சண்டை – ஒரு பக்க கதை

 

ஆபிஸ் முடிந்து வீடு திரும்பினேன். உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக அம்மா பொங்கினாள்.

‘அடேய்! இனி ஒரு நிமிஷம் கூட உன் மனைவியோட நான் இருக்க மாட்டேன். என்னை லட்சுமி வீட்டுல விட்டுடு!’

லட்சுமி என் தங்கை.

‘ஏம்மா…என்ன பிரச்னை’ என்றேன். பதிலே இல்லை.

‘எல்லாம் உன் மனைவி சொல்லுவா. கேட்டுக்க. அவ பேச்சைக் கேட்கிறவன்தானே நீ!” என என்னை ஒரு இடி இடித்து விட்டு ‘நீ என்னடா கொண்டு போய் விடறது? நானே போய்க்கிறேன்!’ என்று உடனே புறப்பட்டு விட்டாள் அம்மா

மனைவியைத் தேடினேன். மார்க்கெட் போய்விட்டு சாவகாசமாக வந்தாள்

என்ன பிரச்னை…ஏன் அம்மா கோவிச்சுக்கிட்டு போறாங்க…? – கேட்டேன்

அது ஒண்ணுமில்லீங்க. இங்கே மறுபடி பவர்கட் பிரச்னை வந்துடுச்சா, அதனால முன்ன மாதிரி உங்கம்மாவால சீரியல்
பார்க்க முடியலை. சீரியல் பார்க்கலைன்னா உங்கம்மாவுக்கு பித்துப் பிடிச்சது மாதிரி ஆயிடும். லட்சுமி வீட்டுல
இன்வெர்ட்டர் போட்டிருக்காங்கன்னு கூப்பிட்டிருக்கா. அங்கே போனா நிம்மதியா டி.வி.பார்க்கலாம்னுதான் என் கூட
சண்டைங்கிற மாதிரி ஒரு நாடகமாடிட்டு கிளம்பிட்டாங்க. நீங்க பயப்பட வேண்டாம்” என்றாள்.

‘நல்லா கெளப்புறாங்கடா பீதிய’ என்று என் மனம் நிம்மதியானது.

- பெ.பாண்டியன் (ஏப்ரல் 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
“இன்னிக்கு சத்யா திரும்ப ஆபீசுக்கு வந்திருந்தாரும்மா!” “அவர் பிழைச்சதே பெரிசு! இப்ப ஒடம்பு நல்லா ஆயிடுச்சா?” `உருவத்தில் பழைய சத்யாதான். ஆனால், அந்த இனிமையான குணத்தில்தான் ஏதோ மாசு படிந்துவிட்டதுபோல் இருக்கிறது,’ என்று தாயிடம் சொல்ல கலாவின் மனம் இடங்கொடுக்கவில்லை. கடந்த சில மாதங்களாக, மருத்துவமனைக்குப் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய என்னுடைய ‘தனிமை’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) கோபத்துடன் செருப்பை மாட்டிக்கொண்டு சபரிநாதன் தெருவில் இறங்கி நடந்தார். காந்திமதி அவளுடைய வீட்டுத் திண்ணையில் தூணை மார்போடு கட்டியபடி நின்று கொண்டிருந்தாள். கடலின் அலை வேகமாகப் பின் வாங்குவது போல, ...
மேலும் கதையை படிக்க...
நான் மனைவியைத் தேடி வீட்டிற்குள் சென்றபோது அவள் குளிப்பை முடித்து, அழகான சேலையில்… சுவாமி தரிசித்து, பூச்சூடி, குங்குமப் பொட்டிட்டுப் புனிதமாகத் தோன்றினாள். “இந்த வீட்டுக்குக் குடிவந்த நாளிலிருந்து இப்பதான் என்ர மனம் நிறைஞ்சிருக்கு!” என்றேன். அவள் நாணம் மேலிட, “எப்பிடி வெளிக்கிட்டாலும் உங்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
மாமியார் மருமகளை மாவடுக்கிற சட்டுவத்தை எங்கவச்சே மாமயிலே எனக் கேட்க மருமகள் அல்லையிலே வைச்சிட்டனா, அலுங்கி நடந்துட்டனா, கொண்டையிலே வெச்சிட்டனா, குலுங்கி நடந்துட்டனா, தூரத்து பெண்களுக்கு தூக்கி குடுத்தனா, இல்லாப் பொறப்புக்கு எடுத்து குடுத்துட்டனா, கட்டடா பல்லாக்க, காலமே போய் சேர்வோம் ...
மேலும் கதையை படிக்க...
அம்மாவை அப்பாவை எதிர்த்துக் கொண்டு, வடபழனி முருகன் கோயிலில் மாலை மாற்றிக் கொண்டு (காதல்) கல்யாணத்தை ரிஜிஸ்டர் செய்துவிட்டு, ஆசைக்கணவனுடன் புது வீட்டில் குடியேறி ஒரு மாதமாகிவிட்டது. ‘சார்…கூரியர்’ யார் கிட்டேயிருந்து?’ ‘அம்மாகிட்டேயிருந்துதான்.’ ‘இப்பவாவது ஞாபகம் வந்ததே. என்ன எழுதியிருக்காங்க..?’ ‘என்ன எழுதியிருப்பாங்க…உங்களை மறந்துட்டு வீட்டுக்குத் திரும்பி வான்னூ ...
மேலும் கதையை படிக்க...
வீணில்லை அன்பு
தவிப்பு
அடைக்கலம்
மனசு ஒரு கதையாய்
என்ன எழுதியிருப்பாள்..? – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)