கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: November 9, 2018
பார்வையிட்டோர்: 6,391 
 

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4

காலை மணி ஐந்தரை ஆயிற்று.அலாரம் தன் வேலையை தவறாமல் செய்தது.‘கண’ ‘கண’ வென்று அலறிய அலாரம் சத்தம் கேட்டு கண் விழித்துக் கொண்ட சிவலிங்கம் அலாரத்தின் தலையில் தட்டி அதை ஓயப் படுத்தினார். மெல்ல கண்ணை திறந்து கொண்டு எழுந்தார். அவர் ‘ பாத் ரூமுக்கு’ ப் போய் தன் பல் துலக்கி விட்டு, சுவாமி படத்தின் முன் இருந்த திரு நீரை எடுத்து தன் நெற்றியில் இட்டுக் கொண்டு கைகளை கூப்பிக் கொண்டு கடவுளை வணங்கினார் சிவலிங்கம். சரோஜா சூடாக காப்பியை கொண்டு வந்து அவர் உட்கார்ந்துக் கொண்டு இருந்த டேபிளில் எதிரில் வைத்தாள். சற்று நேரம் ஆனதும் அவர் ‘ஆ·பீஸ்’க்குப் போயாக வேணுமே’ன்னு நினைத்து குளிக்கப் போகலாம் என்று அவர் எண்ணி மெல்ல எழுந்த போது அவருடைய பொ¢ய பையன் குமார் ‘தான் குளிக்கப் போவதாக சொல்லி விட்டு ‘பாத் ரூமு’க்குள் ஓடி விட்டான்.’சரி,இவன் இப்போ குளிக்கப் போயிட்டானா,அவன் குளிச்சுட்டு வரட்டும்’ என்று நினைத்து, அவர் பொறுமையாக மறுபடியும் வந்து சோபாவில் உட்காந்துக் கொண்டு இருந்தார்.இரண்டாம் ஆண்டு சட்டப் படிப்பு படித்து வந்த அவன் குளிக்கப் போனால் யாராவது குரல் கொடுத்தால் தான் தன் குளியலை முடித்துக் கொண்டு வெளியே வருவான்.“குமார்,சீக்கிரம் வெளியே வாடா,நான் குளிச்சுட்டு ஆ·பீஸ் போவ எனக்கு மணி ஆவுது” என்று குரல் கொடுத்தார் சிவலிங்கம்.அப்பா குரல் குமார் கேட்டு குளித்து முடித்து விட்டு மெல்ல வெளியே வந்தான் குமார்.குமார் வெளியே வந்ததும் தன் டவலை எடுத்துக் கொண்டு சிவலிங்கம் எழுந்த போது “எனக்கும் காலேஜ்க்கு லேட்டயிடுச்சி.நான் குளிக்கப் போறேன்” என்று சொல்லி விட்டு சட்டென்று ‘பாத் ரூமுக்கு’ ஓடி விட்டாள் இரண்டாம் பெண் லதா.‘இவ இப்ப குளிக்கப் போயிட்டாளா, சரி,அவ குளிச்சுட்டு விட்டு வெளியே வரட்டும்’ என்று ‘டவலை’ சோபாவில் எறிந்து விட்டு மறுபடியும் போய் சோபாவில் உட்கார்ந்துக் கொண்டார் சிவலிங்கம்.

குளித்து விட்டு தன் இடுப்பில் ஈர ‘டவலுடன்’ வெளியே வந்து கடவுள் படத்தின் முன் நின்றுக் கொண்டு தனக்கு தெரிந்த கடவுள் மந்திரங்களை எல்லாம் சொல்ல ஆரம்பித்தார் சிவலிங்கம். கடவுள் மந்திரங்களை எல்லாம் முழுக்க சொல்லி முடித்து விட்டு அவர் வெளியே வந்து டிரஸ் பண்ணிக் கொண்டு ‘டைனிங்க் டேபிளின்’ முன் வந்து உட்காந்தார்.திடீர்ன்னு அந்த ஆ·பீஸ் ஞாபகம் வரவே “நாஷ்டாவை சீக்கிரம் கொண்டு வா சரோஜா.ஆ·பீஸ் போக லேட்டாவுது எனக்கு” என்று கத்தினார்.‘கட’ ‘கட’வேன்று தான் செய்த நாஷ்டாவை ஒரு தட்டில் கொண்டு வந்து தன் கணவன் எதிரில் வைத்து விட்டு “சாப்பிடுங்க” என்று சொன்னாள் சரோஜா.நேரம் ஆகி விட்டதால் நாஷ்டாவை வேக வேகமாக சாப்பிட்டார் சிவலிங்கம்.

சிவலிங்கம் ஒரு தனியார் கம்பனியில் மேல் நிலை கணக்கராக வேலை புரிந்து வந்தார். தன் மணைவி, ஒரு பையன், இரண்டு பெண்கள், கொண்ட அவர் குடும்பம் ஜீவனம் நடத்தி வர அவர் பதினைந்து கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருக்கும் கே.கே. நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டில் வசித்து வந்தார்.

சரோஜாவுக்கு குடும்பம் ஒரு சாதாரண குடும்பம்.அவளுக்கு அப்பா இல்லை.அவர் இறந்துப் போய் பத்து வருஷம் ஆகி இருந்தது.சரோஜாவுக்கு ஒரு தம்பி இருந்தான்.

அன்று சிவலிங்கம் ஆ·பீஸ் வந்தார்.எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்த ‘பிரமோஷன் லிஸ்ட்’ அன்று வந்தது.ஆவலாக அந்த ‘லிஸ்டை’ப் பார்த்தார் சிவலிங்கம்.அந்த லிஸ்டில் அவர் பேர் இல்லை. அந்த வருஷம் சிவலிங்கத்திற்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை.மிகவும் வருத்தப் பட்டார் சிவலிங்கம். மனம் உடைந்த சிவலிங்கம் ஒரு மெஷினை போல வேலை செய்து வந்தார்.”நாம ஒன்னும் பண்ணமுடியாது சிவா.என்ன பண்ணுவது.Better luck next time சிவா” என்று சொல்லி சிவலிங்கத்தை தன் ரூமை விட்டு வெளியே அனுப்பி விட்டார் மானேஜர்.

வீட்டிற்கு வந்ததும் தன் மனைவி சரோஜாவிடம் ஆ·பீஸில் நடந்த எல்லா சமாசாரத்தையும் சொல்லி வருத்தப் பட்டார் சிவலிங்கம்..அவளும் கணவனு டன் சேர்ந்து கவலைப் பட்டாள்..அடுத்த வருஷ ‘பிரமோஷன் லிஸ்ட்’ வந்தது.நல்ல வேளையாக சிவலிங்கம் பேர் அதில் இருந்தது.சிவலிங்கமும் சரோஜாவும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

வருஷங்கள் மூன்று ஓடி விட்டன.சட்டப் படிப்பு படித்து விட்டு யாரோ ஒரு வக்கீலிடம் ஜூனியராக வேலைக்குச் சேர்ந்தான் குமார்.சிவலிங்கத்திற்கும் சரோஜாவுக்கும் ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.சிவலிங்கம் சரோஜாவைப் பார்த்து ”சரோஜா,ஒரு வழியா குமாருக்கு வேலை கிடைச்சிடுச்சி.அவன் தனக்கு வரும் சம்பளத்தில் பாதி அவன் செலவுக்கு வச்சுகிட்டு,மீதி பாதி சம்பளப் பணத்தை நமக்குக் குடுத்தாக் கூட போதும்.நாம் நம்ம லதா கல்யாணத்தை ‘ஜாம்’ ‘ஜாம்’ ன்னு செஞ்சு முடிச்சிடலாம்.நீ என்ன நினைக்கிறே” என்று கேட்டார். சரோஜா வெறுமனே “ஆமாங்க” என்று சொன்னாள்.குமார் முதல் மாசம் சம்பளம் வாங்கினான்.குமார் அந்த சம்பளப் பணத்தில் வீட்டுக்கு காலணா கூட கொடுக்கவில்லை. எல்லா சம்பள பணத்தையும் அவனே வைத்துக் கொண்டு செலவு பண்ணி வந்தான். சிவலிங்கத்திற்கும் சரோஜாவுக்கும் ஒன்னும் சொல்லவில்லை.

குமார் வேலைக்குப் போய் மூனு மாசம் முழுக்க முடிந்து விட்டது.திடீரென்று ஒரு நாள் ராத்திரி பத்து மணிக்கு குமார் ஒரு புது மோட்டாட் பைக்கை ‘ஸ்டைலாக’ ஓட்டிக் கொண்டு தன் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி விட்டு, வீட்டுக்குள் வந்தான். உள்ளே வந்ததும் குமார் “அப்பா,அம்மா,நான் இந்த மோட்டார் பைக்கை இன்னைக்கு தான் வாங்கி இருக்கேன்.இதன் விலை ஒன்னரை லக்ஷ ரூபாய்.நான் பாங்கில் கடன் வாங்கி இந்த பைக்கை வாங்கி இருக்கேன்.நான் மாசா மாசம் பாங்குக்கு எட்டாயிரம் ரூபாய் கட்டி வர வேணும்” என்று சொல்லி விட்டு ‘ஹெல் மெட்டை’ கழட்டி வைத்து விட்டு கை கால்களை கழுவப் போனான்.

அடுத்த நாள் சிவலிங்கம் குமாரைப் பார்த்து “டேய் குமார், வீட்டு செலவு நாளுக்கு நாள் ரொம்ப அதிகம் ஆகி வருது.நீயும் வேலைக்குப் போய் மூனு மாசத்துக்கு மேலே ஆவுது. ஆனா நீ வீட்டு செலவுக்கு காலணா கூட குடுக்காம இருந்து வரயே.நீ உன் செலவுக்கு பாதி சம்பளத்தை வச்சு கிட்டு,மீதி பாதி சம்பளத்தை வீட்டு செலவுக்கு குடேன்டா” என்று தட்டுத் தடுமாறி சொன்னார். அவன் உடனே “அப்பா நான் ஒரு பெண்ணை மனசார காதலிக்கிறேன்.அவளை நான் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்”என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான் குமார்.சிவலிங்கம் “என்னடா இது,நீ வேலைக்குப் போய் மூனு மாசம் தான் ஆவுது.இதுக்குள்ளாற இந்த ‘காதல்’, ’கல்யாணம்’ன்னு எல்லா நீ பேசறே.எனக்கு ஒன்னும் புரியலைடா.நீ இப்போ கல்யாணம் பண்ணிக் கொள்ள என்னடா அவசரம்.கொஞ்ச நாள் போவட்டுமே.நானும் அம்மாவும் உனக்கு ஒரு நல்ல பொண்ணாப் பர்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வக்கிறோமே டா” என்றார் குமார் சொல்வதை கேட்டு வருத்தத் துடன் “எனக்கு நீங்க பொண்ணு ஒன்னும் பாக்க வேணாம்ப்பா. நான் அந்தப் பொண்ணை மனசார காத்லிக்கிறேன் அவளும் என்னை மனசார காதலிக்கிறா.நான் கல்யாணம் பண்ணக்¢கிட்டா அந்த பொண்ணைத் தான் பண்ணிக்கு வேன்.வேறே எந்தப் பொண்னையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாடேன்” என்றான் குமார் ஆணித்ததரமாக. கோபத்தோடு சரோஜா “யாருடா அந்தப் பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணாடா,அந்த பொண்ணு” என்று கேட்டாள் சரோஜா.“என்னுடன் ஜூனியராக வேலை செய்யும் பொண்ணும்மா அந்த பொண்ணு. அவ பேர் சலிமா.நானும் சலீமாவும் சட்டப் படிப்பு படிக்கும் போதில் இருந்தே ஒருவரை ஒருவர் மிகவும் காதலிச்சு வறோம். ரொம்ப நல்ல பொண்ணும்மா அந்த சலீமா.அவ அப்பா கூட சென்னையில் ஒரு பிரபல வக்கீலா வேலை செஞ்சு அப்பா” என்றான் குமார்.‘சலிமா’ என்ற பேரைக் கேட்டதும் சிவலிங்கமும் சரோஜாவும் ஆடிப் போய் விட்டார்கள்.என்ன சொல்வதென்றே இருவருக்கும் புரியவில்லை.’என்னடா இந்த பையன் போயும் போயும் ஒரு முஸ்லிம் பெண்ணை காதலிக்கிறானே.அந்தப் பொண்னையே கல்யாணமும் பண்ணிக் கொள்ளப் போகிறேன் என்று பிடிவாதம் பிடிக்கிறானே.என்ன சொல்லி இவனை நாம மாத்தப் போறோம்’ என்று கவலைப் பட்டார்கள் இருவரும்.சற்று நேரம் கழித்து சிவலிங்கம் “டேய் குமார்,எப்படிடா ஒரு முஸ்லிம் பொண்ணை நம்ம குடும்பத்திலே நாங்க எங்க மருமகன்னு சொல்லி எங்க குடும்ப த்திலே ஏத்துக்கிறது.உனக்கு கல்யாணம் ஆனா மட்டும் போதாதே.உனக்கு பின்னாலே உனக்கு ரெண்டு தங்கச்சிங்க வேறே இருக்காங்களேடா அவங்களுக்கும் கல்யாணம் ஆவனுமே.நாம ஒரு முஸ்லிம் பொண்ணை இந்த குடும்பத்திலே உனக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கோம்ன்னு எல்லோகுக்கும் தெரிஞ்சா நம்ப குடும்பத்திலே யார் சம்மந்தம் பண்ணிக்க முன் வருவாங்கடா.உன் தங்கச்சிகளுக்கு யார் பிள்ளை கொடுப்பாங்டா.நீ இதை எல்லாம் யோஜனை பண்ணாம ‘நான் அந்த பொண்ணைத் தான் கட்டிக்குவேன்னு’ பிடிவாதம் பிடிக்கிறாயே. உனக்கு இந்த குடும்பத்தின் போ¢லும், உன் தங்கச்சிங்க போ¢லும் கொஞ்சமாவது உனக்கு கவலை இருக்காடா.உனக்கு மூளை குழம்பி விட்டதாடா,இல்லை பயித்தியம் பிடிச்சு இருக்கா உனக்கு”என்று கத்தினாள் சரோஜா.”நான் அந்த பொண்ணைத் தான் கல்யாணம் கட்டிக்கப் போறேன். நாங்க ரெண்டு வருஷமா உயிருக்கு உயிரா ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறோம்பா.நான்அவளை ஏமாத்த முடியாதப்பா.என்னால் வேறு எந்த பொண்ணையும் கல்யாணம் கட்டிக்கவும் முடியாதுப்பா.நான் கல்யாணம் கட்டிக்கிட்டா சலீமாவைத் தான் கல்யாணம் கட்டிப்பேன்”என்று தீர்மானமாகச் சொல்லி விட்டு வெளியெ போய் விட்டான் குமார்.சிவலிங்கமும் சரோஜாவும் குமார் சொன்னதைக் கேட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்கள்.

பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராய் சற்று நேரம் கழித்து “அப்படி அந்த முஸ்லிம் பொண்ணை குமார் கல்யாணம் கட்டிகிட்டா,அவன் இந்த விட்டில் இருக்க வேணாம் சரோஜா.அந்த முஸ்லிம் பொண்ணோடு நம் வீட்டை விட்டு அவன் தனியா போய் இருந்து வரட்டும்.அது தான் நம்பக் குடும்பத்துக்கு நல்லதுன்னு எனக்கு படுது சரோஜா.நீ என்ன சொல்றே சரோஜா” என்று தன் மணைவியை அழமாட்டாத குரலில் கேட்டார் சிவலிங்கம்.நன்றாக யோஜனைப் பண்ணின சரோஜா ”எனக்கும் அது தான் சரின்னு படுதுங்க.அப்ப தாங்க நாம மத்த ரெண்டு பொண்ணுங்களையும் ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் கட்டிக் கொடுக்க முடியும்.அந்த முஸ்லிம் பொண்ணு இங்கு இருந்தா யாருங்க சம்மந்தம் பேச வருவாங்க நம்ம விட்டுக்கு” என்று கவலையோடு சொன்னாள் சரோஜா.

ஒரு நாள் குமார் வீட்டுக்கு வந்ததும் சிவலிங்கமும் சரோஜாவும் தங்கள் அபிப்பிராயதததை சங்கடத்துடன் குமாரிடம் சொன்னார்கள்.குமார் “நீங்க அப்படி சொன்னா சரி.எனக்கும் வேறு வழி ஒன்றும் தெரியலே. நான் என் காதலியோடு தனிக் குடுத்தனம் போய் விடறேன்.நான் விட்டை விட்டு ஓடிப் போனதுக்கு நான் காரணம் இல்லை. நீங்க தான் என்னைப் போகச் சொல்றீங்க”என்று சொல்லி விட்டு குமார் தன் துணி மணிகளை எல்லாம் ஒரு சூட் கேஸில் எடுத்து வைத்துக் கொண்டு தன் அப்பா,அம்மா, தங்கைகளிடம் எல்லாம் சொல்லிக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பி போய் விட்டான்.குமாரை மறந்து விட்டு சிவலிங்கமும் சரோஜாவும் மத்த இரண்டு பெண்களுக்காகவும் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்.லதா கஷ்டப்பட்டு படித்து ‘ப்ளஸ் டூ’ பா¢¨க்ஷக்கு படித்து வந்தாள்.ரெண்டு மாசம் ஆனதும் ‘ப்ளஸ் டூவில்’ ரிசல்ட் வந்தது.லதா நல்ல மார்க்குகளை வாங்கி இருந்தாள்.லதா ஆசைபட்டது போல் அவளை B.Sc Phyicis படிக்க வைத்தார் சிவலிங்கம்.லதா B.Sc. படிப்பு முடித்து பாஸ் பண்ணி விட்டாள்.

இருவரும் இதைப் பற்றி தனியாக இருக்கும் போது யோஜனைப் பண்ணினார்கள்.ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள் இருவரும் ¨தா¢யத்தை வரவழைத்து கொண்டு லதாவிடம் மெல்ல தங்கள் குடும்ப நிலைமையையும் வீட்டு செலவையும் விவரமாகச் சொல்லி விட வேண்டும் என்று எண்ணினார்கள் இருவரும்.“லதா நீ மேல் படிப்பு எல்லாம் படிக்க வேணாம்மா.உன் மேல் படிப்புக்கு ஆகும் செலவை எங்களால் சமாளிக்க முடியாதும்மா.தவிர நீ மேல் படிப்பு படிச்சா அதற்கு ஏத்தார் போல் பெரிய படிப்பு படிச்ச ஒரு மாப்பிள்ளையை நாங்கள் உனக்கு கல்யாணம் பண்ண பார்க்க வேண்டி இருக்கும்.அப்படிப் பார்த்தா அவங்க என்ன எல்லாம் சீர், செனத்தி,எல்லாம் கேப்பாங்களோ.அப்புறம் அந்த இடத்திற்கு ஏத்தார் போல் கல்யாண செலவு வேறே நாம பண்ண வேண்டி இருக்குமே.இதை எல்லாம் எங்களால் சமாளிக்க முடியாதேம்மா.உன்னை படிக்க வச்சு விட்டு அப்புறம் இந்த கஷ்டமெல்லாம் எங்களால் பட முடியாதேம்மா. எதையும் நாம தீர யோஜனைப் பண்ணித் தானேம்மா நாம செயல் பட வேண்டும்.நீயே யோஜனைப் பண்ணும்மா” என்று சொல்லி நிறுத்தினார் சிவலிங்கம்.அவர் கண்களில் நீர் துளித்தது. ஒரு வழியாக தன் மனதை தேற்றிக் கொண்டு, லதா கல்யாணம் பண்ணிக் கொள்ள ஒத்துக் கொண்டாள்.

B.Sc. படித்து விட்டு கம்ப்யூட்டர் படிப்பும் படித்து விட்டு ஒரு ஐ.டி கம்பனியில் வேலை பார்த்து வந்த வரன் அவர்களுக்கு கிடைத்தது.பையன் படிப்பும் B.Sc.ஆக இருந்ததினால் சிவலிங்கமும் சரோஜாவும் தங்கள் பெண் B.Sc. படித்து இருந்ததைனால் இந்த பையன் பொறுத்தமாய் இருப்பான் என்று எண்ணி இந்த இடத்தைப் பார்த்து முடிக்கலாம் என்று அபிப்பிராயப்பட்டார்கள். ஜோஸ்யர் ஜாதகம் நன்றாய் பொருந்தி இருக்கிறது என்று சொல்லவே பிள்ளை வீட்டாருக்கு தகவல் கொடுத்து ‘பெண் பார்க்க’ வரும்படி அழைப்பு விடுத்தார் சிவலிங்கம்.பிள்ளை வீட்டாருக்கும் ஜாதகம் பொருந்தி இருக்கவே அவர்களும் சம்மதம் தெரிவித்து ‘பெண் பார்க்க’ வருவதாகச் சொன்னார்கள்.பிள்ளை வீட்டார் வந்து லதாவை ‘பெண்’ பார்க்க வந்தார்கள்.

லதாவும் எல்லோருக்கும் காப்பி பலகாரம் கொடுத்து விட்டு எல்லோரு க்கும் நமஸ்காரம் பண்ணிவிட்டு பணிவாக ஒரு ஓரத்தில் அமர்ந்தாள்.பேசிக் கொண்டே காப்பி பலகாரங்களை ரசித்து சாப்பிட்டார்கள்.எல்லோருக்கும் லதாவைப் பிடித்து இருக்கவே “எங்களுக்கு உங்க பெண்ணைப் பிடிச்சி இருக்குங்க, நாம மேலே பேசலாமுங்களா” என்று கேட்டாள் பையனுடைய அம்மா.”ரொம்ப சந்தோஷங்க எங்க ளுக்கு.உங்க சம்மந்தம் எங்களுக்கு கிடைச்சதுக்கு நாங்க அந்த முருகப் பெருமானுக்கு ரொம்ப நன்றி சொல்லணுங்க” என்றார் சிவலிங்கம்.

தங்களிடம் இருந்த நகைகளை எல்லாம் அழித்து லதாவுக்கு புதியதாக லேடஸ்ட் டிசைனில் நகைகளை எல்லாம் செய்து முடித்தார்கள்.சிவலிங்கம் தன் ஆ·பீஸில் ‘ P.F. லோன்’ போட்டு கொஞ்சம் பணம் கடன் வாங்கினார்.தங்களிடம் இருந்த சேமிப்பை எல்லாம் சேர்த்துப் போட்டு லதாவின் கல்யாணத்தை நல்ல முறையில் எல்லோரும் பாராட்டும் முறையில் செய்து முடித்தார்கள் சிவலிலங்கம் தம்பதிகள்.லதாவும் புகுந்த வீட்டிற்குப் போய் தன் கணவனுடன் சந்தோஷமாகப் வாழ்ந்து வந்தாள்.

கடைசி பெண் கமலாவுடன் இருந்து வந்தார்கள்அவர்கள் இருவரும்.கமலா மிகவும் சுமாராகத் தான் படித்து வந்தாள்.பா¢¨க்ஷக்கு படிக்க லீவு விட்டு இருந்தார்கள். கமலா அவ்வளவாக கவனத்துடன் தன் பாடங்களை படித்து வரவில்லை.நடு நடுவிலே டீ.வியில் தமிழ் சீரியல் பார்ப்பது, சினிமா பாட்டு கேட்பது, சாயாங்காலம் ஆனா தோழி களுடன் வெளியே போய் அரட்டை அடிக்கப் போவது என்று தன் பொழுதை கழித்து வந்தாள் கமலா. சரோஜா அடிக்கடி கமலாவைப் பார்த்து “கமலா நீ நல்லா படி.நல்லா படிச்சு எல்லா ‘சப்ஜெக்ட்களிலும்’ நல்ல மார்க்கு வாங்கணும்” என்று வெறுமனே சொல்லி வந்தாள்.B.A. ‘·பைனல்’ பா¢¨க்ஷகள் எல்லாம் எழுதி விட்டு வந்தாள் கமலா.வீட்டுக்கு வந்த கமலா “அம்மா நான் எல்லா பேப்பர்களும் நல்லா எழுதி இருக்கேன்” என்று தான் சொன்னாள்.

ரோஜாவின் அம்மா ‘ஹார்ட் ஆபரேஷனுக்கு’ தன் ஆபிஸில் P.F லோனுக்கு அப்ளை பண்ணி ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொடுத்து உதவினார் சிவலிங்கம்.

தன் கணவனுக்கு தன் நன்றீயை சொல்லி விட்டு செக்கை எடுத்துக் கொண்டு சரோஜா தம்பியின் வீட்டுக்குப் போனாள்.செக்கை சரவணன் கையில் கொடுத்தாள்.சரவணன் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வந்தது.தன் அக்காவைப் பார்த்து ”அக்கா நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்.மச்சானையும் உன்னையும் என்னிடம் பணம் இருந்த போது நான் ரொம்ப அவமானப் படுத்தி விட்டேன்.என்னை மன்னித்து விடு அக்கா” என்று சொல்லி அவள் காலில் விழுந்து வணங்கினான்.

அடுத்த வாரம் கமலாவின் BA ‘ரிசல்ட்’ வந்தது.சரோஜா பயந்தது போலவே கமலா ஒரு சப்ஜெக்ட்டில் பெயில் ஆகி இருந்தாள்.சிவலிங்கத்துக்கும் சரோஜாவுக்கும் மிக வருத்தமாய் இருந்தது. ’கடவுளே நீ தான் அவ அடுத்த தடவை பா¢¨க்ஷ எழுதினா பாஸ் பண்ண அருள் புரியணும்’ என்று முருகப் பெருமானை வேண்டிக் கொண்டார் சிவலிங்கம். கமலாவுக்கு பெயில் ஆன ‘சப்ஜெக்ட்டுக்கு’ ஒரு நல்ல வாத்தியாரை ‘ட்யூஷனுக்கு’ஏற்பாடு பண்ணீனார் சிவலிங்கம்.கமலாவும் கஷ்டப்பட்டு படித்து வந்தாள்.

ஒரு நல்ல நாள் பார்த்து சம்மந்தியிடம் சொல்லி விட்டு லதாவை தங்கள் விட்டுக்கு அழைத்து வந்தார்கள் சரோஜாவும் சிவலிங்கமும்.லதாவுக்கு நிறைய இனிப்புகள்,அவளுக்குப் பிடித்த பலகாரங்கள்,எல்லாம் செய்து கொடுத்து லதாவை சந்தோஷமாக வைத்து இருந்தார்கள்.சரோஜாவின் அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிந்ததும் அவங்களும் பேத்தியை பார்க்க வந்தாள்.சரோஜாவின் அம்மா வீட்டுக்கு வந்ததும் வராதததும் ”மாப்பிள்ளை,நீங்க ரொம்ப பெரிய மனசு உள்ளவருங்க.உங்க பெருமையை புரிஞ்சுக் கொள்ளாம சரவணன் உங்களை அவமானப் படுத்திட்டான்.‘நீ பண்றது ரொம்ப தப்புடா.மச்சானையும் அக்காவையும் நேரில் போய் அழைச்சுட்டு வாடான்னு’ நான் பல தடவைச் சொன்னேன்.ஆனா அவன் கேக்கலே.உங்களையும் சரோஜாவையும் அவன் ரொம்ப அவமதிச்சாட்டாங்க.நீங்க அவனை என் சார்ப்பா தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க.நீங்க அவன் அவமரியாதை பண்ணியும் அதை மனதில் வச்சுக்காம என் நெஞ்சு ‘ஆபரேஷனுக்கு’ ஒரு லக்ஷ ரூபாய் வேறே உதவி பண்ணீங்க.நீங்க உண்மைலேயே ரொம்ப பெரிய மனசு உள்ளவருங்க இன்னிக்கு நான் உயிரோடு இருக்கிறது உங்க புண்ணியத்தாலேங்க.உங்களுக்கு நாங்க என்ன கைம்மாறு பண்ணப் போகிறோம்னு தெரியலேங்க” என்று கெஞ்சிய குரலில் சொன்னாள்.ஒரு நான்கு நாள் பேத்தியோடு இருந்து விட்டு தனக்குத் தெரிந்த பலகாரங்களை எல்லாம் செய்து கொடுத்து விட்டு,கர்ப்பமாய் இருக்கும் போது உடமபை எப்படி பார்த்து கொள்ள வேண்டும் என்ற புத்தி மதிகளும் லதாவுக்கு சொல்லி விட்டு அவர்கள் வீட்டுக்குப் போய் விட்டாள் சரோஜாவின் அம்மா.

கமலா பா¢¨க்ஷ எழுதி விட்டு வந்தாள்.‘கமலா ‘ரிஸல்ட்’ வந்தது.கமலா பா¢¨க்ஷயில் ‘பாஸ்’ பண்ணி விட்டாள்.ஆனால் மார்க்குகள் ரொம்ப சுமார் தான்.அவள் ‘மூன்றாம் கிளாசில் ‘தான் பாஸ் பண்ணி இருந்தாள்.

சிவலிங்கம் கமலாவை ரயில்வே,பாங்க்,தமிழ் நாடு,போன்ற எல்லா சர்விஸ் வேலைகளுக்கும் விண்ணப்பம் போட்டு அந்த பா¢¨க்ஷகளுக்கு வேண்டிய புஸ்தகங்களை எல்லாம் வாங்கி வந்து நன்றாய் படித்து வரச் சொன்னார். அப்பா சொன்னவுடனே அவள் உடனே எல்லா தினத்தாள்களை வாங்கி, தவறாமல் பார்த்து வந்து அவற்றிற்கெல்லாம் விண்ணப்ப படிவம் வாங்கி வந்து அதை நிதானமாக பூர்த்தி செய்து தன் சர்டிபிகேட் ‘ஜெராக்ஸ்’ பிரதிகளை எல்லாம் சேர்த்து வைத்து அனுப்பி வந்தாள் கமலா.கூடவே புஸ்தகக் கடைகளுக்குப் போய் அவற்றிற்கு வேண்டிய ‘கோசிங்க் புக்ஸ்’ எல்லாம் வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தாள் கமலா.

மாதம் ஆகி விடவே சிவலிங்கம் தம்பதிகள் லதாவுக்கு ‘வளைகாப்பு’, ‘சீமந்தம்’, போன்ற விழாக்களை நடத்த எண்ணி லதாவை ஒரு நல்ல நாள் பார்த்து, அவர்கள் விட்டுக்குப் போய் லதாவை அழைத்து வந்தார்கள்.தேதி குறித்த அந்த நல்ல நாளில் லதாவுக்கு ‘சீமந்தம்’ ‘வளைகாப்பு’ விழாக்களை எல்லாம் நல்ல விதமாய் செய்து முடித்தார்கள் சிவலிங்கம் தம்பதிகள்.ஒரு நாள் லதாவுக்கு ‘வலி’ எடுக்கவே அவளை நர்சிங்க் ஹோமில் பிரசவம் பார்க்க சேர்த்தனர் சிவலிங்கமும் சரோஜாவும்.நர்ஸிங்க் ஹோமில் சேர்த்து ஒரு நான்கு மணி நேரத்திற்கெல்லாம் லதாவுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது.மாப்பிளையும் சம்மந்தி வீட்டாரும் உடனே வந்து குழந்தையைப் பார்த்தனர்.எல்லோருக்கும் குழந்தை மிகவும் அழகாக இருப்பதாகச் சொன்னார்கள். சம்மத்தி அம்மா கேட்டுக் கொண்டது போல லதாவையும் குழந்தையையும் மூன்றாவது மாச ஆரம்பத்தில் சுபமாக கொண்டு அழைத்துக் கொண்டு போய் வெத்திலை, பழங்கள்,ஸ்வீட் எல்லாம் கொடுத்து விட்டு வந்தார்கள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *