லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னி நடிகை சித்தாராதேவி செத்துக் கிடந்தாள். அவள் அருகில் தூக்க மாத்திரைகள் சிதறிக்
கிடந்தன. அவள் கையருகில் இருந்த கடிதத்தை பிரித்துப் படித்தார் இன்ஸ்பெக்டர் பாண்டுரெங்கன.
“என் சாவுக்கு நானே காரணம். இது தற்கொலைதான். மானேஜர் காரணம் அல்ல. வேலையாட்கள் காரணம் அல்ல…
சித்திராதேவியின் கடிதத்தை ஊன்றிப் படித்தபின், இன்ஸ்பெக்டர் பார்வை மானேஜரின் பக்கம் திரும்பியது.
“சித்திராதேவியை ஏன் கொலை செய்தாய்? உண்மையை ஒப்புக் கொள்ளாவிட்டால் ஸ்டேஷனுக்கு கூட்டிப்போய் தலைகீழாக கட்டி வைத்து அடித்து உண்மையை சொல்ல வேண்டிய நிலை உனக்கு ஏற்படும்.
பயந்து போன மானேஜர், மிரட்டி அவளிடம் இந்த கடிதத்தை எழுதி வாங்கி வலுக்கட்டாயமாக தூக்க மாத்திரை விழுங்க செய்து சாகடித்த
உண்மையை ஒப்புக்கொண்டார்.
ஏட்டு கண்ணையன் ஆச்சரியத்துடன் கேட்டார். கடிதத்தில் ஒன்றுமே தடயமே இல்லையே… எப்படி சார் மானேஜர் தான் கொலை செய்தார்
என்ற உண்மையை கண்டுபிடித்தீர்கள்?
இன்ஸ்பெக்டர் கடிதத்தை ஏட்டிடம் கொடுத்து விட்டு கூறினார்.
படித்து பார். இது தற்கொலை தான் என்று எழுதியிருப்பதில் இது கொலைதான் என்பதை மற்ற எழுத்துக்களை விட அழுத்தி எழுதியிருக்கிறாள். அதைப்போல் மானேஜர் காரணம் அல்ல என்று எழுதியிருப்பதில் மாஜேனர் காரணம் என்பதை மற்ற எழுத்துக்களை விட அழுத்தி எழுதியிருக்கிறாள். அழுத்தப்பட்ட எழுத்துக்களை மட்டும் சேர்த்துப்படி இது கொலை தான்… மானேஜர் காரணம்.
- அக்டோபர் 2011
தொடர்புடைய சிறுகதைகள்
மறக்கவே முடியாதபடி மனதில் ஆழப் பதிந்து போனது இந்த வருஷ ‘ஹோலிப் பண்டிகை’. ஹோலி; ஹோலி என்று ஜாலியாய்க் கூவியபடி ஆண்களும் பெண்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை வாரி இறைத்தும், சித்தாள்ப் பெண்கள் ஹோலிப் பாடல்கள் பாடி என்ஜீனியர்களிடமும் ...
மேலும் கதையை படிக்க...
நகரத்தை விட்டு நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது கிரைம் நாவல் எழுத்தாளர் பத்ரியின் வீடு.
வீடு என்பதை விட அதை பங்களா என்றே சொல்லலாம்.
சத்யா வரவேற்பறையில் காத்திருந்தாள். சத்யா எழுத்தாளர் பத்ரியின் தீவிர ரசிகை.
அந்த வீட்டின் நிசப்தம் சத்யாவிற்கு ...
மேலும் கதையை படிக்க...
‘’வினோ, பேரன் பேத்திகளைப் பார்க்க அம்மா நாளைக்கு ஊரிலிருந்து வர்றாங்க. ஒரு வாரம் தங்குவாங்க. கொஞ்சம் பக்குவமா நடந்துக்கோ’’
– பார்த்திபன் தனது மனைவி வினோதினியிடம் கூற, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள் அவள்.
‘கிழத்தை ஒரே நாளிலிலேயே துரத்திட வேண்டும்’ என மனதில் ...
மேலும் கதையை படிக்க...
கரண்ட் கட். மின்சாரம் திரும்ப வருவதற்கு இன்னும் மூன்று மணி நேரம் ஆகும்.
பொழுது போகாத திவ்யா, தன் ஐந்து வயது தர்ஷிணியைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.
பத்து நாள் பாட்டி வீட்டில் இருந்து விட்டு வந்த தர்ஷிணியின் அனுபவத்தைக் கேட்க தாயாரானாள்.
”நம்ம வீட்ல ...
மேலும் கதையை படிக்க...
பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தின் தேர்வு பேப்பர் திருத்தப்பட்டு வாங்கியதிலிருந்து மதிவதனி ஒரு மாதிரியாகவே இருந்தாள்.
காரணம், அதில் முப்பது மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள்.
மாலை ஐந்து மணிக்கு பள்ளிக்கூடம் விட்டு எல்லோரும் புறப்பட்டுப்போன பின்பும் மதிவதனி வீட்டுக்குப் போகாமல் அழுதபடியே நின்றாள்.
‘ஏம்மா அழறே’ தலைமை ...
மேலும் கதையை படிக்க...
ஒரு விபத்து; சில நிகழ்வுகள்