பரணியின் கல்யாணம்

 

நீ மச்சக்காரன்யா, உனக்கு வரப்போற பொண்டாட்டி இளவரசி மாதிரி இருப்பா, நல்லா பெரிய இடத்துல இருந்துதான் வருவா”

ஜோசியக்காரர் சொன்னதை அப்படியே சொக்கிப்போய் கேட்டுக் கொண்டிருந்தான்பரணி.

ஆனால், நாட்கள் வருடங்களாய் ஓடிக்கொண்டே இருந்தன இளவரசியைத்தான் இன்னும் காணோம்.

“குடும்பம் என்ற இரயிலில் எல்லோரும் ஏறிக் கொண்டு எனக்கு டாட்டா காட்டி செல்கிறார்கள். எனக்கு மட்டும் ஏன் இந்த இரயிலில் இடம் கிடைக்கமாட்டெனெங்கிறது?

இப்படி ஒரு தத்துவத்தை உதிர்த்துக் கொண்டிருப்பவன் நம் கதையின் ஹீரோ பரணீதரன் என்கிற பரணி தான்.

அவனுக்கென்ன குறைச்சல், சினிமா நடிகர்களை விட ஆள் கொஞ்சம் அழகாயத்தான் இருப்பான். வீட்டில் இரண்டாவது பையன். அவனுக்கு கீழ், மேல், ஆண், பெண், இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவனுக்குத்தான் ஒன்றும் அமையமாட்டேனெங்கிறது.

இதற்கும் இவன் பிரபலமான ஜோசியக்காரரிடம் தன்னுடைய ஜாதகத்தை காண்பித்திருக்கிறான். அவர் சொன்னார், பரணி நீமச்சக்காரன், இளவரசி மாதிரி ஒரு பெண் உனக்கு மனைவியாகப் போகிறாள். இதை கேட்டது முதல் பரணி நான்கு நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறான். அதுவெல்லாம் கடந்து போன கதை. ஜோசியம் சொல்லி மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. எல்லாம் தட்டியே போகிறது.

பரணி ஆள் மட்டுமல்ல குணமும் குழந்தைதான். இதற்கும் அவனுக்கென்று அவன் அப்பா தனியாக அந்த நகரில் ஒரு ஹோட்டல் வைத்து கொடுத்திருக்கிறார். நஞ்சை, புஞ்சை நிலங்களும் அவர்கள் குடும்பத்துக்கு நிறைய உண்டு. இவனை பொருத்தவரை பயபக்தியானவன். கனவு காணும் போதுகூட பெண்கள் வந்துவிட்டால் இரண்டடி தள்ளி நின்றுதான் பேசுவான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சில நேரங்களில் நடு இரவில் எழுந்து உட்கார்ந்து கொள்ளுவான், என்னடா என்று அவன் அப்பாவோ, அம்மாவோ கேட்டால், அசிங்கமா கனவு வருதுப்பா என்று அப்பாவியாய் சொல்லி முழிப்பான். சினிமா பார்த்தால்கூட ஓரளவுக்கு மேல் காட்சிகள் பார்க்க முடியாமல் இருந்தால் படக்கென கண்ணை மூடிக்கொள்வான். இப்படிப்பட்ட அப்பாவிக்கு இன்னும் பெண் கிடைப்பது குதிரை கொம்பாய் இருக்கிறது.

ஆனால் வியாபாரத்தில் படுசூட்டிகை. எல்லா நெளிவு சுழிவுகளையும் தெரிந்து வைத்திருக்கிறான். இவன் அப்பா அம்மாவிற்கு இவனுக்கு பெண் அமையாதது பெரும் கவலை. அப்படித்தான் ஏதாவது பெண்ணை விரும்புகிறானா என்றால் மூச்ச்..பேசக்கூடாது. இப்படிபட்டவனுக்கு எங்கு பெண் தேடுவது?

அவர்கள் ஊரில் இருந்த திரையரங்கு ஒன்றில் எதேச்சையாக ஒரு படம் பார்த்தான். அந்த படம் அவன் மனதை அப்படி சோகப்படுத்திவிட்டது.

அந்த படத்தின் கதையில் நாயகனும் நாயகியும் உருகி உருகி காதலிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் இருவரும் ஒன்று சேராமலேயே பிரிந்து விடுகிறார்கள். இதனால் இருவரும் தனித் தனியே சோகமாய் பாடல்கள் பாடி வருத்திக் கொள்கிறார்கள். இதை பார்த்தது முதல் பரணிக்கு அது நடிப்புத்தான் என்று புரிந்தாலும் அந்த சோககாட்சியில் நடித்த அந்த நடிகையிடம் எப்படியாவது ஆறுதலும், தன்னுடைய பிரச்சினைக்கு யோசனையும் கேட்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டான். ஆனால் ஒரு பிரச்சினை, அந்த படம் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் வெளி வந்த படம், அந்த பெண் நடிப்புலகை விட்டே சென்று விட்டதாகவும் கேள்வி.

ஒருவரை கண்டுபிடிக்க இப்பொழுதுதான் ஏகப்பட்ட வசதிகள் வந்துவிட்டதே. ஒரு வழியாக விலாசம் கண்டுபிடித்து ஒரு கடிதம் எழுதுகிறான். இந்த கடிதம் அந்த நடிகையிடம் இல்லை இல்லை இவள் இப்பொழுது ஒரு தொழிலதிபராக இருப்பவள், அந்த கடிதத்தை வாசித்துக் கொண்டிருக்கிறாள்.

இவளை பொருத்தவரை நடிப்பு என்பதை விட்டு நிரம்பகாலம் ஆகிவிட்டது. நல்ல வசதியில் பின்பலம் இருந்ததால் திரைஉலகில் பதினாறு வயதில் புகுந்தவள் “ஹோம்லிலுக்” என்ற பட்டத்துடன், எல்லா மொழிகளிலும் நிறைய கதாநாயகர்களுடன் உருகி உருகி காதல் செய்து நடித்திருக்கிறாள். ஆனால் அவள் மனதில் இதுவரை ஒரு ஆண்மகன் கூட உள்ளே நுழைய முடியவில்லை. அவளை பொருத்தவரை இது ஒரு தொழில், அவ்வளவுதான், மற்றபடி வசதிகள் நிறைய இருந்ததால் அடுத்து சாதிக்க தொழில் துறையில் புகுந்து விட்டாள். இந்த ஐந்து வருடங்களில் ஒரு கம்பெனியை நிர்வகித்து உலா வந்துகொண்டிருப்பவள்.

அவளுக்கு இவனின் கடிதம் வேடிக்கையாகவும் அதேநேரத்தில் இப்படியும் இந்த காலத்தில் ஒரு அப்பாவியா? என்ற எண்ணம் வந்தது. அம்மா அப்பா இவளை கல்யாணம் பண்ணிக் கொள்ள சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் இவனின் கடிதம் அவள் மனதில் சலசலப்பை உண்டு பண்ணிவிட்டது.

பரணிக்கு வந்த போன்கால் அந்த நடிகையிடம் இருந்து வந்தது, உங்களை சந்திக்க முடியுமா என்று கேட்டு.. பரணிக்கு ஒரே மகிழ்ச்சி. நாளையே வந்து பார்ப்பதாக சொன்னான். அவனை அவள் கம்பெனி விலாசத்துக்கே வரச்சொன்னாள்.

அவளை நடிகையாகவே நினைத்து போனவன், அங்கு அவள் ஒரு கம்பெனியின் நிர்வாகியாக இருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டான். அவளும் இப்படி அப்பாவியாய் கடிதம் எழுதியவன் ஒரு ஹோட்டலை நிர்வகித்து கொண்டிருப்பவன் என்றதும் ஆச்சர்யப்பட்டாள். அவள் மனதில் இவனும், இவன் மனதில் தாராளமாய் நுழைய, காத்திருந்த பெற்றோர்கள் சட்டு புட்டென்று கரம் பிடிக்கவைத்து கல்யாணம் செய்து வைத்துவிட்டனர். 

தொடர்புடைய சிறுகதைகள்
அம்மா அந்த இஞ்சீனியர் வந்தார்னா முதல்ல இந்த மண்ணை எல்லாம் எடுத்து அக்கட்டா போட சொல்லிடு, சொல்லிவிட்டு அம்மாவை பார்த்த மாலதி, அவள் எங்கோ வெறித்து பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து அம்மா அம்மா என்று உரக்க கூப்பிட்டாள். திடுக்கிட்டு விழித்த அம்மா என்ன? ...
மேலும் கதையை படிக்க...
ஒரு மரத்தில் ஆண் காகம் ஒன்றும் பெண் காகம் ஒன்றும் தன் குஞ்சுகளுடன் கூடு கட்டி வாழ்ந்து வந்தது.அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள நகரத்துக்கு வந்து, கிடைக்கும் உணவை உண்டு மாலை ஆனதும் தனது கூட்டுக்கு சென்றுவிடும் கூடவே குஞ்சுகளையும் கூட்டிக்கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
அடர்ந்த கானகத்தில் உள்ள ஒற்றயடி பாதையில் நடு இரவில் நிலா வெளிச்சத்தில் குதிரை ஒன்று சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த இரவிலும், குதிரையின் மீது அமர்ந்திருந்தவன் விழிப்புடன் சுற்றும் முற்றும் பார்த்தவாறே, கடிவாளத்தை கையில் பிடித்த வண்ணம் குதிரையின் அசைவுகளை ...
மேலும் கதையை படிக்க...
நம் நாடு சுதந்திரம் வாங்குவதற்கு பதினைந்து வருடங்கள் முன்பு அந்த ஊரின் நிலச்சுவாந்தாரர் திருவாளர் குப்பண்ணன் அவர்களுக்கும் திருமதி மாரியம்மாள் அவர்களுக்கும் ஒரே மகனாய் அவதாரம் எடுத்தார் ராசுக்குட்டி, ஏகப்பட்ட சொத்துக்களுக்கு வாரிசாக ராசுக்குட்டி பிறந்ததற்கு அவர்கள் வீட்டில் ஒரே கொண்டாட்டம். ...
மேலும் கதையை படிக்க...
"குமாரி ராதா" அவர்கள் நம்முடைய நிறுவனத்துக்கு கிடைத்த பெரும் சொத்து, அவா¢ன் அறிவுக்கூர்மையும் திறமையும் நம் நிறுவனத்தை உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல, மேடையில் பேசிக்கொண்டே போனார் கம்பெனியின் உரிமையாளர் சண்முகம்.அருகில் உட்கார்ந்திருந்த ராதாவுக்கு சங்கடமாக இருந்தது. இருக்கையில் இருந்தவாறே ...
மேலும் கதையை படிக்க...
மரகதபுரி மன்னர் நோய்வாய்ப்பட்டு படுத்து கிடந்தார். அவருக்கு பின் பட்டத்துக்கு வரவேண்டிய இளவரசர் மகேந்திரன் தனக்கு இராஜ்ய பரிபாலனை வேண்டாம் என்றும் தான் ஒரு வைத்தியராக இருக்கவே விருப்பம் தெரிவித்தார். இதனால் மரகதபுரிக்கு அடுத்து யாரை மன்னனாக்க போகிறார்கள் என்று மக்கள் ...
மேலும் கதையை படிக்க...
உக்கடம் பெரிய கடைவீதியில் உள்ள “கணபதி ஆயில் ஸ்டோர்” எண்ணெய் கடையில் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்த சாமியப்பண்ணன் உடல் நிலை சரியில்லாமல் ஒரு மாதம் விடுமுறை எடுத்து விட்டார். கணபதி ஆயில் ஸ்டோரில் மேலும் ஒரு பணியாளர் உண்டு, அவருடன் முதலாளி கணபதியப்பனும் ...
மேலும் கதையை படிக்க...
மகாராணி துர்கா கவலையில் ஆழ்ந்திருந்தாள். தனது கணவனின் படைகள் போரில் சற்று தொய்ந்து காணப்படுவதாக செய்திகள் பரவிக்கொண்டிருந்தது. எதிர் பார்த்த நண்பர்கள் தங்களது படைகளை அனுப்புவதாக் கூறியவர்கள் எதிராளியின் படை பலத்தை கண்டு பின் வாங்கி விட்டார்கள். இந்த நேரத்தில் உள் ...
மேலும் கதையை படிக்க...
ஏசி அறை! வெயிட்டிங்க் ஹாலில் நண்பர்கள் பெருமாளும், சரவணனும், தொழிலதிபர் சிவக்கொழுந்தை காண காத்திருந்தனர்.இருவருக்கும், ஏறக்குறைய வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும், செகரட்டரி இவர்களை இன்னும் ஐந்து நிமிடத்தில் கூப்பிடுவதாக சொல்லியிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இந்த அறையின் அலங்காரங்களும், தோரணையும் பெரும் ...
மேலும் கதையை படிக்க...
ஜான், ரமேஷ், முஸ்தபா,எழில், இவர்கள் அனைவரும் நண்பர்கள். கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பத்து மற்றும் ஒன்பதாவது படித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் பெற்றோர்கள் அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் அருகருகே குடியிருக்கிறார்கள். அவர்களும் குடும்ப நண்பர்களாக அந்த குடியிருப்பில் வசித்து கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் பள்ளிக்கு ...
மேலும் கதையை படிக்க...
அம்மா ஏன் இப்படி இருக்கிறாள்?
காக்கையின் அருமை
முடி துறந்தவன்
ராசுக்குட்டியின் கதை
புதிதாய் பிறப்போம்
மன்னர் தேவை
ராமுவின் துப்பறியும் மூளை
இராஜ தந்திரம்
புனிதன்
புத்தாண்டு சுற்றுலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)