நவாப்பழக்கலருக்காரர்…

 

”நல்லாவந்துருவேனாண்ணே,,,,,,?”எனக்கேட்டபோதுஅமர்ந்திருந்த இடத்திலிருந் தே உயரம் காட்டி திரும்பிப் பார்த்தார் அண்ணன்,

அவரதுபார்வையில் நிறை கொண்டிருந்ததோற்றம்முன்நினைவுகளை காட்சிப் படுத்திச்செல்பவையாக/

அப்படி என்ன காட்சிப்படுகிறது அவரிடம் என கேட்ட நாட்களில் ரகசியம் காத்த நினைவாகவும் பூதம் காத்த உயிராகவும் அதிசயம் காட்டி நிகழ்வொ ன்றை அவிழ்த்துவிட்டுச் செல்வார்,

அவிழ்த்து விடுகிறவைகளை அள்ளி முடியாமலும் அள்ளி முடிய மனமில்லா மலும்விதைகொண்டவைகளை நினை கொண்டே திரிகிரவனாய் ஆகிப் போகி றான்.

அண்ணன் என்றால்பெயர்எதுவும்இல்லையா என தெரிந்தவர் ஒருவர் வெகு வான ரகசியமேதும் இல்லாமல் அருகில் வந்து கேட்டதும் பெயரா அவரு க்கா இருக்கிறது,அதல்லாமல் எப்படி ஒருவர் இருந்துவிட முடியும்,,,? ஆனால் அதெல்லாம் அனாவசியம் எங்களைப் பொறுத்தவரை?

சொந்தம்கொண்டவீடும்சுற்றம் கொண்டசொந்தங்களும்நிலைகொண்ட ஒற்றை எழுத்தை அவருக்கு பெயராய் சூட்டியிருந்த போதும் கூட அவருக்கு நாங்கள் வைத்திருக்கும் பெயர் அண்ணன்தான்.

அண்ணன்,அண்ணன்,அண்ணந்தான்,உயர் தோற்றத்திலும் தாழ் தோற்றத்திலும் அவர் அதுவாகவே காட்சிப்பட்டும் உறைகொண்டுமாய்,/

காலையில் உள் நுழைந்ததுமாய் வணக்கம்ண்ணே என்றால் பதிலுக்கு வணக் கம் சார், என காட்சி கொள்வபர் மாலையில்பணி முடிந்து செல்கிறவரை வாங்கண்ணே,வாங்கதம்பி,என்ன சார்,எதுக்கு இப்பிடிப் போயி,,,அதுவா அப்பிடி யே பண்ணீரலாம் ,,,என்பது போலான மனங்கொண்ட இணக்கங்களில் நீந்தி நிலைகொண்டும்அனைவரின்மனங்களில் நிறை கொண்டுமாய் பணி முடித்துச் செல்வார், வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று,,,காட்டாதவேடிக்கையை காட்டிவிட்டுச்செல்வது போல/

”என்னசார் செய்யச்சொல்றீங்க ,நமக்குப்பிடிக்குதோ,பிடிக்கலையோ,ஒரு யெட த்துக்கு வந்து வேர் விட்டுட்டமுன்னா அதுக்குத்தகுந்தாப்புல இருந்துக்குற கத்துக்குறனும் சார்,இலைன்னா வேர் கல்லுல குத்தி திரும்பி நம்மா மூஞ்சி க்கு நேரா வந்து நிக்கும்,அப்புறம் வேர் குத்தி மூஞ்சி மொகறையெல்லாம் காயப்பட்டு டேமேஜாகி நிக்க வேண்டியதுதான் சார் என்பார்/

வாஸ்தவங்களில் உறைகொள்ளும் இது போலான பேச்சே அவரை நிறைக் அஸ்திரமாக்கிக் காட்டும்/

”சரிங்கண்ணே,,”எனச்சொல்லும் போது அன்பும் வாரித்ததும்புகிறமாறாப்பற்றும் கொண்ட அண்ணன் என்கிற சொல் பதத்திற்கு முன்னால் வேறெந்தப்பெயரும் நின்று நிலைத்துவிடப் போவதில்லை என்பது திரும்ப ஒரு முறை நிலை கொள்ளும் ஆழ வேரூன்றி/

”ஏங் பெயரெல்லாம் என்ன நின்னுநெலைச்சிறப்போகுது ,,,,?போங்க சார்” என் பார்,இதுபோகஇன்னும் கொஞ்சம் சொல்லுவார் பெயர் சொமந்துக்கிட்டு இருக் குற அன்பையும் பாசைத்தையும் ஒட்டுதலை விடவும் அண்ணன்ங்குற சொல் லுல இருக்கிற ஒட்டுதலும் அடர்த்தியும் அதிகம் என்பார்,,,/

”சொமந்து வைச்சிருக்கிற பேரும் அடையாளமும் போதும் சார்”,என்பார் அண் ணன் என்கிற பெயரை அடை கொண்டு விழிக்கிற நேரங்களில்/

கோடு போட்ட முழுக்கை சட்டை போட்டிருந்தார், மடக்கி விட்டிருந்த இரு கைகளில் ஒரு கை ஏறியும் ஒரு கை இறங்கியுமாய் தெரிந்தது, இறங்கித் தெரிந்த கையின் கோடுகள் மடக்கில் பொதிந்தும் ஏறித்தெரிந்த கையில் தெரி ந்த கோடுகள் கொஞ்சம் வெளி நீட்டியுமாய் இருந்தது. அதற்குத் தகுந்தாற்ப் போலான நிறத்தில் பேண்ட் அணிந்திருந்தார்.

“ஏண்ணே இப்பிடி,,என்றால் என்ன செய்ய சொல்லுங்க, அதுவும் என்னையப் போல சொன்ன படி கேக்காம இருக்குது.என்பார்,

“ஏண்ணே ஒங்களுக்கு எண்ணண்னே தங்கத்துக்கு,,?ராசா வீட்டு கண்ணுக்குட்டிண்ணே நீங்க,என்ன கயிறு போட்டு கட்டாம கண்ணுக்குட்டி கண்ட பக்கம் மேஞ்சிக்கிட்டு திரியுதுன்னு கேள்வி/

அப்பிடியெல்லாம் இல்லைன்னாலும் கூட ஒங்க கொணத்துக்கும் நடத்தைக் கும் நீங்க எங்கயோ போகப் போறீங்கண்ணே ,அப்பிடி போற நேரத்துல போயி இப்பிடியெல்லாம் பேசிக்கிட்டு இருந்தீங்கின்னாஅப்புறம் பயணம் பாதியிலயே நின்னு பஸ்ஸீ கிஸ்ஸீ எதுவும் கெடைக்காம போயிருமில்லையா ஏறிப் போறதுக்கு,,,,?என்றால் வாய் கொள்ளாமல் சிரிப்பவர் சமயத்தில் அதற்கு நேர் மாறாய் உடை அணிந்து கொண்டு வருவார்.

பத்தாவது படிக்கும் பையன் போல அங்கங்கே கிழிந்து தொங்கும் ஜீன்ஸ் பேண்ட்டும் சிம்பிளான ஒரு சட்டையுனுமாய் வருவார்.

“போதும் சார் தினமும் முப்பதும் முப்பதும் அறுபது கிலோ மீட்டர் பயணம் பண்ணி வர்றேன். டூ வீலர்ல/இதுல நீங்க சொல்ற மாதிரி சுருதி சுத்தமான வெள்ளை வேஷ்டி வெள்ளைச்சடையில வரணுமுன்னா ஆறு மாசத்துக்கு ஒரு செட் ட்ரஸ் எடுக்கணும் என்பார்,தவுர போட்டுக்கிட்டு வர்ற ட்ரெஸ்ஸீம் கசல யாகிப் போகும் என்பார்.

எப்பொழுதோ ஒரு தடவை அண்ணே ஒங்க தொழிலுக்கு லாயக்கு வெள் ளை வேஷ்டி வெள்ளைச்சட்டை,ரெண்டு கையிலயும் நாலு மோதிரம்ன்னு வந்தீங்கின்னாத்தான் பாக்க நல்லா மதிப்பா இருக்கும் ,அத விட்டுட்டு இப்படி என்னமோ பத்தாப்பு படிக்கிற பையன் போல வந்து நின்னா எப்பிடி,,,,,? என என்றைக்கோ சொன்ன வார்த்தையை இன்றைக்கு ஞாபகபடுத்துபவறாக பேசு கிறார்.

”அட சும்மா இருங்கண்ணே ,ஒங்களப்போல அம்பது அறுபது கிலோ மீட்டர் பயணம்பண்ணி வர்றவுங்க எல்லாம்இப்பிடியா பாண்டையா வர்றாங்க,,,,,”என் றால் அதே சப்தமிட்ட சிரிப்பு.

இதுபோலாய் சங்கடம் உணரும் தருணங்களில்அவரின் மிகமுக்கிய அடை யாளமாய் அவரின் அச்சிட்ட மாறிப் போகும்.

படிய வாரியிருந்த தலை முடி கொஞ்சம் சுருள் பட்டே தெரிந்ததாய்/ காதோ ரங்களில் நரைத்துக்குத்திய முடிக்கற்றைகளில் ஒன்றிரண்டு அவரது வயதை சொல்லிச் சென்றது அவர் தலை முடிக்குப் பூசியிருந்த டையை மீறி/

”கேட்டால் சொல்லுவார்.அது நரைச்சி நிக்கிற முடிக்கு அடிச்ச டை இல்ல சார்,ஹேர் கலரிங் சார்,நீங்க அதப் போயிட்டு”,,,,என சமாளிப்பார்.

அவரது சமாளித்தளிலும் பேச்சிலும் அவரது வயதை மறைக்கிற செயல் தவிர்த்து அவரது இளமையை நிலை நிறுத்துகிற பேச்சே எஞ்சி நிற்கும்.

அவர் அம்மாதிரியாய் சமாளித்தும் கஷ்டப்பட்டும் தன் திறனைத்தையுமாய் காட்டி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரை சுற்றி நின்று கொண்டிரு ப்பவர்கள் சிரித்து விடுவார்கள். அவருக்கு தர்ம சங்கடமாகப்போய் விடும் இது போலான தருணங்களில்/

ஆனால் இது போலாயும் இதற்கு மேலாயும் விளைகிற தர்ம சங்கடங்கள் அவரை நிமிர்த்தி நிற்க வைத்திருக்கிறது பெரும்பாலான நேரங்களில்.அந்த பெரும்பாலானவையே அவருக்கு அழகு எனலாம்/

நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன் நடையும் கொண்ட அவர் இப்போதைக்கு நேர்கொண்ட பார்வையை மட்டுமாய் விதைக்கிறார் பரந்து பட்ட வெளி யில்/

நிமிர்ந்த நன்நடையை யாரோ சிலரின் லாபத்துக்காக குத்தகைக்கு விட்டு விட்டார் போனால் போகட்டும் என/

விழி கழண்டு வந்து விரிந்து விழுந்த பார்வை நேர் கொள்கிறது இவனை. அவரது தீர்க்கமான நெற்றிச்சுருக்கத்துடன்/

வலது பக்கமாய் திரும்பி ஒர் நோக்கு,இடது பக்கமாய் திரும்பி ஒரு நோக்கு, இது போக நேர் கொண்டதும் அதன் பின்னாடியுமாய் ஒரு பார்வை ஏன் அப்பிடிப்பார்க்கிறீர்கள் எனக்கேட்டதற்கு இல்லை .யார் இங்கு எதற்கு ஏன் எப்பொழுது நன்றாக வந்து விட்டதை சொல்ல வேண்டும் என்றார்,மெகா சைஸ் கேள்விக்குறியுடனாய்,,/

உடகார்ந்திருந்த இடம் சிறியதுதான்,அவர் போட்டிருந்த நாற்காலிபெரியதாய் இருந்தது,அதிலிருந்துதான் வளர்ந்து காட்டினார்,

”உட்கார்ந்தஇடத்திலிருந்தே உயரமா தெரியுறதுன்னா அது வேறெண்ணுமில்ல சார்,எங்க ஊர்ல ஒருத்தரு இருக்காரு பாத்துக்கங்க,அவருக்கு வயசு எப்பிடி யும் அறுபதுக்கு நெருக்கி இருக்கும்,பிரம்மச்சரியத்துல கட்டுண்டு போன ஒடம்பு ,சும்மா கல்லுப்போல இருப்பாரு சார், யாருக்கும் எதுக்கும் பயப்புட மாட்டாரு, அதுபோல எந்த தப்புத்தண்டாவுக்கும் போக மாட்டாரு,அவரு மேல நல்ல மதிப்பு உள்ளங்க அவங்க வீட்டுப்பிரச்சனைக்குக்கூட பஞ்சாயத்துப்பேச அவருகிட்டதான் வருவாங்க/

“அவரும் யாருக்கும் பாதகமில்லாம தீத்து பேசி வச்சி அனுப்புவாரு,எதுக்கும் பொடி வைச்சி பேசாத வஞ்சம் இல்லாத அவரோட வெள்ளை மனசு ஊருக் குள்ள ரொம்பப் பேருக்கு அவர புடிச்சிப் போக வச்சிருச்சி/

ஊருக்குள்ளவிருதாவா திரியிரவனக்கூட வந்துபாருன்னுருவாரு, ஒரு தடவை ஊருக்குள்ள ஒரு பிரச்சனை ,அப்புராணிய பொழைக்க கதியத்து அந்த ஊரே கதியின்னு வந்த குடும்பம்செலவுக்கு தேவைபடும்போது ஒண்ணு ரெண்டுன் னு வாங்க ஒண்ணு ரெண்டுன்னு குடுக்கன்னு ஒரு லேவாதேவி பண்ணுற குடும்பத்துகிட்ட ஆத்துர அவசரத்துக்கு வரவு செலவா இருந்துருக்காங்க,

”அதுல கொஞ்சம் தொட்டி விழுந்துருச்சி போலயிருக்கு,ஒடனே பணம்குடுத்த வன் வீடு புகுந்து புள்ளைய தூக்கீட்டு வந்துட்டான்,என்ன செய்வா தாய்க்காரி, நேரா இவருகிட்டப்போயி நிக்கவும் விவரம் கேட்ட இவரு நேராப்போயி ஞாயம் கேக்க,,,, கேக்க போன ஞாயம் வார்த்தைகள்ல வழுவி சண்டையில வந்து நின்னுருக்கு,

“பணம் குடுத்த கும்பத்துல ரெண்டு பேரு கம்பு சண்டை கட்டுறவுங்க, ஒடனே கம்பத்தூக்கீட்டு நிக்கவும் இவரும் பதிலுக்கு கம்பு சுத்தீருக்காரு,கையில கொண்டு போன துண்டையே வச்சி அவிங்கள சமாளிச்சி அவிங்ககிட்டயே ஒருத்தன் கம்பை பிடுங்கி ரெண்டு பேரையும் சமா ளிச்சி அந்தம் மாவோட கொழந்தைய மீட்டு வந்தாரு அன்னைக்கி,”அப்பிடி ஒரு நெஞ்சு ஒரம் சார் அவருக்கு,

’அவரு வேற ஒண்ணும் பெரிசா செஞ்சிற மாட்டாரு,அவரோட தோட்டத்துல எல்லா வேலையும் முடிச்சிட்டு சும்மா இருக்கும் போது மோட்டார் ரூம் பக்கத்துல பட்டியக்கல்லு போல இருக்குற ஒரு கல்லுல ஒக்காந்துக்கிட்டு தியானம் பண்ண ஆரம்பிப்பாரு,அத அப்பிடியே கண் இமைக்காம பாத்துக்கிட் டே இருக்கலாம் அவ்வளவு அழகா இருக்கும்,சமயத்துல அதப்பாக்க ஆயிரம் கண்ணு வேணும் போலத் தோணும்/இத்தனைக்கும் இடுப்பு வேஷ்டியோடத் தான் ஒக்காந்துருப்பாரு.ஒடம்புல அது தவிர்த்து வேற ஒண்ணும் இருக்காது, அதுவே அவ்வலவு அழகா இருக்கும் பாத்துக்கிடுங்க,

தியானம் பண்ண ஆரம்பிக்கும் போது தொங்கிப்போயி ஒக்காந்துருக்குறவரு சம்மணங்கால் போட ஆரம்பிச்சதும் அப்பிடியே மூச்சடக்கி மார்ப்ப விரிச்சி நிமிருவாரு பாருங்க ஒரு நிமிர்வு,அப்பிடியே அந்த நிமிஷத்துல ஒரு அடி உயர்ந்து நின்னது போலத் தெரியும்அதுதான் அந்த நிமிஷத்துலஅவரு ஒக்காந்த யெடத்துல இருந்து வளர்ற உயரமா தெரியும்” என்பார்,

அது போல சொன்னவரே உயரம் காட்டி பார்க்கிற போது மற்றவற்றின் உயரமெல்லாம் அதற்கு ஈடாகுமா என கேட்டு விடவே தோணுகிறதுதான்.

நல்லாவந்துருவேனாண்ணே,,,,,,?”எனக்கேட்டபோதுஅமர்ந்திருந்த இடத்திலிருந் தே உயரம் காட்டி திரும்பிப் பார்த்தார் அண்ணன்/ 

தொடர்புடைய சிறுகதைகள்
22 ஜன்னல்களும் 15 மர அலமாரிகளும் கொண்ட வீடாய்அது.4பெரிய அறைகளையும்,இரண்டு சிறிய அறைகளையும் கொண்டு நின்ற வீட்டின் அறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலராய். ஏன் அத்தனை அறைகள்,ஏன் அத்தனை கலர்கள் என்பது இன்று வரை மனம் புடிபடாத புதிராகவே/ கூடவே அந்த ஊரிலேயே பெரியதாக ...
மேலும் கதையை படிக்க...
இதோ வந்து கொண்டிருக்கிறேன் பறந்து,உடனடியாகவோ இல்லை சற்று தாமதம் காட்டியோ,,,,,/ கோபப்பட்டுக்கொள்ள வேண்டாம் தயவு செய்து/ கோபம் இருபக்கமும் கூர் கொண்ட முள் முனை போன்றது. சமயத்தில் நம்மையே பதம் பார்த்து விடக்கூடும்,கூடும் என்ன கூடும் கண்டிப்பாக பதம் பார்த்து விடும்தான். பார்க்கிற பதம் கைகாலை ...
மேலும் கதையை படிக்க...
அவர்களது வீட்டை கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை . நாராயணா ஸ்டோர்ஸீக்கு எதிர்சந்தில் இருக்கிறது என்றார்கள். போய் விட்டேன். நீண்ட அகலமான தெரு.ஸ்டோரிலிருந்து பார்த்தால் குறுக்காகப் போன மெயின் ரோட்டைத்தாண்டி நீண்டு தெரிந்தது. இரண்டு பக்கமும் முளைத்திருந்த வீடுகள் வரிசையாகவும்,வரிசை தப்பியுமாய் தெரிந்தன.வாசலில்போடப்பட்டிருந்த கோலங்கள் அழிந்தும் ...
மேலும் கதையை படிக்க...
தூரம் என்ன இருந்து விட முடியும் பெரிதான தூரம் , நன்றாக இருந்தால் ஒன்றரை அல்லது இரண்டு கிலோ மீட்டருக்குள்ளான இடைவெளியே... பாலம், அது கடந்து பெட்ரோல் பங்க்,புது பஸ்டாண்ட், வொர்க் ஷாப்,அது கடந்து யார் தடுத்தும் நில்லாமல் வந்து விடுகிற ...
மேலும் கதையை படிக்க...
காய வைத்திருந்த இட்லித்துணிகளை எடுத்து அதன் சுருக்கம் நீக்கி மடித்து வைத்துக்கொண்டிருந்தாள் மனைவி. இது நாள்வரை அவள் அவித்தெடுத்த இட்லிகள் அந்தத்துணிகளின் துணையில்லாமல் வெந்ததில்லை,அது போல் அவள் அந்தத்துணிகள் போட்டு எடுக்கும் இட்லியைத்தவிர்த்து வேறெதையும் நினைத்துப் பார்த்ததில்லை. அது அவள் கட்டியிருந்த புடவையைப் போலவே ...
மேலும் கதையை படிக்க...
ஹோமம்
வேரிலைபட்டு…
விலாசம்
தூரங்களின் விளிம்புகளில்…
இட்லித்துணி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)