தோழிக்குப் பாராட்டு – ஒரு பக்க கதை

 

திடீரென அந்தச் சந்திப்பு நிகழுமென கமலி எதிர்பார்க்கவில்லை.

ஆர்த்தியும் அவளைக் கண்டு வியந்தாள். இருவரும் பூங்காவில் புல்வெளியில் அமர்ந்தனர். கமலியின் முகம் வாடியிருந்தது.

“கல்யாணமாகி சில மாதங்கள் கூட ஆகலை. அதற்குள்ள சிடுசிடுங்கிறாரு. சட்டைக்கு பட்டன் இல்லை. சாப்பபாட்டுல உப்பில்லைன்னெல்லாம் கோவிச்சுக்கிறாரு!’ என்று வருத்தப்பட்டாள் கமலா.

அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஆர்த்தியின் முகம் சட்டென மாறியது.

“நீ ஏன் கண் கலங்குறே?’ என்று ஆதரவாக கேட்டாள் கமலி.

“நம் இருவரது கணவருமே ஒரே அலுவலகத்துலதான் வேலை பார்க்கிறாங்க. உன் புருஷன் வேலை முடிஞ்சா நேரா வீட்டுக்கு வர்றாரு. உன்னோட எப்போதும் சேர்ந்தே இருக்காரு. ஆனா என் புருஷனோ அலுவலகத்துல உள்ள ஒரு பெண்ணோட ஊர் சுத்திட்டு, லேட்டா வீடு திரும்புறாரு. மேம்போக்கா என்னோட பழகுறாரு. இது தெரிஞ்சு தினம் தினம் நான் வேதனைப்படுறேன். சிரிச்சுக்கிட்டே எனக்கு துரோகம் செய்யும் என் புருஷனைவிட, கடுகடுப்பா, அன்பைச் செலுத்தும் உன் புருஷன் உயர்ந்தவர். நீ கொடுத்து வெச்சவ கமலி’ என்று சொன்னபோது கமலிக்கு என்னவோ புரிவது போல இருந்தது
.
அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய கமலியின் கணவன், அவளது கரம் பற்றி, “காலையில் நான் கோவப்பட்டதற்கு ஸாரிம்மா’ என்று மன்னிப்புக் கேட்டபோது “ஆர்த்தி… யூ ஆர் கரெக்ட்!’ என்று மனசுக்குள் பாராட்டி நன்றி சொல்லிக் கொண்டாள் கமலி.

- தமிழழகன் (மார்ச் 14, 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
அவசரமாகப் படியிறங்கித் தெருவின் திருப்புமுனை வரை, அசுர கதியில் சென்று மறையும் அம்மாவின் நிழலையே பார்த்தபடி சூர்யா ஜன்னலடியில் சோகம் கவிந்த முகத்தோடு உறைந்து போய் நின்றிருந்தாள். அவள் அப்படி நிற்பது இன்று நேற்றல்ல ஒரு யுகம் போல் நீண்டு செல்கிற ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம் - 1 | அத்தியாயம் - 2 | அத்தியாயம் - 3 | அத்தியாயம் - 4 கமலா எல்லா சர்விஸ் கமிஷன் பா¢¨க்ஷகளையும் எழுதி வந்தாள்.சிலவற்றில் ‘பாஸும்’ பண்ணினாள்.ஆனால் நேர்முக தேர்வில் கமலா அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியான ...
மேலும் கதையை படிக்க...
ரயில் ஏற்றிவிடுவதற்கு செல்வமணிக்கென்று யாரும் வரவில்லை. கோகிலாவுக்கு அவளுடைய அப்பா, அம்மா, பாட்டி என்று வந்திருந்தனர். வந்திருந்தாலும் அவர்களுடைய முகத்தில் சிரிப்பில்லை. ஆனால் கோகிலா கலகலப்பாகத்தான் இருந்தாள். புருசனோடு அதுவும் முதன்முதலாக ரயிலில் போகிறாள். அதுவே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்பா ...
மேலும் கதையை படிக்க...
திடீர் பெருமழை.சில நிமிடங்களுக்கு முன் உடலை உருக்கிய வெயில் இருந்ததாக நினைவு.மானுட மனதின் மாற்றத்தை ஒத்த வானிலை மாற்றம்! பொறுத்து கொள்ள முடியாத வயிற்று வலி காலை முதல்...பசியின் வலி ...எப்போது சாப்பிட்டேன் என்பது நினைவில் இல்லை! அநேகமாக 3 நாள் இருக்கலாம். இன்னும் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 வந்து இருந்தவர்கள் ல்லோரும் ஒரு வாய் வைத்தார் போல் ‘குழந்தை தங்க விகரம் போல கலரா,அழகா இருக்கு’என்று சொன்னார்கள்.லதாவுக்கும், கனேசனுக்கும் ‘மாஸ்டருக்கும்’ சந்தோஷ மாக இருந்த்து. அடுத்த நாள் ஒரு வாத்தியாரை அழைத்து வந்து வீட்டை ‘புண்யா ...
மேலும் கதையை படிக்க...
வேண்டும் ஒரு வாழ்க்கை வரம்
குழந்தை
பேராசை
முடிவிலி
தீர்ப்பு உங்கள் கையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)