கதையாசிரியர் தொகுப்பு: வல்லபாய்

7 கதைகள் கிடைத்துள்ளன.

புயல் உறையும் பூக்கள்

 

 வானம் சிவப்பும் மஞ்சளுமாய் கலந்து மினுங்கிக் கொண்டிருந்தது. அந்த அந்தி சாயும் வேளை அடுத்த ஒரு மணி நேரம்தான் செல்லியம்மாளுக்கு வியாபாரத்தின் மும்முரமான சமயம். அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் பெண்களில் செல்லியம்மாளுக்கு கொஞ்சம் நிரந்தர வாடிக்கையாளர்கள் உண்டு. நல்ல நாள் பண்டிகைக் காலங்களில் சற்று அதிகப்படியான வியாபரம் போணியாகும். மொத்தச் சந்தையில் அன்று எது மலிவாகக் கிடைக்கிறதோ அந்தப் பூக்களை எடைக்கு வாங்கி மாலையாக்கி எண்ணிக்கையில் விற்கும் மிகப் பெரிய வியாபார உத்தியில் – இந்திய


இடுக்கண் வருங்கால்

 

 ரகுராமன் ஜன்னலருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து திசையற்ற பார்வையில் லயித்திருந்தான். கைய்யில் அவனே தயாரித்திருந்த காப்பியை சிறிது சிறிதாக தொண்டையில் இறக்கிக் கொண்டு சலிப்பு என்றில்லாமல் தீவிர சஞ்சாரம் என்றுமில்லாமலும் எப்பொழுதாகிலும் இப்படி சில மணித்துளிகளைக் கட்டிப் போடுவதில் ஒரு சிறிய சுகம். அதுவும் அது சற்று தனிமையில் கரைந்தால் இன்னமும் சவ்கர்யம்தான். ஒரு அந்நிய மண்ணில் காலமும் வெளியும் வீட்டையும் உறவையும் பிரித்துப் போட்டிருக்கிற மெளனத்தில் இது போன்ற மோனங்கள் வாய்ப்பதுண்டு. நினைத்தால் இமைப் பொழுதில்


ஊஞ்சல்

 

 வாழ்க்கை முழுவதும் கனவுகள்தான்; கனவுகளே இல்லாத வாழ்க்கை இல்லை. சொல்லப் போனால் முழு மனித வாழ்வுமே கனவுதான். நிகழ்தலையும் நினைவுகளையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பது கூட ஒரு குழந்தமை புரிதலாகத்தான். வேண்டுமானால் திணிக்கப் பட்ட அல்லது விதிக்கப்பட்ட கனவுகள் என்று வேறு படுத்திக் கொள்ளலாம்; அதுவும் நம் திருப்திக்காகத்தான். நகர வாழ்வின் ஒரு எட்டு மணி பின் மாலையில் அந்த பெரிய குடியிருப்பு வளாகத்திற்குள்ளாக, தன்னுடைய ஒரே வெளிஉலகு நுகர்தலாக, உடலுக்கு ஒரு சிறிய வேலையாக


வெள்ளை அடிக்காத கல்லறை

 

 பாதி இறக்கப் பட்டிருந்த கண்ணாடியின் வழியாக காற்று அவன் முகத்தில் பட படத்துக் கொண்டிருந்தது. முற்பகல் வேளையின் தென் தமிழகத்து சாலை உஷ்ணத்தை விரிந்த சாலையின் இரு புறமும் பரந்து கிடக்கும் வெளியின் காற்று சற்றே வெம்மை தணிக்க, காரின் பின் இருக்கையில் வெகு வசதியாய் சாய்ந்து அதிகப் பரபரப்பு இல்லாத இளைப்பாறுதலில் பயணத்தை ருசித்துக் கொண்டிருந்தான். எத்தனை வருடங்களுக்குப் பின் ?மனதில் உறைந்திருந்த வருடங்களை தேடி முகிழ்ந்த போது பத்து பதினைந்து – இல்லை பதினேழு


பாதியும் மீதியும்

 

 சற்று இன்னமும் சாய்ந்து கால்களை முன் தள்ளி அந்த சிமென்ட் பெஞ்சில் நன்றாக தலையைச் சாய்த்து நிதானிக்க – இனிமேல் என்ன? பரபரப்புகளுக்கு இனி இடமில்லை. போகும் முன்பாவது எவ்வளவு நிதானமாக நிறைவாக அமர்தலாக ஓய்வாக முடியுமோ அதுதான் இந்த மணித் துளிகளுக்கு தரக் கூடிய மரியாதையாக இருக்க முடியும். ஓடிய காலமெல்லாம் முடிந்தது. ஓட்டம் முடிகிற நேரம்; முடிக்கிற நேரம். இந்த நேரமாவது எவ்விதத் தடைகளும், இடையூறுகளும், தொந்தரவுகளும், கண்காணிப்புகளுமற்ற முழு சுதந்திரத்தின் நிச்சயமாய் இருக்க


சீஸர்

 

 என் பேர் சீஸர். என் பாரம்பர்யப் பெருமை, கருத்த வசீகர தோற்றம், நடை,நுட்பமான மோப்ப சக்தியின் துணையோடு வெளிக் கொணரும் துடிப்பான கடமையுணர்வு, சுறுசுறுப்பு, விசுவாசம், அன்பு, என் தோழமையால் கிடைத்த பெருமை, கவ்ரவம் எல்லாமாகச் சேர்ந்து ஆறு வருடங்களுக்கு முன் என் இரண்டாவது வயதில் நான் அவரை வந்து சேர்ந்த போது பிரியத்துடனும் பாசத்துடனும் இந்த சரித்திர நாயகனின் பேரை எனக்கு சூட்டி மகிழ்ந்தார் என் எஜமானர். அந்த பாரம்பர்யமான பெருமை மிகுந்த நகரத்தில் என்


முன்னையிட்ட தீ

 

 அடர்ந்த வனத்தின் ஊடாய் படர்ந்து பரவிச் செல்லும் அந்த ஆற்றின் கரையில் அவன் அமர்ந்திருந்தான். ஆர்ப்பாட்டமாய் பொங்கி ப்ராவாகிக்காமல் அமைதியாய் ஆழ்ந்து சுழித்து, ஆயிரம் இரகசியங்கள் தன் ஆழத்தில் பொதிந்திருப்பதை அழுத்திச் சொல்வதைப் போல. வனத்தின் இயல்புக்கு மிகவும் முரணாக கரையோரத்தில் ஆற்றின் வெள்ளம் உஷ்ணமாயிருந்தது ஏன் என்பது விளங்காமால் அவன் கைகளைக் கழுவிக் கொண்டிருக்கிறான். எவ்வளவு நேரமாக ? அவனுக்கே அது துலங்கவில்லை. நேரமா அல்லது நாட்களா அல்லது மாதங்களா அல்லது .. .. ?