உலகெங்கும் உள்ள பல சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புக்களை வாசித்துக் கொள்ளும் வாய்ப்பையும் உருவாக்கி, எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் நல்ல முயற்சி. உங்கள் இணையத்தளம் மேலோங்க எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தினமும் பல கதைகளை விரும்பத்துடன் வாசிக்கின்றேன். எனது படைப்புக்களை இடம்பெறச் செய்தமைக்கும் நன்றி. மேலும் எனது படைப்புக்களை அனுப்புவேன். வாழ்க உங்கள் பணி. வளர்க உங்கள் தளம்.
அகணி சுரேஸ்
அகணி என்ற புனைபெயரில் எழுதி வரும் சி.அ.சுரேஸ் என்ற எழுத்தாளர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். இவர் அறிவியல் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதைகள் என்பவற்றை எழுதி வருகின்றார். இவர் கவிச்சாரல்(புதுக்கவிதைத் தொகுதி), சாயி அமுதம்(மரபுக் கவிதைத் தொகுதி), நினைவாற்றல்(அறிவியல் நூல்) ஆகிய நூல்களைக் கனடாவில் வெளியிட்டுள்ளார். அத்துடன் கனடாவில் “பொதிகைப் புதுமலர்கள்” என்ற மரபுக்கவிதைத் தொகுதியை உருவாக்கிய கவிஞர் எண்மரில் இவரும் ஒருவராவர். இவரது சில தெய்வீகப்…மேலும் படிக்க... |