ஓய்வு ஊழியம்

 

மாமா, கதவை சாத்திகிடுங்க!நான் மைதானம் வரை போய் வருகிறேன். படுத்து இருங்க! நான் வந்ததற்கு அப்புறம் நீங்க எந்திரிக்கலாம். எனச் சொல்லிவிட்டு மைதானத்திற்கு வாகனத்தை எடுத்துக்கொண்டு நடைப்பயிற்சி செய்ய கிளம்பினார் மூர்த்தி. வாகனத்தை அவர் இயக்க, அவரது வாழ்க்கையை இயற்கை இயக்கியது.

மைதானம் போக பத்து நிமிடம் ஆகும்,அதுவரை நாம் மாமா,மற்றும் மூர்த்தி பற்றிப் பார்ப்போமா?.

மாமா என்று அழைத்தவர் மூர்த்தியின் மாமானார், ராமலிங்கம், வயது 88, நீரிழிவு மற்றும் தனிமை எனும் நோய் பாதித்தவர். ஒரு மகன் மற்றும் ஒரு மகளின் தந்தை.

மகனுக்கு கல்யானம் செய்து வைத்தார், வெளிநாட்டில் வசிக்கிறார்.

மனைவியை இழந்து ,மகளுடன் இருந்தவர், மகளும் தன் மகளின் இறுதியாண்டு மருத்துவ படிப்புக்காக .. சென்னையில் வாசம் செய்ய வேண்டிய கட்டாயம்.

இங்கே, மாமனார் மற்றும் மருமகன் ஒரு வருடமாக தனிக் குடித்தனம்.

காலை முதல் கையும் ஓடலை, காலும் ஓடலை, ஆசிரியர் மூர்த்திக்கு.

இருக்காதா பின்னே? இன்னியோட அவரோட சர்வீஸ் முடியப்போகுது.

ஆசிரியரா சேர்ந்து இதே பள்ளியில் தலைமை ஆசிரியரா பணி ஓய்வு இன்றுடன் .

மாலையோட வீட்டுக்குப் போனால் , அவ்வளவுதான். நாளை முதல் இந்தப் பள்ளிக்குள் ஆசிரியானாக வரமுடியாது. காலை கிளம்பும் போதே மனைவிச் சொல்லித்தான் அனுப்பினாள். அழாதிங்க, நல்லா சந்தோஷமா பள்ளியிலே நேரத்தை செலவிட்டுட்டு வாங்க, என்று.

இவருக்குத்தான் ஒரே டென்சன், பென்சன் பேப்பரஸ் எல்லாம். ஒழுங்கா வருமா? நம்ம மேலே யாரும் எதுவும் குறை இல்லாமல் இருக்கனும் என ஒரே கவலை.

இது இந்த காலத்தில் அரசு பணியாளரின் முக்கியமான கவலை. மூத்த ஆசிரியை ஒருவர் வந்து இவரிடம் பேசலானார். அப்புறம் சார்!! ஓய்வுக்குப் பிறகு என்னச் செய்யப் போறீங்க!

இல்லைங்க! பெரிசா ஒன்றும் யோசிக்கல! என் மனைவி எங்க ரெண்டு பிள்ளைகளை படிக்க வச்சு,திருமணம் செய்து வைக்கறதுக்குள்ளே ரொம்பவே சிரமப் பட்டுட்டா!

அவளுக்கு உதவியா இருந்து எங்க வாழ்க்கையை இனிமேதான் வாழனும். என்று தன் நிறைவேறப்போகாத ஆசையை பகிர்ந்து கொண்டு இருந்தார்.

நாம ஒன்று நினைச்சா எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசன், என்றார்

அப்பர் பெருமான். சும்மாவா?

பள்ளி, பரிசுகள் அளித்து, ஒரு சாதாரனமாக பணியில் சேர்ந்த மூர்த்தி என்கிற மனிதனை நல்ல ஆசிரியராக, நல்ல தலைமை ஆசிரியனாக விளங்கியவரை,
நல்ல பண்பாளாரை பாராட்டி, விடைக் கொடுத்தது. மற்றொரு பணிக்காக..

மைதானம் முடித்து, மாமாவுக்கு பிடித்த கீரை,புடலங்காய் வாங்கிக் கொண்டு வீடு வந்தார்..

மாமா! மாமா! எங்கே போனார் கழிப்பறையில் சப்தம் வர.. நிம்மதியானார்.

வாய்தான் மாமா என அழைக்கும். தனது அப்பாவை சிறு வயதிலே இழந்ததால் மாமா மீது அளவு கடந்த பாசமும் ,மரியாதையும் கொண்டவர் மூர்த்தி.
மாமாவும் மூர்த்தியிடம் பாசத்துடன் தனது இரண்டாம் பிள்ளை போல் பழகுவார்,ஆனால் மாப்பிள்ளை என மரியாதை கலந்த பயம் அதிகம் பழகாததால் உண்டு.

ஏன் மாமா உடம்பு ஏதும் பண்ணுதா? முகமே சரியில்லையே? என்றார்.

என்னோமோ பண்ணுது சொல்லத் தெரியலை. வெளியே சரியா போகமாட்டுது. ரொம்ப கஷ்டமா இருக்கு. மூனு நாளா சரியா போகலை!

நீங்க சரியா சாப்பிடறதில்லை, அதனால் கூட இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிங்க, மனசு கவலையா இருந்தாலும், அப்படித்தான் இருக்கும் மாமா,

எனக்கென்ன கவலை நீங்க இருக்கும்போது,என கணிவுக் காட்டினார்.

வாங்க கும்பகோணம் போயிட்டு காண்பித்து விட்டு வந்துடலாம்.

வேணாம், நாளைக்குத் தான் என் பையன் வாரானே,அவன் கூட போகலாம்,

அவனுக்கும் எம் மேலே எவ்வளவு அக்கறை தெரியுமா? நீங்க சிரமப்படாதிங்க, இரண்டு நாள் பொறுத்துக்குங்க! நான் வந்துவிடுகிறேன் என்றான்.

இதிலே என்ன சிரமம் மாமா? நாம போகலாம், உங்க முகமே காட்டுதே! எவ்வளவோ சொல்லியும் , மறுத்துவிட்டார்.

மறுநாள் மகன் வரவே, மாமா ,நான் இரண்டு நாள் லீவுலேதான் வந்தேன்,சட்டுனு போகனும், வரும்போதே சென்னையிலே உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்க ஏற்பாட்டை வெளிநாட்டிலிருந்தே செய்து விட்டேன்,அதனால் அப்பாவை அழைத்துப் போகவே வந்தேன். என்றார்.

அதிரந்துப் போனார்! மூர்த்தி. ஏன் இங்க என்ன பிரச்சினை, இல்ல மாமா சரியா வராது, உங்களுக்கும் சிரமம்.உங்க ஓய்வு காலத்திலே அக்காவை பிரிந்து நீங்க தனித் தனியா இருக்கிறது, எனக்கு கஷ்டமா இருக்கு மாமா! இதுலே அப்பா வேற, எங்க மேலே உனக்கு இருக்கிற அக்கறைக்கு நன்றி, நான் செய்த பணிக்குத்தான் ஓய்வே தவிர எனக்கு இல்லை, என்னைப் பொறுத்தவரை ஓய்வுக்குப் பிறகு ஊதியத்திற்காக உழைக்கிறதை விட ஊழியம் செய்யறதுதான் சிறப்பு.

மாமாவாலே ஒரு கஷ்ட்டமும் எனக்கு இல்லை,அவருக்குத்தான் என் சாப்பாட்டை சாப்பிட வேண்டிருக்கு. அவருக்கு உணவை விட, உணர்வை புரிந்துக் கொள்ள ஒருவர்தான் இப்போதைய தேவை.

காசுக் கொடுத்து சொளகரியம் பண்ணித் தருவதை விட காது கொடுத்து அவங்க அசொளகரியத்தை கேட்பதைத் தான் விரும்புவாங்க!

தீர்வாக மாமாவைத் தனிமைப்படுத்துவது சரியில்லை. நான் பார்த்துக்கிறேன், நீ கவலையை விடு. என்றார்.

பக்கத்து ரூமில் இருந்த மாமா இவர்கள் பேசியது காதில் விழ, வெளியே வந்தவர் விழியோரம் நீர் கோர்த்து இருந்தது. என்ன மாமா? என்னாச்சு?

மனசும் லேசான மாதிரி இருக்கு, ரொம்ப நாளைக்குப் பின்னே இன்னைக்குத்தான் கல கலனு வெளியே போச்சு,பாரம் குறைந்த மாதிரி இருக்கு,

எனக்கு முதியோர் காப்பகம் போய் சொகுசா இருக்கிறதை விட என் மகன் கையால செய்கிற புடலாங்காய் கூட்டேப் போதும் என்றார்

மூவரும் அன்பின் அலையில் திக்கு முக்காடிப் போயிருந்தனர். 

தொடர்புடைய சிறுகதைகள்
ஏங்க ,கொஞ்சம் அடுப்பிலே பாலை வைங்க, இதோ வந்து காபி தாரேன். சந்தானம், காலை நடைப் பயிற்சி முடித்து வந்தவனைப் பார்த்து குளித்துக் கொண்டு இருந்த கீதா கூறினாள். சரி சரி,வைக்கிறேன். என பாலை அடுப்பில் வைத்தான். குளித்து முடித்து வந்த கீதா, ஒன்னுத்துக்கும் லாயக்கில்லே, ...
மேலும் கதையை படிக்க...
நாலுவேதபதி கிராமம். அக்ரஹாரத்து பெருமாள் கோயில் தெரு, ஆவணி அவிட்டம் நாளில் கூட்டம் களை கட்டி இருந்தது. தாத்தா,அப்பா,பேரன் என வரிசைக்கட்டி குடும்பம் குடும்பமாக அமர்ந்து வேதாராம்பம் எனும் யஜூர் உபகர்மா மற்றும் புனிதநூல் அணியும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், கோயிலின் வாயிலில் வாழைமரம், மாவிலைத் ...
மேலும் கதையை படிக்க...
யோவ்..இங்க வாய்யா! இதை போட்டுக்க, 202 எண் கொண்ட கைதி உடையை கொடுத்தனர். ஒழுங்கு மரியாதையா நடந்துக்கனும், இருக்கிற இடம் தெரியாம இருந்துக்கனும், அங்கே போ! உடல் பரிசோதனைக்கு டாக்டர் வருவார்! என்று விரட்டினர். மருத்துவர் வந்த பின் அவரது உடல் முழு பரிசோதனை ...
மேலும் கதையை படிக்க...
மாவட்ட நீதிமன்றம், காலை நேர பரபரப்பு,புதிய நீதிபதி திரு. ராமன், பதவியேற்று இன்று முதல் அமர்கிறார், வழக்கத்திற்கு மாறாக போலிஸ் பாதுகாப்பு,குழு குழு வாக வழக்கறிஞர்கள்,பல தாலுக்கா மாஜிஸ்ட்ரேட்கள்,முன்சீப்கள், வாழ்த்துச்சொல்ல கூடியிருந்தனர். நீதிபதி அவர்களின் சொந்த மாவட்டம் இது,இங்கேதான் பள்ளி ,மற்றும் இளங்கலை படிப்பை ...
மேலும் கதையை படிக்க...
அவையோருக்கு என் கழிவான வணக்கம்! மன்னிக்கவும் , கனிவான வணக்கம்! கைத்தட்டல்... கழிவு என்றவுடன் எப்படி நாம் முகம் சுழிக்கின்றோம்? ஆனால் முகம் சுழிக்கின்ற விஷயம் இல்லை. முகம் மலரும் விஷயம்!? ஆம் ! அதன் அருமை அவதிப்படுவோருக்கு மட்டுமே புரியும். கழிவு வராதவரை கேட்டுப்பாருங்கள்! அல்லது ...
மேலும் கதையை படிக்க...
ஒன்டிக் கட்ட
அரையுயிர்
கைதி எண் 202
ஒளஷதலாயம்
கழிவறை

ஓய்வு ஊழியம் மீது ஒரு கருத்து

  1. Janakiraman says:

    Mr.Ayyasamy,superb. keep it up. Relation between father in law and son in law is never told in recent past. wishes.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)