அன்புள்ள அப்பா… – ஒரு பக்க கதை

 

இரண்டு வருடங்கள் கழித்து இப்போதுதான் அப்பாவைப் பார்க்கிறாள் ரம்யா. தம்முடன் படித்த மகேஷைக் காதலித்து ஊரை விட்டு ஓடியவள், எத்தனை நாள் இரவில், அப்பாவுக்காக
அழுதிருப்பாள்.

சின்ன வயதில் அம்மாவை இழந்த அவளையும், தங்கை ருத்ராவையும் எவ்வளவு பாசமாய் வளர்த்தார். பாழாய்ப்போன காதல் இப்படி தந்தையையும், மகளையும் பிரிக்கும் என்று
கனவிலும் நினைக்க வில்லை.

அவருடன் படித்த சுமதிக்கு இப்போதுதான் திருமணம். லேட் மேரேஜ்தான். அவ்வளவு தூரம் வந்து அழைத்தவளைத் தட்ட மனமில்லை. பக்கத்து ஊர்தானே என்று கணவனிடம் பர்மிஷன்
வாங்கிக் கொண்டு வந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி.

அவள் அப்பாவைப் பார்ப்போம் என்று அவளுக்கு தெரியாது. இரண்டு வருடங்களில் எப்படி மெலிந்து விட்டார். எல்லாம் என்னால் வந்த கவலை, சுகர் வேறு. அவளையும் அறியாமல்
அவள் கண்களில் கண்ணீர். மண்டபத்தில் கூட்டம் இருந்தாலும் பரவாயில்லை. அவர் காலைப் பிடித்துக் கதற வேண்டும் போலிருந்தது.

அவரையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஃபோன் வந்ததும் ஹாலில் இருந்து எழுந்து கெட்டி மேளச் சத்தத்தில் இருந்து ஒதுங்கிப் போனார். இதுதான் சமயம் என்று விடுவிடுவென ஓடிய ரம்யா சட்டென அப்பாவின் காலில் விழுந்து அழுதாள்.

ஃபோன் பேசுவதை விட்டு அவள் தோளைத் தொட்டுத் தூக்கி “எப்படிடா இருக்கே?’ என்றபோது, அவள் ஓவென அழுது அப்பாவின் மார்பில் சாய்ந்தாள். ரம்யாவைப் பார்க்க வேண்டும் என்று சுமதியிடம் சொல்லித் திருமணத்துக்கு வரவழைத்ததே அவர்தான் என்பது ரம்யாவுக்குத் தெரிய நியாயமில்லை.

- சுமதி (ஜூலை 2011)
 

தொடர்புடைய சிறுகதைகள்
அத்தியாயம் -22 | அத்தியாயம் -23 | அத்தியாயம் -24 அவள் மௌனமாக இருந்தாள்.கொஞ்ச நேரம் கழித்து ”அந்த ராணீ நம் வூட்லே எவ்வளவு வேலைங்க செஞ்சு வந்தா.ஒரு சின்ன பொருளைக் கூட அவள் திருடினது இல்லே.அப்படி பட்ட ராணியின் குழந்தை நாம ...
மேலும் கதையை படிக்க...
அந்த விடியற்பொழுதில் ஒலித்த தொலைபேசியின் அறிவிப்பில் வசந்தி விழித்துக்கொண்டதும், அந்தத் தொலைபேசி சுமந்து வந்த செய்தி அதிர்ச்சியானதாகவும் ஆனால், அதே சமயம் ஓரளவு எதிர்பார்த்ததாகவும் இருந்தது. கொழும்பில் வசந்தியின் கணவர் மரணித்த செய்தியை அவரைப் பராமரித்து வந்த லக்சுமி கூறியபோது வசந்தி ...
மேலும் கதையை படிக்க...
உள்ளம் உணர்ந்து உணர்வுகளும் உறைந்து விட்டன.அந்த நினைவுகளுக்கு எதிர் தோற்றங்கள் அளிக்க அவனால் முடிய வில்லை அவனும் மனிதன்தானே என்று சொல்லிவிட முடியும் . நினைவுகளின் பரிமாணங்கள் அளந்து சொல்ல முடியாத ஒன்று ! எழுதலாம் . கடலுக்குள் ஆழமிருக்கிறது! ஆகாயத்தில் தூரமிருக்கிறது ! ஆனால் அவன் மனத்தின் ...
மேலும் கதையை படிக்க...
"காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது" "இந்த வயசிளயும் இந்தக் கிழவிக்கு இதெல்லாம் தேவையா ? கமலா பரிமளத்துக்கு விளங்கியும் விளங்காமல் இருக்கும் படியாக அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை. கமலா பரிமளத்தின் மகள்தான். அந்தக்காலத்தில் அம்பிளாந்துறையில் இருந்த பணக்காரக் குடும்பங்களில் ஒன்றுதான் ...
மேலும் கதையை படிக்க...
கடைப்பையனுக்கு முதலாளியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.கூட்டம் வழக்கம்போல நிரம்பி வழிந்தது. ஒரு இளம் தம்பதி டி.வி.டி பிளேயர் வாங்கினர். உடனே முதலாளி முருகேசன் அவனிடம் சொன்னார்... ''டி.வி.டி&யை அவங்க கார்ல வச்சுட்டு வா...’’ இப்படித்தான் யார் எதை வாங்கினாலும், ‘கார்ல வச்சுட்டு வந்திரு’ என்று ...
மேலும் கதையை படிக்க...
குழந்தை
சாதலும் புதுவதன்று
ரமேஷ் தேடிய ராகமாலிகா
பரிமளத்தின் தாலி
ரகசியம் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)