்கு வெச்சிருக்கீங்க. இந்த சிட்டியில் வாடிக்கையாளர்கிட்டே எப்படி பேசணும், என்ன மாதிரி பாடி லாங்வேஜ் காட்டணும்னு அவங்களுக்கு நாங்க கத்துத் கொடுக்கிறோம். ஒரு வார வகுப்புக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுங்க…”
போன வாரம் சுய முன்னேற்றப் பயிற்சியாளர் ஒருவர் வந்து கடை உரிமையாளர் தங்கபாண்டியாரிடம் சொன்ன யோசனை அது.
அவர் அது பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் கடைக்கு வந்த இரு பெண்கள் பேசிக் கொள்வது காதில் விழுந்தது.
”பெரிய மால் எல்லாத்தையும் விட்டுட்டு இந்தக் கடையில் எதுக்கடி டிரெஸ் எடுக்க வந்தே?” ஒரு பெண் கேட்க…
”நீ சொல்ற கடைகள்ல சேல்ஸூக்கு நிக்கிறவங்க ‘கீ’ கொடுத்த பொம்மை மாதிரி பேசுவாங்க. இந்தக் கடைப்பசங்க இயல்பா
பேசி, நம்ம சொந்தக்காரங்க மாதிரியே நடந்துக்கிறாங்க. இப்படி வெள்ளந்தியா பேசுறவங்களுக்காகத்தான், துணி எடுக்க
எப்பவும் இங்கேயே வர்றேன்…” மற்றவள் பதில் சொன்னாள்.
வாடிக்கையாளர்களின் பேச்சைக் கேட்ட தங்கபாண்டியன், தன் கடைப் பையன்களையும் ‘கீ’ கொடுத்த பொம்மையாக மாற்ற வேண்டாம் என்று தீர்மானித்தார்…!
- கீர்த்தி (ஏப்ரல் 2013)
தொடர்புடைய சிறுகதைகள்
மாம்பிஞ்சுகள் விடத் தொடங்கியிருந்தது காலம். மாங்காய்களை கூடை நிறைய எடுத்து வந்து துண்டாக்கி, உப்பும் மிளகாய்த்தூளும் போட்டு, சாப்பிட சுவையாக விற்பாள் மிட்டாய்க் கிழவி. மாங்காயின் புளிப்பு பிள்ளைகளின் நாக்கில் எச்சில் ஊறச் செய்யும். தமிழரசிதான் எப்பொழுதும் தின்பண்டம் வாங்க காசு ...
மேலும் கதையை படிக்க...
நம்ம ஸ்கூல்லதான் படிச்சீங்களாமே? சொன்னாங்க'' என்றார் தலைமை ஆசிரியர்.
நான் சிரித்துக் கொண்டேன். "ஆமா... டென்த் பப்ளிக் எக்ஸாம் வர்றதுக்கு ஒரு வாரம் முன்னாடி நின்னுட்டேன்'' அதை உறுதிப்படுத்துவது மாதிரி சொல்லிச் சிரித்தேன்.
"என்ன அம்மை போட்டுடுச்சா?'' தலைமயாசிரியர்களுக்கு யார், யார் எதற்கு விடுமுறை ...
மேலும் கதையை படிக்க...
திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் ஒத்துவராது என முடிவுக்கு வந்த சுனிதாவும் சுந்தரும் ஏனோதானோவென வாழ்ந்து இப்போது ஆறு வருடம் கழித்து விவாகரத்து தீர்ப்பிற்காய் மகள் தீபாவோடு கோர்ட்டில் காத்திருந்தனர்.
குழந்தையை யார் பங்கு போட்டுக்கொள்வது என்ற பிரச்னையில் இருவரும் உரிமை கொண்டாட ...
மேலும் கதையை படிக்க...
கணேஷ் , சென்னையில் ஒரு தொழில் அதிபர். 45 வயது இளைஞன். டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ், ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலையின் சொந்தக்காரன்.
வருஷம் ஒரு தடவை வெளிநாடு சுற்றுலா, கடனில் வீடு, கடனில் தொழிற்சாலை, ஆடம்பர வாழ்க்கை. வரவுக்கு மீறிய செலவு. சேமிப்பு என்கிற ...
மேலும் கதையை படிக்க...
படிப்பு, நேர்மையான உழைப்பு எதுவுமே இல்லாமல் ஒரு மனிதன் பணம், பதவி, அதிகாரத்தோடு, தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஏற்ற ‘தொழில்’ அரசியல் தான்!
அதற்கும் பொய்யை மற்றவர்கள் நம்பும்படி சொல்லும் ஒரு சாமார்த்தியம் வேண்டும்! அது ராமசாமிக்கு இல்லை. அதனால் தான் ...
மேலும் கதையை படிக்க...