சமாதானம் – ஒரு பக்க கதை

 

நாலைந்து நாட்களாகத் தெருத் தெருவாகத் திரிந்தும் ஓர் எச்சில் இலை கூடக் கிடைக்கவில்லை ஒரு கிழட்டு நாய்க்கு.

அப்படியே கிடைத்தாலும் மற்ற நாய்களுடன் போட்டியிட்டு அதைத் தின்ன முடியவில்லை அதனால். ஆகவே பசி ஒரு பக்கமும், வயோதிகத்தால் ஏற்பட்ட வாட்டம் இன்னொரு பக்கமுமாக அது ஒரு நாள் ஒரு வீதி வழியே தளர் நடை நடந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது அதற்கு முன்னால் ஓர் எச்சில் இலை வந்து விழ, அதற்காக அந்தக் கிழட்டு நாயை முந்திக் கொண்டு ஏழெட்டு நாய்கள் ஓடிவந்து சண்டையிட, நில்லுங்கள் சகோதரர்களே, நில்லுங்கள், கேவலம் ஓர் எச்சில் இலைக்காக ஒரே இனத்தைச் சேர்ந்த நாம் இப்படியா சண்டையிட்டுக் கொள்வது? வெட்கம்! வெட்கம்! என்றது அது வேதனையுடன்.

அதைக் கேட்டு மற்ற நாய்கள் வெட்கத்தால் தலை குனிந்து நிற்க, அதுதான் சமயமென்று கிழட்டு நாய் அந்த எச்சில் இலையைக் காலி செய்துவிட்டு, வாழ்க சமாதானம்! என்றது, சற்றே வாட்டம் தணிந்து.

அதுவரை அதைக் கவனித்துக் கொண்டிருந்த மற்ற நாய்களில் ஒன்று பெருமூச்சுடன் சொல்லிற்று:

சமாதானத்திற்கு எப்போது வாழ்த்துக் கூற வேண்டுமென்று இப்போதல்லவா தெரிகிறது எனக்கு!

- விந்தன் (மே 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
அமெரிக்காவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்யும் ஷியாமை கல்யாணம் செய்து கொண்டு,அங்கேயே செட்டிலாகி விட்ட தன்னுடைய ஆருயிர் தோழி சிந்துஜா பத்தாண்டுகளுக்குப்பிறகு, இன்றுதான் சொந்த மண்ணை மிதிக்கிறாள். அவளை வரவேற்க விமான நிலையத்திற்கே போயிருந்தாள் ஆர்த்தி. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஆர்த்தியின் கார் ...
மேலும் கதையை படிக்க...
(நான் பாளையங்காலில் குளித்துக் கொண்டிருக்கும்போது சில ஏடுகள் மிதந்து வந்தன. உடம்பைத் தேய்த்துக் கொண்டிருந்தவன், ஒன்றை எட்டி எடுத்துக் கவனித்துப் பார்க்க, கதை மாதிரி தெரிந்ததால், கிடைத்ததை எல்லாம் சேகரித்து வாசித்தேன். தேறினது இந்தக் கதைதான். இந்த ஏட்டுக்கு ஆதாரமோ, நான் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன். அவிசுவாசி என்று ஆனபிறகு மீண்டும் இங்கு திரும்பிவந்திருக்கிறேன். விசுவாசத்தைப் பற்றி அதிகமாகப் பேசவிரும்பவில்லை. பத்து வருடங்கள் ஒரு இளைஞனின் வாழ்வில் அத்தனை சிறிதல்ல பாருங்கள். என்றுமே நான் அவிசுவாசிதான் போலிருக்கிறது .ஆனால் அதுதான் இயல்பான நிலை என்று தெரிந்துகொள்ள ...
மேலும் கதையை படிக்க...
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து, சொந்த ஊரான புதூருக்கு இவன் போன போது ஏகப்பட்ட மாற்றங்கள். ``மிஸ்டர் ராஜேஷ்! உங்க ஊருக்கு விசிட் போறேன். ஒருநாள் லீவு போட்டுட்டு வாங்களேன். காரில் ஜாலியாப் பேசிகிட்டுப் போன மாதிரியும் இருக்கும்; உங்களுக்கு ஒரு மாறுதலாகவும் ...
மேலும் கதையை படிக்க...
சாத்வீக தத்துவ குணங்களின் முப்பரிணாம நேர்கோடு உயிர்ச் சித்திரமாய்க் கண்களில் தெய்வீக ஒளி கொண்டு நிலைத்திருக்கிற அவரிடம் பாடம் கேட்க வரும் போதெல்லாம் பாரதிக்கு அன்றைய பொழுதே முழுவதும் கறைகள் நீங்கிய ஒரு தவப் பொழுதாக விடியும் அந்த விடியலைத் தேடியே ...
மேலும் கதையை படிக்க...
தமிழ் நாட்டு அரசியல்!
கட்டிலை விட்டிறங்காக் கதை
போதி
முகங்கள்
வென்றது பொய் வீழ்ந்தது தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)