வேஸ்ட் – ஒரு பக்க கதை

 

“என்ன அருணா இது, இப்படிச் சொதப்பிட்டியே?’ என்றான் கௌதம், மனைவியிடம்.

“என்ன சொல்றீங்க?’ என்றாள் அவள்.

“பின்னே? பர்த்டேக்கு டிரெஸ் எடுக்கப் போறேன்னு போய் எனக்குக் கண்றாவியான டிசைன்லே எடுத்திட்டு வநதிருக்கே.
பிள்ளைகளுக்காவது உருப்படியா எடுத்திருக்கியா?

தினேஷ் ஏற்கெனவே கலர் கொஞ்சம் கம்மி. அவனுக்கு எடுத்த சட்டையும் டார்க் கலர்லே… திவ்யாவுக்குக் காதிலே போடற
ரிங்ஸ் என்னடான்னா இத்தனை பெரிசா இருக்கு. எங்க ஆபீஸ்லே ரெண்டு மூணு நாளா ஆடிட் காரணமா கொஞ்சம் பிசியாயிட்டேன்ங்கறதாலே இப்படிப் பண்ணிட்டு வந்திருக்கியே?

சுருக்கமாச் சொல்றதுன்னா உன்னோட செலக்ஷன் எல்லாமே டோட்டல் வேஸ்ட் அருணா…’

“அப்படியா? நீங்களும் என்னோட செலக்ஷன்தான்கறதை ஞாபகம் வச்சுகிட்டுதானே பேசறீங்க?’ என்றாள் அவள், சலனமில்லாமல்.

– ஷேக் சிந்தா மதார் (மே 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
நாளுக்கு நாள் சூரியனின் உயரம் குறைந்து வந்தது. இரவின் நீளம் அதிகரித்தது. முந்திய இரவில் மெல்லிய பனித்தூறல் இருந்தது. ரொறொன்ரோவின் புகழ்பெற்ற மனநல மருத்துவர் ஒருவரைத் தேடி கணவனும் மனைவியும் வந்தார்கள். அதுவே முதல் தடவை அவர்கள் அங்கே வந்தது. வரவேற்புப் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன். ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியில் டிவிஎஸ் 50  உறுமிக்கொண்டு நின்றுவிட்டது. காலால் எற்றிக்கோண்டே சென்று ஓரமாக நிறுத்தினேன். சங்கிலி கழன்றுவிட்டது. சள்ளையாக இருந்தது. அதை கழட்டிமாட்டினால் கையெல்லாம் கறையாகிவிடும். என்னதான் கவனமாக இருந்தாலும் பாண்ட் சட்டையில் கறைபடியாமல் இருக்காது. சட்டை ...
மேலும் கதையை படிக்க...
சைதாப்பேட்டை டாட்*ஹண்டர் நகர் ’மாதிரி உயர்நிலைப் பள்ளி’யில் எட்டாவது வகுப்பில் படிக்கும்போது நானும் கைலாசமும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கடைசியில் ஒருவருக்கொருவர் ’காய் விட்டுக்கொண்டு’ பிரிந்தோம். காலப்போக்கில் ஒருவரை ஒருவர் மறந்தே போனோம். என் வாழ்வில் இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
தாயைப்போல் பெண்ணா…
""ரேணு... எத்தனை தடவை கூப்பிடறது... காது என்ன செவிடா?'' அப்பாவின் கத்தல், ஊரைப் பிளந்தது. ""இல்லீங்க... குக்கர் சப்தத்தில கேக்கலை.'' ""அந்த துண்டை எடுத்துக் குடு.'' அப்பாவின் கைக்கெட்டும் தூரத்தில், அவர் கால் கீழ் விழுந்து விட்ட துண்டை எடுத்து, பவ்யமாக கொடுத்து விட்டு, சமையலை கவனிக்க ...
மேலும் கதையை படிக்க...
மின் தூக்கியில் நான்காவது மாடிக்குப் போகும் வழியில், "நா பாஸாயிட்டேன்னு சொல்லிட்டாங்கல்ல. இன்னும் என்ன டெஸ்ட்ன்றீங்க?", என்று தீவிர முகபாவத்துடன் கேட்ட கமலாவிடம், "இது மெடிகல் டெஸ்ட். நாளைக்கி தான் உனக்கு அப்பாயிண்ட்மெண்ட் கெடச்சிருக்கு", என்றேன். நாங்கள் நேராக அங்கே போயிருக்க ...
மேலும் கதையை படிக்க...
பவித்ரா
கோட்டி
திருட்டுப் பட்டம்!
தாயைப்போல் பெண்ணா…
திரைகடலோடி,..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)