ஒரு தொலைபேசி பேசுகிறது

 

தலைப்பே வினோதமாய் இருக்கிறதா? நாம்தானே பேசுவோம். தொலைபேசியே பேசுமா? எனக்கும் ஆச்சர்யம்.

ஒரு முக்கிய நண்பர். எழுத்தாளர். அவருக்கு ஒரு சிறுகதைப் போட்டியில் பரிசு என்று முடிவகள் பார்த்ததும் நானே பரிசு வாங்கிய உற்சாகம். அழைத்துப் பாராட்டுவோமே என்று ரிசீவரைத் தொட… “ஹலோ..” தூக்கிவாரிப் போட்டது. சுற்றுமுற்றும் பார்த்தேன். வேறு யாரும் இல்லை. மறுபடி ரிசீவரைத் தொட.. “ஹலோ.. என்ன பதில் சொல்ல மாட்டியா” அடக் கடவுளே.. இந்த வீட்டுக்குக் குடி வரும் போதே விசாரிக்காமல் வந்து விட்டேனே.. யாராவது அகால மரணம் அடைந்த வீடா? ஆவி பேசுகிறதா? ரிசீவர் நான் தொடாமலே ஆடியது.

” என்ன.. தொலைபேசியே பேசுகிறதே என்ற பிரமிப்பா..”

“ஆமா”

“ஹ¥ம்.. எனக்கு மட்டும் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்காதா.. எத்தனை பேர் என் மூலமாய் பேசுகிறார்கள்.. யாராவது என்னோடு பேசியிருக்கிறார்களா?”

இது என்ன குழப்பம்டா சாமி. எனக்கு வியர்த்து விட்டது.

“நண்பரைப் பாராட்டணுமா? அதற்கு முன்னால் ஒரு சின்ன கேள்வி.. இதே போட்டிக்கு நீ எழுதினாயா?”

“இல்லை”

“பரிசு வாங்கிய நண்பர் உனக்கு என் மூலமாகவும் கடிதம் மூலமாகவும் எத்தனை தடவை சொன்னார்? நீயும் எழுது.. போட்டியில் கலந்து கொள் என்று”

வாஸ்தவம் தான். நான் தான் சோம்பேறித்தனமாய் இருந்து விட்டேன். “முயற்சிகள் இல்லாத மனிதன் ஜடம் என்று உனக்குத் தெரியும்தானே”

“தெரியும்”

“கடவுள் ஒவ்வொருவருக்கும் திறமையைத் தந்திருக்கிறார். உழைப்பின் மூலம் சிகரம் தொட வேண்டிய மனிதன் சோம்பிக் கிடந்தால் அது இறைவனுக்குச் செய்யும் அபச்சாரம்தானே.. நன்றாக யோசித்துப் பார். ஏதோ ஒரு காரணத்தினால் என் மூச்சு நின்று போனால் எப்படித் தவிக்கிறாய்? மறுபடி என் சத்தம் ஒலிக்கும் வரை உன்னிடம் அமைதி இல்லை. ஆனால் நீயோ எப்போதும் ஏதோ ஒரு காரணம் காட்டி நீ செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறுகிறாய்.. சொல். இது சரிதானா?”

என்னை யாரோ அறைந்த மாதிரி இருந்தது.

எதிர் முனையில் நண்பரின் குரல் கேட்டது.

“என்ன.. டயல் செய்து விட்டு பேசாமல் இருக்கிறீர்கள்.. உடம்பு சரியில்லையா?”

“வாழ்த்துக்கள்.. பரிசு வாங்கியதற்கு”

“நீங்கள் வாங்கவில்லையே..” என்றார் வருத்தமாய்.

“அடுத்த முறை நிச்சயமாய்”

பேசிவிட்டு ரிசீவரை வைத்தபோது ஒயர் என் கையில் மாட்டிக் கொண்டது.. தொலைபேசி என் முடிவிற்குக் கை குலுக்கியது போல!

- மே 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
தகவல் தொடர்புக்கு அப்புறம் என்ன பண்ணுவீங்க.. என்னைப் பார்த்து என் நண்பர் கேட்ட கேள்வி இது. வேறு ஒன்றும் இல்லை. நகராட்சிப் பூங்காதான் கதி என்று ஆகிவிட்ட விஆரெஸ் ஆத்மா நான். ஓய்வு பெற்ற நாளில் எனக்கு மலர்க் கிரீடம் என்ன.. மாலைகள் என்ன.. ...
மேலும் கதையை படிக்க...
வாசல் வரை வந்து வழியனுப்பினாள். "பார்த்து நடந்துக்குங்க! கோபப்பட்டுராதீங்க!" எனக்குள் சுள்ளென்றது. "எனக்குத் தெரியாதா?" என்றேன் எரிச்சலுடன். கையில் கனத்துக் கொண்டிருந்த பை உள்ளே எவர்சில்வர் சம்படத்தில் இனிப்பும், முறுக்கும். அவ்வளவும் சித்தப்பா வீட்டுக்கு. மூன்று நான்கு வருடங்களாய்ப் பேச்சு வார்த்தை அற்றுப் போன குடும்பங்கள். என்னவோ ...
மேலும் கதையை படிக்க...
'உன்னைப் பார்க்க ஆசைப்படுகிறேன்' ஒற்றை வரியில் ஒரு கார்டு. எழுதிய நபரின் பெயர் கீழே 'ரகு'. 'லெட்டர் ஏதாவது?' என்ற வழக்கமான கேள்விக்குப் பதிலாக இன்று ஒரு கார்டு. "ஏம்பா வேற எதுவும் எழுதலே?" என்றாள் ராஜி. "இன்னும் என்ன எழுதணும்?" "நிறைய எழுதலாம்" "என்னன்னு சொல்லேன்" புவனா கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
கொல்கத்தா காளி ரொம்ப ஃபேமஸ் என்று நண்பர் சொன்னார். வேறு ஒன்றும் இல்லை. நான் அலுவலக விஷயமாய் கொல்கத்தா செல்வதாகச் சொன்னேன் அவரிடம். "போயிட்டு வாங்க. நாலு ஊருக்குப் போயிட்டு வந்தாத்தான் உங்களுக்கும் அனுபவம் கிடைக்கும்" என்றார். ஆகக் கிளம்பி வந்தாச்சு. அலுவலக ...
மேலும் கதையை படிக்க...
எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு பெண்ணைச் சந்திக்கும்போது என்னென்ன உணர்வுகள் வருமோ? சந்தோஷமும் சில சங்கடங்களும் சந்திராவைப் பார்த்த்போது. உண்மையில் சந்திராதான் என்னை அடையாளம் கண்டு கொண்டாள். "பாலா.. நீதானே.. ஸ்ஸ்.. நீங்க" என் கணிசமான தொந்தி.. மூக்குக் கண்ணாடி.. முன் வழுக்கை.. காதோரம் மட்டுமின்றி ...
மேலும் கதையை படிக்க...
தகவல் தொடர்பு
உறவு சொல்ல வேண்டும்
கனவாகி!
என்னை ஏமாற்ற முடியாது
பரிசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)