கதையாசிரியர் தொகுப்பு: விக்கிரமன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

எட்டாவது கடிதம்

 

 பரியம் வதை அந்தக் கடிதத்தை எதேச்சையாகத்தான் பார்த்தாள். அதுபோல மூன்று கடிதங்கள் வந்திருந்தன. பொதுவாக அவள் தன் கணவனுக்கு வரும் கடிதங்களைப் பார்ப்பதில்லை. இன்றும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. கணவனின் மேஜை அறையில் ஏதோ தேடியவள் அந்தக் கடிதத்தைக் கண்டாள். மேலுறை திறந்திருந்த அந்தக் கடிதத்தின் மேலே எழுதப்பட்டிருந்த வரிகள் அவள் கவனத்தைத் திருப்பின. தன் கணவனின் பெயரை யாரோ குண்டெழுத்தில் எழுதியிருப்பது தெரிந்தது. திருவாளர் இராஜசேகரன், கேசவநாத் கம்பெனி, சென்னை -1 பிரியம்வதை ஒரு


ஆண் மகன்

 

 இரவு மணி பத்து. பத்து முப்பதுக்குக் கடைசி வண்டி. தெற்கே செல்லும் விரைவு வண்டி புறப்படுகிறது. அதற்குப் பிறகு மறுநாள் காலையில்தான் ரயில், தமிழ்ச் செல்வன் எழும்பூர் ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட இடத்தில் உட்கார்ந்து கொண்டு, ஒவ்வோர் ஆட்டோவையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். கைக் கடிகாரத்தைப் பார்ப்பதும், வழிமேல் விழிவைத்து அவள் வருகையை நோக்கி தவித்தது அவன் மனம். எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும். துணிவுடன் ஒரு செயலில் இறங்குகிறான். ஒரு வாரமாகவே திட்டமிட்டான். சந்திராவும் –


அருள்

 

 சென்டிரல் ரயில் நிலையக் கட்டடத்தில் சுதந்திரத் தினத் தீப அலங்காரம் மிகப் பிரமாதமாக இருந்தது. இரவு நேரத்தில் வான இருளின் பின்னணியில் தோரண வரிசையாக விளங்கும் மின்சார தீபங்கள் வண்ணமீன்கள் முளைத்தனவோ எனத் தோற்றமளித்தன. எதிரே ஜெனரல் ஆஸ்பத்திரிச் சுவரில் சாய்ந்து கொண்டு ரயில்வே ஆபீஸின் அழகைப் பருகிக் கொண்டிருந்தபோது. பத்தாம் நம்பர் பஸ் நிற்குமிடத்தில் இருவர் பேசிக் கொண்டிருந்தனர். நான் விரும்பாவிடினும் அந்த வார்த்தைகள் என் செவிகளில் வீழ்ந்தன. நம்மைப் பற்றியோ, நாம் அறிந்தவரைப் பற்றியோ


கண்டக்டர் கந்தப்பன்

 

 வளைந்து வளைந்து செல்லும் மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் நீலகிரிக்குச் செல்லும் பஸ் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. சாலையின் இருபுறமும் அடர்ந்த மரங்களும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலைச் சிகரங்களும் பார்ப்பதற்கு மிக ரம்மியமாயிருந்தன. வேகமாகச் செல்லும் பஸ்ஸின் ஓசையும், கண்டக்டர் கந்தப்பன் பஸ்ஸின் வாயிலருகில் நின்று கொண்டு சிறிது நேரத்திற்கொருதரம் ஏதாவது ஒரு பாட்டின் அடியை முணுமுணுக்கும் சத்தமும், மாறி மாறி ஒலித்துப் பஸ்ஸிலுள்ளவர்களை அமைதியிலாழ்த்தின. “ஆற்றோரம் கொடிக் காலாம் அரும்பு அரும்பாய் வெத்திலையாம் போட்டா செவக்குதிலை


சுழல் விளக்கு

 

 ராமநாதன் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். மனத்தில் நிம்மதியில்லாதிருக்கும் போது கயிறு அறுபட்ட மாடு போல் அது இஷ்டப்படி உலாவும் கடந்த கால நினைவுகளையும் எதிர்கால எண்ணங்களையும் வாரி போட்டுக் கொண்டு திண்டாடும். அந்த நிலையில் இடையிடையே இன்ப நினைவு வந்தாலும், கொந்தளிப்பு அதை அமுக்கிவிடும். வீட்டில் விளக்குக் கூட ஏற்றவில்லை. அவன் உட்கார்ந்திருந்த ஜன்னல் வழியே வெளியே பார்த்தால் தொலைவில் மங்கி மங்கி ஒளி பெற்றுச் சுழலும் உயர் நீதிமன்றத்து லைட் ஹவுஸ்’ தெரியும்.