Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

களிமண் கணினி

 

முல்லைத்தீவுக்கு அண்மையில் உள்ள விவசாயக் கிராமமே முத்துஐயன்கட்டு. இங்கு வாழ்பவர்கள் தமது ஜீபநோபாய தொழிலாக விவசாயத்தினையே மேற்கொண்டு வருகின்றனர். விவசாயம் இல்லையெனில் இவர்களுக்க வாழ்க்கையே இல்லை. பல்வேறு பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தினை கொண்டே தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இவ்வாறு விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தினைக் கொண்டு தமது சீவியத்தை நகர்த்தும் குடும்பமே வேலுவின் குடும்பம்.

மல்லிகா தோட்டத்தில் வேலை செய்யும் வேலுவுக்கு தேனீர் கொடுத்துவிட்டு இரவுக்கு சாப்பாடு செய்ய வேண்டும் என்ற நினைப்புடன் வீடு வந்தாள். கண்ணன் மாமரத்தின் கீழ் விளையாடிக் கொண்டிருந்தான். ‘டேய் கண்ணா விளையாடியது காணும் கிணற்றடிக்கு போய் முகத்தைக் கழுவிற்று வந்து படியட நாளைக்கு பள்ளிக்கூடம் போகவேணுமெல்ல’ என மல்லிகா சத்தம் போட்டதை காதில் போடது அவன் விளையாட்டில் ஆழ்ந்திருந்தான்.

மீண்டும் மல்லிகா அழைக்க கண்ணன் கிணற்றடிக்கு சென்று முகம் கழுவிவிட்டு, சாமிப்படத்துக்கு முன்னால் சென்று எதனையோ கடவுளிடம் வேண்டி பின் படிக்க ஆயுத்தமானான்.

கண்ணனின் விளையாட்டோ வித்தியாசமானது அவன் மற்ற பிள்ளைகள் போல் குட்டான் சோறும், பல்லாங்குழி; அவன் விளையாட்டல்ல, மண்ணால் கொம்பியூட்டர் செய்து அதனை தான் இயக்குவது போல் விளையாடுவான். இவ் விளையாட்டில் அவனுக்கு நேரம் போறதே தெரியாமல் மணிக்கணக்கில் விளையாடுவான்.

வேலு தோட்ட வேலையை முடித்துக் கொண்டு வந்தான். கண்ணன் படிப்பதை மல்லிகாவும், வேலுவும் பார்த்துக் கொண்டிருந்தனர். கண்ணன் புத்தக பைக்குள் எல்லாவற்றையும் சரிபார்த்து வைத்து விட்டு ‘அம்மா பசிக்குது’ என்றான். மூவரும் நன்றாக சாப்பிட்டுட்டு கண்ணனின் செல்ல நாய்க்குட்டிக்கும் வைத்துவிட்டு படுத்துக்கொண்டனர்.

கண்ணன் படுத்ததுமே தூங்கிவிட்டான். மல்லிகா வேலுவை செல்லமாக அழைத்து

‘என்னங்க கண்ணன் விளையாடுற இடத்தை பார்த்தனிங்களே ஓரே கொம்பியூட்டார செய்து விளையாடுறான் அவனுக்கு ஒன்டு வேண்டிக் கொடுங்களேன்’

‘நான் என்ன வைச்சுக்கொண்டா அவனுக்கு வேண்டிக் கொடுக்காமால் இருக்கிறன்’ என்றான் வேலு.

‘போன வருச காலபோகத்துக்கு அடைவு வைச்ச சங்கிலி இருந்தாலும் அவனுக்கு வேண்டிக்கொடுத்திருப்பன்’ என முனுமுனுத்தால் மல்லிகா.

இருவரும் தங்களுடைய ஓரெ பிள்ளைக்கு எப்படியாவது ஒரு கம்பியுட்டர் வேண்டிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் தற்போதுள்ள ஆசை. இதற்கு அவர்கள் மலைபோல நம்பியிருப்பது அவர்கள் தோட்டத்தில் வளர்ந்துள்ள கத்தரிச்செடியைத்தான். இம்முறை நல்ல விலைக்கு விற்க முடிந்தால் நிச்சயம் வீட்டில் ஒரு கொம்பியூட்டராக இருக்கும்.

விடிய வெள்ளனையே வேலு தோட்டத்துக்கு சென்று கத்தரிக்கு செடிக்கு மருந்தடித்து விட்டு. நேற்று மாலை பிடுங்கிய கத்தரிக்காயை சந்தைக்கு கொண்டு செல்ல ஆயத்தமானான்.

‘ஏய் மல்லிகா உவன் பள்ளிக்கூடாம் வெளிக்கிட்டானே அதுல போகேக்க விட்டுட்டு போறன்.’

‘ஒரு கொஞ்ச நேரம் பொறுங்கோ இப்பத்தான் சாப்பிட்டுட்டு கைகழுவிறான் இந்தா வந்திடுவான்’ ஏன சொல்லிக்கொண்டு கண்ணனின் புத்தக பையை சரிசெய்து கொண்டு சாப்பாட்டு பெட்டியையும், தண்ணீர் போத்தலையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

கண்ணன் சைக்கிலில் முன் ஏறி அமர்ந்தான். பின்னுக்கு கத்தரிக்காய் மூட்டை முன்னுக்கு மகன் ஏதோ ஒரு புரிப்போடு வேலு படலை மதித்துக்கொண்டு வேகமாக புறப்பட்டான்.

கண்ணனனை பள்ளிக்டாத்தில் இறக்கி விட்டு ‘கவனமா படிக்கனும் குழப்படி விடக்கூடாது அச்சாப்பிள்ளையா இருக்கனும்’ என கூறிவிட்டு மகனிடம் இருந்து விடைபெற்றான்.

பள்ளிக்கூடத்தில் அதிபர் அங்கோடுவதாகவும் இங்கோடுவதாகவும் திரிந்தார். ஒரே பரபரப்பு நூலகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த இருபத்திநான்கு கொம்பியூட்டர்களின் மவுஸ், கிபோட் மற்றும் கேபிள்கள் எல்லாவற்றையும் எலி விளையாடிவிட்டது.

எல்லா ஆசிரியர்களும் எலி எப்படி உள்ளே போனது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக தடைய அறிவியல் விற்பனர்கள் போல ஆய்வு செய்துகொண்டிருந்தார்கள்.

‘பல இலட்சம் செலவழித்து கட்டின இக்கட்டடத்துக்குள்ளே எலி போகாதே அப்படியிருக்க என்னட்டு போனது’ என அதிபர் மாறி ஆசிரியர்கள் மாறி ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள்.

நூலகம் கட்டப்பட்டு ஒருவருடத்துக்கு மேலாகின்றது. ஆசிரியர்களின் ஓய்வு நேரத்தை கழிக்கும் இடமாகவே சிறப்பாக செயற்பட்டு வருகின்றதே தவிர அதனால் மாணவர்களுக்கு எள்ளளவும் பயனில்லை.

ஆசிரியர்களின் ஆய்வின் முடிவில் உடைக்கப்பட்ட ஜன்னல் வழியாகவே எலி வந்தமையை கண்டுபிடித்தனர்.

யார் அந்த ஜன்னல் கண்ணாடியியை உடைத்தது? அவர்களுக்கு எழுந்த கேள்வி.

மாணவர்களின் மீது தான் எல்லோருக்கும் சந்தேகம்.

எல்லா மாணவர்களையும் அழைத்து ‘நூலகத்தின் பின் ஜன்னல் கண்ணாடியை யார் உடைத்தெதென்று எங்களுக்கு தெரியும், அதை ஒருவர் பாத்துக்கொண்டிருந்திருக்கிறார் அவரையும் எங்களுக்கு தெரியும் அவர்களா சொன்னால் பிரச்சினையில்லை நான் சொன்ன பிறகு தெரியும் தானே’ என முழங்கினார் அதிபர்.

கண்ணனுடன் ஆறாம் வகுப்பில் படிக்கும் கண்ணனின் நெருங்கிய நன்பன் ‘சேர் கண்ணன் தான் அண்டைக்கு கல்லால் உடைத்தவன்’

அந்த ஓட்டையால் பார்த்த கொம்பியூட்டர் தான் கண்ணன் விட்டில் மண் கொம்பியூட்டராக மாறியது.

கையும் மெய்யுமாக பிடிபட்ட பிறகு என்ன செய்வது. எல்லா மாணவர்களுக்கும் முன்வைத்து கண்ணனுக்கு தண்டணை வழங்கப்பட்டது.

‘நாங்கள் என்னட என்றால் பழதாபோயிடுமே என்று அதுகல அப்படியே வைத்திருக்கிறம். உன்ர விளையாட்டு புத்தியால எல்லாம் சரி’

அதிபருக்கு கள்ளனை பிடித்து தண்டனையும் கொடுத்தபிறகு நல்ல திருப்தி.

கண்ணன் நண்பனை வெறுக்கவா, அதிபர வெறுக்கவா ஒன்றும் புரியவில்லை. அன்று முழக்க அவனுக்கு எப்பட பள்ளிக்கூடம் முடியும் என்றே இருந்ததே தவிர பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை.

வேலுவுக்கு இன்றைக்கு வழமைபோல் ஏமாற்றமே நல்ல விலைக்கு விற்கலாம் என கொண்டு வந்த கத்தரிக்காய்க்கு பெரிதாக விலையில்லை. ‘இராணுவமும் கத்தரிக்காய் கொண்டுவந்ததால் இன்றும் கத்தரிக்காயின்ற விலை நல்ல விழுந்து போச்சு..’ என சந்தைக்கு மரக்கறி கொண்டுவந்த மற்றைய விவசாயிகள் தமக்குள் முனுமுனுத்துக் கொண்டார்கள். (வடஇலங்கையில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் தமிம் மக்களின் விளைநிலங்களில் பயிர்செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர்)

பல எதிர்பார்ப்புக்களுடன் வேகமாக வந்த வேலு அவர்கள் கேட்கும் விலைக்கே கத்தரிக்காயை கொடுத்தான். திரும்பி வீடு செல்லும் போது நாளைக்கு இறைப்பதற்கு மண்ணென்னை மட்டும் வேண்டவே கத்தரிக்காய் கொடுத்த காசு போதுமாக இருந்தது.

கண்ணன் இன்று வழமை போல் விளையாடவில்லை அவன் அப்பாவின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தான்.
மல்லிகா தோசைக்கு மாவரைத்துக் கொண்டிருந்தாள். கண்ணன் அம்மா வேலை செய்வதை பார்த்துக்கொண்டு இருந்தான். படலையில் அப்பா வரும் சத்தம் கேட்டதும். ‘அப்பா அப்பா …’ என கத்திக்கொண்டு ஓடினான்.

வேலுவை கட்டியணைத்த கண்ணன் விம்மி விம்மி அழுதான்.

‘ஏன்ரா அழுகிறாய் என்ன நடந்தது சொல்லன்ரா’

‘அப்பா எனக்கொரு கம்பியுட்டர் வேணும்’

வேலுவும், மல்லிகாவும் மகனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமால் திகைத்து நின்றனர். 

தொடர்புடைய சிறுகதைகள்
பானுவுக்கும் அவளுடைய மூன்று பிள்ளைகளுக்கம் மிகுந்த சந்தோஷமான நாள். தடுப்பில் இருந்த நகுலன் இன்று விடுதலை. அந்த செய்தி கேட்டதில் இருந்து அவள் உள்ளத்தில் பெரும் சந்தோஷம். யுத்தம் நிறைவடைந்து எல்லோரும் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது, நகுலனை ஓமந்தை இராணுவ முகாமில் வைத்து கைது ...
மேலும் கதையை படிக்க...
குண்டுகளின் வெடியோசை காதைப்பிளக்கின்றது, மல்ரிபரல் எறிகணையில் இருந்தும் ஆட்டிலெறி எறிகணைகளும் வீழ்ந்து வெடித்து கொண்டு இருக்கின்றது. பலர் உடல் சிதறிப் பலியாகியவண்ணம் இருக்கின்றார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் கயங்களுடன் எங்களைக் காப்பாறுங்கள் காப்பாற்றுங்கள் என கத்தியவண்ணம் இருக்கின்றனர். சுதா ...
மேலும் கதையை படிக்க...
சுமதி தெரிந்தவர்கள் எல்லோருக்கும் போன் எடுத்து 'எங்கேயும் தெரிஞ்ச இடத்தில வீடு வடகைக்கு இருக்கிறதா' என விசாரித்துக் கொண்டிருந்தாள். தாய் வசந்தி அடுப்படியில் சமையல் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். மகள் வேலைக்கு போகும் முன் சமைத்து முடிக்க வேண்டும் என்ற வேகத்தில் ...
மேலும் கதையை படிக்க...
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. இந்த பழமொழியை தை மாதம் பிறக்கும் முன்பே எல்லோரும் சொல்லிக்கொள்வார்கள். வழி பிறக்குதோ இல்லையோ ஒரு மன ஆறுதலுக்காவது சொல்வதுண்டு. காவிதாவுக்கும் அவளுடைய பத்துவயது மகன் திணேஸ்சுக்கும் கடந்த ஆறு வருடங்களாக தை ...
மேலும் கதையை படிக்க...
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்திருவிழா நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் அலைகடலென திரண்டு திருவிழாவில் சங்கமம் ஆனார்கள். காந்தனும் தனது மனைவி பிள்ளைகள் ஐவரையும் அழைத்துக்கொண்டு திருவிழாவுக்கு வந்திருந்தான். சன நெரிசலில் பிள்ளைகள் தவறிவிடுவார்கள் என அவர்களை காந்தனும் மனைவி ரதியும் கண்ணும் ...
மேலும் கதையை படிக்க...
அன்று விடுமுறை நாள் சீலன் பாடசாலை செல்லவில்லை. இன்றைக்கு தாத்தாவுடன் நல்ல விளையாட்டுத்தான் என நினைத்துக்கொண்டு வெளியே வந்த சீலன் தாத்தா வழமையா இருக்கும் இடத்தில் காணவில்லை. தாத்தாவை எழுப்புவதற்காக பாடுத்திருக்கும் அறைக்குச் சென்றான். அங்கு தாத்தாவை காணாததால் அலறிக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
காலை வெய்யில் இதமாக அடித்துக் கொண்டிருக்க படலையடியில் 'றீங் றீங்' பெல் சத்தம் யாரெனப் பார்போம் என வெளியில் வந்தாள் துளசி. 'அட செந்தில் அண்ணையே... வாங்கோ' என்று கூப்பிட்டுக் கொண்டே படலையை நோக்கி நகர்ந்தாள் துளசி. 'அது பிள்ளை வந்து.. வீட்டுத்திட்டத்துக்கு ...
மேலும் கதையை படிக்க...
சாட்சி
நினைவுகள்
வீடும் வளவும்
அடுத்த பொங்கலுக்கு!
ஒரு போதும் கூடாது….
தாத்தா
துளசி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)