தகுதி – ஒரு பக்க கதை

 

‘டை’யை சரி செய்து கொண்டு இன்டர்வியூ அறைக்குள் நுழைந்தான் கமலேஷ்

இன்டர்வியூவுக்கு வரும்போது டீசன்டா வர மாட்டீங்களா?சட்டையில் என்னன கறை?

இந்த கேள்வியை எதிர்பார்த்த கமலேஷ், பொறுமையாக பதில் சொன்னான்.

வரும்போது ஒரு ஹோட்டல்ல டிபன் சாப்பிட்டேன். டிபனை பரிமாறிய சர்வர், கை தவறி டிபனை சட்டை மேல கொட்டிட்டான், வீட்டுக்குப் போய் டிரஸ் மாற்ற நேரமில்லை. பத்து மணிக்கு இன்டர்வியூன்னு சொன்னீங்க. நேரம் தவறாமையை நான் ஒரு கொள்கையா வச்சிருக்கேன்”

சரி அந்த சர்வரை நீங்க என்ன பண்ணீங்க?

உண்மையைச் சொல்லிடறேன். கோபம் வந்து அந்த சர்வரை அடிச்சிட்டேன். பொய் பேசறது எனக்குப் பிடிக்காத விஷயம்!

உங்களுடைய நேரம் தவறாமை, பொய் பேசாத குணத்தையெல்லாம் நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் உங்களுக்கு இங்கே வேலையில்லை. நீங்க போகலாம்!

என்ன காரணம்னு நான் தெரிஞ்சிக்கலாமா சார்?

நீங்க இன்டர்வியூவுக்கு வந்திருக்கிறது மனிதவளத்துறை. அதாவது எச்,ஆர்,தலைவர் பதவிக்கு. நூற்றுக்கணசக்கான தொழிலாளர்களை அரவணைச்சுப் போகணும். உங்களை மாதிரி முன் கோபிகளால் இந்த வேலையை சிறப்பா செய்ய முடியாது!

- ஜெ.கண்ணன் (28-10-13) 

தொடர்புடைய சிறுகதைகள்
தர்மு ஒரு கடின உழைப்பாளி - ரக்சி ஓட்டுனன். காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பி வைத்துவிட்டு, மதியத்துடன் வேலையை ஆரம்பிப்பான். இரவு இரண்டு மணிக்குள் வீடு திரும்பிவிடுவான். அன்று தனது கடைசிப் பிரயாணி ஒருவரை விமானநிலையத்திலிருந்து அவரது வீட்டில் இறக்கிவிட்டு, தனது வீட்டிற்குப் ...
மேலும் கதையை படிக்க...
"சார் உங்க செல் போன்ன கொஞ்சம் கொடுக்கறீங்களா.." "ஏன்..?! எதுக்கு..?!" பழைய சோறு எல்லாம் இல்ல போ போ என்பது போல் விரட்டினார்.., "சார் என் போன்ன யாரோ திருடிட்டாங்க...ப்ளீஸ்.." என்றேன் பாவமாய் பார்த்தார்.."என்ன போன்ப்பா தொலைச்ச ....?" ஆப்பிள் ஐ போன்...அதிர்ச்சியானார்....இது வரைக்கும் கேட்ட எல்லோரும் விட்ட ...
மேலும் கதையை படிக்க...
மூன்று மணி நேரம் தேர்வறையில் மௌனமாக இருக்கும்போது மனதில் பல்வேறு சிந்தனைகள் தோன்றும். பிரிந்த அன்பு, உடைந்த நட்பு, தோழியின் பரிவு, நண்பனின் நெருக்கம், தேர்வு சரியாக எழுதவில்லை என்றால்... எனும் பயம் இப்படி. இது பொதுவானவர்களுக்கு. இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்குக் ...
மேலும் கதையை படிக்க...
பேருந்து பதற்றமான ஓர் இருளுக்குள் நுழைந்து மீண்டும் சாலை விளக்கின் வரிசை வெளிச்சத்திற்குள் வந்து சேர்ந்தது. எக்கிப் பார்த்தேன். அதுவொரு சுரங்கம். ஒவ்வொரு வருடமும் விடுமுறை காலங்களில் மட்டும் வந்துவிட்டுப் போகும் ஓர் அந்நியமான நகரம். அம்மாவிற்கு ஒவ்வாத இரைச்சல்கள். நாள் ...
மேலும் கதையை படிக்க...
கடித்த கடிக்கும்,இழுத்த இழுவைக்கும் கொடுத்த பணம் போதுமா அல்லது நேர் படு மா என்கிற ஐயப்பாட்டுடனேயே இவன் கை நிறைய வைத்திருந்த பணம் கரைந்து போகிறசமயங்களிலும் கூட இவன் இப்படி வருத்தப்பட வேண்டியதில்லை. மணிகண்டனின் கடை இருக்க பயமேன் என்கிற சொல்லாக்கம் ...
மேலும் கதையை படிக்க...
கனவு காணும் உலகம்
திருட்டுப் பசங்க
தேர்வறைத் தியானம்
தேர்தலும் பாட்டியின் கலர் துண்டும்
புரோட்டா சால்னா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)