பட்டுப் புடவை கௌரவம் – ஒரு பக்க கதை

 

பக்கத்து விட்டு பார்வதியைப் பாருங்க. பட்டுப் புடவையில் வந்ததாலே எல்லோரும் விழுந்து விழுந்து கவனிக்கிறாங்க. நீங்களுந்தான் இருக்கிறீங்களே!” கணவனிடம் சலித்துக் கொண்டாள் கமலா.

‘என்னாச்சு கமலா உனக்கு? ஏன் இப்படிப் பேசறே?

‘பின்ன என்னங்க. எவ்வளவு நாளா நான் உங்ககிட்டே புதுசா ஒரு பட்டுப் புடவை எடுத்துத் தாங்கன்னு கேட்கிறேன். இப்பப் பாருங்க, சாதா புடவையில வந்ததால என்னை யாராவது கண்டுக்கறாங்களா?”

”எல்லோரும் உன்னைப் பார்த்து சிரிச்சுட்டுத்தானே போறாங்க. மதிப்பும் மரியாதையும் நாம நினைக்குறதுலதான் இருக்கு” என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே புடவை வியாபாரி பழனிச்சாமி கமலாவைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றான்

”பார்த்தீங்களா…பார்த்தீங்களா…புடவைக்காரன் என்கிட்ட பேசாம அவகிட்ட பேசறதுக்கு ஓடுறானே” என்றவள் பார்வதியை பொறாமையுடன் பார்த்தாள்.

‘ஏம்மா பட்டுப்புடவை தவணையில எடுத்து எத்தனை வருஷமாச்சு? என்னைக்குத்தான் தரப் போறீங்க?”

பார்தியைப் பார்த்து கேவலமாகக் கேட்டான் பழனிச்சாமி.

- செல்வராஜா (ஏப்ரல் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
“என்னங்க சாப்பிடத் தட்டு வச்சாச்சு. சாப்பிட வரீங்களா?”-மனைவி ஜெயந்தியின் குரல் கேட்டு சங்கரன் வியந்தார். பசிக்குது. சீக்கிரம் சாப்பாடு போடு என்று சொன்னால்கூட டிவி சீரியலைவிட்டு எழுந்து வர மனமில்லாமல் கொஞ்சம் இருங்க. ‘இப்ப முடிஞ்சிடும், வரேன்’ என்று உட்கார்ந்திருப்பவள் இன்று ...
மேலும் கதையை படிக்க...
கேசவப் பணிக்கர். அவரைப் பார்க்க வேண்டும். தோளில் மாட்டியிருக்கிற பிளாஸ்க்கின் வார் நழுவி முழங்கைக்கு வராமல் அவ்வப்போது அதை மேல் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்க வேண்டும். மேலும் நடந்து போக வேண்டும். மாதவனுக்கு இதுதவிர உலகில் வேலையேதும் இல்லை. என்றாலும், உலகம் சுற்றிக் ...
மேலும் கதையை படிக்க...
"மாதவனுக்காக நீச்சல் கத்துக்கிட்டே! இப்போ ஒனக்கே பிடிச்சுப்போச்சு போலிருக்கே!" கணவனின் கேலியை ரசிக்க முடியவில்லை சாவித்திரியால். `ஏதோ, நாலு பேரைப் பாத்தாலாவது அவன் கொஞ்சம் தேறமாட்டானா என்கிற ஆசைதான்!" என்றாள், தழுதழுத்த குரலில். பூமியின்மேல் இரு பாதங்களையும் பதித்து நடக்க முடியாது, தன் தோளைப்பற்றி, ...
மேலும் கதையை படிக்க...
மஞ்சுளாவிற்கு சாப்பிடுவதில் அதிக விருப்பம் இருந்தது. எதையாவது சாப்பிட்டபடியே இருந்ததால் அவள் பூசின உடல்வாகைக் கொண்டிருந்தாள். சிறுவயதில் அப்பாவோ அல்லது உறவினர்களோ வாங்கி வரும் பொட்டலங்களில் மற்றவர்களை விட தனக்கு கொஞ்சமாவது அதிகம் கிடைக்கும் படி பார்த்துக் கொள்வாள். வீட்டின் கடைசி ...
மேலும் கதையை படிக்க...
‘ஐயா வந்துட்டாங்களா சார்?” என்று முத்துசாமி கேட்டான். ”ஒரு கேஸு விசயமாப் போயிட்டு வந்து படுத்துருக்காரு. வந்ததும் கூப்பிடுறேன்” என்று காவல் நிலைய எழுத்தர் கூறினார். ”வெளிய இருக்கோம் சார்!” என்று சொல்லிவிட்டு சலிப்புடன் வெளியே வந்தான் முத்துசாமி. காவல் நிலையத்துக்குத் தெற்குப் பக்கம் வேப்ப ...
மேலும் கதையை படிக்க...
தகுதி
பலகை
சுதந்திரம்
சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்
பாக்கியம் கொடுத்த பிராது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)