மழைக்காகப் பயந்து மரத்தடியில் ஒதுங்கி நின்றது ஒரு குரங்கு.
அப்போது அம் மரத்தில் கூடு கட்டிக்கொண்டு வாழ்ந்துவரும் தூக்கணாங் குருவி, குரங்கைப் பார்த்து, “அண்ணே, நீ உருவத்தில் மனிதனைப் போலவே இருக்கிறாயே, உன் கை கால்களை உபயோகித்து ஒறு நல்ல குடிசை உனக்காகக் கட்டிக் கொள்ளலாமே! அதைவிட்டு நீ ஏன் இப்படி மழையில் நனையவேண்டும்?” என்று கேட்டது.
அதைக் கேட்ட குரங்கு, உடனே ஆத்திரமடைந்து, குருவிக் கூண்டைப் பிய்த்து எறிந்து நாசமாக்கியது.
அதனால் வருந்திய குருவி, அரசனிடம் சென்று முறையிட்டு, தனக்கு நீதி வழங்கும்படி கேட்டது.
அரசனும் விசாரணைக்காக குரங்கை அரண்மனைக்கு அழைத்தான். குரங்கும் ஒரு பெரிய பலாப்பழத்தைத் தன் தலையில் தூக்கி வந்து, யாருக்கும் தெரியாமல் அரசனுக்குப் பின்னால் வைத்துவிட்டு, எதிரில் வந்து நின்றுகொண்டது.
மிகவும் பயபக்தியுடன் தன்னை வணங்கி நின்ற குரங்கைப் பார்த்து அரசன், “ஏ அற்பக் குரங்கே உனக்கு எவ்வளவு திமிர்! ஒரு சிறு பிராணி உனக்கு நல்ல புத்திமதி சொன்னால், அதற்காக இப்படியா பழி வாங்குவது?” என்று கேட்டான்.
அதற்குக் குரங்கு, “மகாராஜா முன்னே பின்னே பார்த்துப் பேசுங்கள்” என்றது. அரசனும் திரும்பிப் பின்னால் பலாப்பழம் இருப்பதைக் கண்டான்.
உடனே அரசன் குருவியைப் பார்த்து. “ஏ அற்பக் குருவியே! உனக்கு என்ன திமிர் இருந்தால் குரங்குக்குப் போய் புத்தி சொல்வாய்? உன்னுடைய முட்டாள்தனத்திற்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். சரி, தொலையட்டும். இத்தோடு நீ ஒடிப்போ” என்று கூறி, குருவியை விரட்டிவிட்டான்.
எப்படி பலாப்பழம் செய்த வினை.
- அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா, மகன் என்று எல்லோரும் வைத்தியம் செய்து பிழைத்து வந்தனர். கடைசியில் ஒருபேரன் அதைக் கவனிக்காமல் ஊர் சுற்றி வந்தான். பிறகு ஒருநாள் திருந்தி, நாமும் வைத்தியம் செய்து பிழைக்கலாமே என ...
மேலும் கதையை படிக்க...
ஒரு பெரிய குடும்பத்திலே பெருஞ் செல்வனாக வாழ்ந்த தலைவன், நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையிலே கிடந்தான்.
அவனுக்குப் பல பிள்ளைகள், பேரன் பேத்திகள். எல்லோரும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். “அப்பா எனக்கு என்ன சொல்கிறீர்கள்? அப்பா எனக்கு என்ன சொல்கிறீர்கள்? தாத்தா எனக்கு... ...”
அவர் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு தவசி சாலையோரமாகப் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு குளம் இருந்தது. அப்போது, அங்கே ஒருவன் தூண்டில், முள்ளிலே புழுவை மாட்டிக் குளத்திலே மீன் பிடிப்பதற்காக இறங்கிக் கொண்டிருந்தான்.
குளத்தின் ஒரத்தில் இருந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த தவசி, அவன்மேல் இரக்கம் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
வேற்றூர்க்குப் பயணமாக நடந்து கொண்டிருக்கிறான் ஒருவன். வழியிலே பாழ் மண்டபம். அதில் இரண்டொரு தூண்கள் விழுந்தும் உடைந்தும், மண்டபத்திலே கருங்கற்கள் சில சிதைந்தும், சிதறியும் கிடந்தன.
அதைக் கண்டதும், வழிப்போக்கன், ‘இதன் உள்ளே நுழைந்து சென்றால் நம்முயிர்க்கு ஆபத்து; மண்டபத்தின் கருங்கற்கள் நம் ...
மேலும் கதையை படிக்க...
தைப்பூசத் திருவிழா! எல்லாக் கோவில்களில் இருந்தும் காவிரி ஆற்றுக்குச் சுவாமி புறப்பாடு உண்டு. திருச்சி, பூலோகநாதர் சுவாமி கோவிலிலிருந்தும் சுவாமி புறப்பட்டது. நானும் என் தமையனார் ஒருவரும், கொடியைச் சுருட்டி சுவாமி கூடவே தூக்கிக் கொண்டு சென்றோம். அன்று அதற்குக் கூலி ...
மேலும் கதையை படிக்க...
ஐம்பது ஆண்டுகட்கு முன், தமிழகத்திலே சிறந்து விளங்கிய இசையறிஞர்
காஞ்சிபுரம் நாயனா பிள்ளை,
பிடில் கோவிந்தசாமி பிள்ளை,
மிருதங்கம் அழகு நம்பியா பிள்ளை,
கஞ்சிரா தக்ஷனா மூர்த்தி பிள்ளை,
கொன்னக்கோல் மன்னர்குடி பக்கிரிசாமி பிள்ளை,
இப்படிப்பட்ட இசைமாமேதைகள் சேர்ந்த இசையமைப்பு ஒருசமயம் நடந்தது - அதுபோன்ற அமைப்பு அவர்கள் காலத்துக்கு ...
மேலும் கதையை படிக்க...
தீராத தலைவலியால் தன்னிடம் வந்த நோயாளியின் மண்டையை அறுவைச் சிகிச்சை முறையால் பிளந்து பார்த்தார் அகத்திய மாமுனிவர். அவன் மூளையிலே ஒரு தேரை - கையால் எடுக்க வரவில்லை. அவன் மூளையைக் காலால் பற்றிக் கொண்டிருந்தது. எடுக்கவும் இயல வில்லை; நசுக்கவும் ...
மேலும் கதையை படிக்க...
நாட்டு மன்னன் தன் நண்பனைப் பார்த்து, “என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான். நண்பன் சொன்னான் “நம்நாட்டில் உள்ள முட்டாள்களின் பெயர்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்று.
மன்னன் : எத்தனை பேர் இருக்கிறார்கள்?
நண்பன் : நேற்றுவரை 6 பேர்களை எழுதி வைத்திருந்தேன். இன்று ...
மேலும் கதையை படிக்க...
முதிய துறவி ஒருவர், இளந்துறவி ஒருவருடன் பக்கத்து ஊருக்குச் சென்றுவிட்டுத் தன் ஆசிரமத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
வழியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது, இவர்களுக்கு முன்னே இளம்பெண் ஒருத்தி, இரண்டுமாதக் கைக்குழந்தையுடன், செய்வதறியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தாள். அவள் ஆற்றைக் கடந்து அக்கரை ...
மேலும் கதையை படிக்க...
நிலக்கிழார் நல்லுச்சாமி பிள்ளை என்றால் கீரனூரில் அனைவருக்கும் தெரியும். அவருக்கு இரு மனைவிகள் இருந்தும் குழந்தைகள் இல்லை. அவர் இறந்த பதினாறாம் நாள் சடங்கு முடிந்த அன்று, அவரது விழக்கறிஞர் அவரது இல்லத்திற்கு வந்து, அவருக்குள்ள 24 ஏக்கர் நஞ்சை நிலத்தையும் ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு என்ன சொல்கிறீர்கள்?
இளந் துறவியும் முதிய துறவியும்