கதையாசிரியர் தொகுப்பு: வியாஸ்

2 கதைகள் கிடைத்துள்ளன.

செல்லு லொள்ளு!

 

 முகூர்த்தம் நெருங்கிக்கொண்டு இருந்தது. சாஸ்திரிகள் மந்திரம் சொல்லிக்-கொண்டு இருந்-தார். மணமகன் அதை அரையும்குறையுமாகக் காதில் வாங்கி, திருப்பி உச்சரிப்-பதாக பாவ்லா பண்ணிக்-கொண்டு இருந்தான். அப்போது, சாஸ்திரிகளின் இடுப்பில் வெற்றிலை டப்பி மாதிரி சொருகப்பட்டு இருந்த செல்போன் ஒலிக்க, தான் நிறுத்தச் சொல்லும் வரை மாவிலையால் அக்னி -யில் நெய் வார்த்துக்கொண்டு இருக்கும்படி மணமகனுக்கு உத்தரவு இட்டுவிட்டு, செல்-போனை ஆன் செய்து பேசத் தொடங்–கினார். “அடடா! எப்போ? த்சொ… த்சொ..! நல்ல மனுஷன். பாவம், சின்ன வயசுதான் இல்-லியோ?”


இன்றைய தலைப்புச் செய்தி!

 

 ‘‘அவசரமா தலைவரைப் பார்க்கப் போயிட்டிருக்கேன். கார்ல ஏறுங்க, பேசிட்டே போகலாம்!’’ பேட்டி காண வந்த நிருபரை காரில் ஏற்றிக் கொண்டார் மருதமுத்து. ‘‘தேர்தல் நெருங்கிருச்சு இல்லே, மூச்சு விட நேரமில்லே..!’’ என்றவரிடம், தான் கேள்விப்பட்ட விஷயங்களை எடுத்துவிட்டார் நிருபர். மருதமுத்துவின் முகம் கறுத்தது. ‘‘வேகமா ஓட்டுய்யா!’’ என்று டிரைவரிடம் கடுகடுத்தார். ‘‘என்னைப் பத்தி அப்படியெல்லாம் சொல்றாங்களா…’’ என்றவர் பொங்கிப் பொங்கிப் பேசியவற்றையெல்லாம், கார் ஓட்டத்தில் கிறுக்கலாகக் குறித்துக் கொண்டார் நிருபர். ‘‘தலைவரோட நிழல்லே வளர்ந்தவன் நான்… அவருக்குத்